Jump to content

20ஆவது அரசியலமைப்பு திருத்தம்; ஒரு நடைமுறை மீறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

*அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை.
-கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம-
சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.
இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R  உறுப்புரையை திருத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது. அந்த உறுப்புரை மாகாண சபைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நோக்கத்துக்கு வருடாந்த பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதை விதந்துரைக்கும் நிதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவையின் விதந்துரையின் பெயரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அந்த ஆணைக்குழு மூன்று உறுப்பினர்களை கொண்டிருக்கும். அந்த உறுப்பினர்கள் மூன்று பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் ஒவ்வொருவரும் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் புலமை கொண்டவர்களாகவும் உயர் பதவிகளை வகித்தவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு அரசியலமைப்பு பேரவை என்று குறிப்பிடுவதை நீக்குவதன் மூலமாக இந்த நியமனங்களை ஜனாதிபதி தானாகவே செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.


17A  அத்தியாயத்தில் உள்ள எந்தவொரு ஏற்பாட்டையும் நீக்குவதற்கு அல்லது திருத்துவதற்கான எந்தவொரு சட்டமூலமும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு முன்னதாக ஒவ்வொரு மாகாண சபைக்கும் அவற்றின் அபிப்பிராயங்களை பெறுவதற்காக ஜனாதிபதியால் அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படாத பட்சத்தில் அது சட்டமாக வர முடியாது. சகல மாகாண சபைகளினதும் பதவி காலங்கள் முடிந்த காரணத்தால் அவ்வாறு செய்யப்படவில்லை. புதிய மாகாண சபைகளும் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அதனால் கடந்தவாரம் 20ஆவது திருத்த சட்டமூலம் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டமை அரசியலமைப்பின் உறுப்புரை 154Gக்கு முரணானதாகும். மேலும், தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளுடன் கலந்தாலோசனை செய்ய தவறியமை மக்களின் வாக்குரிமையையும் பாதிப்பதாகும். மக்களின் வாக்குரிமை என்பது அரசியலமைப்பின் உறுப்புரை 3இனால் பாதுகாக்கப்படுகின்ற மக்களின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்ட அம்சமாகும்.


சாதாரணமாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒழுங்கு பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்த சட்டமூலத்தை வாபஸ் பெற்று அதிலிருந்து அதன் 41ஆவது பிரிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதாகும். ஆனால், அத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. உறுப்புரை 154R அதன் தற்போதைய வடிவிலேயே அரசியலமைப்பில் தொடர்ந்து இருக்கும் வரை அரசியலமைப்பு பேரவையும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் அந்த பேரவையின் ஆலோசனையின் பேரிலேயே நிதி ஆணைக்குழுவுக்கான நியமனங்களை ஜனாதிபதி செய்யலாம். ஆனால், 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் அரசியலமைப்பு பேரவையை நீக்குவதை நோக்காகக் கொண்டிருக்கிறது. இங்கு தான் பெரும்பாலும் எளிதில் கையாள முடியாத பிரச்சினை இருக்கிறது.
20ஆவது திருத்த சட்ட மூலத்தை வரைந்த அநாமதேய நபர் அரசியலமைப்பின் 17A அத்தியாயத்தின் அவசியத்தை கவனிக்க தவறிவிட்டார் போலும். சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பை முன்மொழிந்த நீதியமைச்சரும் அரசியலமைப்பின் உறுப்புரை 154G(2) இன் அவசியத்தை அலட்சியம் செய்துவிட்டார் போலும். இந்த இருவரும் சேர்ந்துதான் இந்த திரிசங்கு நிலையை தீர்த்து வைக்க வேண்டியது அவசியமாகும்.

https://www.virakesari.lk/article/91030

Link to comment
Share on other sites

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது; ஊடகப் பிரதானிகள் மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?

பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?

பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?

பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.

90-10-1024x518.jpgஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து…

பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.

ஊடகவியலாளர்: புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளீர்களா?

அமைச்சர் உதய கம்மன்பில: புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும்.

பிரதமர்: அரசியலமைப்பு முழுவதும் மாற்றம் செய்யப்படின் வாக்கெடுப்பிற்கு செல்வது அவசியமாகும். ஆனால், எமக்கு அந்த மக்கள் ஆணை தெளிவாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 19ஆவது அரசிலமைப்பை நீக்க வேண்டும் என்றே எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அது குறுகிய கால தீர்வு. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவது நீண்ட கால தீர்வாக அமையும்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என்று ஒரு தரப்பு கூறும்போது, 20இற்கு 20 எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பிரதமர்: எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கட்சிகளுக்கும், தனி நபர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட கூடும். எமக்கு நிலையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. அதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

91-7-1024x602.jpgபிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்கள் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறது.

