Jump to content

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை குடும்பத்தில் வன்முறை: பெண், 4 குழந்தைகள் வெட்டிக்கொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று (3) சனிக்கிழமை காலை பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் உள்ள ஒரு வீட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே சம்பவம் நடந்துள்ளது.

நொயிஸி-லெ-செக்கிலுள்ள ரூ இம்மானுவேல் அரகோவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொலைச்சம்பவங்கள் நடந்தன. காலை 11:00 மணி முதல் தீயணைப்பு படை மற்றும் பொலிசார் அங்கு நிலை கொண்டுள்ளனர்.

முதல் தகவல்படி, குடும்பத்தில் மாமா முறையானவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து அவசர சேவைகள் வந்தபோது இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் மூன்று பேர் மதியம் 12:30 மணியளவில் உயிரிழந்தனர். நான்கு குழந்தைகளும், ஒரு பெண்னும் உயிரிழந்தனர்.

குறைந்தது மூன்று பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீட்டுக்கு வெளியில் சிதறி கிடந்தன.

இரத்த காயங்களிற்குள்ளான இளைஞன் அங்கிருந்து தப்பியோடி உதவிகோரினார். உடனடியாக அங்கிருந்த ஒருவரால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்தனர்.

கொலையாளியென கருதப்படுபவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கிளிச்சியில் (ஹாட்ஸ்-டி-சீன்) பியூஜோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதலிற்கான காரணம் தெரிய வரவில்லை.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

https://www.pagetamil.com/148905/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா நடக்கிறது வெளிநாடுகளில் லண்டனில் சொந்தகுழந்தை குத்திய சம்பவம் நியாபகம் வருதுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர்களின் சண்டையில் எதற்கு சின்ன பிள்ளைகளையும் கொலை செய்கிறார்களோ தெரியவில்லை...மன அழுத்தம் கூடினால் மருந்து எடுப்பது அல்லது தாங்கள் போய்  *** செய்யலாம் அடுத்தவரை கொலை செய்யாமல் :39_angry:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மனநலம் தொடர்பான சம்பவம் என நினைக்கிறேன்.

எலும்பு முறிவிற்கு என்புமுறிவு நிபுணரையும், இதய நோய்க்கு இதய நிபுணரையும்  எந்த கூச்சமும் இன்றி நாடும் ஆசியர்கள், ஏனோ மனநோய் நிபுணர்களை நாடி சிகிச்சை பெறுவதை ஒரு மதிப்புக் குறைவாக நினைக்கின்றனர். 

இப்படியான மனச்சிக்கல்கள் பற்றி விழிப்புணர்வூட்டும், தமிழ்க் குடியேறிகளுக்கு உதவும் அமைப்புகள் ஏதாவது எங்களிடையே இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

12 minutes ago, Justin said:

இது ஒரு மனநலம் தொடர்பான சம்பவம் என நினைக்கிறேன்.

எலும்பு முறிவிற்கு என்புமுறிவு நிபுணரையும், இதய நோய்க்கு இதய நிபுணரையும்  எந்த கூச்சமும் இன்றி நாடும் ஆசியர்கள், ஏனோ மனநோய் நிபுணர்களை நாடி சிகிச்சை பெறுவதை ஒரு மதிப்புக் குறைவாக நினைக்கின்றனர். 

இப்படியான மனச்சிக்கல்கள் பற்றி விழிப்புணர்வூட்டும், தமிழ்க் குடியேறிகளுக்கு உதவும் அமைப்புகள் ஏதாவது எங்களிடையே இருக்கின்றனவா?

இருக்கின்றன ஆனால் பைத்தியமாம் என்டெல்லே கதை கட்டுவாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது ஒரு மனநலம் தொடர்பான சம்பவம் என நினைக்கிறேன்.

எலும்பு முறிவிற்கு என்புமுறிவு நிபுணரையும், இதய நோய்க்கு இதய நிபுணரையும்  எந்த கூச்சமும் இன்றி நாடும் ஆசியர்கள், ஏனோ மனநோய் நிபுணர்களை நாடி சிகிச்சை பெறுவதை ஒரு மதிப்புக் குறைவாக நினைக்கின்றனர். 

