Jump to content

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஹெலிய ரம்புக்வெல.... கிறுக்குப் பயல். 
முன்பு அமைச்சராக  இருந்த போது, 
தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.
அதனைக்  கேள்விப் பட்ட மகிந்த,  இவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார்.

பிறகு... இப்ப, யாழ்ப்பாணம் வந்து.. பனங்கள்ளை குடித்து விட்டு, 
உளறுவதை எல்லாம், நாம்.. கணக்கில் எடுக்கப் படாது.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

அதுங்க பிழைப்பு அப்பிடி.  ஊளையிட்டு தங்கள் ஊழல்களை மறைக்கபாக்குதுகள்.கோத்தாவே கணக்கெடுக்க மாட்டார் உவரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

இப்படிக் கதைப்பதை எப்படி யாழ்ப்பாண ஊடகவியலாளரகள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்?

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

தமிழ் சிறி நான் அடுத்து சொல்லும் விஷயம் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தும்.  வழக்கு நடந்துகொண்டிருந்த அதேநேரம் தான் அமைச்சராக இருந்தவேளையில் நடந்த விபத்தாக காரணம் காட்டி இவர் ஜனாதிபதி நிதியில் இருந்து 20மில்லியன் ரூபா எடுத்தவர். இந்த விடயம் பின்னர் விசாரணையும் செய்யப்பட்டது. உண்மையில் இப்படி ப்பட்டவர்கள் தான் ஸ்ரீலங்காவுக்கு அமைச்சராக இருக்க தகுதியானவர்கள்!

இவருடைய மகன் இவரை வெண்டவர். ஒரு செய்தியின் படி பிரிட்டிஷ் விமான கதவை மலசலகூட கதவு என்று நினைத்து திறக்க முயன்றவர். அதுவும் 35,000 அடி உயரத்தில். அதோடு தந்தையார் கதவு ஓடைக்குளால் இன்னொரு அறையை பார்க்கவெளிக்கிட்டு தான் விழுந்ததாக இந்த கட்டுரையில் பிரஸ்தாபித்துள்ளனர். இதோ செய்தி: http://www.gbdigest.com/2013/08/breaking-news.html


மற்ற செய்தியின் மூலங்கள்.

https://www.timeslanka.com/2012/11/20/minister-rambukwella-takes-melbourne-hotel-to-court/

https://colombogazette.com/2016/06/14/fcid-grills-keheliya-on-funds-obtained-after-australia-accident/

Link to comment
Share on other sites

1 hour ago, ragaa said:

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்.

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

கெஹெலியவுக்கு இருமருங்கிலும் அமர்ந்திருப்பது அங்கஜனும் வியாழேந்திரனும் தானே? அடிமைகளின் விசுவாசம் முகத்தில் அப்படியே பளிச்சென்று தெரிகிறது. 

Link to comment
Share on other sites

6 hours ago, ragaa said:

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

நீங்களும் அவர்கள் போல தானே நடக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

சுத்துமாத்து தெரியாத தங்கச்சி.... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

நல்ல விசயங்களுக்கு அவர் வரார் எண்டு சொல்லுறதை விட அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது? மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

 

http://www.ilakku.org/ஆயுதம்-தூக்கியோரை-தெற்கி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

வாக்குக் கேட்கும் போது புலிப்பாட்டு... வாக்கு வீழ்ந்த பின்.. சிங்களத்துதிபாடல்.

இவங்களுக்கு வாக்குப் போட்டவங்களுக்கு பிச்சையும் போடக் கூடாது.

பின்லாடன் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடவில்லை.. அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை.. அமெரிக்க ஏவலுக்காகப் பயங்கரவாதம் செய்தார்... எஜமானர்களாலேயே அழிந்தார்.. சிலை வைக்க யாரும் துணியவில்லை.

ஆனால் ஹிந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிரித்தானிய பார்வையில் பயங்கரவாதியான.. ஹாந்திக்கு... சிலை உண்டு.  தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மண்டேலாவுக்கு.. வெள்ளையின அரசின் பார்வையில் கொடிய பயங்கரவாதி.. சிலை உண்டு.

