Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொழில் முறை யூடியூப் - Tikka Bro


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் முறை யூடியூப் 

டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது.

விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர்.

இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர்.  வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் 

பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார்.

இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி உள்ளது.

இவரது கிரேட்டிவ் கன்டென்ட்ஸ் அசத்துவனவாக உள்ளன. இவர் ஒருவரே, மகனாக, தகப்பனாக நடிப்பார். காமெராவை ஆட்டோவில் வைத்துவிட்டு ரெக்கோடிங் செய்து கொள்வார்.

அனேகமாக யூடியூப் வரலாறில் இரட்டை வேடத்தில் நடித்த ஒருவராக அவரே இருப்பார்.

வெகு விரைவாகவே, தமிழகம், கனடா, ஐரோப்பா, அவுஸ், மத்திய கிழக்கு என புகழ் அடைந்தது மட்டுமல்ல.... விளம்பரங்களும் அவரை நாடி சென்றன.

அவரது பிரமிக்கத்தக்க, நகைச்சுவைகளை மையப்படுத்திய சிந்தனையே அவரை பெருமளவில் உயர்த்தி உள்ளது.

காப்பி அண்ட் பேஸ்ட்  யூடியூப் சானல் ஓட்டிவிடலாம் என்று நினைத்து இழுபடுபவர்களுக்கு, இவரது சானல் வழிகாட்டியாக இருக்கும்.

இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இவருக்கு யூடியூப் சானல் மூலம் வரக்கூடிய வருமானமும், இவர் தனது வீடியோக்களில் போடும் தனது விளம்பரங்கள் மூலம் வரும் வருமானமும் தாராளமானதாக இருக்கும்.

 

 

வீட்டுக்குள் கள்வன் வந்தான்...

வசியம் செய்ய போறேன்

Job Interview:

வாழ்ந்து வேலை இல்லை.... 

 

Edited by Nathamuni
  • Like 3
  • Thanks 1
Link to post
Share on other sites

ஞான் இவரது பரம ரசிகனாக்கும்! தேடி தேடி பார்ப்பதுண்டு. சிரிப்பு சில வேளை நல்ல கருத்தும் கொண்டு இருக்கும்.
அவர் பேசும் தமிழ் நடைதான் அவரை தமிழில் பிரபலப்படுத்துகின்றது. 

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நிழலி said:

ஞான் இவரது பரம ரசிகனாக்கும்! தேடி தேடி பார்ப்பதுண்டு. சிரிப்பு சில வேளை நல்ல கருத்தும் கொண்டு இருக்கும்.
அவர் பேசும் தமிழ் நடைதான் அவரை தமிழில் பிரபலப்படுத்துகின்றது. 

அப்டி செல்லுங்க நானா .... அவரூ மாற ஆலுவா...

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

ஞான் இவரது பரம ரசிகனாக்கும்! தேடி தேடி பார்ப்பதுண்டு. சிரிப்பு சில வேளை நல்ல கருத்தும் கொண்டு இருக்கும்.
அவர் பேசும் தமிழ் நடைதான் அவரை தமிழில் பிரபலப்படுத்துகின்றது. 

எனக்கு whatsapp இல் அடிக்கடி வரும், கிட்டடியில் வந்த வங்கி கணொளி நல்ல இருந்திச்சு

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.