 

4 hours ago, மார்த்தாண்டன் said:

இருக்கின்றன ஆனால் பைத்தியமாம் என்டெல்லே கதை கட்டுவாங்கள்

 எங்கடையள் கொரோனா வந்தாலே வெளியிலை சொல்ல வெக்கப்படீனம்....இதுக்கை ரெஞ்சன் வருத்தம் எண்டால்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை

பிரான்ஸில் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் Noisy – le- Sec எனும் இடத்தில் குடும்பத் தகராறு காரணமாக இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்படனர்.மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாகுதலை மேற்கொண்ட நபரும் படு காயமடைந்துள்ளமையாகவும் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என Le Parisen பத்திரிகை தெரிவித்துள்ளது. பதினாக்கு வயதிற்குற்பட்ட நான்கு பிள்ளைகளும், மற்றும் ஒருவர் கொல்லபட்ட நிலையில் மற்றும் ஒரு சிறுவன் இரத்த காயங்களுடன் ஒடிச்சென்று அருகில் இருந்த அருந்தகம் (BAR) ஒன்றில் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்ததாக அறியமுடிகிறது.

கத்தியினாலும், சுத்தியலாலும் தாக்கியே இக் கொலைகள் செய்யப்பட்டுள்ளது. கொலையினை செய்தவர் மாமா முறையானவர் என நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. rue Emmaanvel Aragoஎனும் முகவரியில் தான் இத் துயரங்கள் நடைபெற்றுள்ளது.

 

http://www.ilakku.org/பிரான்ஸில்-ஒரே-குடும்பத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிலிப்பாய் நபரின் கத்தி – சுத்தியல் தாக்குதலில், பாரிஸில் சிறுவர்கள் உட்பட ஐவர் பலி – ஐவருக்கு உயிராபத்து..

October 3, 2020

Paris1.jpg

பிரான்ஸின் பாரிஸில் இடம்பெற்ற வன்முறையில்  இலங்கை பூர்விகத்தைக் கொண்ட  தமிழர்கள்  ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஐவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை (03.10.20) காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக, கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும்,  கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய சிறுவர்கள்  இருவர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில்  ஒன்றாக வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல்  வெளியாகி உள்ளன.

சம்பவ இடத்தில் பாரிஸ் காவற்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து  சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம் சடலங்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளதுடன், படுகாயம் அடைந்தவர்களை நோயாளா் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paris-1.jpg

சம்பவம் நடைபெற்றவுடன், கொலை நடைபெற்ற இடத்திலிருந்து,  படுகாயமடைந்த நிலையில் தப்பிச் சென்ற  சிறுவர் ஒருவர்  இந்த வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு  சென்று உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.

தனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்  என மதுபானச்சாலையின்  நிர்வாகியிடம் அந்தச் சிறுவர் தெரிவித்துள்ளார்.   இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில்  சென்ற  காவல்துறையினர், சம்பவ இடத்தை  அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்  கொலைக்கான காரணம் இதுவரையில்  வெளியாகவில்லை.

 

https://globaltamilnews.net/2020/151291/

Link to comment
Share on other sites

அனேகமாக பண்டாரநாயக்காவின் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து இலங்கையில் நடைபெற்றுவரும் சிங்கள அரசுகளின் ஆட்சியில் பழிவாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகமாக வளர்ந்து வருகிறது அனேகமாக இது தமிழர்களிடையே அளவுகடந்து வளர்கிறது, வளர்க்கப்படுகிறது எனலாம். அது சிலவேளைகளில் ஒருவர் தன்னையும், தன்னைச் சார்நதவர்களையும்கூடப் பலியெடுக்கவும் வைக்கிறது.😲   

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில்  ஒன்றாக வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல்  வெளியாகி உள்ளன.

அப்ப மனக்கோளாறு காரணமில்லை. இது வேறை கோளாறு. விசுகு அண்ணர் என்ன நடந்தது உங்கடை நாட்டு பக்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள்... குழந்தைகள், சிறுவர்கள் எனும் போது.. 
கருத்து எழுதவே... மிகவும் வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

கத்தியினாலும், சுத்தியலாலும் தாக்கியே இக் கொலைகள் செய்யப்பட்டுள்ளது. கொலையினை செய்தவர் மாமா முறையானவர் என நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. rue Emmaanvel Aragoஎனும் முகவரியில் தான் இத் துயரங்கள் நடைபெற்றுள்ளது.

