Jump to content

தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி.

DicksithSeptember 30, 2020
 

battinews0001.jpg
இருபதாவது திருத்தம் என்பது ஜனநாயகத்திலிருந்து விலகி எதிர்த்திசையில் அதாவது சர்வாதிகாரப்போக்கில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எனவே அதனை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். அதற்காக நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன்.

இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.

திரு சுமந்திரன் நேற்றுமுன்தினம் கல்முனைக்கு விஜயம்செய்தபோது கல்முனைநெற் இணையத்தள ஏற்பாட்டில் நேர்காணலை மேற்கொள்ளமுடிந்தது. அந் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு வாசகர்களுக்காகத் தருகிறோம்.

கல்முனையில் இடம்பெற்ற வடக்குபிரதேச செயலக உண்ணாவிரதத்தை நிறைவுசெய்துவைக்கவந்தபின்னர் கல்முனைக்கு அவர் விஜயம் செய்தது இதுவே முதல்தடைவ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவருடனான நேர்காணல் இதோ?

வினா: இன்று நாட்டில் புதிய அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்பின் 20வது திருத்தம் பேசுபொருளாகவுள்ளது. அதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் திருத்தம் செய்யப்படவேண்டுமா? அல்லது முற்றாக எதிர்க்கிறீர்களா?

விடை: அதனை நாம் முற்றாகவே எதிர்க்கிறோம். சர்வாதிகாரப்போக்கிற்கு வித்திடும் அந்த இருபதில் உள்ள அனைத்து விடயங்களையும் எதிர்க்கிறோம்.

வினா: தங்கள் கட்சி சார்பாக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருக்கிறீர்கள்.அதில் நீங்கள் ஆஜராகுவீர்களா?

விடை: ஜந்துபேர் கொண்ட நீதியரசர் குழாத்தின் முன்னிலையில் 29ஆம் திகதி முதல் 20 விவகாரம் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பல நாட்கள் செல்லலாம். ஆனால் 3வாரங்களுள் உச்சநீதிமன்றம் இதற்கான தீர்வை பாராளுமன்றிற்கு அறிவிக்கவேண்டும். எமது கட்சி சார்பில் தலைவர் சம்பந்தர் ஜயா மனுத்தாக்கல் செய்துள்ளார். நான் ஆஜராகி வாதிடுவேன்.

வினா: அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் கடந்த காலங்களில் இன்னல்கள் அநீதிகள் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்புமீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாக்களித்து பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பிவந்தும் கூட்டமைப்பு இம்மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டலாம். கட்சிக்கேற்பட்ட அந்த பின்னடைவை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

விடை: த.தே.கூட்டமைப்பிற்கு அம்பாறையில் மட்டுமல்ல வடகிழக்கு எட்டுமாவட்டங்களிலும் பின்னடைவு ஏற்பட்டது. த.தே.கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதை விட நம்பிக்கை குறைந்துள்ளது என்று கொள்ளலாம். பின்னடைவுக்கு பல காரணங்களுள்ளன. பின்னடைவில் பாரிய பின்னடைவு என்பது அம்பாறை மாவட்டத்திலே தான் ஏற்பட்டது என்பதை ஏற்கிறேன்.

இலங்கையில் 1931ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வசன வாக்குரிமை முறையிலான தேர்தலின்படி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் எந்தவொரு தமிழ்க்கட்சிக்கும் தரப்பிற்கும் இல்லாமல்போன முதல் தடவை கடந்ததேர்தலில் தான். அப்பின்னடவை நாம் பொறுப்பு ஏற்கிறோம். மக்களுடைய எதிர்பார்ப்பு எம்மூலமாக நிறைவேற்றப்படவில்லை என்பது அதற்கான பிரதான காரணமாயிருக்கலாம். கடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாவிட்டாலும் ஆதரவாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் எமது மக்களுடைய பிரச்சினைகளை தேவைகளை குறைந்தபட்சம் தீர்த்திருக்கலாம் என்பது நியாயமான ஆதங்கம் எதிர்பார்ப்பு. அதில் தவறில்லை.உண்மையாக பலவிடயங்களை தீர்த்துவைத்தும் எதனையும் முழுமையாக தீர்த்துவைக்கமுடியவில்லை என்பதை ஏற்றாக வேண்டும். ஆகவே மக்கள் மத்தியிலுள்ள ஏமாற்றம் விரக்தி வெறுப்பு என்பது நியாயமானது. இதுவே பின்னடைவுக்கு முக்கிய காரணம்.