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மஞ்சளை இறக்குமதி செய்ய முடியாதா?

பிரதமர்: உள்ளூர் விவசாயிகள் தற்போது மஞ்சளை பயிரிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எம்மால் அதைரியப்படுத்த முடியாது. அதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை தைரியப்படுத்த வேண்டுமாயின் நாம் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாம் மஞ்சள் இறக்குமதி செய்தால் விவசாயிகள் மஞ்சள் பயிர்செய்கையை கைவிட்டுவிடுவார்கள்.

ஊடகவியலாளர்: வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதமர்: உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யுமாறு கூறியுள்ளோம். உதிரிப் பாகங்களை கொண்டுவருவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை.

ஊடகவியலாளர்: விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?

பிரதமர்: கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே அதனை செயற்படுத்த வேண்டும். நாம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம்.

94-4-1024x544.jpgஊடகவியலாளர்: பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்து கொள்ளும் செயற்பாட்டின் போது வதிவிடம் குறித்த பிரச்சினை காரணமாக பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படாமல் நியாயமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்ச: அமைச்சரவையில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேர்தல் பட்டியலில் பெயர் பதியப்பட்டிருப்பது போதுமானது என்று சுற்றறிக்கையில் திருத்தம் செய்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்: சட்டவிரோத இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?

பிரதமர்: சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், அவரிடமிருந்து தெளிவான பதிலொன்று கிடைக்கவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதன் மூலம் தீர்வு காணலாம் என்ற கோரிக்கைக்கு இந்திய பிரதமரும் சம்மதித்தார்.

பிரதமர்: திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்ம நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?

பிரதமர்: அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.

ஊடகவியலாளர்: எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் இரகசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா?

பிரதமர்: எம்.சி.சி. தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இடம்பெறாத நிலையில் அப்படியொரு பிரச்சினை குறித்து ஏன் பேச வேண்டும்?

ஊடகவியலாளர்: 20இற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தில் இணைத்து கொள்வதற்கு உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்குவீர்களா?

பிரதமர்: எமக்கு 150 காணப்படுகிறது. பதவிகளுக்காக வரும் உறுப்பினர்கள் தற்போது இல்லை. இதனையும் சொல்ல வேண்டும். நான் என்றால் 19இற்கு வாக்களிக்கவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச: 20இற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாராளுமன்ற எதிர்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் யார் என்று தேடிப்பார்த்தால் எமக்கு யார் ஆதரவு வழங்குவார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?

பிரதமர்: அது எனது கவனத்திற்கானதொன்று. (சிரிப்புடன்)

அமைச்சர் விமல் வீரவன்ச: குழுவின் பரிந்துரைகள் கிடைத்தன. அவை கலந்துரையாடப்பட்டு, பிரதமரின் திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஒருமித்த கருத்தொன்றை எட்டியுள்ளோம்.

ஊடகவியலாளர் போதைப்பொருள் வர்த்தகம் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வொன்று எடுக்கப்படுமா?

பிரதமர்: நாம் இந்த ஆபத்து குறித்து அறிந்து சோதனைகளை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய மட்டத்திலானோரே சிக்குகின்றனர். இதில் பிரதானமானவர்களையே கைது செய்ய வேண்டும். நாம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். அவர்களை கைது செய்வதன் மூலம் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியும்.

ஊடகவியலாளர்: தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதை செயற்படுத்துவீர்களா?

பிரதமர்: நாமே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதற்கான அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது அமைச்சர்களினால் பணிகள் இடம்பெறாத காரணத்தினாலா?

பிரதமர்: அப்படி ஒன்றும் இல்லை. ஜனாதிபதி கிராமங்களுக்கு பயணிப்பது என்பது இன்று நேற்று இடம்பெற்ற விடயமல்ல.

அமைச்சர் விமல் வீரவன்ச: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது தவறான விடயமா?

ஊடகவியலாளர்: மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா?

பிரதமர்: அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டத்திற்கு அமையவே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த: கடந்த அரசாங்கம் போன்று நாங்கள் நீதிமன்ற செயற்பாடுகளில் தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொள்ள மாட்டோம்.