 

http://www.ilakku.org/பிரான்ஸில்-ஒரே-குடும்பத்/

ஒரேயொரு ‘’மாமா’ பயல் இத்தனைபேரை கொல்லும்போது,

அந்த வீட்டில் அவனை போட்டு தள்ள ஒரு ஆம்பளையே இருக்கவில்லையா?

Link to comment
Share on other sites

27 minutes ago, valavan said:

ஒரேயொரு ‘’மாமா’ பயல் இத்தனைபேரை கொல்லும்போது,

அந்த வீட்டில் அவனை போட்டு தள்ள ஒரு ஆம்பளையே இருக்கவில்லையா?

வேறொரு நாட்டில் நடந்த ஒரு சம்பவம் போல இவன் மயக்க மருந்து அல்லது வேறு எதோ செய்து விட்டு தான் கொன்றிருப்பான். இல்லாவிடில் கூக்குரல் இட்டிருப்பார்கள். மேலும் செய்திகள் வர இருக்கு நடந்தது என்ன என்று அறிய 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்ககுக்கும் குழந்தைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஏஜென்சிக்கு காசுகட்டி கஷ்டபட்டு போய் அங்கும் நிம்மதியாக வாழமுடியாததன் காரணம் என்ன? இந்த குழந்தைகள் என்ன செய்தார்கள்?

தலையங்கதில் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை காணவில்லை. இலங்கை பின்னனியை கொண்ட தமிழர் / சண்டிலிப்பாய் நபர் / தமிழர்கள் (இதற்குள் பாண்டிச்சேரி தமிழர்களும் அடங்குவார்களே) என்று பாவிக்கப்ப்ட்டுள்ளது. குற்ற செயல்கள் நடந்தால் இந்த அடையாளம் தவிர்க்கப்படும். 

இத்தைய சிறார்களை கொல்லும் சம்பவங்கள் ஈழத்தமிழர் மத்தியில்தான் அதிகமாக காணப்ப்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இறந்தவர்ககுக்கும் குழந்தைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஏஜென்சிக்கு காசுகட்டி கஷ்டபட்டு போய் அங்கும் நிம்மதியாக வாழமுடியாததன் காரணம் என்ன? இந்த குழந்தைகள் என்ன செய்தார்கள்?

தலையங்கதில் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை காணவில்லை. இலங்கை பின்னனியை கொண்ட தமிழர் / சண்டிலிப்பாய் நபர் / தமிழர்கள் (இதற்குள் பாண்டிச்சேரி தமிழர்களும் அடங்குவார்களே) என்று பாவிக்கப்ப்ட்டுள்ளது. குற்ற செயல்கள் நடந்தால் இந்த அடையாளம் தவிர்க்கப்படும். 

இத்தைய சிறார்களை கொல்லும் சம்பவங்கள் ஈழத்தமிழர் மத்தியில்தான் அதிகமாக காணப்ப்டுகின்றது.

முஸ்லிமாகவும் இருக்கலாம் என்ன கொழும்பார்😀 இரண்டாவது பந்தி கருத்தும் மூன்றாவதையும் படிப்பவர்களுக்கு தலை சுத்தும் .

முதலில் சிறுவன் சொன்னதை வைத்துதான் இவ்வளவு கதையும் தனி ஒருத்தரால் இவ்வளவு கொலைகள் நடாத்துவது அசாதரண விடயம் இல்லை puthalvan சொல்வது போல் இருக்கலாம் ஏதென்றாலும் கோமாவுக்கு போனவர் முழித்தால் தான் மிகுதி விடயம் வெளிவரும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இறந்தவர்கள்... குழந்தைகள், சிறுவர்கள் எனும் போது.. 
கருத்து எழுதவே... மிகவும் வேதனையாக உள்ளது.

உண்மை.

