Jump to content

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

Recommended Posts

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) இலங்கைக்கு வெளியில் (அண்மையில்) உள்ள தீவில் கொல்களம் அமைத்தல்

2) மாட்டிறைச்சியை வினியோகம் செய்வதற்கு சிங்களவருக்கு அனுமதி(திட்டமிட்டு , சீராக)

3) மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குரிய வகையில் இறைச்சிக்கான மாடு வளர்ப்பை ஊக்குவித்தல்

சொல்லப்படாதது; முசிலிம்களின் கையில் இருக்கும் இவ்வணிகத்தை முற்றாக இல்லாமலாக்குதல். (அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள் ? வேறு வணிக முயற்சிகளுக்கு மாறுவார்கள் 😜)

கொசிறுத் தகவல்; காத்தான் குடியில் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக் கிளமைகளிலும் 150 ற்குக் குறையாத மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

பெளத்தர்களுக்கு, கொல்லப்படுவதற்காக வைத்திருக்கும் மாடுகளை காப்பாற்றுதல் புண்ணியமான செயல். (மனுசரைக் கொல்லலாமா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில். கொல்லலாம், வல்லுறவு செய்யலாம், காணாமல் ஆக்கலாம், மற்றும் இன்னோரன்ன........ 😀)

 அவ்வாறான மாடுகளைக் (குறிப்பாக பசுக்களை) அதன் விலையைக் கொடுத்து மீட்டு வந்து விகாரைகளுக்கு தானமாக வழங்குவார்கள். 

*** எருமைகளைப்பற்றி(மனிதர் அல்ல 😜) இங்கே குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

மாட்டிறைச்சி , பால் போதா விட்டால் மாடுகளை அல்லவா    இறக்குமதி செய்ய வேண்டும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடையால் பௌத்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடும் (புண்ணியத்தை எந்த மீற்றரால் அளப்பது?). ஆனால், தெளிவாக அளக்கக் கூடிய தீமைகள் சில உண்டு:

1. கள்ளமாக அரச சுகாதார சேவையின் கண்காணிப்பின்றி வெட்டப் படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது எவ்வளவு சீரியசானது? கொழும்பு வெலிக்கடை சிறைக்கருகில் இருக்கும் முனிசிபல் மாடு வெட்டும் இடத்தில் பரிசோதனைகளில் பங்கு பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், மனிதனுக்கு தொற்றக் கூடிய காச நோய் கிருமி முதல் வயிற்றுப் போக்குத் தரும் புழுக்கள் வரை கண்காணிப்பின்றி மக்களைச் சென்றடையும். இவை தொற்றும் மக்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க மாட்டார்கள்!

2. வயதான பசுக்களை விகாரையில் விடுவர். பிக்குகள் புண்ணாக்கெல்லாம் வைக்க மாட்டார்கள். வயதான மாடு கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்துச் சாகும். எனவே இந்த மாடுகளுக்கும் புண்ணியத்தில் பங்கிருக்காது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

இப்ப மடகாஸ்கர் லுமூர் பொரியல் தேடி திரியிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

1 hour ago, Justin said:

பசுக்களை விகாரையில் விடுவர்.

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

சட்டத்தை முழுமையாக நான் வாசிக்கவில்லை. ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும். மேலும், அம்பேவல போன்ற பாரிய பண்ணைகளில் (இவர்கள் ஹைலண்ட் பால்மா பாங்காளிகள்) பசுக்களைத் தான் தேர்ந்தெடுத்து வளர்ப்பர். நாம்பன் கன்றுகள் சிறு வயதிலேயே veal எனப்படும் விலைகூடிய வெள்ளை இறைச்சிக்காக கொல்லப் பட்டு விடும். இதை இந்தச் சட்டத்தால் தடுக்க முயன்றால் கொம்பனியைப் பூட்டி விட்டுப் போக வேண்டியது தான்! 

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும்.

புரியாத மொழியொன்று உலகம் அழியப்போவதற்கான அடையாளங்களில் ஒன்றாக உலகில் பிரபலமாகும் என்று பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதியுள்ளதைப் படித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

Link to comment
Share on other sites

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

3 hours ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

1 hour ago, Kapithan said:

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

Link to comment
Share on other sites

6 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

எருமை இறைச்சி இன்னும் சுவையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

ஒரே குட்டையில் ஊறிய....ரத்தினங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

மொக்கன் கடை ரொட்டியும், பீஃப் ரோஸ்ட் என்னவாகப்போகுது? 😳

4 hours ago, goshan_che said:

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

*******************

எனக்கு இதன் நோக்கம் புரிகிறது.....

இங்குள்ளது போல, அரச அங்கீகாரம் பெற்ற slughter house போன்ற இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்போகின்றனர்.

கொழும்பில், இஸ்லாமிய பண்டிகைக்காலங்களில், இந்த மாடுகளை வீட்டினுள் வைத்து அறுப்பார்கள், தலை, தோல்களை அடுத்தநாள், வீதியில் விட்டெரிந்திருப்பார்கள் . 

இன்றும் கூட, ஆடுகளை உணவகங்களின் பின்னால், ரகசியமாக வெட்டுவார்கள். சமையல், சாப்பாடு போக, வெட்டும் இறைச்சி வாங்க, தனியே இந்த உணவகங்களின் பின்னே கூட்டம் ஞாயிறு அன்று மொய்க்கும்.

வெட்டிய கழிவுகளை, வீதியில் எறிந்து விடுவார்கள். மிகவும் அசுத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

நான் மேலே சொல்லி இருக்கனே மொனே🤣

5 hours ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

19 minutes ago, Nathamuni said:

 அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

உத பற்றி நான் பெரிசா கதைக்கேல்ல. ஆனா கடலாமை வெட்டுவதை 90 க்கு பிறகு புலிகள் தடை செய்த நியாபகம். 2008 சண்டை நேரம் நாச்சிகுடாவால பெட்ரோல் வாறதே கஸ்டம். கடலில் போய் ஆமை பிடிச்சொண்டு நிக்க சான்ஸ் குறைவு. 

சிங்கனுக்கு சருகாமையதான் வறுத்து கொடுத்ததோ தெரியா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.