Jump to content

"திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன்

ரஜினி காந்த்

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.

காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

https://www.bbc.com/tamil/india-54382401

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 23:16, பிழம்பு said:

இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.

Screenshot-2020-10-04-12-27-50-496-com-a 

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மக்களையே அபகரிக்கத் தெரிந்தவனுக்கு அவர்கள் வீட்டை அபகரிக்கத் தெரியாதா....? என்னங்க விசுகு அவர்களே.!
  • காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே! -தமிழ் நிலா.
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. நல்ல மப்பிலை சொல்லுறார், கண்களும் சொல்லுது.
  • லைலா வலையை பாவிச்சு மீன் குஞ்சுகளையும் வழிச்சுக்கொண்டு போனால் மீன்வளம் அழியாமல் என்ன செய்யும்?
  • தமிழக மீனவர்கள் கேரள கடற்பரப்புக்குள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மலையாளிகள் அடித்து இவர்களை விரட்டி விடுவார்கள் என்று தெரியும், புத்தளம் போன்ற பகுதி கடற்பரப்புக்குள் கூட செல்ல மாட்டார்கள், சிங்கள மீனவர்கள் விரட்டி விடுவார்கள் என்ற பயம் (ஆனால் மன்னார் தமிழ் மீனவர்கள் செல்ல முடியும்). இவர்கள் வருவது எல்லாம் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் மட்டுமே. யுத்தகாலத்தில் தமிழ் மீனவர்களின் எல்லை மிகச் சுருங்கி இருந்தது. ஆழ்கடல் மீன் பிடிப்பு அறவே இல்லாமல் இருந்தது. யுத்தகாலப் பகுதியில் தமிழக மீனவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான இந்த ஆழ்கடல் எல்லாம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இப்ப யுத்தம் இல்லாமையால் வடக்கு தமிழ் மீனவர்கள் தமக்குரிய கடற்பரப்பில் மீன் பிடிக்க முனையும் போதுதான் இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்கின்றது. 30 வருட யுத்தத்தாலும், சுனாமியாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எம் மீனவர்களின்  வயிற்றில் அடிப்பது மட்டுமல்லாமல், மீன்வளத்தையே நாசம் செய்யும் தமிழக மீனவர்கள் வந்து கொள்ளையடித்து போகட்டும் என்று சொல்லும் அளவுக்கு உடையார் போன்றோருக்கு தமிழக விசுவாசம் பெருகியிருப்பது தான் வேதனை. இது வரை காலத்தில் ஒரு தமிழக அரசியல் தலைவர்களாவது, ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு தமிழக தலைவர்களோ செயற்பாட்டாளர்களோ, தமிழக பிரமுகர்களோ, தமிழக மீனவர்களைப் பார்த்து, ஈழத்தமிழர்களின் மீன் வளத்தை அடாத்தாக பறிக்க வேண்டாம், எல்லை தாண்டி அவர்களின் கடற்பரப்பிற்குள் (கரையில் நின்று பார்த்தாலே தெரியக் கூடிய அளவுக்கு) சென்று, கடல்தாயின் அடி வயிற்றில் இருந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டும் உபகரணங்கள் கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்களா? சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா?  அவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால் மிகவும் நலிவுற்று இருக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள் தான் மேலும் மேலும் குனிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.  நலிந்தவன் முதுகில் சவாரி செய்வது தொப்புள் கொடி உறவுகளாலும் நடைபெறுவது தான் யதார்த்தம்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.