வினா: நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தில் முக்கியபங்கு வகித்த தங்கள் கட்சியும் தாங்களும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிரமதர் ரணில் ஆகியோருக்கு பக்கபலமாக இருந்தீர்கள். பலதடவகள் ஆட்சியை தக்கவைக்கவும் பிரதான பாகமெடுத்தீர்கள். ஆனால் தமிழ்மக்களது தேவைகயை பிரச்சினைகளை களைய அல்லது தீர்த்துவைக்க தவறியுள்ளீர்கள் எனற்குற்றசாட்டுமுள்ளது. அதைவிட அம்பாறை மாவட்ட தமிழர்களின் முக்கிய பிரச்சினையான கல்முனை வடக்குபிரதசசெயலக தரமுயர்த்தலில் போதிய அக்கறை காட்டவில்லயைன்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? கடந்ததேர்தலின்போது அம்பாறை மாவட்டதோல்விக்கு அதுவோர் காரணமென்பதை ஏற்கிறீர்களா?

விடை: அம்பாறை மாவட்டதோல்விக்கு முக்கியகாரணிகளில் ஒன்று கல்முனை விவகாரம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத்தான் முதலில்சொன்னேன் சிலவிடயங்களை முழுமையாக செய்துமுடிக்கவில்லையென்று. 2017இல் உள்ளுராட்சி அமைச்சராக கருஜயசூரிய இருக்கும்போது நானும் மாவையும் கல்முனை விவகாரம் தொடர்பாக பேசினோம். பின்பு வந்த தேர்தலில் வஜிர அமைச்சரானார். அவருடனும் பேசினாம்.அப்போது நாம் அரசாங்கத்தின் பங்குதாரரர் இல்லாவிட்டாலும் ஆதரவாக செயற்பட்டதனால் இது முடியுமன்று மக்களும் நினைத்தார்கள். நாமும் நினைத்தோம். ஆனால் அன்று ஸ்ரீல.சு.கட்சி 43உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபடியால் எமது ஆதரவு என்பது பேரளவில் இருந்ததே தவிர அதிமுக்கியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு பட்ஜெட்டில் 160பேர் ஆதரவளித்தோம்.அதாவது எம்மில் பெரிதாக அவர்கள் தங்கியிருக்கவில்லை. ஆனால் சு.கட்சி ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் 2018 அக்டோபர் 20க்குப்பிறகு ஜ.தே.கட்சி மாத்திரம் ஆட்சியமைக்க எமது ஆதரவு முக்கியமாக தேவைப்பட்டது. 2018 2019 களில் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் நாம் பூரணமாக ஆதவளித்தாம். அப்போது கல்முனை தரமுயர்த்தல் விவகாரம் எமது கோரிக்கைளில் ஒன்றாக பரிணமித்தது. அவர்களும் செய்வதாக வாக்குறுதியளித்தார்கள்.கணக்காளரை அனுப்புவதாகக்கூட சொன்னார்கள்.

அவர்களது வாக்கெடுப்பிற்கு எமது வாக்குகள் தேவைப்பட்டது. அதற்கு நாமும் ஆதரவளித்தோம். அதேபோல முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவும் அளிக்கப்பட்டது.அவர்களில் சிலர் அமைச்சரவையிலும் இருந்தார்கள். எனவே எமது ஆதரவு எப்படி இருந்ததோ அவர்களது ஆதரவும் அப்படி இருந்தது. சிலர் கல்முனை தரமுயர்த்தலை எதிர்த்தார்கள். அவர்களது அழுத்தம் கூடுதலாகவிருந்தது. அதுவும் அது இழுபடக்காரணமெனலாம்.