Link to comment
Share on other sites

கடந்து சென்ற வாரம் கசப்பு நிறைந்த செய்திகளைத் தந்த வாரம்

இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச பெண்ணை கொடூரமாக கொன்றது ..

இன்னொரு மாநிலத்தில்   குற்றுயிராக பெண்ணை எரித்த ஓர் புகை படம் 

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் சுத்தியலாலும் கத்தியால் 5 பேரை கொன்றது.

யாழ்ப்பாண மனித நேயம் உள்ள ஐயர் ஒருவர் படு  கொலை 

மனித மனங்களில் மனித தன்மை குறைந்து செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டினவர் நல்ல அமைதியானவர் என்றும் , அமைதியான குடும்பம் என்றும் சொல்லினம்...முதல் நாளோ அல்லது வெட்டின அன்றோ கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தவையலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். கொலைகள் எங்கும் நடப்பது வழமைதான் என்றாலும் இலங்கையில் எமது மக்களிடையே இப்படி குடும்பமாக கொலை, குறிப்பாக குழந்தைகள் கொலை என செய்தி வருவது குறைவாக இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில்தான் இரெண்டு மூன்று மாதத்துக்கு ஒரு தடவையாவது இப்படி குழந்தைகளை கொன்றார்கள் எனும் செய்திகள் வருகிறது.

நிச்சயமாக இலங்கையை விட புலம்பெயர் நாடுகளில் மன அழுத்த பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் மன அழுத்தத்துக்கு இலங்கையை விட இங்கேதான் அதிக காப்பு முறைகளும் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தம்மை சூழ உள்ளவர்களை அவதானித்து, மன அழுத்தம் கூடும் சமிக்ஞைகள் தென்படி, உதவியை நாடும் படி தைரியம் கொடுப்பது இப்படியான சம்பவங்களை குறைக்க கூடும்.

எத்தனையோ உயிராபத்துகளை தாண்டி வெளிநாடு வந்து, இங்கே அடுத்த சந்ததியும் இப்படி அவமாக அழிவது மிகத்துயரமானது.

பிகு: இவர் மன அழுத்தத்தில்தான் இப்படி செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அண்மைய நிகழ்வுகள் இதைதான் காட்டுகிறன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வெட்டினவர் நல்ல அமைதியானவர் என்றும் , அமைதியான குடும்பம் என்றும் சொல்லினம்...முதல் நாளோ அல்லது வெட்டின அன்றோ கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தவையலாம் 

கோயிலுக்கு போய் வந்தாலே அமைதியும் நேர்மையும் வந்திடுமே.

3 hours ago, goshan_che said:

புலம்பெயர் நாடுகளில்தான் இரெண்டு மூன்று மாதத்துக்கு ஒரு தடவையாவது இப்படி குழந்தைகளை கொன்றார்கள் எனும் செய்திகள் வருகிறது.

நிச்சயமாக இலங்கையை விட புலம்பெயர் நாடுகளில் மன அழுத்த பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது.

மறுக்கவே முடியாது. அப்படியிருக்க மன அழுத்தம் பிரச்சினைகள் அதிகமாகவே உள்ள வெளிநாட்டு தமிழர்களின் சொல் கேட்டு இலங்கையில் உள்ளவர்கள் அரசியலில் நடக்க வேண்டுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

வெட்டினவர் நல்ல அமைதியானவர் என்றும் , அமைதியான குடும்பம் என்றும் சொல்லினம்...முதல் நாளோ அல்லது வெட்டின அன்றோ கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தவையலாம் 

சிலபேர் அமைதியானவர்கள் போல் வெளியே காட்டிக் கொள்ள கூடும்.ஆனால் அவர்களுக்குள் இருக்க கூடிய கொடிய எண்ணங்களை, செயல்பாடுகளை கண்டு கொள்ள இயலாது இருக்கலாம்.துணைவியாரும் வேளியே சொல்லக் கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் ஆக்கப் பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஒரு உயிரை காப்பாற்ற உயிரைப் பணயம் வைச்சு உழைக்கிறாங்க.. இதுங்க..

புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களுக்கு மனவழுத்தம்... அதிகம்.. காரணம்..

