Jump to content

குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர்

Puloppalai-Battle-1993-scaled.jpg

 

குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர்

29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள்.

மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள்.

வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள்.

யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55 ரக டாங்கிகள் இரண்டையும் ‘பவல்’ கவச வாகனம் ஒன்றையும் முற்றாக இழந்துவிட்டது. அதேவேளை மேலும் இரண்டு கவச வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

வெட்டவெளியில் நடந்துமுடிந்த இந்த புலோப்பளைச் சமர் புலிகள் இயக்கம் பெற்றுவரும் போரிடும் ஆற்றலின் ஒருபடி வளர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பதுடன் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு திருப்புமுனையையும் கொடுத்துள்ளது.

இந்தச் சமரைச் சிங்களப் படைத்தரப்பில் நின்று வழி நடாத்திய – அதில் காயமடைந்த – கேணல் சரத் பொன்சேகா கூறினார்; ‘விடுதலைப்புலிகள் எம்மைச் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கினர்.’

இந்தச் சாதனைச் சமரில், புலிகளின் சேனைக்கு தலைமை தாங்கி வழிநடாத்திய படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் விபரிக்கின்றார்….

இந்தச் சாதனைச் சமரில் மூன்று விடயங்கள் எதிரிக்குத் திகைப்பையும் – அச்சத்தையும் கொடுத்திருக்கும் ஒன்று, மிகக்குறைந்த நேரத்தில் சிங்களப்படை சந்தித்த பாரிய ஆள் – ஆயுத இழப்பு. இரண்டு, சிங்களச் சிப்பாய்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் கவசவாகனப்படை புலிவீரர்களால் சிதறடிக்கப்பட்டதுடன், அவர்களின் கண்முன்னாலேயே – பட்டப்பகலில் – டாங்கிகளையும் கவச வாகனங்களையும் இழந்தது. மூன்று, சிங்களப்படைக்குச் சாதகமான இந்த வெட்டவெளிச் சமரில் புலிகள் வெளிப்படுத்திய அபாரத்துணிச்சலும் தாக்குதல் தந்திரோபாயங்களும், இவ்வாறு இந்தச் சாதனைச் சமரைத்தளபதி பால்ராஜ் மதிப்பிடுகின்றார்.

‘ஒப்பறேசன் யாழ்தேவி’ எனப்பெயரிட்டுவிட்டு – பெரியதொரு எதிர்பார்ப்புடன் 28.09.1993 அன்று ஆனையிறவில் இருந்து ஏறக்குறைய 5000 பேர்கொண்ட சிங்களப்படையணிகள் கிளாலி நோக்கி நகரத்தொடங்கின.

புலிகளின் தந்திரோபாய விலகல் காரணமாக – ஆனையிறவிலிருந்து நீரேரிக்கரையோரமாகப் புலோப்பளை வீதிவரை உள்ள சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தைச் சிங்களப் படைகள் சுலபமாகக் கடந்து சென்றன. அன்றிரவு புலோப்பளையில் தரித்துநின்ற படையினர், 29ஆம் திகதி காலை 8.00 மணிக்கு எறிகணைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டு கவச வாகனப்படையின் உதவியுடன் அல்லிப்பளை நோக்கி நகரத்தொடங்கினர். சில நூறு மீற்றர்கள் கடந்தபின், அந்த வெட்டவெளிப் பகுதியில், திடீரென நிலத்துள் இருந்து முளைத்தெழுந்த புலிவீரர்கள், ஆச்சரியமூட்டும் வகையில் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இந்தத் திடீர்த் தாக்குதலைத் தொடக்கிவைத்த அணிகளுக்குத் தலைமை வகித்த, வன்னிமாவட்ட சிறப்புத் தளபதி தீபன் கூறுகின்றார்….

‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ (கவர்) அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்துகொண்டிருந்தது. எனவே வரப்போரங்களிலும் பற்றைக்கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும், உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்தோம்.’ இவ்வாறு தளபதி தீபன் தனது அனுபவத்தைக் கூறினார்.

இந்தச் சமரில் பங்குகொண்ட ஏனைய போராளிகள் சொல்லுகின்றார்கள்………

புலோப்பளை வீதியிலிருந்து அல்லிப்பளை நோக்கி முன்னேறிவந்த படையினர், அங்கிருந்த வீடுகள் எல்லாவற்றையும் தீமூட்டி எரித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தனர். எறிகணை வீச்சுகளுக்கு மத்தியில் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராக நிலத்தில் புதைந்து கிடந்த புலிகளின் அணி ஒன்றுக்கு மிக அருகில், 15-20 மீற்றர் தூரத்தில் – சிங்களப்படைகள் வந்ததும், புலிகளின் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்று இந்த வரலாற்றுச் சமரைத் தொடக்கி வைத்தது. இந்த நிலையில், சிங்களப்படையின் ‘சலாடின்’ ரக கவச வாகனம் ஒன்று, மிக அருகில் வைத்து போராளிகளின் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளான போது, அக்கவச வாகனம் பின் வாங்கிப் பாதுகாப்புத் தேடி ஓட, பின்னாலிருந்த டாங்கி சண்டையின் முன் முனைக்கு வந்தது.

