Jump to content

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்

வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு  வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது.

இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்கில் எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காது, கிழக்கு தொல்பொருள் செயலணியொன்றை உருவாக்கி அதனை வழிநடத்துவதற்கு பௌத்த மதகுருமாரையும் நியமித்திருந்தனர்.

இது தொடர்பில் வடகிழக்கு தமிழ் மக்களினாலும் சர்வதேச சமூகத்தினாலும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பபப்பட்டிருந்தன. ஆனால் அவற்றினையெல்லாம் புறந்தள்ளி கிழக்கு தொல்பொருள் செயலணியின் செயற்பாட்டினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் திட்டமிட்ட வகையில் நகர்த்தி வருகின்றார்.

கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் இல்லை. கிழக்கு மாகாணம் சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்ற வகையில் காய்களை நகர்த்தி வருகின்றார். அதற்காக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழும் இடங்களில் பௌத்த தொல்லியல் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றினை நேரடியாக அரசாங்கம் செய்யும்போது ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தமிழர்களின் அழுத்தங்களை குறைப்பதற்காக சில பௌத்த பிக்குகளைக் கொண்டு சில முரண்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் ஒரு கட்டமாகவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பகுதியில் பிக்குகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அமைகின்றன.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தினை பௌத்தர்களின் பூமியாக மாற்ற வேண்டும் என்பதில் பல காலமாக செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், அவரை எதிர்ப்பவர்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டும் வருகின்றார்.

குறிப்பாக மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் என்றும் மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வருகின்றார். கடந்த நல்லாட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை விகாரைக்கு அழைத்து வந்து அவருக்காக பெரும் நிகழ்வினையே ஏற்பாடு செய்திருந்தார்.

கிழக்கில் பௌத்த சிங்கள வாதத்தினை வேரூன்றச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவரும் நிலையில், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக அதனை வேறு வடிவில் வேரூன்றச் செய்யும் செயற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

குறிப்பாக கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது போரதீவுப்பற்று, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிங்களவர்களை குடியேற்றுவதில் மிகவும் தீவிரமான செயற்பாடுகளை குறித்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கொண்டுவந்த நிலையில், அதனை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் கடமையினை செய்யவிடாது தடுக்கப்பட்டனர். குறித்த தேரர் மீது அதிகாரிகளுக்கு இருந்த அச்சம் காரணமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையினை தட்டிக்கேட்க அரச அதிகாரிகள் அச்சம் கொள்ளும் நிலையேற்பட்டது.  குறிப்பாக குறித்த தேரர் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இருக்கும்போதும் அவர்கள் குறைந்தது தாக்குதலை தடுக்ககூட நடவடிக்கையெடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலையே இருந்து வருகின்றது.

அவருக்கு அன்றைய அரசிடம் இருந்த செல்வாக்கு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்து வருகின்றது. அதற்கு காரணம் அவருக்கு அரசாங்கம்   பூரண சுதந்திரம் வழங்கியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இன்று கிழக்கு தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் பல்வேறு அழுத்தங்களும் எதிர்ப்பு குரல்களும் வந்தவண்ணமுள்ள நிலையில், அவற்றினை திசை திருப்பும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடா வெளியில் நடந்த சம்பவத்தினை நோக்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இராணுவ அதிகாரி தலைமையில்  செயலணி (கூர்மை - Koormai)

குறிப்பாக அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். தேர்தல் காலத்தின் போது வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட வேற்றுச்சேனைக்கு பிக்கு ஒருவர் சென்று தொல்பொருள் இடம் என்று கூறி அங்கு எல்லையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து அந்த பிக்குவினை அங்கிருந்து செல்ல வைத்தனர். அதனை தொடர்ந்து மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவது போன்று பாசாங்கு செய்வதைக் கண்ட மக்கள் அவரையும் துரத்தியடித்தனர்.

இவ்வாறான நிலையில் மக்களின் கவனத்தினை திசைதிருப்பி தொல்பொருள் இடங்கள் என தமிழர்களின் பகுதிகளில் எல்லைகள் இடப்பட்டு தமிழர்களின் புராதன இடங்களை பௌத்தர்களின் பூமியாக காட்டுவதற்கான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் தாயகப் பூமியில் உள்ள தமிழர்களின் அடையாளங்களை அழித்து தமது அடையாளங்களை நிறுவும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு செயற்படுகின்றது. இதனை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.