வினா: தமிழ்மக்களது உரிமைகள் அபிலாசைகள் எனவரும்போது இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் சுயநலப்போக்காடு முட்டுக்கட்டையாக அல்லது எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.கிழக்கு தமிழர்விடயத்தில் அவர்கள் அநீதி இழைத்தேவந்துள்ளனர் என்பதும் வெளிப்படை. எனினும் முஸ்லிமக்ளுக்கு இன்னல்வரும்பாது தங்கள் கட்சியும் தாங்களும் உரத்துக்குரல் கொடுத்ததோடு சட்டரீதியிலும் உதவிவந்துள்ளீர்கள். கல்முனை வடக்கு பிரதசசெயலக விவகாரம் தமிழ்மக்களின் பலதசாப்தகால நியாயமான அபிலாசை தேவை என்பதை உணர்ந்தும் அவர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவந்துள்ளார்கள் என்பது வெளிப்படை. இந்நிலையில் அவர்களுடனான இணக்க அரசியல் அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பதெல்லாம் சாத்தியப்படுமா அதற்கு உத்தரவாதம் அளிப்பார்களா?

விடை: எந்த உத்தரவாதமும் கிடையாது. அவர்கள் சுயநலப்போக்கோடு எமக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்கிறேன். அதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்கமுடியாது. அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்யவேண்டுமென்பதில்லை. நாம் இனஜக்கியம் நாட்டின் சமாதானம்கருதி சரியானவற்றையே செய்துவருகிறோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அநீதி இழைக்கின்றார்கள் என்பதற்காக அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது நாம் குரல்கொடுக்கமுடியாமல் இருக்கமுடியாது. அவர்களுக்காக முஸ்லிம்சமுகத்தை புறக்கணிக்கமுடியாது. எந்தசமுகத்திற்கும் அநீதி இழைக்கப்படுமN;பாது நாம் மௌனமாக வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.

வினா:முந்திய தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் ஆசனமொன்றைத்தருவதாக கூறியிருந்தும் அது தரப்படவில்லை.இம்முறைகூட பலத்த இழுபறிக்குமத்தியில்தான் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு தங்களின் பங்களிப்பும் இருந்ததாக அறியவருகிறது. அம்பாறை என்றால் ஏனிந்த அலட்சியப்போக்கு கட்சியில் காண்பிக்கப்படுகிறது?

விடை: துரதிஸ்டவசமாக அம்பாறை இம்முறை தமிழ்ஆசனத்ழைத இழந்தது. அதற்கு மாற்றீடாக தேசியப்பட்டியல் ஆசனத்தை இங்கு வழங்கவேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடும் எம்போன்றவர்களின் நிலைப்பாடும்.கட்சியின் அரசியல்குழு மத்தியசெயற்குழு போன்றாரின் தீர்மானமும் அம்பாறைக்கு வழங்கவேண்டுமன்பதே. அதன்படி நடந்தது.

வினா: புதிய அரசாங்கத்தோடு அபிவிருத்தி விடயத்தில் இணைந்து செயற்படுவீர்களா? அமைச்சர் தினேஸ்குணவர்த்தனா அழைத்திருப்பதாக தெரிகிறது. அப்படி பேச்சுவார்த்தைக்கு போவீர்களா? அரசுடன் இணைந்து செயற்படுவீர்களா?

விடை: பேச்சுவார்த்தைக்கென எந்த அழைப்பும் அரச தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. நான் புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் இருதடவைகள் பேசியுள்ளேன். அவர்கள் புதிய யாப்பு பற்றியும் அபிவிருத்தி பற்றியும் பேசினார்களே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி வாய்திறக்கவில்லை. இறுதியாக பாராளுமன்றிற்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோதுகூட நான் பேசினேன். அபிவிருத்திக்காக சேர்ந்து வேலைசெய்யுமாறு கேட்டுக்கொண்டார். அபிவிருத்திக்கு நாம் முட்டுக்கட்டை அல்ல. நாம் இணைந்து வேலைசெய்யத்தயார் என்று கூறினேன்.

