Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி


Recommended Posts

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

 

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1) இலங்கைக்கு வெளியில் (அண்மையில்) உள்ள தீவில் கொல்களம் அமைத்தல்

2) மாட்டிறைச்சியை வினியோகம் செய்வதற்கு சிங்களவருக்கு அனுமதி(திட்டமிட்டு , சீராக)

3) மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குரிய வகையில் இறைச்சிக்கான மாடு வளர்ப்பை ஊக்குவித்தல்

சொல்லப்படாதது; முசிலிம்களின் கையில் இருக்கும் இவ்வணிகத்தை முற்றாக இல்லாமலாக்குதல். (அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள் ? வேறு வணிக முயற்சிகளுக்கு மாறுவார்கள் 😜)

கொசிறுத் தகவல்; காத்தான் குடியில் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக் கிளமைகளிலும் 150 ற்குக் குறையாத மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

பெளத்தர்களுக்கு, கொல்லப்படுவதற்காக வைத்திருக்கும் மாடுகளை காப்பாற்றுதல் புண்ணியமான செயல். (மனுசரைக் கொல்லலாமா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில். கொல்லலாம், வல்லுறவு செய்யலாம், காணாமல் ஆக்கலாம், மற்றும் இன்னோரன்ன........ 😀)

 அவ்வாறான மாடுகளைக் (குறிப்பாக பசுக்களை) அதன் விலையைக் கொடுத்து மீட்டு வந்து விகாரைகளுக்கு தானமாக வழங்குவார்கள். 

*** எருமைகளைப்பற்றி(மனிதர் அல்ல 😜) இங்கே குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.

 • Like 1
Link to post
Share on other sites

மாட்டிறைச்சி , பால் போதா விட்டால் மாடுகளை அல்லவா    இறக்குமதி செய்ய வேண்டும்??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த தடையால் பௌத்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடும் (புண்ணியத்தை எந்த மீற்றரால் அளப்பது?). ஆனால், தெளிவாக அளக்கக் கூடிய தீமைகள் சில உண்டு:

1. கள்ளமாக அரச சுகாதார சேவையின் கண்காணிப்பின்றி வெட்டப் படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது எவ்வளவு சீரியசானது? கொழும்பு வெலிக்கடை சிறைக்கருகில் இருக்கும் முனிசிபல் மாடு வெட்டும் இடத்தில் பரிசோதனைகளில் பங்கு பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், மனிதனுக்கு தொற்றக் கூடிய காச நோய் கிருமி முதல் வயிற்றுப் போக்குத் தரும் புழுக்கள் வரை கண்காணிப்பின்றி மக்களைச் சென்றடையும். இவை தொற்றும் மக்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க மாட்டார்கள்!

2. வயதான பசுக்களை விகாரையில் விடுவர். பிக்குகள் புண்ணாக்கெல்லாம் வைக்க மாட்டார்கள். வயதான மாடு கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்துச் சாகும். எனவே இந்த மாடுகளுக்கும் புண்ணியத்தில் பங்கிருக்காது!  

 • Like 1
 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

இப்ப மடகாஸ்கர் லுமூர் பொரியல் தேடி திரியிறார்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, nunavilan said:

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

 

1 hour ago, Justin said:

பசுக்களை விகாரையில் விடுவர்.

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

Edited by Paanch
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

 

 

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

சட்டத்தை முழுமையாக நான் வாசிக்கவில்லை. ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும். மேலும், அம்பேவல போன்ற பாரிய பண்ணைகளில் (இவர்கள் ஹைலண்ட் பால்மா பாங்காளிகள்) பசுக்களைத் தான் தேர்ந்தெடுத்து வளர்ப்பர். நாம்பன் கன்றுகள் சிறு வயதிலேயே veal எனப்படும் விலைகூடிய வெள்ளை இறைச்சிக்காக கொல்லப் பட்டு விடும். இதை இந்தச் சட்டத்தால் தடுக்க முயன்றால் கொம்பனியைப் பூட்டி விட்டுப் போக வேண்டியது தான்! 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

14 minutes ago, Justin said:

ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும்.

