Jump to content

சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை


Recommended Posts

சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை

சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து புபோனிக் ப்ளேக் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

corona-ws.png

சமீபத்தில் பிளேக் அதிகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.ibctamil.com/world/80/151409?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.