Jump to content

‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

World Heart Federation says perfect storm for heart disease created by  COVID-19

‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று

உலக இதய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நினைவு கூரப்படுகின்றது.

இந்த  வருடத்தின்  உலக இதய தினத்தின் கருப்பொருள், ‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’ என்பதாகும்.

உலக இதய தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும், பல சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயற்ற நோய்கள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் விந்தியா குமாரபெலி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நம் நாட்டில் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இதய நோய் காரணமாகும்.

கூடுதலாக, நம் நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிந்திருக்கவில்லை.

எனவே, உலக இதய தினத்தை நினைவுகூரும் வகையில், ரயில் நிலையங்கள்,  பேருந்து நிலையங்கள், அரச மருத்துவமனைகள் மற்றும் மக்கள் தங்கள் இரத்த அழுத்தத்தை அளவிட கூடும் பிற இடங்களில் வாரம் முழுவதும் தொடர்ச்சியான சிறப்பு நிகழ்ச்சிகளைத் ஆரம்பித்தோம்.

இதய நோய்க்கு முக்கிய காரணம் புகைபிடித்தல், மதுபான பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இதய-நோயைத்-தோற்கடிக்க-இத/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.