Jump to content

கடவுள் என் கனவில் வந்தார்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

கடவுள் 
என் கனவில் வந்தார் 
எப்படி இருக்கிறது 
பூமி என்றார் 

உங்களுக்கு தெரியாத 
என்று கேட்டேன் 
வேலைப் பழு 
எல்லாவற்றையும் கவனிக்க 
முடியவில்லை என்றார் 

என்னிலும் கொஞ்சம் 
கோபமாகத்தான் இருந்தார் 
ஏதோ தேவைக்காய் 
அவரிடம் அடிக்கடி 
போய் வந்தேன் 

எல்லாமே வந்த பின் 
அவரையும் மறந்தேன் 
இருந்தபோதும் 
அனைத்தும் அறிவார் 
எவன் கள்ளன் 
எவன் நல்லவனென 

மனிதர்கள் மனிதர்களாக 
இல்லை என்றேன் 
மானிடத்தை ஏன் 
கொன்றீர்கள் என்றேன் 
தான் இல்லை 
அது நீங்களே என்றார்

அழிவுகள் தொடர்ந்து கொண்டே 
போகிறதே என்ன செய்வதாய் 
உத்தேசம் என்றேன் 

கட்டுக்கு அடங்காமல் 
போய் விட்டது அதிகாரம் 
என் கைகளை விட்டு என்றார் 

மதமும் மதமும் மோதுகிறது 
அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறதே 
மனிதனும் மனிதனும் மோதுகின்றான் 
நோயும் பிணியும் தின்கிறது 
என்ன செய்யப் போகின்றீர்கள் என்றேன் 

அமைதித் தூதுவர் ஒருவரை 
அனுப்பி வைக்கிறேன் என்றார் 
அவரையும் இவர்கள் 
கொல்ல மாட்டார்களா என்றேன் 

அமைதி மீண்டும்
வரவில்லையானால் 
உங்கள் அழிவை தவிர 
வேறு வளி இல்லை என்றார் 

அவசரமாக திரும்ப
வேண்டும் என்றார் 
ஆயிரம் வேலை 
இருக்கு என்றார் 
இதை விட வேறு என்ன 
பிதாவே என்றேன் 

உனக்கு இருப்பது ஒருலகு 
எனக்கு இருப்பது
ஏழுலகம் என்றார் 

நல்லவர்களுக்கு காலம் 
இல்லை என்றேன் 
எல்லாமே அவர் அவர் 
விதிப்படி என்று 
அதட்டிப் போட்டு 
போய்விட்டார் 

காலைச் சேவல் கூவி 
கனவு கலைந்து 
கண் முழித்து பார்க்க 
காலையில் செய்தி வந்தது 

கறுப்புச் சிறுவன் ஒருவனை 
வெள்ளையர்கள் கொன்றதாகவும் 
கடவுளின் பெயரால் 
காலையில் ஒரு குண்டு வெடித்து 
மனிதம் இறந்ததாகவும் 

ஐயோ 
நாளையும் கடவுள் 
கனவில் வந்தால் 
என்ன செய்வதாய் 
உத்தேசம் என்று கேட்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 hours ago, uthayakumar said:

அமைதி மீண்டும்
வரவில்லையானால் 
உங்கள் அழிவை தவிர 
வேறு வளி இல்லை என்றார் 

maxresdefault.jpg

கவிதை அருமை தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை அருமை தோழர்..👍

கருத்திட்ட தமிழ் தேசியனுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதைகள் சமுதயத்தின் விழிபுணர்வுகளையே இருக்கின்றது, நல்ல சிந்தனைகள்.

நல்ல கவிதை , பாராட்டுகள்

கடவுளே யோசிப்பார், ஏன்ரா இந்த மனிதனை படைத்தோம், அங்கு அடிப்பட்டது காணதென்று என் இடத்தையுமல்லவா தேடுகின்றார்கள்,

தொடர்ந்து பகிருங்கள், கவிதையை பருக நாங்கள் இருக்கின்றோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சூப்பர் உதயகுமார்......கடவுளே கலங்கி நிற்கும் தருணம்.....!  👍

(உங்களின் ஏழுலகிலும் அமைதியான உலகு ஏதேனும் உண்டா என்றும்  கடவுளிடம் கேட்டிருக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களிடையே அமைதியை காக்க

மனிதனே கடவுளைக் கொண்டுவந்தான்
இப்போது அந்தக்கடவுளின்  பெயராலேயே
மனிதன் மனிதனைக்   கொல்கின்றான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, uthayakumar said:

ஐயோ 
நாளையும் கடவுள் 
கனவில் வந்தால் 
என்ன செய்வதாய் 
உத்தேசம் என்று கேட்பேன்.