புரியாத மொழியொன்று உலகம் அழியப்போவதற்கான அடையாளங்களில் ஒன்றாக உலகில் பிரபலமாகும் என்று பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதியுள்ளதைப் படித்துள்ளேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

Link to post
Share on other sites

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

3 hours ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

1 hour ago, Kapithan said:

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

எருமை இறைச்சி இன்னும் சுவையானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

Edited by Kapithan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

ஒரே குட்டையில் ஊறிய....ரத்தினங்கள்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

மொக்கன் கடை ரொட்டியும், பீஃப் ரோஸ்ட் என்னவாகப்போகுது? 😳

4 hours ago, goshan_che said:

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

*******************

எனக்கு இதன் நோக்கம் புரிகிறது.....

இங்குள்ளது போல, அரச அங்கீகாரம் பெற்ற slughter house போன்ற இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்போகின்றனர்.

கொழும்பில், இஸ்லாமிய பண்டிகைக்காலங்களில், இந்த மாடுகளை வீட்டினுள் வைத்து அறுப்பார்கள், தலை, தோல்களை அடுத்தநாள், வீதியில் விட்டெரிந்திருப்பார்கள் . 

இன்றும் கூட, ஆடுகளை உணவகங்களின் பின்னால், ரகசியமாக வெட்டுவார்கள். சமையல், சாப்பாடு போக, வெட்டும் இறைச்சி வாங்க, தனியே இந்த உணவகங்களின் பின்னே கூட்டம் ஞாயிறு அன்று மொய்க்கும்.

வெட்டிய கழிவுகளை, வீதியில் எறிந்து விடுவார்கள். மிகவும் அசுத்தமாக இருக்கும்.

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

நான் மேலே சொல்லி இருக்கனே மொனே🤣

 

5 hours ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

 

19 minutes ago, Nathamuni said:

 அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

உத பற்றி நான் பெரிசா கதைக்கேல்ல. ஆனா கடலாமை வெட்டுவதை 90 க்கு பிறகு புலிகள் தடை செய்த நியாபகம். 2008 சண்டை நேரம் நாச்சிகுடாவால பெட்ரோல் வாறதே கஸ்டம். கடலில் போய் ஆமை பிடிச்சொண்டு நிக்க சான்ஸ் குறைவு. 

சிங்கனுக்கு சருகாமையதான் வறுத்து கொடுத்ததோ தெரியா 🤣

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

 

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

  