அமைச்சர் விமல் வீரவன்ச: முந்தைய அரசாங்கம் ஊழல் தடுப்பு குழுவொன்றை நியமித்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கி. அதற்காக ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டது. அதன்படி ஊழல் தடுப்பு குழுவினாலேயே ஊழல் செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் அவரை நியமித்தவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

ஊடகவியலாளர்: பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட இன்று அமைச்சு பதவிகளிலுள்ள பலர் வீணாக சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பிரதமர்: தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. நாம் ஒன்றுக்கு ஒன்று செய்யும் விருப்பம் கொண்டவர்கள் அல்லர். நாம் ஒருபோதும் பழிவாங்கியதில்லை. மற்றுமொரு விடயம், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 100 வீடுகளை கொண்ட மாடி குடியிருப்பு வீட்டு திட்டமொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.

குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

https://thinakkural.lk/article/74357

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“20” நாட்டுக்கு நன்மை தருமா.? சட்டவல்லுநர்கள் கூறுவது என்ன.?

Screenshot-2020-09-30-11-31-55-922-org-m

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தற்போது இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள விவகாரமாக உள்ளது. இந்த திருத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும் சாதக பாதக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் இலங்கையின் சட்டத்துறையில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற சட்டவல்லுநர்கள் இந்த உத்தேச இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் குறித்த கருத்துக்களை சிங்கள வார இறுதிப் பத்திரிகையான அனித்தா அண்மையில் பிரசுரித்திருந்தது. எமது அருவி இணையத்தள வாசகர்களுக்காக அக்கருத்துக்கள் தமிழில் தொகுத்து தரப்பட்டுள்ளது.

கணக்காய்வு அபிவிருத்திக்கு தடையா? சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன

20வது திருத்தம் தொடர்பில் பேசும் போது நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திருத்தம் முன்வைக்கப்படுகின்றது என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் வரைவுப் பிரதியினைப் பார்க்கும் போது அரசாங்கம் முன்வைத்த விடயங்கள் எதுவும் அதில் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. திருத்தம் குறித்து அரசாங்கம் முன்வைக்கும் கருத்துக்களும், அதில் உள்ள விடயங்களும் முற்றிலும் வேறுப்பட்டுள்ளது. உதாரணமாக நாட்டை அபிவிருத்தி செய்ய கணக்காய்வு தொடர்பான சட்டத்தினை பலவீனப்படுத்த தேவையில்லை. அத்துடன் கணக்காய்வு செயற்பாடுகளையும் பலவீனப்படுத்த தேவையில்லை தானே?

19வது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட ஒப்பீட்டளவிலான ஜனநாயகக் கட்டமைப்புகளின் அழுத்தங்கள் இன்னும் சில காலங்களின் பின்பு பல்வேறு மட்டங்களில் செல்வாக்கு செலுத்தியிருக்கும். ஆனால் 20வது திருத்தம் முழுமையாக அதிகாரத்தினை தனி ஒருவருக்கு வழங்கவே முயற்சிக்கின்றது. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நிலவிய அராஜகமான பின்னணி, தீவிரவாத தாக்குதல் என்பனவற்றை முன்வைத்தே இந்த திருத்தம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் 19வது திருத்தம் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. பிரதமரும் ஜனாதிபதியும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தமையே எப்பொழுதுமே பிரச்சினைக்கு உரிய முக்கியமான காரணமாக இருந்தது. சந்திரிகா - ரணில் அரசாங்கத்திலும் இவ்வாறான பிரச்சினை தொடர்ந்து இருந்தது. இந்நிலையில், 20வது திருத்தத்தின் பின்பு எவரின் கரங்களில் அரசாங்க அதிகாரம் சென்றாலும் அராஜக நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது.

ஜனாதிபதி நியமனம் தொடர்பான வயது எல்லை குறைக்கப்படுவதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு நிகழப் போகும் நன்மை என்ன? கணக்காய்வினை பலவீனப்படுத்துவது நாட்டை முன்னேற்றுவதற்காகவா? கடந்த காலங்கள் முழுவதும் கணக்காய்வு திணைக்களத்திற்கு கிடைத்த சுயாதீனத்தன்மை காரணமாக நாட்டிற்கு நன்மை விளைந்ததே ஒழிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. உண்மையிலேயே கணக்காய்வு சம்பந்தமான விடயங்கள் எப்படி அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் என்பது பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும். ஜனாதிபதி சட்டத்தரணி சுனில் லங்காதிலக்க