குறிப்பாக பன்குடாவெளி போன்ற நூறுவீதம் தமிழர்கள் வாழும் பகுதியை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

குறிப்பாக கிழக்கு தொல்பொருள் செயலணி மூலம் தமிழர்கள் முற்றுமுழுதாக வாழும் பகுதிகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை தடங்கல் இன்றி முன்னெடுக்கவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றோரை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. அவர் சென்று மோதல் நடாத்தி விட்டு அப்பகுதியில் ஒரு பதற்ற நிலைமையினை ஏற்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரை நிலைகொள்ளச் செய்வதன் மூலம் தமது நோக்கத்தினை அடையும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வக்கற்ற நிலையிலேயே அரசாங்கத்திற்கு துதிபாடும் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

வடகிழக்கில் தமிழர்களின் ஆதிகால இருப்புக்கான அடையாளங்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அவற்றினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றவர்கள் மூலம் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வரலாற்றினையும் அதன் பொக்கிசங்களையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இன்று உள்ளது.

-மட்டு.நகரான்-

http://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-தீவி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் காத்திரமான பதிவு. 

இப்போது மகிந்த என்னை ஏமாற்றி விட்டார் என அம்பேபிட்டிய ஒரு புது நாடகத்தை அரங்கேற்றுகிறார்.

அதாவது இவருக்கு அரசுடன் முரண்பாடாம். இவர்கள் செய்யும் அடாவடிகள் அரச ஆதரவுடன் இல்லையாம் 😂.

இவரின், ஞானசாரரின் கடிவாளம் எப்போதும்  அரசின் கையில்தான் இருக்கும். தேவைபடும்போது இறுக்கி பிடிப்பார்கள். தேவைபடும் போது தளர்வாக விடுவார்கள்.

தொல்பொருள் செயலணி சேர தகுதிவாய்ந்த தமிழர் இல்லையாம். முன்வந்த வைத்திய கலாநிதிக்கு பதில் என்ன?

இதில் இருக்கும் தேரர்களின் தொல்பொருள் துறைசார் தகுதி பற்றி யாருக்காவது தெரியுமா?

முழுக்க முழுக்க கிழக்க்கின் மரபுரிமையை, வரலாற்றை மாற்றி எழுதும் ஒரே நோக்கில் அமைக்கபட்டதே இந்த செயலணி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

முழுக்க முழுக்க கிழக்க்கின் மரபுரிமையை, வரலாற்றை மாற்றி எழுதும் ஒரே நோக்கில் அமைக்கபட்டதே இந்த செயலணி. 

அதற்குத்தான் நாங்கள் பிள்ளையானையும் , வியாழேந்திரனையும் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோமே, அவர்கள் மகிந்தவிடமும், கோத்தாவிடமும் இதுபற்றிப் பேசி, கிழக்குச் செயலணியின் தமிழ்நில அபகரிப்பினைத் தடுத்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

அதற்குத்தான் நாங்கள் பிள்ளையானையும் , வியாழேந்திரனையும் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோமே, அவர்கள் மகிந்தவிடமும், கோத்தாவிடமும் இதுபற்றிப் பேசி, கிழக்குச் செயலணியின் தமிழ்நில அபகரிப்பினைத் தடுத்து விடுவார்கள்.

உங்கள் விசனம் விளங்குகிறது.

ஆனால் அதே மக்கள்தானே ஜனாவையும் சாணக்கியனையும் கூட தெரிவு செய்துள்ளார்கள். அவர்கள் இந்த விசயத்தில் குரல் கொடுக்கவும் செய்கிறாகள்.

அடுத்த தேர்தல் வரும் போது மக்களுக்கு அபிவிருத்தி அரசியலும் சரிவராது, வெறும் வார்த்தை ஜாலம்தான் என்பது விளங்கி இருக்கும்.

அப்போது, வினைதிறனான ஒரு தேசிய அரசியல் மட்டுவில் இருக்குமாயின் மீண்டும் 4/4 தமிழ் தேசியத்தின் கையில் வரும்.