ரி-55 ரக டாங்கி தனது தாக்குதலைத் தொடங்கமுன்னர், புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டாங்கி அணி சற்றுப்பின் வாங்கி, தன்னை நிலைப்படுத்தி மீண்டும் தாக்குதலைத் தொடங்க முயன்றது.

ஆனால் இன்னொரு முனையிலிருந்து மீண்டும் புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கிய அதேவேளை தத்தமது நிலைகளிலிருந்து எழுந்த புலிவீரர்கள் கவச வாகனப் படையுடன் நின்ற எதிரிப்படையைப் பாய்ந்து சென்று தாக்கத்தொடங்கினர். ஆச்சரியமூட்டும் விதத்தில் – வேகமாக நடந்த புலிகளின் படை நகர்த்தலைக்கண்ட சிங்களப்படை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்ச்சியிலிருந்து சிங்களப்படை மீளமுன்னர் பல முனைகளிலிருந்து எதிரிப்படைக்குள் நுழைந்த புலிவீரர்கள் கவச வாகனங்களுடன் சேர்த்து சிங்களப் படையை வேட்டையாடத் தொடங்கினர். ‘சமர்முனையில் டாங்கிகள் பின்னோக்கி ஓட்டமெடுத்த காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன’ என ஒரு புலிவீரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

இந்தப் பலமுனைத் தாக்குதல்களில் வன்னி மாவட்டச் சிறப்புத் தளபதி தீபனது அணியுடன், மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி ஜானினது அணி ஒரு முனையூடாகவும், மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி ஜெனாவின் தலைமையிலான அணி இன்னொரு முனையாலும் உள்நுழைந்து, சிங்களப்படையைச் சிதைத்து அவர்களுக்கு பேரழிவை உண்டுபண்ணினார்கள்.

காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்தச்சமர் மதியம் 12.30 மணியளவில் ஓய்வுக்கு வந்தது. அப்போது சிங்களப்படைகள் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை புலோப்பளை வீதிவரை – பின்னோக்கி அடித்து விரட்டப்பட்டன.

அதன்பின் மேலும் இரண்டு நாட்கள் அதே இடத்தில் தரித்து நின்று காயமடைந்த, இறந்த சிப்பாய்களை அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக புதியவர்களைச் சேர்த்துப் படையை புனரமைத்துவிட்டு, கிளாலியை நோக்கி சிங்களப்படை முன்னேறியது. கிளாலியைச் சென்றடைந்ததும் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கிமேலும் இரண்டு வாகனங்களை சிங்களப்படை இழந்ததுடன் உயிர்ச் சேதத்தையும் சந்தித்தது. இந்த நிலையில், 04.10.1993 அன்று அதாவது ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுப் பலத்த ஏமாற்றத்துடனும் – சோகத்துடனும் ஆனையிறவுத் தளத்திற்கே சிங்களப்படைகள் திரும்பிச் சென்று விட்டன.

இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிங்களப் படைத்துறைத் தலைமை நகைப்பிற்கிடமான விளக்கங்களையும் – வியாக்கியானங்களையும் ஒன்றுக்கொன்று முரணாகக் கொடுத்தது.

“இடத்தைக் கைப்பற்றுவதல்ல் புலிகளை இயன்றளவு கொல்லுவதே இந்த படை நகர்த்தலின் நோக்கம்” என ஒரு இராணுவ உயர் அதிகாரி கூறியிருந்தார்.

“வெட்ட வெளியில் சண்டை பிடித்தபடியால்தான் படையினர் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது” என ஒரு இராணுவ அதிகாரி சமாதானம் சொன்னார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் அங்கமண, “ வெட்டவெளிக்குப் புலிகளை இழுத்துவருவதுதான் எமது பிரதான குறிக்கோள். அப்போது தான் புலிகளைக் கொன்று இடங்களைக் கைப்பற்றமுடியும்” என விளக்கமளித்தார்.

இதேவேளை இப் பின்வாங்குகைக்குப் படைத்துறைத் தலைமை விளக்கமளித்து அறிக்கை விடுத்துள்ளது.