Edited by Nathamuni
 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 26 November 2020 A Karthigaipoo, the national flower of Tamil Eelam, was projected on to Britain's Houses of Parliament in Westminster, Central London tonight, as British Tamils paid tribute to those who gave their lives in the Tamil liberation struggle amidst restrictions due to the coronavirus pandemic. The projection, organised by British Tamil activists, lit up the Houses of Parliament with an image of the flower and the words “We Remember” and "We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide". “Since we cannot hold mass public gatherings on November 27th due to restrictions in place due to public health crises, we decided to commemorate our heroes in another form,” said Malathy*, a young activist and one of the organisers of the projection tribute. Usually tens of thousands of Tamils gather across the country in large scale acts of remembrance. This year, events have been safely held in homes and online, as British Tamils continued to commemorate their fallen fighters despite global pandemic. “In the homeland the Sri Lankan state has been attempting to stifle commemoration and prevent our people from remembering our martyrs,” said Shankar*, another youth organiser. “We picked this building in London to showcase to the British public the ongoing genocide our people face and to highlight that the UK’s policies continue to have an impact on our freedom struggle.” “This is our message to our people and to those who sacrificed their lives for our freedom. You will never be forgotten. We promise to continue the struggle until Tamils get justice, peace and permanent security”. _____ *names have been changed to protect identies and safeguard families in the North-East. We need your support Sri Lanka is one of the most dangerous places in the world to be a journalist. Tamil journalists are particularly at threat, with at least 41 media workers known to have been killed by the Sri Lankan state or its paramilitaries during and after the armed conflict. Despite the risks, our team on the ground remain committed to providing detailed and accurate reporting of developments in the Tamil homeland, across the island and around the world, as well as providing expert analysis and insight from the Tamil point of view We need your support in keeping our journalism going. Support our work today. https://www.tamilguardian.com/content/uk-houses-parliament-lit-karthigaipoo-mark-maaveerar-naal
  • அங்கே அவர்கள் அப்போது    சொன்ன படியே சகலதும் நலமே நடக்கின்றது. இதில் மாற்றுக்கருத்து மைனர்களுக்கு எனோ கவலைகளும் நடுக்கங்களும்.......???
  • மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா?   "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரடோனாவை மர்லின் மன்றோவுடனோ அல்லது மாவோ சே-துங்குடனோ இணைத்து பார்த்திருப்பார். மரடோனா ஒரு கால்பந்து வீரராக இல்லாதிருந்தால், நிட்சயமாக அவர் ஒரு புரட்சியாளராகியிருப்பார் என நான் நம்புகிறேன்.” என திரைப்பட இயக்குனர் எமிர் கஸ்துரிகா தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். (Emir Kusturica, film director)   ஆம் மரடோனா, அர்ஜென்டினாவில் புதிய தாராளவாதத்தை முன்னெடுத்த ஜனாதிபதி கார்லோஸ் மெனெம் (Carlos Menem) மற்றும் அவரது நண்பரான ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டொமிங்கோ கேவல்லோ(Domingo Cavallo) ஆகியோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மரடோனா இடதுசாரி சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதரானார்.   இவர் கியூபாவில் சிகிச்சை பெற்றபோது கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்டார். மரடொனா பற்றிய தனது குறிப்பொன்றில் "டியாகோ ஒரு சிறந்த நண்பர், மிகவும் உன்னதமானவர், அவர் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கியூபாவுடன் மிகச் சிறந்த நட்பை பேணும் அவர் தனது தனிப்பட்ட நலன்களுக்கு அதனைப் பயன்படுத்தவில்லை” என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார்.   மரடோனா, காஸ்ட்ரோவின் உருவப்படத்தை தனது இடது காலிலும், பிடலின் நெருங்கிய சக தளபதியான அர்ஜென்டினாவின் சே குவேராவின் உருவத்தை, தனது வலது கையிலும்(பச்சை குத்தி- tattooed) தாங்கியுள்ளார். “எல் டியாகோ” என்ற தனது சுயசரிதை நூலை காஸ்ட்ரோவுக்கும் தன்னை ஈர்த்த மக்களுக்கும் அர்ப்பணித்தார். அதில், "பிடல் காஸ்ட்ரோவிற்கும், , அனைத்து கியூப மக்களுக்கும் அர்ப்பணம்." “"To Fidel Castro and, through him, all the Cuban people." எனக் குறிப்பிட்டள்ளார்.   