அப்படி ஒரு வினைதிறனான தலைமையாக எனக்கு சாணக்கியன் தெரிகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்போது, வினைதிறனான ஒரு தேசிய அரசியல் மட்டுவில் இருக்குமாயின் மீண்டும் 4/4 தமிழ் தேசியத்தின் கையில் வரும்.

நீங்கள் சொல்வது நல்லவிடயம்தான். ஆனால் கிழக்கில் தேசியத்துக்கு ஆதரவான சக்திகளுக்குக் காயடிக்க சிலர் நடந்துமுடிந்த தேர்தலில் களத்தில் இறங்கிப் போராடியதுபோல, இனியும் போராடுவோம் என்று சூளுரைத்திருக்கிறார்கள். பார்க்கலாம். ஆனால், எனக்கு இதுவரை புரியாத ஒரு கேள்வி என்னவென்றால், திடீரென்று கிழக்குமாகாண மக்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கிளம்பியிருப்பது ஏன் என்பதும், இதனால் அவர்கள் அடையவிரும்புவது எதுவென்பதும் தான். வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான ஆத்திரமாக அவர்களின் "தேசிக்காய்களுக்கு" எதிரான வெறுப்பைப் பார்க்கமுடியவில்லை. இது மொத்தத் தமிழ்த்தேசியத்திற்கும் எதிரான நிலைப்படென்றே எனக்குப் படுகிறது. நான் எண்ணுவது தவறாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், உங்களின் கருத்தென்ன இதுபற்றி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

நான் முன்னரும் உங்களிடம் இதை சொல்லியுள்ளேன்.

நிச்சயமாக தமிழ் தேசிய உணர்வு கிழக்கிலும் வடக்கிலும் மங்கியே செல்கிறது.

எந்த ஒரு கொள்கையும் அதன் இறுதி இலக்கு இதுதான், அதற்க்கான கால எல்லை இதுதான் என இருக்கும் வரைதான் அதற்கு மக்கள் அபிமானம் கிடைக்கும்.

உதாராணத்துக்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்டை எடுங்கள். நீங்கள் பணத்தை வைப்பில் இட்டு கொண்டே இருங்கள், ஆனால் உங்கள் பணம் எப்போ, எவ்வளவாக மீளளிக்கபடும் என நாம் சொல்லமாட்டோம் என ஒரு வங்கி சொல்கிறது. 

இன்னொரு நிறுவனமோ அதே பணத்தை மாதம் எங்களிடம் தாருங்கள் ஒரு வருடத்தில் உங்களை சுற்றுலா கூட்டி போவோம்/லப்டொப் தருவோம் என்கிறது. 

மக்களுக்கு சேமிப்பு கணக்கில் பணத்தை வைப்பதே தமக்கும், தம் பிள்ளைகளுக்கும் நீண்டகால நோக்கில் நல்லது என தெரிந்தாலும் ஒரு சாரார் - எப்போ மீளளிக்கபடும் என்பதே தெரியாத இந்த வைப்பில் இடுவதை விட. கிடைக்கும் லேப்டாப்பையாவது வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்போம் என நினைப்பது வழமைதானே?

இப்படி ஒரு நிலமைதான்.

எனது அனுபவத்தின் படி லேப்டாப் கிடைகவே மாட்டாது. மிஞ்சி போனால் ஒரு பேப்பரில் லேப்டாப் என எழுதி தருவார்கள்.

சேமிப்பு கணக்கில் போட்டு, அதை மீளளிக்கும் போது எடுத்து எமது தேவைகளை பூர்திசெய்வதே நீண்டகால தீர்வாக இருக்கும்.

ஆனால் இந்த திட்டத்தை நம்பும் மக்கள் ஏமாந்து வரும் போது, அவர்கள் மீண்டும் நம்பி பணம் போடும் வகையில் சேமிப்பு வங்கி இருக்க வேண்டும்.

எல்லா சேமிப்பு வங்கிகளையும் ஒன்றாக்கி, சேமிப்பு திட்டத்துக்கு புது மெருகூற்றி, அதனை ஒரு நம்பகமான, நடக்ககூடிய திட்டமாக மக்கள் முன் வைக்க வேண்டியதே இப்போதைய அவசரத்தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அதற்குத்தான் நாங்கள் பிள்ளையானையும் , வியாழேந்திரனையும் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோமே, அவர்கள் மகிந்தவிடமும், கோத்தாவிடமும் இதுபற்றிப் பேசி, கிழக்குச் செயலணியின் தமிழ்நில அபகரிப்பினைத் தடுத்து விடுவார்கள்.