இந்த 20வது திருத்தம் 78ல் இருந்த அரசியலமைப்பினை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றது என்று அனைவராலும் கூறப்படும் கருத்து உண்மை தான். இது மீண்டும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் செயல் என்று தான் கூற வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்கின்றமை மிகவும் மோசமான செயலாகும். அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்மையானதே. இந்த செயற்பாடுகள் எம்மைப் போன்ற நாடுகளுக்கு மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும். பாராளுமன்ற அதிகாரம் முழுமையாக ஜனாதிபதி வசமானால் மக்களின் இறைமைக்கு ஏற்படப் போகும் கதி என்ன? சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்றி மக்களின் இறைமை என்பதும் இல்லை. எனவே எப்படிப் பார்த்தாலும் 20வது அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் மோசமானது. 20வது திருத்தத்தினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுவதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

42 ஆண்டுகள் கடந்தாயிற்று எங்கே அபிவிருத்தி? சட்டத்தரணி ஜயந்த தெஹிஅத்தகே

நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ள ஜனாதிபதி ஒருவரைக் கொண்ட அரசியலமைப்பு தேவை என்ற காரணத்தினை முன்வைத்தே 1978ம் ஆண்டு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது. இதே கருத்தினையே 1965ல் ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு பொதுக் கூட்டத்தில் பகிரங்கமான முன்வைத்திருந்தார். அந்த சமயத்தில் டட்லி சேனாநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்கள் அக்கருத்துடன் உடன்படவில்லை. ஆயினும் ஜே.ஆர் 1978ம் ஆண்டு அவ்வாறானதொரு அரசியலமைப்பினையே உருவாக்கினார். ஆனால் 42 ஆண்டுகள் கடந்தாயிற்று. எங்கே அந்த அபிவிருத்தி? 2015ல் தான் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு ஓரளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு சிலர் பௌதீக ரீதியில் கட்டிடங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் மக்களின் வாழ்வில் அபிவிருத்தி இதுவரை ஏற்படவில்லை. 42 ஆண்டுகள் நாட்டில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் நாங்கள் ஏன் அவ்வாறான ஓர் அரசியலமைப்பு முறையை தொடர்ச்சியாகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்? 19வது திருத்தத்தில் உண்மையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பறிக்கப்படவில்லை. மாறாக அவரின் அதிகாரங்களைக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் 1978ல் ஜே.ஆர் கொண்டு வந்த விடயங்கள் சிற்சில மாற்றங்களுடன் அவ்வாறே இப்பொழுதும் பின்பற்றப்படுகின்றது. ஜே.ஆருக்காக அன்று 1978ம் ஆண்டு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 20ம் திருத்தம் இன்று ஜி.ஆருக்காக கொண்டு வரப்படுகின்றது என்று கூறினால் அது மிகையில்லை. ஆனால் அரசியலமைப்பு திருத்தம் என்பது பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் நலனைக் கருதியதாக இருக்கக் கூடாது. மக்களுக்காக கொண்டு வரப்பட வேண்டும். எமது நாட்டின் அரசியல் அமைப்பு திருத்த வரலாற்றின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு உள் நோக்கம் பின்னணியில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்று விடயங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு. ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் த சில்வா

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களுள் நானும் ஒருவர். இதன்படி தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமான விடயம். தேசியவாத கட்சிகள் நாட்டில் இருக்கின்ற பின்னணியில் எமது தலைவர்கள் சதுரங்க காய்களைப் போன்று அரசியல் சதுரங்க நகர்வுகளில் மாட்டிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுபல சேனா மற்றும் ஹெல உறுமய உட்பட இனங்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் கட்சிகளும், அமைப்புகளும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தின் மீது எப்படியோ செல்வாக்கு செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. இதனால் தான் இவ்வாறு இனங்களை முன்னிலைப்படுத்தும் கட்சிகளை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்;றை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறான பின்னணியில் தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமது நாட்டில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனினும் எந்தவொரு அரசியலமைப்பினை உருவாக்கும் போதும் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒரு புறம் பாதுகாக்கும் அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதேநேரம் அவை இரண்டுக்கும் இடையில் ஓர் சமநிலையான தன்மை பேணப்படல் வேண்டும். அவ்வாறானதொரு அரசியலமைப்பு தான் நல்லது என்று நான் கருதுகின்றேன். ஆனால் இந்த திருத்தத்தினூடாக அரசின் உயர் பதவிகளுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் வருவதனை நான் எதிர்க்கின்றேன். அத்துடன் ஜனாதிபதியின் தீர்மானத்தினை அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்து கேள்விக்குட்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரன்முறைகளையும் நான் எதிர்க்கின்றேன். கணக்காய்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். எனது அபிப்பியாரத்தின்படி பூட்டான் நாட்டில் உள்ளது போன்றதொரு அரசியலமைப்பினையே நாம் உருவாக்க வேண்டும். அந்நாடு மதச்சார்பில்லாத ஒரு நாடு. ஆனால் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பௌத்த தத்துவத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து, பொறுமையாகவும், நீண்ட கால கலந்துரையாடல்களின் பின்பு நாமும் நமக்கு பொறுத்தமான அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். பூட்டான் அரசியலமைப்பினை உருவாக்க ஆறு ஆண்டுகளை தேவைப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசியலமைப்பினை உருவாக்கக் கூடாது. ஜே.ஆர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 1978ம் ஆண்டு அரசியலமைப்பினை உருவாக்கினார். அதன் எதிர்விளைவாக தான் அதற்கு பின்னரான அனைத்து திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அவ்வாறில்லாமல் இந்தியா மற்றும் பூட்டானைப் போன்று நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியலமைப்பே எமது நாட்டிற்கு அவசியமாகும்.