1. அயல் சுற்றத்துடன் உறவாட முடியாது.. தனிமைப்பட்டு வாழும்.. வாழ்க்கை முறை

2.பணம் வீடு ஆடம்பரம் என்று தகுதிக்கு மிஞ்சிய ஆசைகளை வளர்ப்பது.

3. ஆண் - பெண் சட்டத்துக்கு.. சமூகத்துக்குப் புறம்பான தகாத உறவுகள்.

4. குடி போதை.

5. மொழி மற்றும்.. போதிய கல்வி அறிவின்மை.. தாம் வாழும் நாடுகளைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள. 

6. ஊர் பழக்கத்தை அப்படியே கட்டிக்கிட்டு வாழ நினைக்கும் கட்டுப்பெட்டித்தனம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

 

 

சரியான காரணங்கள்
2ம் 6ம் தான் அவர்களுக்கு எல்லா பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மறுக்கவே முடியாது. அப்படியிருக்க மன அழுத்தம் பிரச்சினைகள் அதிகமாகவே உள்ள வெளிநாட்டு தமிழர்களின் சொல் கேட்டு இலங்கையில் உள்ளவர்கள் அரசியலில் நடக்க வேண்டுமாம்

இங்கு யார் கேட்டது உங்கடை மற்றைய திரியின் கதையை சம்மந்தமில்லாமல் மற்றைய திரியின் கருத்தை திணிப்பது கள  விதி தடை செய்கின்றது என்பதாவது தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் இலங்கைத் தமிழர்களின், படுகொலைகளின் பின்னணி என்ன.. ? (நேரடி ரிப்போர்ட்)

 
 
- பாரிஸிலிருந்து குமாரதாசன் -

உள் குடும்பத்தில் நேர்ந்த உயிரிழப்புகள் பாரிஸ் தமிழர்கள் மத்தியில் பெருந் துயர் சம்பவம் தொடர்பாகப் புதிய தகவல்கள்;

பாரிஸின் புறநகரான நுவாசி – லூ- செக்கில் (Noisy-le-Sec) நிகழ்ந்த உள் குடும்ப உயிரிழப்புகள் அந்தப்பகுதியில் மட்டுமன்றி பிரான்ஸ் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் கூட்டாகப் கொலையுண்ட சம்பவம் குறித்து நுவாசி- லூ- செக் நகரின் மேயர் ஒலிவியர் சறாபேரூஸ் (Olivier Sarrabeyrouse) அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.

“அமைதியான பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தன்னால் நம்ப முடியாதுள்ளது” என்று மேயர் தனது ரூவீற்றரில் பதிவிட்டிருக்கிறார்.

அண்மையில் மேயராகப் பதவி ஏற்பதற்கு முன்னரான காலத்தில் அந்தச் சிறுவர்கள் சிலரது பாடசாலைத் தலைமை ஆசிரியராகத் தான் பணிபுரிந்ததை மேயர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள், குடும்பத்தவர்கள், அயலவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக மனநல உதவி மையம் ஒன்று (cellule psychologique) உடனடியாகத் திறக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பொபினி(Bobigny) நீதி நிர்வாகப்பிரிவுக்குட்பட்ட புலன் விசாரணையாளர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். கொலைகளுக்கான மூல காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழரான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனது மனைவி, கைக்குழந்தை உட்பட இரு குழந்தைகள் மற்றும் அவரது மூத்த சகோதரியின் இரு குழந்தைகள் (5, 9வயது) ஆகிய ஐவரையுமே கத்தி மற்றும் சுத்தியல் என்பவற்றால் தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.18 மாதங்களேயான தனது கைக்குழந்தையைக் கொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர் இருந்திருக்கிறார்.

முதலில் தனது வீட்டுக்குள் வைத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அருகே மற்றொரு வீட்டில் வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினரை அங்கு வரவழைத்து அவர்களையும் தாக்கியுள்ளார். சகோதரியும் அவரது கணவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களது ஐந்து மற்றும் 9 வயதான இரு குழந்தைகள் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். 13 ,15 வயதுகளையுடைய ஏனைய இரு வளர்ந்த பிள்ளைகள் ஒருவாறு தமது மாமனாரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

அவ்வாறு காயத்துடன் தப்பியோடிய சிறுவர்களில் ஒருவனே அருகே அமைந்திருந்த மது அருந்தகம் ஒன்றுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளான். தனது மாமனார் எல்லோரையும் தாக்கிக் கொல்கின்றார் என்ற தகவலை அச்சிறுவனே அங்கிருந்தோரிடம் முதலில் தெரியப்படுத்தி உள்ளான்.