அப்போ இதுவரை காலமும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ?? இதற்கு முதல் கூட்டமைப்பினர்தானே இருந்தவங்கள் அவர்கள் கண்டு கொள்ளாதது ஏனோ ??
அவர்கள் இருக்கும் போது நில ஆக்கிரமிப்பு இப்ப தொல் பொருளியல் எழுத்துமட்டுமே வித்தியாசம் ரகுநாதன் கோசான் சொன்னது ஜனா அவர்களும் சாணாக்கியன் அவர்களும் , கலையரசனும் முயலட்டுமே பார்ப்போம் .

அம்பாறை மாவட்டம் மேற்கு எல்லைக்கிராமம் வளத்தாப்பிட்டி  1200 குடும்பங்கள் ஒரு கிராம சேவகர் மாத்திரம் இந்த கிராமத்திற்கு யானை தொல்லை , கரண்ட் வசதிகள் கிடையாது அப்பப்ப தமிழ் அரசியல்  வாதிகள் வாக்குக்கு சென்று வருவார்கள் ஆனால் மக்கள் பெரிதாக இவர்களுக்கு வாக்களிப்பதில்லை சிங்கள் எம்பிக்கு மாத்திரம் வாக்களிப்பார்கள் , சம்மாந்துறை பிரதேச செயலாளருக்கு  போண் போட்டு கேட்ட போது மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் துணை அரசாங்க அதிபர் ஜெகதீசனுக்கு போண் அடித்தால் பதில் இல்லை இதுதான் இங்குள்ள அரசியலும் தமிழ் மக்களுக்குமான சேவைகள் ஆனால் அந்த ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் சில சேவைகளையும் செய்வது சிங்கள எம்பிக்கள் மாத்திரம் .

வீரமுனை படுகொலைகள் என்று சொல்வார்கள் அங்கே மக்களுக்கு குடி தண்ணீர் இல்லை ஆனால் சம்மாந்துறை அனைத்து பிரதேசங்களிலும் ( முஸ்லீம்) சகல வசதிகளும் உண்டு , சொறிக்கல்முனை இந்த ஊரே கன பேருக்கு தெரியாது , வீரச்சோலை இப்ப டி நிறைய கிராமங்கள் இருக்கு ஆனால் என்ன செய்தார்கள் செய்திருக்கிறார்கள் என்றால் ???...................................................................
 
2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது நல்லவிடயம்தான். ஆனால் கிழக்கில் தேசியத்துக்கு ஆதரவான சக்திகளுக்குக் காயடிக்க சிலர் நடந்துமுடிந்த தேர்தலில் களத்தில் இறங்கிப் போராடியதுபோல, இனியும் போராடுவோம் என்று சூளுரைத்திருக்கிறார்கள். பார்க்கலாம். ஆனால், எனக்கு இதுவரை புரியாத ஒரு கேள்வி என்னவென்றால், திடீரென்று கிழக்குமாகாண மக்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கிளம்பியிருப்பது ஏன் என்பதும், இதனால் அவர்கள் அடையவிரும்புவது எதுவென்பதும் தான். வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான ஆத்திரமாக அவர்களின் "தேசிக்காய்களுக்கு" எதிரான வெறுப்பைப் பார்க்கமுடியவில்லை. இது மொத்தத் தமிழ்த்தேசியத்திற்கும் எதிரான நிலைப்படென்றே எனக்குப் படுகிறது. நான் எண்ணுவது தவறாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், உங்களின் கருத்தென்ன இதுபற்றி? 

