Jump to content

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட

சுரங்க நெடுஞ்சாலை..!

renamingrohtangtunnel_20200102153314.jpg

dsgkjl_5f51f040a5e38.JPG  INDIA-TUNNEL-1-1600942936565_174bfa291f7_original-ratio.jpg

 

10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்.

உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க நெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைப்பதாக, ஆண்டு முழுக்க போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதாக இருக்கிறது. முன்னர் கடும் பனிப்பொழிவு இருக்கும் போது ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில், இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன வரையறைகளுக்கு ஏற்ப இந்தச் சுரங்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு, டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம்.

இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாக, காற்றோட்ட வசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாக, வெளிச்சம் கொண்ட, கண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில:

a. இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும் இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்.

b. அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

c. 60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய் வசதிகள்

d. 250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்தி, ஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும் வசதி.

e. 1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதி

f. வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயண வழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

g. சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

h. 50 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள்

i. 60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள்.

ரோட்டங் கணவாய்க்கும் கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 -ம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 -ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரிய புவியியல், மலைப்பரப்பு மற்றும் வானிலை சவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர் நீளம் கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ரோட்டங் சுரங்கப் பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3-ம் தேதி காலை 10 மணிக்கு ரோட்டங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார்.

மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தமிழ் இந்து

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை "அடல் குகை" வடிவமைப்பின் குறுக்கு படத்தின் (Cross Section) விவரணை.

 

Untitled.png

 

இந்தியா டுடே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடல் குகையின் தேவை பற்றிய காணொளி..

பொறியியலின் முயற்சி பாராட்டத்தக்கது.. 👍

குறிப்பு:

காணொளியை பார்க்கும்போது ஒலியை சுத்தமாக நிறுத்திவிட்டு பார்க்கவும், ஏனெனில் 'காய்ரா.. பூய்ரா..' என ஏதோ புரியாத அந்நிய மொழியில் ஒலிக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

அடல் குகையின் தேவை பற்றிய காணொளி..

பொறியியலின் முயற்சி பாராட்டத்தக்கது.. 👍

குறிப்பு:

காணொளியை பார்க்கும்போது ஒலியை சுத்தமாக நிறுத்திவிட்டு பார்க்கவும், ஏனெனில் 'காய்ரா.. பூய்ரா..' என ஏதோ புரியாத அந்நிய மொழியில் ஒலிக்கிறது.

 

 

"10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்."

 

 

சுவிஸில் 17 கிலோமீட்டர் சுரங்கப்பாதை இருக்கிறது 
டென்மார்க்கையும் ஸ்வீடனையும் இணைக்கும் சுரங்கபாதைதான் உலகில் நீளமானது என்று எண்ணுகிறேன். 

10 கிலோமீட்டர் சுரங்கப்பாதை சுவிஸில் 10 மேல் இருக்கும் என்று எண்ணுகிறேன் 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120657167_3428608737233223_2995994987503778767_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=2wD0kvkk6MUAX_nehFI&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1d17ea66ef1081e5b5dacaec0322b580&oe=5FA1581A

மோடி நேற்று திறந்து வைத்த குகையின் நீளம் 9 கிலோ மீட்டர் தூரமுடையது. அந்த குகை வழிப்பாதையில் பயணிகள் உடைமாற்றிக் கொள்ள வசதி இருக்கிறது என்பது மோடி 3 தடவை ஆடையை மாற்றியுள்ளதிலிருந்து தெரிகிறது. :grin:

 

ஆளே இல்லாத குகை பாதையில் யாருக்கு டாடா காட்டுறாரோ. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

120657167_3428608737233223_2995994987503778767_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=2wD0kvkk6MUAX_nehFI&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1d17ea66ef1081e5b5dacaec0322b580&oe=5FA1581A

மோடி நேற்று திறந்து வைத்த குகையின் நீளம் 9 கிலோ மீட்டர் தூரமுடையது. அந்த குகை வழிப்பாதையில் பயணிகள் உடைமாற்றிக் கொள்ள வசதி இருக்கிறது என்பது மோடி 3 தடவை ஆடையை மாற்றியுள்ளதிலிருந்து தெரிகிறது. :grin:

ஆளே இல்லாத குகை பாதையில் யாருக்கு டாடா காட்டுறாரோ. :grin:

கழுகுக் கண்கள் உங்களுக்கு..! 💐

மூனு முறை உடுப்பு மாற்றியுள்ளதை கூர்ந்து கவனித்துள்ளீர்களே..? நானென்றால் 'சுரங்கம் எப்படி வடிவமைத்துள்ளார்கள்..? தரமாக உள்ளதா..?' என்ற வகையில் மட்டுமே பார்ப்பேன்.