மரடோனா வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸின் ஆதரவாளராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், அவர் வெனிசுலாவுக்கு சென்று சாவேஸை சந்தித்தார், அவரை சாவேஸ் மிராஃப்ளோரஸ் அரண்மனையில்(Miraflores Palace) வரவேற்றார். இந்த சந்திப்பிற்குப் பின், ஒரு "பெரும் மனிதரை" (ஸ்பானிஷ் மொழியில் "அன் கிராண்டே" ("un grande" in Spanish), சந்திப்பதற்காக வெனிசுலாவிற்கு பயணித்ததாகவும், ஆனால் அதற்கு அப்பாலும் தான் எதிர்பார்த்ததை விடவும் “பிரம்மாண்டமான மனிதரை”(ஸ்பானிஷ் மொழியில் "அன் ஜிகாண்டே "un gigante") சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் "நான் சாவேஸை நம்புகிறேன், நான் ஒரு சாவிஸ்டா. பிடல் செய்யும் அனைத்தும், சாவேஸ் செய்யும் அனைத்தும், எனக்கு மிகப் பிடித்தமானவையே." எனக் கூறினார். 2007ல் வெனிகூலாவில் இடம்பெற்ற கோபா அமெரிக்க விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாள் ஆட்டத்தில், சாவேஸின் கௌரவ விருந்தினராக மராவோனா கௌரவிக்கப்பட்டார்.   ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்த மரடோனா ஏகாதிபத்திய அடையாளங்களுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். குறிப்பாக 2005 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் மார் டெல் பிளாட்டாவில் (2005 Summit of the Americas in Mar del Plata, Argentina.) இடம்பெற்ற அமெரிக்க உச்சி மாநாட்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கலந்துகொண்டதை எதிர்த்தார், "ஸ்ரொப் புஷ்" ("STOP BUSH") எனப் பெயரிடப்பட்ட ரீ- ஷேர்ட்டை அணிந்திருந்ததுடன் புஷ்ஷை "மனித குப்பை" ("human garbage) எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து2007 ஓகஸ்ட் இல், சாவேஸின் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியான அலோ பிரசிடேனில் தோன்றிய மரடோனா, "அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன், என் முழு பலத்தினாலும் அதை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார். இருப்பினும், 2008 டிசம்பர்ல், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமாவை மரடோனா பாராட்டியதுடன் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்.   தனது நகரத்தின் ஏழ்மையான மக்களின் குடிசை வாழ்வோடு இணைந்திருந்த மரடோனா அங்கிருந்து தனக்கான ஆளுமையையும் வளர்த்தார்.   1987 ஆம் ஆண்டில் வத்திக்கானில் போப் இரண்டாம் ஜோன் போல் உடனான சந்திப்பின் போது, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாடலில் போப்புடன் முரண்பட்டார். அது குறித்து மரடோனா கூறுகையில், " வத்திக்கானில் காணப்பட்ட தங்க கூரைகள் அனைத்தையும் பார்த்தேன், ஏழைக் குழந்தைகளின் நலனைப் பற்றி தேவாலயம் (Church) கவலைப்படுவதாக போப் கூறுகிறார். உங்கள் தங்கக் கூரைகளை விற்று ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என நான் வத்திக்கானில் போப்புடன் வாதிட்டேன்” எனக் கூறினார்.   செப்டம்பர்2014 இல், மரடோனா ரோமில் போப் பிரான்சிஸைச் சந்தித்தார், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரோமிற்கு பயணிப்பதற்கான தூண்டுதலை போப் பிரான்சிஸிஸ் ஏற்படுத்தியதாகக் கூறினார். அத்துடன் "நாம் அனைவரும் போப் பிரான்சிஸைப் பின்பற்றி . ஒவ்வொருவரும் மற்றயோருக்கு ஏதாவது கொடுப்பதன் மூலம், உலகில் யாரும் பட்டினி கிடக்காமல் பாதுகாத்திடமுடியும் எனக் கூறினார்.   டிசம்பர்2007 இல், மரடோனா ஈரான் மக்களுக்கு ஆதரவான செய்தியுடன் கையொப்பமிடப்பட்ட ரீ ஷேர்ட் ஒன்றை வழங்கினார்: இது ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2013 இல், மரடோனா ஹ்யூகோ சாவேஸின் கல்லறைக்குச் சென்று, வெனிசுலாவின் மறைந்த தலைவரின் நியமிக்கப்பட்ட வாரிசான நிக்கோலஸ் மதுரோவை சோசலிச தலைவரின் பாரம்பரியத்தைத் தொடரத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்"போராட்டத்தைத் தொடருங்கள்" என்று மரடோனா தொலைக்காட்சியில் கூறினார். கராகஸில் நடந்த மதுரோவின் இறுதி தேர்தல் பிரச்சார பேரணியில் மரடோனா கலந்து கொண்டார், கால்பந்துகளில் கையெழுத்திட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுத்தார், மேலும் மதுரோவின் உருவத்தை அர்ஜென்டினாவின் ஜெர்சியில் பதித்து வழங்கினார். மரடோனாவுடன் சாவேஸின் கல்லறைக்குச் சென்ற மதுரோ, "மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் டியாகோவுடன் பேசுவதாகவும், ஏனெனில் தளபதி சாவேஸும் அவரை மிகவும் நேசித்தார்."  மரடோனா உனது மக்கள் நேயமும், மனித நேயமும், உனது புரட்சியும், கால்பந்தில் உன் உச்சமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.                     
  • பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.