உங்கள் கருத்து மிகச்சரி  அதாவது மொத்த தேசியத்திற்கு அல்ல கிழக்கு மாகாணத்திற்கு  எங்கள் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் 
 
அண்மையில் அம்பிட்டிய தேரர் கூட சிலரை தடுத்து நிறுத்தினார்  ஒரு பக்கம் பார்த்தால் நல்ல விடயம் மறுபக்கம் பார்த்தால் நமக்கும் தான் இந்த தொல்பொருளியல் , வனத்துறையெனவும் அரசாங்க நிலமெனவும் பல ஏக்கர் காணிகள் எல்லை போடப்பட்டுள்ளது என்ற செய்தியும் இருக்கிறது 

மேலே நான் கூறியுள்ள அம்பாறை சிங்கள கிராமத்தில் அருகில் இருக்கும் கிராமமான வளத்தாப்பிட்டி எனும் கிராமத்தில் ஆதிசிவன் ஆலயத்தின் சுற்றவுக்காணிகள் அரச நிலமாக பிடிக்கப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ இதுவரை காலமும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ?? இதற்கு முதல் கூட்டமைப்பினர்தானே இருந்தவங்கள் அவர்கள் கண்டு கொள்ளாதது ஏனோ ??
அவர்கள் இருக்கும் போது நில ஆக்கிரமிப்பு இப்ப தொல் பொருளியல் எழுத்துமட்டுமே வித்தியாசம் ரகுநாதன் கோசான் சொன்னது ஜனா அவர்களும் சாணாக்கியன் அவர்களும் , கலையரசனும் முயலட்டுமே பார்ப்போம் .

அம்பாறை மாவட்டம் மேற்கு எல்லைக்கிராமம் வளத்தாப்பிட்டி  1200 குடும்பங்கள் ஒரு கிராம சேவகர் மாத்திரம் இந்த கிராமத்திற்கு யானை தொல்லை , கரண்ட் வசதிகள் கிடையாது அப்பப்ப தமிழ் அரசியல்  வாதிகள் வாக்குக்கு சென்று வருவார்கள் ஆனால் மக்கள் பெரிதாக இவர்களுக்கு வாக்களிப்பதில்லை சிங்கள் எம்பிக்கு மாத்திரம் வாக்களிப்பார்கள் , சம்மாந்துறை பிரதேச செயலாளருக்கு  போண் போட்டு கேட்ட போது மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் துணை அரசாங்க அதிபர் ஜெகதீசனுக்கு போண் அடித்தால் பதில் இல்லை இதுதான் இங்குள்ள அரசியலும் தமிழ் மக்களுக்குமான சேவைகள் ஆனால் அந்த ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் சில சேவைகளையும் செய்வது சிங்கள எம்பிக்கள் மாத்திரம் .

வீரமுனை படுகொலைகள் என்று சொல்வார்கள் அங்கே மக்களுக்கு குடி தண்ணீர் இல்லை ஆனால் சம்மாந்துறை அனைத்து பிரதேசங்களிலும் ( முஸ்லீம்) சகல வசதிகளும் உண்டு , சொறிக்கல்முனை இந்த ஊரே கன பேருக்கு தெரியாது , வீரச்சோலை இப்ப டி நிறைய கிராமங்கள் இருக்கு ஆனால் என்ன செய்தார்கள் செய்திருக்கிறார்கள் என்றால் ???...................................................................
 
உங்கள் கருத்து மிகச்சரி  அதாவது மொத்த தேசியத்திற்கு அல்ல கிழக்கு மாகாணத்திற்கு  எங்கள் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் 
 
அண்மையில் அம்பிட்டிய தேரர் கூட சிலரை தடுத்து நிறுத்தினார்  ஒரு பக்கம் பார்த்தால் நல்ல விடயம் மறுபக்கம் பார்த்தால் நமக்கும் தான் இந்த தொல்பொருளியல் , வனத்துறையெனவும் அரசாங்க நிலமெனவும் பல ஏக்கர் காணிகள் எல்லை போடப்பட்டுள்ளது என்ற செய்தியும் இருக்கிறது 

மேலே நான் கூறியுள்ள அம்பாறை சிங்கள கிராமத்தில் அருகில் இருக்கும் கிராமமான வளத்தாப்பிட்டி எனும் கிராமத்தில் ஆதிசிவன் ஆலயத்தின் சுற்றவுக்காணிகள் அரச நிலமாக பிடிக்கப்பட்டுள்ளது 

இந்த வளத்தாபிட்டி கிராமத்தில் தமிழர்கள் அனைவரும் இஸ்லாமியராக மதம் மாறி விட்டதாக கேள்விபட்டேன் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

இந்த வளத்தாபிட்டி கிராமத்தில் தமிழர்கள் அனைவரும் இஸ்லாமியராக மதம் மாறி விட்டதாக கேள்விபட்டேன் உண்மையா?