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. சட்டத்தரணி நெவில் கருணாரத்ன

தற்போது ஆளும் கட்சிக்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கான அதிகாரம் உள்ளது என்பது உண்iயாயினும், இப்பொழுது நாட்டின் தேவை என்ன என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காணப்படுகின்றது. அதற்கான தீர்வு 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் இல்லை. நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்;வு காணுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நல்லாட்சி காலத்திலும் இவ்வாறான கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களால் வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்த 20வது திருத்த வரைவுப்பிரதியின் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கின்றது. ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதனையே முதலில் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அமைச்சரவை விரிவாக்கம் என்பது தேவையற்ற செலவினத்தினை நாட்டிற்கு ஏற்படுத்துகின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள இனப்பிரிவினை, மதப் பிரிவினை என்பனவும் குறித்தும் அக்கறைக் காட்ட வேண்டியுள்ளது. அவற்றை தடுப்பதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தற்போது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 20வது அரசியலமைப்பு திருத்தம் என்பது மக்களின் எதிர்;பார்ப்பு அல்ல. அத்துடன் அவர்களால் கோரப்பட்டதும் அல்ல.

நன்றி - 'அனித்தா' சிங்கள வாரப்பத்திரிகை

தமிழிலில் அருவி இணையத்துக்காக பிரியதர்ஷினி சிவராசா

http://aruvi.com/article/tam/2020/09/29/17347/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும்...!!!

 

Link to comment
Share on other sites

20’ பாதகம் குறித்து ஐநாவில் எடுத்துரைப்பு!

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்ச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையுமென அருட்தந்தை ஆ.குழந்தைசாமி, ஐ.நா.வில் எடுத்துரைத்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ.குழந்தைசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்,

“புதிய அரசியல் அமைப்பு அதிகார பகிர்வின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக,வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், புதிய அரசமைப்பை உருவாக்கும்போது உருவாக்க உரிமையுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்.

20வது அரசமைப்பு திருத்தச் சட்டம், ஜனாதிபதிக்கு தனது ஆட்சிகாலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. ஜனாதிபதி தனக்கு எத்தனை அமைச்சுகளையும் வைத்துகொள்ளலாம். நாடாளுமன்றபேரவை நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டும் உருவாக்கப்படுகிறது.

இதனால் பிற நாடாளுமன்ற கட்சிகளிருந்து உறுப்பினர்களையும் திறமைவாய்ந்த, ஒழுக்கமுள்ள நபர்களையும் சேர்க்காமல், இலங்கையின் பன்மைத்தன்மையை அழிக்கிறது. ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஓராண்டுக்குபிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தலைமை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் கலைக்க அதிகாரம் உண்டு.

அதேபோன்று தலைமை அமைச்சர், அவரால் பரிந்துரைசெய்யப்பட்ட இருவர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், இரசாங்க அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோரை எப்பொழுது வேண்டுமானாலும் ஜனாதிபதி நீக்கலாம்,எவரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

இதனால் நடாளுமன்ற பேரவை அரசியலமைப்பு பேரவையைவிட பலவீனமாகக்கப்பட்டுள்ளது. தேசிய உருவாக்க அமைப்பையும் சேவையை தணிக்கை செய்யும் அமைப்பையும் கலைத்துவிட்டார். எத்தனை அமைச்சர்கள், இணைஅமைச்சர்கள், இராசாங்க அமைச்சர்கள் வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

ஜனாதிபதியின் சர்வாதிகாரம் இலங்கையில் மக்களாட்சியை அகற்றியது. மக்களாட்சி அழிப்பு சர்வாதிகாரத்தை பெற்றெடுக்கும். அது தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த பேரவை, தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” – என்றார்.

https://newuthayan.com/20-பாதகம்-குறித்து-ஐநாவில்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.