அவர் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவதான் வழக்கமாம்..! 😜

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

கழுகுக் கண்கள் உங்களுக்கு..! 💐

மூனு முறை உடுப்பு மாற்றியுள்ளதை கூர்ந்து கவனித்துள்ளீர்களே..? நானென்றால் 'சுரங்கம் எப்படி வடிவமைத்துள்ளார்கள்..? தரமாக உள்ளதா..?' என்ற வகையில் மட்டுமே பார்ப்பேன்.

அவர் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவதான் வழக்கமாம்..! 😜

 

நீங்கள் எஞ்சினியர், நான் ரெய்லர்!?😜

அவரவர் தங்களுக்கு, சம்பந்தப் பட்ட விடயங்களைத்தான் கவனிப்பார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

120657167_3428608737233223_2995994987503778767_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=2wD0kvkk6MUAX_nehFI&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1d17ea66ef1081e5b5dacaec0322b580&oe=5FA1581A

மோடி நேற்று திறந்து வைத்த குகையின் நீளம் 9 கிலோ மீட்டர் தூரமுடையது. அந்த குகை வழிப்பாதையில் பயணிகள் உடைமாற்றிக் கொள்ள வசதி இருக்கிறது என்பது மோடி 3 தடவை ஆடையை மாற்றியுள்ளதிலிருந்து தெரிகிறது. :grin:

 

ஆளே இல்லாத குகை பாதையில் யாருக்கு டாடா காட்டுறாரோ. :grin:

 

1 hour ago, ராசவன்னியன் said:

கழுகுக் கண்கள் உங்களுக்கு..! 💐

மூனு முறை உடுப்பு மாற்றியுள்ளதை கூர்ந்து கவனித்துள்ளீர்களே..? நானென்றால் 'சுரங்கம் எப்படி வடிவமைத்துள்ளார்கள்..? தரமாக உள்ளதா..?' என்ற வகையில் மட்டுமே பார்ப்பேன்.

அவர் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவதான் வழக்கமாம்..! 😜

 

ஒரு ஆண் உடுப்பு மாற்றியதையே இவ்வளவு உற்று கவனிக்கிறாரென்றால்
ஒரு பெண் உடுப்பு மாற்றினால் எப்படி எல்லாம் துருவி ஆராய்வாரோ?ஆய்வாளர் சிறி.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஒரு ஆண் உடுப்பு மாற்றியதையே இவ்வளவு உற்று கவனிக்கிறாரென்றால்
ஒரு பெண் உடுப்பு மாற்றினால் எப்படி எல்லாம் துருவி ஆராய்வாரோ?ஆய்வாளர் சிறி.

ரொம்ப கஸ்டம்..

ஏர்போர்ட்டில் எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக நம்ம 'தமிழ் சிறீ' நின்றால் ஒருத்தரும் தப்ப இயலாது..! 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

121009492_3436321679795262_3462867506394543577_n.png?_nc_cat=105&_nc_sid=730e14&_nc_ohc=ThjgKu0Td_8AX9EL8BB&_nc_ht=scontent-frx5-1.xx&oh=12bb8953df6892a286077a30bc5cf95d&oe=5FA48308

 

120845951_685104609100316_6077053747521820598_o.jpg?_nc_cat=104&_nc_sid=dbeb18&_nc_ohc=t39nxltFWVYAX9RByDu&_nc_ht=scontent-frt3-1.xx&oh=69efb421d56e835725fb4d16108eabea&oe=5FA51DA1

 

சாலையின் மத்தியில்.. வாகனத்தை நிறுத்தி,  புகைப்படம் எடுத்ததால்.. ஏற்பட்ட விபத்து. :grin: 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.