எல்லோரும் ரொம்வும் குடையிறதால தான் கொரோனாவை விட்டிருக்கேன்.
திரும்பவும் குடைந்தால் இதைவிட வீரியமானவரை விட்டுருவேன் என்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதமும் மதமும் மோதுகிறது 
அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறதே 
மனிதனும் மனிதனும் மோதுகின்றான் 
நோயும் பிணியும் தின்கிறது 
என்ன செய்யப் போகின்றீர்கள் என்றேன் 

 

 

அதனால் தான் கொடிய நோயை விட்டு  மனம் திரும்பி வாழு என விட்டு விடடேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் எழுதிய அன்பு உறவுகளுக்கு நன்றிகள்!

 

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 20:59, uthayakumar said:

ஐயோ 
நாளையும் கடவுள் 
கனவில் வந்தால் 
என்ன செய்வதாய் 
உத்தேசம் என்று கேட்பேன்.

நாளை கனவில் வரும் கடவுள் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டு. பக்தர்களுக்கு நான் அருள் பாலிக்கிறேன் என்று சொல்லாதவரை நிம்மதி உதயகுமார். 

உங்கள் கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் உதயகுமார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

நாளை கனவில் வரும் கடவுள் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டு. பக்தர்களுக்கு நான் அருள் பாலிக்கிறேன் என்று சொல்லாதவரை நிம்மதி உதயகுமார். 

உங்கள் கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் உதயகுமார். 

கருத்துக்கு நன்றிகள் tulpen 

Link to comment
Share on other sites

நல்ல ஒரு கவிதையை படித்த உணர்வு... மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக படைக்கப்பட்ட மதங்கள்தான் இன்று பல பிரச்சனைகளிற்கு காரணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்..

அழகான கவிதை வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2020 at 20:12, nige said:

நல்ல ஒரு கவிதையை படித்த உணர்வு... மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக படைக்கப்பட்ட மதங்கள்தான் இன்று பல பிரச்சனைகளிற்கு காரணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்..

அழகான கவிதை வாழ்த்துக்கள்

புரட்சிகர தமிழனுக்கும் நிகேக்கும் மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 20:59, uthayakumar said:

கறுப்புச் சிறுவன் ஒருவனை 
வெள்ளையர்கள் கொன்றதாகவும்

நல்லகாலம் இங்கே மத கோட்பாடுகள் வருவதில்லை. இன பிரச்சனைகளுக்கு மதங்களை புகுத்தி சுகம் காணமுடியல்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு.🤣

நல்ல கவிதை உதயகுமார். பாராட்டுக்கள்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 13:18, குமாரசாமி said:

நல்லகாலம் இங்கே மத கோட்பாடுகள் வருவதில்லை. இன பிரச்சனைகளுக்கு மதங்களை புகுத்தி சுகம் காணமுடியல்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு.🤣

நல்ல கவிதை உதயகுமார். பாராட்டுக்கள்.👍🏽

நல்ல கருத்துக்கு நன்றிகள் குமாரசாமி.

Link to comment
Share on other sites

On 1/10/2020 at 04:59, uthayakumar said:

அமைதித் தூதுவர் ஒருவரை 
அனுப்பி வைக்கிறேன் என்றார் 
அவரையும் இவர்கள் 
கொல்ல மாட்டார்களா என்றேன் 

அமைதி மீண்டும்
வரவில்லையானால் 
உங்கள் அழிவை தவிர 
வேறு வளி இல்லை என்றார் 

அருமையான கவிதைக்கு நன்றி உதயகுமார் அண்ணா. 

எனக்கென்னவோ அந்தத் தூதுவர் தான் கொறோனா போலத் தெரிகிறது! 😄

Link to comment
Share on other sites

மனிதனே மதங்களை உருவாக்கி இவ்வுலகை நரகம் ஆக்கி உள்ளான்.  கவிதைக்கு நன்றி, uthayakumar.

உங்களை போல தான் ஒருவர்  "தினசரி தூறல்கள்" என தலைப்பிட்டு  கவிதையாக எழுதி தள்ளுவார். இப்போ அவர்  ஏனோ எழுதுவதில்லை. நீங்களாவது தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 11:14, மல்லிகை வாசம் said:

எனக்கென்னவோ அந்தத் தூதுவர் தான் கொறோனா போலத் தெரிகிறது! 😄

 

On 13/10/2020 at 03:04, nunavilan said:

மனிதனே மதங்களை உருவாக்கி இவ்வுலகை நரகம் ஆக்கி உள்ளான்.  கவிதைக்கு நன்றி, uthayakumar.

மல்லிகை வாசம் ,நுணாவிலான் உங்கள் இரிவரினது கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.