Jump to content

விசாரணைக்கு நான் தயார்; ஆனால் அவர்கள் விசாரணையை விரும்பவில்லை! - வி.மணிவண்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்”

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பார் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றது. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன்.

ஆனால் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலயே அவர்கள் விசாரணையை விரும்பவில்லை.

‘ஜனநாயக பண்பற்ற நிலை கட்சிக்குள் ஏற்படக்கூடாது என்று கட்சிக்குள்ளேயே ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களை எதிர்த்தேன். அவர்களுக்கு நான் முட்டுக் கட்டையாக இருப்பதே பிரச்சினை. இது 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பூதாகரமாகியது.

2010ம் ஆண்டில் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் விலகிய போது முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று, கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தான்தோன்றித் தனமாக செயற்படுகிறார் என்பதே. இவ்வாறான நிலையில் எமது அமைப்பு ஜனநாயக ரீதியாகச் செயற்படும் என கருதினோம்.

கட்சியை நிதி விவகாரங்களில் சீரான கட்டமைப்பில் வைத்திருக்க தேசிய அமைப்பாளர் என்ற முறையில் நிதி கட்டமைப்பை ஏற்படுத்தியதுமே என்னை விலக்குவதற்கு காரணமாக அமைந்தது. அதனை அவர்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட நிதியை கட்சியின் கடனை செலுத்த வழங்கியுள்ளேன். எனது நேரத்தை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளேன்.

கட்சிக்குள் அதிகமானோரை கொண்டு வந்தால் தலைமைக்கு ஆபத்தாக அமையும் என்று பொ.கஜேந்திரகுமார் கூறினார். தனது தாத்தாவை, தந்தையை அப்படித்தான் தூக்கியெறிந்தார்கள் என்றார். ஆனால் அப்படி நிலைமை வராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கட்சியின் கட்டமைப்பை நானே உருவாக்கினேன். அதனை பொ.கஜேந்திரகுமாரும் ஏற்றார்.” – என்றார்.https://newuthayan.com/விசாரணைக்கு-நான்-தயார்-ஆ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை – வி.மணிவண்ணன்

இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என மேலும் தெரிவித்தார்.

கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும் எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/நான்-உருவாக்கிய-கட்சி-கண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்

அதுதான் உண்மை! சுயநலத்திற்காக அரசியலுக்குள்  மட்டுமல்ல பொது வாழ்விலும் நுழைபவர்கள் பொதுநல நோக்குடன் உழைப்பவர்களை, உள்வாங்க மாடார்கள். வாங்கினாலும் முக்கிய  பொறுப்புக்களில் அமர்த்தமாடடார்கள், அமர்த்தினாலும் பெயர் எடுக்க விடமாட்டார்கள். பெயரை நாறடித்து, ஓரங்கட்டி, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியேற்றிவிடுவார்கள். இது சுயநலவாதிகளின் பொதுப்பண்ணப்பு. நான் பொதுவாகச் சொன்னேன்.  

Link to comment
Share on other sites

53 minutes ago, satan said:

அதுதான் உண்மை! சுயநலத்திற்காக அரசியலுக்குள்  மட்டுமல்ல பொது வாழ்விலும் நுழைபவர்கள் பொதுநல நோக்குடன் உழைப்பவர்களை, உள்வாங்க மாடார்கள். வாங்கினாலும் முக்கிய  பொறுப்புக்களில் அமர்த்தமாடடார்கள், அமர்த்தினாலும் பெயர் எடுக்க விடமாட்டார்கள். பெயரை நாறடித்து, ஓரங்கட்டி, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியேற்றிவிடுவார்கள். இது சுயநலவாதிகளின் பொதுப்பண்ணப்பு. நான் பொதுவாகச் சொன்னேன்.  

இது எங்கடை மரபணுவில் மேலோங்கி நிக்கும் குணாதிசயம். அதனால் தான் எங்கு போனாலும் அதே நிலை - களம் அல்லது புலம் எமது நடவடிக்கைகள் ஒரே பாணி!. எமது பின்னடைவுகளும் அதனால் தான்.

Link to comment
Share on other sites

நான் உருவாக்கிய கட்சி என் கண் முன்னால் அழிவடைதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன்; மணி அதிரடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயகப் பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடுவேன். கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலைப் பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்கத் தகுதியற்றவன்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உரிமை கோரும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்று அவர், யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:-

“கட்சிக்குள் நடந்த உள்ளக முரண்பாடுகள் தற்போது உச்சமடைந்து என்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் கட்சியை விட்டு விலக்கப்பட்டவன் நான்தான். இதுவரை பலர் மிக மோசமான குற்றங்களை புரிந்தவர்களை கூட கட்சியை விட்டுநீக்காத நிலையில் முதன்முதலாக என்னை நீக்கிள்ளார்கள். என் மீது குற்றசாட்டுக்களை முன்வைத்து எனக்கு கடிதம் அனுப்பட்டது. அக் கடிதத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்து பதில் கடிதம் அனுப்பினேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் மறுத்த நிலையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்தார்கள். இதன் போது காணொலிகள் உள்ளிட்ட 37 ஆவணங்களை என் சார்பில் சமர்பிக்க தயார் எனவும், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஒர் சுயாதீன விசாரணை குழுவை அமைத்தால் அதன் முன் சாட்சியங்களை நெறிப்படுத்த தயார் என அறிவித்தேன்.

ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. ‘எமது கட்சிக்கென நிதிக் கட்டமைப்பை உருவாக்க முயற்சித்தேன். அதுவும் ஒருசிலருக்குப்பிடிக்கவில்லை. ஏனெனில், அங்கும் அவர்கள் தமது சுயலாபத்தை மட்டுமே பார்த்து, நிதிக் கட்டமைப்பை உருவாக்க நினைத்த என்னை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த கட்சிக்காக எனது சொந்தப்பணம் , எனது நேரம் என்பவற்றை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலவழித்து , இளைஞர்களை ஒன்றிணைத்து கட்சியை உருவாக்கினேன். ‘தமது சுயநலத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலியிட நினைப்பவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவேன். ஏனெனில் கட்சியை உருவாக்கி, கட்சிக்கு என்று கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவன் நான்.

அப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியாக உருவாக்க கடுமையாக எதிர்த்தார். கட்சியாக அதனை மாற்ற முடியாதமைக்கு காரணத்தையும் சொன்னார். அதாவது , கட்சி என உருவாக்கினால் பலர் கட்சிக்குள் இணைவர் அதன் ஊடாக எமது தலைமைக்கே ஆபத்தாக அமையும், என்று கூறி தனது தாத்தா , அப்பாவிற்கு நடந்தவற்றையும் உதாரணமாக கூறினார்.

‘அதற்கு நான் சில சமரசங்களை மேற்கொண்டு, கட்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினேன். கிராமங்கள் தோறும் கட்டமைப்பை உருவாக்கினேன். ‘நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடும் மனநிலையில் இருக்கவில்லை. அப்போது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் என்னிடம் மிக மன்றாட்டமாக தேர்தலில் போட்டியிடக் கேட்டனர். அதனலேயே போட்டியிட்டேன். எனக்கு புதிய கட்சியோ , அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை. நான் உருவாக்கிய கட்சி என்கண் முன்னால் அழிவடைதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். கட்சிக் குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன். எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச் சபையை கூட்டி முடிவெடுப்போம்” என்றார்.

https://thinakkural.lk/article/76108

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.