அவரது கருத்தில் வேறெந்தவிடயமும் பேசவேண்டாமென்பதுபோலிருந்தது.

உண்மையில் அபிவிருத்தி என்ற வியடத்தில் சேர்ந்து வேலை செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சபனையுமில்லை. ஆனால் எமது மக்கள் எமக்கு அபிவிருத்திக்காக மட்டும் ஆணைதரவில்லை. மாறாக அரசியல் தீர்வுக்காகவும் ஆணை தந்துள்ளனர். எனவே அபிவிருத்திக்கு ஆதரவு நல்கும் அதேவேளை தமிழ்அரசியல்தீர்வுக்காக அழுத்தம் கொடுப்போம்

வினா: வடக்கு கிழக்கில் தமிழ்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படுவது குறிப்பாக தேர்தலில் ஒன்றாக பயணிப்பது குறித்து கருத்துக்கள் சமகாலத்தில் வருகின்றன. கிழக்கு மாகாணசபைத்தேர்தலிலும் இணைந்து சேர்ந்தியங்குவது போட்டியிடுவது தொடர்பில் சிலஅமைப்புகள் முயற்சியெடுத்துவருகின்றன. இந்தநிலையில் தங்கள் கட்சி ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடமுன்வருமா?

விடை: வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கும் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் மக்கள்மத்தியில் சம செல்வாக்குடன் திகழ்கின்றனவா,? என்பது ஒருபுறம்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏனைய கட்சிகள் சில ஓரளவு செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் வன்னியில் அவ்வாறான நிலை இல்லை.

எமது கட்சியைத் தவிர ஏனையகட்சிகள் வன்னி மற்றும் கிழக்கில் பேசக்கூடிய அளவில் செல்வாக்கு அற்ற கட்சிகளாகவேயுள்ளன. அவர்களுக்கு போதுமான செல்வாக்கு கிடையாது. எனவே அவர்களுடன் சேர்ந்து போட்டியிடுவதன்மூலம் பெரியதொரு மாற்றத்தை காணலாம் என்றுகூறமுடியாது.

வினா: கல்முனையில் இந்தநேர்காணல் இடம்பெறுவதால் இறுதியாக கல்முனை பற்றி வினவலாம். கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தில் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

விடை: எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது. நாம் தொடர்ந்து முயற்சிப்போம். ஆனால் ஒரு விடயத்தையும் கூறவேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் தரமுயர்த்தலை செய்துதருவோம் என்று வாக்குறுதியளித்தவர்கள் இன்று அரசாங்கத்தாடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது பதவிகளிலும் உள்ளனர். அவாக்ளால் இதனை ஏன் செய்யமுடியாது? அவர்கள் ஆட்சியின் பங்குதாரர்கள். பங்காளிகள். நாம் எதிர்க்கட்சியினர். எனவே பகிரங்கமாக அவர்கள் மேடைகளில் விடுத்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

 

 

http://www.battinews.com/2020/09/blog-post_772.html

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.

இவரை இப்போதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது பேச்சாளராகக் கொண்டுள்ளதா???????????😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இவரை இப்போதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது பேச்சாளராகக் கொண்டுள்ளதா???????????😲 

உஸ் எல்லாமே தமிழரசுக்கட்சி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். 

ஆனால், அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க முடியாது. 

அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்ய வேண்டுமென்பதில்லை. அவ்வாறான அரசியல்வாதிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  

நேற்று முன்தினம் திங்கட்கிழமை கல்முனைக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் எம்.பி ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படும் போதும் எங்களால் மௌனமாக வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  அதுபோலவே முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

நாம் இன ஐக்கியம், நாட்டின் சமாதானம் கருதி சரியானவற்றையே செய்து வருகிறோம். தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நாம் பொறுப்பேற்கிறோம். 