இல்லை அப்படி இல்லை அனைவரும் சைவ சமயத்தை சார்ந்தவர்கள் ஒரு சிலர் தங்களது ஏழ்மையால் மதம் மாறுகிறார்கள் முஸ்லிம் ஆகவும் , கிறிஸ்த்தவர்கள் ஆகவும் அதிலும் கிறிஸ்த்தவர்களாக்க சபையினர் அதிகமாக செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள் .

இதற்கு உதாரணம் அளிக்கம்பை எனும் கிராமம்  மாறினாலும் பரவாயில்லை காரணம் ( குரவர்கள் ) எனும் பெயரில் ஒதுக்குபுறமாக வாழ்ந்து வருபவர்களை கல்வி கொடுத்து சமூகத்தில் இணைத்திருக்கிறது  கிறிஸ்த்தவ சபை தற்போது அவர்கள் தொழில்கள் மாறி சமூகத்தில் இணைந்துள்ளார்கள் . (ஆனாலும் ஏற்றுக்கொள்ளாது அந்த சமூகத்தை நம் சமூகம்  பாசை நடத்தைகள் வேறானது )
ஆனாலும் அவர்களும் மனிதர்களே .  என்றோ ஓர் நாள் அவர்களும் இணைவார்கள்  சமூகத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தனி,

இந்த குறவர்கள் தமக்கென ஒரு மொழி வைதுள்ளார்களா?

ஒருமுறை பொலநறுவை-மட்டு பஸ்சில் கூட்டமாக ஏறி மன்னம்பிட்டிய தாண்டி இறங்கினார்கள்.

ஒரு சந்தமாக பேசினார்கள் ஆனால் எனக்கு விளங்கவில்லை. தமிழையோ, சிங்களத்தையோ வட்டாரவழக்கில் பேசியது போல தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

தனி,

இந்த குறவர்கள் தமக்கென ஒரு மொழி வைதுள்ளார்களா?

ஒருமுறை பொலநறுவை-மட்டு பஸ்சில் கூட்டமாக ஏறி மன்னம்பிட்டிய தாண்டி இறங்கினார்கள்.

ஒரு சந்தமாக பேசினார்கள் ஆனால் எனக்கு விளங்கவில்லை. தமிழையோ, சிங்களத்தையோ வட்டாரவழக்கில் பேசியது போல தெரியவில்லை.

இவர்கள் அவர்களுக்குள் தெலுங்கு பேசிக்கொள்வார்கள் சில வேளைகளில் தெலுங்குடன் சிங்களமும் சேர்த்து பேசிக்கொள்வார்கள் இவர்கள் மொழிக்கு எழுத்து இல்லை பேச்சு மொழிதான்  

தமிழர்களுடன் பேசும் போது தமிழில் பேசிக்கொள்வார்கள் ஆனால் அது இந்திய  தமிழ் போல இருக்கும் , மலையக தமிழ் போலவும் இருக்கும் 

மேலுள்ள திரி அவர்களை பற்றியது நிழலி இணைத்திருந்தார்  2014 ம் ஆண்டு நானும் புத்தகத்தில் படித்த நியாபகம் மட்டக்களப்பு வரலாறு என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் அவர்களுக்குள் தெலுங்கு பேசிக்கொள்வார்கள் சில வேளைகளில் தெலுங்குடன் சிங்களமும் சேர்த்து பேசிக்கொள்வார்கள் இவர்கள் மொழிக்கு எழுத்து இல்லை பேச்சு மொழிதான்  

தமிழர்களுடன் பேசும் போது தமிழில் பேசிக்கொள்வார்கள் ஆனால் அது இந்திய  தமிழ் போல இருக்கும் , மலையக தமிழ் போலவும் இருக்கும் 

மேலுள்ள திரி அவர்களை பற்றியது நிழலி இணைத்திருந்தார்  2014 ம் ஆண்டு நானும் புத்தகத்தில் படித்த நியாபகம் மட்டக்களப்பு வரலாறு என நினைக்கிறன் 

தகவலுக்கு மிக்க நன்றி தனி. நிழலியின் இணைப்பையும் படிக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.