ஏன் சிங்கள அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு இன்று முட்டுக்கொடுக்கும்.. விமல் வீரவம்ச என்ற முன்னாள் பயங்கரவாதி வந்த ஜே வி பி கட்சியின் தலைவர் பயங்கரவாதி.. ரோகண விஜயவீரவுக்கும் சிலை உண்டு..

ஏன் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சமூக உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து அதுவும் ஆயுதக் கையளிப்பின் பின்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில்.. போராடி உயிர் நீத்த திலீபனுக்கு தமிழ் மக்கள்.. சிலை வைக்க முடியாது.

ஹாந்தி.. மண்டேலா.. ரோகண விஜயவீரவுக்கு மேலான தகுதி திலீபனுக்கு உண்டு.

அதனை குடிகாரன் சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதி.. ஹெகலிய ரம்புக்வலவுக்கு விளங்க வைக்க ஏன் அந்த வலதும் இடதும் முயலவில்லை..??! 

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, puthalvan said:

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

நன்றி...நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஹொட்டல் மேலும் பிழை இருக்குது அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

பிந்திய தகவல்களின் படி லாயர் வண்டூஸ் கட்டாய விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் சமூகம் அளிக்க முடியாது இருகிறாதாம்🤣

பிகு: கீழே புதல்வன் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

அமைச்சர் பெருமான் போதையில் இருந்தது அவர் விழுந்தமைக்கு ஒரு காரணியாக இருந்தாலும், முக்கிய காரணி கதவை திறக்க முடியாமல் போனதே. தவிரவும் ஒரு அறையில் தங்குபவர் தண்ணி அடிப்பார், அப்படியே பால்கனிக்கும் போவார் என்பதை ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒரு ஹோட்டல் ரூமை பாவிப்பவர் அந்த அறையை சாதாரணமாக பாவிக்கும் முறைதானே இது. ஆகவே விழுந்தமைக்கும்  ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்துக்கும் இடையே ஒரு நிகழ்வு-சங்கிலி ( causative link) உருவாகி இருக்கும். 

விழுந்தமைக்கு அமைச்சரின் செயல்பாடும் ஒரு கூட்டு காரணி எனில், இழப்பீடு அதற்கேற்ப குறைக்கப்படும் (comparative  negligence). 

Link to comment
Share on other sites

திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – இப்படி சொல்கிறார் வியாழேந்திரன்

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பு – புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” – என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனை ஒசாமா பில்லேடனுடன் ஒப்பிட்டதுடன், நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேசிய போது வியாழேந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/திலீபனின்-போராட்டத்தை-கொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செண்பகம் said:

யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தியாகி திலீபனின் உணாவிரதத்தையே கொச்சைப் படுத்துகிறவனுடன் சேர்ந்து, அவரின் கனவை நனவாக்கப் போகிறாராம். சிரிப்பதா? அழுவதா? தெரிந்துதான் சொல்கிறாரா? அல்லது கேட்போர் அனைவரும்  முட்டாள்கள் என்று நினைத்து பேசுகிறாரா? ஹெகெலியாவின் பேச்சுக்கும் இவரின் விளக்கத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. இப்ப விளங்குகிறது, சிங்களவனின் கொக்கரிப்புக்கு பின்னால் இருந்து கொண்டு வினோத விளக்கமளிப்பவர்களை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

Link to comment
Share on other sites

10 hours ago, alvayan said:

 

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

இதில் என்னவென்றால் கோத்தா வந்தால் தான் வன்னியை இவர்களிடம் இருந்து காப்பாற்றலாம் என்று முக நூல் முழுவதும் பதிவை போட்டவர்களை கண்டால் சிரிப்பாய் வருது.

On 3/10/2020 at 10:20, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதென்றால் உண்மை தான்.....புலிகளையும் போராட்டத்தையும் தனியாக நின்று ஒடுக்கிய வீரர்கள் தானே ........!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.