மேலும், மக்களுடைய எதிர்பார்ப்பு எம்மூலமாக நிறைவேற்றப்படவில்லை என்பது அதற்கான பிரதான காரணமாயிருக்கலாம்’ என்றும் சுமந்திரன் அப்பேட்டியில் குறிப்பிட்டார்.

https://samugammedia.com/the-time-to-embrace-the-muslim-people-too-sumanthiran/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் ஓசி பிஸ்கெட்டும் இலவச படிப்பும் தந்த சிலோன் தமிழ் பள்ளிக்கூடங்கள்  ஒற்றுமையாக வாழ்வதின் நன்மைகளை சொல்லி கொடுக்கவில்லை அதன் பிழை இப்போ இப்படி கதைக்க வைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதை அவர்களது அரசியல் வாதிகள் யாராவது சொல்கிறார்களா?

பிறகு எதுக்கு, இவரு கம்பு சுத்துறாரு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன வேணடாம் என்று சொல்கிறோமா?
அவர்கள்தான் மொட்டாக்கு போட்டுகொண்டு குழு அடிக்கிறார்கள்  

நான் கொழும்பில் கம்பகாவில் இருந்தபோது அணைத்து செல்ல பல 
விட்டுக்கொடுப்புகளை செய்தும் அவர்கள் முன்வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Maruthankerny said:

நாங்கள் என்ன வேணடாம் என்று சொல்கிறோமா?
அவர்கள்தான் மொட்டாக்கு போட்டுகொண்டு குழு அடிக்கிறார்கள்  

நான் கொழும்பில் கம்பகாவில் இருந்தபோது அணைத்து செல்ல பல 
விட்டுக்கொடுப்புகளை செய்தும் அவர்கள் முன்வரவில்லை 

நீங்கள் எல்ப் வானில் போனால்? ஏப்படி அணைவார்கள்? எதோ வெள்ளைவான் சமாச்சாரம் என ஓடி இருப்பார்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இழுத்து அணைங்க சுமந்துரன் சார்  அப்படியே அந்த கல்முனை தமிழ் தனி பிரதேச செயலகம் மட்டும் வாங்கி கொடுங்களன் பிளிஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி தமிழீழ பிரகடனம் செய்யப்பட்ட வட்டுக்கோட்டை மேடையில் முஸ்லிம் தலைவர்களும் இருந்தார்கள்..!

முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமைக்காக பேசுவது நாம் மட்டுமே..!

IMG_3313_1080.jpg இலங்கை தமிழரசு கட்சியின் யாப்பில் முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது வேறு எந்தவொரு கட்சியினதும் யாப்பில் இடம்பெறாத ஒரு விடயம். என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

மனித நேய நற்பணிப்பேரவை சம்மாந்துறை - ஸ்ரீலங்கா மற்றும் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் இணைந்த ஏற்பாட்டில் முஸ்லீம்களின் தேசிய தலைமையாக திகழ்ந்த கலாநிதி மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் சட்டமுதுமாணி அவர்களின் 20ஆவது ஆண்டு நினைவுப் பெருவெளி 

இன்று  முற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமான வேளை நினைவு பேருரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

நான் பிரதிநிதித்துவ படுத்துகின்ற இலங்கை தமிழரசுக்கட்சி  அதன்  யாப்பில் முஸ்லீம் மக்களின் தனியான  சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வேற எந்த அரசியல் கட்சிகளின் யாப்புகளிலும் இவ்விடயம் இருக்கின்றதா என எனக்கு தெரியாது.

முஸ்லீம் கட்சிகளுடைய அரசியல் யாப்பிலே இவ்விடயம் உள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் தமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம். இதனால் தான் தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த அஸ்ரப் வட்டுக்கோட்டை மாநாட்டிற்கும் சென்றிருக்கின்றார்.