அந்த மது அருந்தகத்தின் உரிமையாளரான மொஹமெட் ஹெமானி (Mohamed Hemani) என்பவர் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில்..

“13 வயதான சிறுவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான், தலையில் இரத்தம் வழிகிறது. மாமா என்னை சுத்தியலால் தாக்குகின்றார் என்று அவன் கதறுகிறான்”

“அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை. நான் அவனைப்பாதுகாத்துக் கொண்டு பொலீஸாருக்கும் அவசர சேவையினருக்கும் அழைப்பு விடுத்தேன்”

புற்றி நுவாசி(Petit-Noisy) என்னும் பகுதியில் இயங்கும் அந்த அருந்தக உரிமையாளர் இப்படி விவரிக்கிறார்.

சம்பவங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த வேறு சிலரும் இவ்வாறு தமது அனுபவங்களை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

கொலைகளைப் புரிந்த இளம் குடும்பஸ்தர் மிகவும் அமைதியானவர் என்று அயலவர்கள் கூறுகின்றனர். இப்படிக் கோரமாகக் கொலைகளைப் புரிந்தாரா என்பதை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்குள் குடும்பப் பிணக்குகள் இருப்பதாகத் தாங்கள் அறியவில்லை என்கின்றனர். உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்துக்கு ஆளானவர் போன்று காணப்பட்டார் என்ற ஒரு தகவலும் அயலவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. கொலைகளைப் புரிந்த அவர் தன்னைத் தானே கொல்லும் நோக்குடன் உடலில் பல இடங்களில் வெட்டிக் காயப்படுத்தியிருக்கிறார். அவசர சேவையினர் அவரை மீட்டபோது அவர் சுய நினைவிழந்து கோமா நிலையில் கிடந்துள்ளார். தற்சமயம் பாரிஸின் புறநகரப் பகுதி மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

புலம் பெயர் தமிழ் சூழலில் உள்குடும்பங்களில் நிகழும் இத்தகைய கொலைகள் அதிகரித்துவருகின்றன. பெற்றவர்களே தமது சிறு பிஞ்சுகளை கோரமாகக் கொல்லும் அளவுக்கு நிலைமை செல்கிறது.

ஏற்கனவே நெருக்கடிகள், மன அழுத்தங்கள் மிகுந்த புலம்பெயர் வாழ்வு மேலும் சிதைவடைந்து செல்கின்றதா?

கொரோனா வைரஸ் முடக்கங்களின் பின்னர் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடிகளும் அவை உருவாக்கும் மன அழுத்தங்களும் சிலரை இது போன்ற குரூரமான முடிவுகளை நோக்கித் தள்ளிவிடக் காரணமாகின்றனவா?

லண்டன் உட்பட தமிழர்கள் மத்தியில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த இதுபோன்ற உள் குடும்பப் படுகொலைச் சம்பவங்களுக்கான காரணிகளைக் கவனத்தில் எடுக்காமலேயே அவற்றை கடந்த போய்க் கொண்டிருக்கின்றோமா?

“மிருக வெறி” என்று மேலெழுந்தவாரியாகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போகின்ற ஒரு விவகாரமா இது? (மிருகங்கள் தம் குட்டிகளைக் கொல்வதில்லை)

குற்றம் கண்டுபிடிக்கும் சட்டரீதியான விசாரணைகளுக்குப் புறம்பாகச் சிலர் சமூக நோக்கு சார்ந்த இத்தகைய முக்கிய கேள்விகளையும் முன்வைக்கின்றனர்.

குடும்பக் கட்டமைப்பில் நிகழும் இத்தகைய உட்சிதைவுகள் சமூக நோக்குடையவர்களால் விவாதிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டிய முக்கிய விவகாரமாக மாறியுள்ளன.

http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_5.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.