கிளாலிப் போக்குவரத்துப் பாதையை மூடுவதுதான் இராணுவ நடவடிக்கையின் நோக்கம். அதைப்படையினர் சாதித்துவிட்டனர். கிளாலி இறங்குதுறையை அழித்து புலிகளின் முகாம்களைத் தகர்த்து கடற்பயணத்தைத் தடுத்துவிட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

கொழும்பு துறைமுகத்தைப் போன்றுதான் கிளாலி இறங்கு துறையும் இருக்கும் என்று நம்பும் சிங்கள மக்களை, படைத்துறைத் தலைமையின் அறிக்கை திருப்திப்படுத்தியிருக்கும்.

ஆனாலும் படைத்துறைத் தலைமை இந்த அறிக்கையை எழுதத்தொடங்க முன்னரே, புலிகளின் விசைப்படகுகள் கிளாலிக் கடல் நீரேரியில் நீரைக்கிழித்தபடி பயணம் போய்க்கொண்டிருந்த காட்சிகளை, நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத்தள ராடர்கள் அழகாகக் காட்டிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் அது சிங்கள தேசத்துக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தானே! அப்படித் தெரிந்திருந்தாலும் அது கிளாலிக் கடலில் செல்லும் படகல்ல் தொண்டமானாறு கடலேரியில் செல்லும் படகெனப் பதிலறிக்கைவிடச் சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு அதிக நேரமெடுக்காது.

ஆனாலும் இந்த ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையின் நோக்கம் விசாலமானது இது ஒரு பெருந்திட்டம். பலகட்டங்களாகப் பல்லாயிரம் படைவீரர்கள் பங்குகொண்டு, பாரிய நிலப்பகுதியைக் கைப்பற்றும் ஒரு நாசகாரத் திட்டம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆனையிறவு, பூநகரி, காரைநகர், பலாலி ஆகிய தளங்களில் சுமார் இருபதாயிரம் படையினர் காத்துக் கொண்டிருந்தனர்.

கிளாலி மட்டும் ஓடிவந்து திரும்பிச் செல்ல ‘யாழ்தேவி’ வரவில்லை. அது சாவகச்சேரி, யாழ்நகர் ஊடாக தெல்லிப்பளைவரை செல்வதுதான் திட்டம்.

இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் லெப்.ஜெனரல் கொப்பேகடுவ அராலி வழியாக மானிப்பாயை அடைந்து, அங்கிருந்து யாழ். நகரைக் கைப்பற்றும் திட்டமொன்றை அமுல்படுத்த முயன்றார். அந்த இராணுவ நடவடிக்கை தொடங்க ஒருநாள் இருக்க அராலித்துறையில் நடந்த கண்ணிவெடியில் அவரும் அவரது குழுவினரும் கொல்லப்பட அப்படையெடுப்புத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. அப்படையெடுப்புத் திட்டத்திற்கு, ‘ஒப்பறேஷன் பைனல் கவுண்ட் டவுண்’ எனப் பெயரிட்டிருந்தனர்.

இப்போது கொப்பேகடுவவின் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு கிளாலி, சாவகச்சேரிப் பகுதிகளையும் உள்ளடக்கி பாரிய திட்டமாக வரையப்பட்டிருந்தது என்பது தான் உண்மை.

லெப். ஜெனரல் கொப்பேகடுவ குழுவினரின் மரணத்துடன் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த படையெடுப்புத் திட்டத்தை, இப்போது புலோப்பளைச் சமரில் படையினர் சந்தித்த பேரிழப்புக் காரணமாக, மேலும் ஒருமுறை அரசு பிற்போட்டுள்ளது.

ஆனாலும், முன்னரைப்போல நீண்டகாலம் தாமதித்திருக்காது இம்மறை விரைவில் அடுத்த படையெடுப்பை வேறொரு முனையிலிருந்து தொடுக்க ஆயத்தங்களைச் செய்கின்றது.

இவ்விதமானதொரு பெரும் படையெடுப்பை விரைவில் செய்யவேண்டிய தேவை சிறீலங்காவின் ஜனாதிபதி விஜேதுங்காவுக்கு உண்டு; படைத்துறைத் தலைமைக்கும் அது அவசியம்.

இராணுவ வழிமுறைகள் மூலம் தான் இனப்பிரச்சினையை அணுகவேண்டும் என்ற கடும்போக்கை கூறி சிங்கள மக்களின் ஆதரவைப்பெற்ற விஜேதுங்கா இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுச்சும்மா இருப்பார் என்று கூறமுடியாது. அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் வருகின்றது. அத்துடன், ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையில் பங்குகொள்ள வந்த சுமார் இருபதாயிரம் துருப்புக்கள், குடா நாட்டைச் சூழ உள்ள முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எனவே மிகவிரைவில் மீண்டுமொரு படையெடுப்பை குடாநாடு மீது நடாத்த வேண்டும் என்பதில், படைகளும் அரசும் உறுதியாகவே இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டிற்கு சிங்கள தேசமும் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி, ஐப்பசி 1993).

 

https://thesakkatru.com/puloppalai-battle-1993/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.