அங்கு தனித்தழிழீழம் பிரகடணம் செய்கின்ற போது அங்கு பிரசன்னமாக இருந்தவர். இதனால் தான் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத்தராவிடின் தம்பி அஸ்ரப் தமிழீழத்தை பெற்று தருவேன் என மேடைகளில் முழங்கியவர் என நினைக்கின்றேன்.

பின்னர் 1977 ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் ஒன்றின் பின்னர் ஏற்பட்ட முடிவுகள்  அஸ்ரப்பின் மனதினை மாற்றியது. அதன் தொடர்ந்து தான்  முஸ்லீம் மக்களிற்கு தனிநாடு தேவையற்றது என எண்ணிய பின்னர் அவரது அரசியல் செயற்பாடு மாற்றமடைந்தது.

ஒரு  கவிஞனாக சட்டவாளனாக அரசியல் வாதியாக தினந்தோறும் அவர் பரிணமித்தவர்.ஆரம்ப காலத்தில் இருந்த கொள்கையில் இருந்து நீங்கிய பலரிடம் பயமிருக்கும். அனால் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அந்த பயம் இருக்கவில்லை என்பதை அவர் எழுதிய சில கவிதைகள் தெரிவித்திருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களாக தனிநாடு கேட்டார்.அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக அவரது அரசியல் பாதை திரும்பியது.முஸ்லீம் மக்களுக்கு இந்நாட்டில் தனித்துவமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.தேசிய மட்டத்தில் அந்த சிந்தனை இருந்தது என குறிப்பிட்டிருக்கின்றார் என கூறினார்.

https://jaffnazone.com/news/20641

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உட்சுவர் இருக்க புறச்சுவர் தீற்றத்தான் பாடுபடுவார். அவர்களின் மரணித்த நினைவு நாளெல்லாம் நினைவில் இருக்கும், போவார். தன் இனத்துக்காய் இறந்தவர்களின் நினைவு வராது. மற்றயவர்களின் உரிமைக்காக  குரல் கொடுப்பார், பாடுபடுவார். நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சான்று வேண்டுமாம். இதற்கு தமிழரசுக் கட்சியை வேறு இழுக்கிறார்.

14 hours ago, colomban said:

அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்ய வேண்டுமென்பதில்லை.

ஒரு சிலை வைத்துவிடலாம். என்னமா முற்றுந்துறந்த முனிவர் போல பேசுறார். 

Link to comment
Share on other sites

நன்றியுள்ளவைகள் தன் இனத்தைத்தான் சீண்டும் கடிக்கும். சுமந்திரன் நன்றியுள்ளவர். :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

ஆனால் ஒரு விடயத்தையும் கூறவேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் தரமுயர்த்தலை செய்துதருவோம் என்று வாக்குறுதியளித்தவர்கள் இன்று அரசாங்கத்தாடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது பதவிகளிலும் உள்ளனர். அவாக்ளால் இதனை ஏன் செய்யமுடியாது? அவர்கள் ஆட்சியின் பங்குதாரர்கள். பங்காளிகள். நாம் எதிர்க்கட்சியினர். எனவே பகிரங்கமாக அவர்கள் மேடைகளில் விடுத்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

அதை அவைகள் பாத்துக்குவினம் ,நீங்கள் கட்டிபிடித்துக்கொண்டிருந்த போது என்னத்தை கிழித்தனீங்கள் 
எதையாவது செய்துபோட்டு வந்து கதைக்கவேணும், அவர்கள் செய்யாவிட்டால் அடுத்ததேர்தலில் மக்கள் அவர்களை கவனித்துக்கொள்ளுவார்கள், நல்லவேளை உங்களை கிழக்கு மாகாணத்தில் பியூஸ் போகவைத்தது, அடுத்த வேலை மாகாண சபை தேர்தலில் திரத்தி திரத்தி அடிப்பது  
இல்லாட்டில் அடுத்த மாகாணசபையும் அவங்களிடம் தூக்கிக்கொடுத்து விட்டு இப்படி  விசர் கதைகள் தான் கதைப்பீர்கள்    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.