Jump to content

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது.

ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. எமது அரசியல்ப் பலமும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிங்களவன் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகிறான், அவனது சிங்கள பெளத்த தேசியம் உருவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது நலனுக்காக எமக்கு ஒரு தீர்வைத் தருமாக இருந்தால் அதைதவிர மேலான எதுவும் எமக்கு இப்போதைக்கு இல்லை. இந்தியாவை மீறி எம்மால் தீர்வொன்றைப் பெறமுடியாது. இன்று சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் செய்யும் நகர்வுகள் எமக்கான ஒரு தீர்வையும் கூடவே வழங்குமென்றால், அதில் தவறென்ன? இந்தியாவையும், அமெரிக்காவையும் தாண்டி எமக்குத் தீர்வொன்றைத்தர வேறு யார் இருக்கிறார்கள். 

எனக்கு இப்போ எமது அரசியலை முன் தள்ள 3 வழிகள் இருப்பதாகபடுகிறது.

1. இந்திய வழி - மேலே நானும் நீங்களும் சிலாகித்த, வேறு வழியில்லை இதையாவது செய்வோம் என்ற வகையில் அணுகுவது. பரந்தன் ராஜன், கூட்டமைப்பு, விக்கி, மணி போன்றோர் இதை செய்ய விழைவதாக படுகிறது.

2. இதையே சற்று ஆக்ரோஷமாக கிட்டதட்ட இந்தியாவை புறம்தள்ளி ஒரு பலஸ்தீன இண்டிபாடா போல தொடர் போராட்டம், சர்வதேச அழுத்தம் மூலம் தீர்வை வேண்டுவது. மக்கள் முண்ணனி செய்வது இந்த அரசியல். யாழில் கருத்தெழுதுபவர்கள் பலர் இதை விரும்புவதாக படுகிறது. 

3. சகித்து கொண்டு, நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மேலே தூக்கி விடுவோம் எனும் “வரப்புயர நீருயரும்” அரசியல். இதன் தொடர்சியாகவே உள்ளூர் அரசசார் கட்சிகளின் தேர்வும் வருகிறது. தனி, அக்னி, இன்னும் பல ஊர்வாசிகள் இதை விரும்புவதாக படுகிறது.

முதல்வன் என்று நினக்கிறேன் இன்னொரு திரியில் சொன்னார் இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் கைகொள்ளலாம் என்று.

இப்போது அதுதான் நடக்கிறது. ஆனால் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல்.

இதை ஒருங்கிணைக்கவும் முடியுமா தெரியவில்லை. 3ம் பிரிவினரை 1,2 உடன் ஒருங்கிணைப்பது முடியாததாகவே படுகிறது.

இது எனது கோழைதனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு 2ம் வழி அவ்வளவு பயன் கொடுக்கும் வழியாக தெரியவில்லை. ஒரு மாற்று அழுத்தம் என்றவகையில் இந்தியாவுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க இந்த வழியும் முண்ணனியும் பயன்படலாம்.

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

அப்படி என்ன கனகாலம் எடுக்க போகுது? பிரான்ஸ், ஜேர்மனி, கனடா எண்டு வந்து சேர்ந்தால் உங்களுக்கு தெளிஞ்சது போல அவருக்கும் உடனேயே தெளிஞ்சிடும். எல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்தது.

இந்தாளின்ற அலப்பறை தாங்கமுடியவில்லை, எப்ப எடுத்தாலும் வெளிநாடுகளில் புகலிடம் என்று அழுகுரல். இந்தபுகலிடம் நிராகரிக்கப்பட்ட mr கற்பத்தை யாராவது sponsor பண்ணிக்கூப்பிட இயலுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

மக்களும் ஒருபோதும் இனி இழப்புக்களை சந்திக்க தயாரில்லை
மக்களுக்காவே உரிமைகள் தொடர்பான
போராட்டங்கள் நடந்தன
ஆகவே அவர்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்கவேண்டும்  

புலம்பெயர்ந்தவர்கள் எவ்வளவு குத்தி முறிந்தாலும் நாட்டில் வாழும் மக்களை மீறி எதையும் சாதித்துவிட முடியாது

இலங்கையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புக்களும் கடைசிவரை ஒருமித்த கொள்கையுடன் சேரப்போவதில்லை

சிங்கள பௌத்த நாடாக இலங்கை வளர்ந்துவரும் நிலையில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமே அதனை எதிர்ப்பதில் பயனில்லை.
 .
இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் மலையகத்தமிழர்கள் என ஏல்லோரும் ஒருமித்த கோட்டில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட
சிங்கள அரசிடமிருந்து ஒரு தீர்வு கிடைப்பது கேள்விக்குறியே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எனக்கு இப்போ எமது அரசியலை முன் தள்ள 3 வழிகள் இருப்பதாகபடுகிறது.

1. இந்திய வழி - மேலே நானும் நீங்களும் சிலாகித்த, வேறு வழியில்லை இதையாவது செய்வோம் என்ற வகையில் அணுகுவது. பரந்தன் ராஜன், கூட்டமைப்பு, விக்கி, மணி போன்றோர் இதை செய்ய விழைவதாக படுகிறது.

2. இதையே சற்று ஆக்ரோஷமாக கிட்டதட்ட இந்தியாவை புறம்தள்ளி ஒரு பலஸ்தீன இண்டிபாடா போல தொடர் போராட்டம், சர்வதேச அழுத்தம் மூலம் தீர்வை வேண்டுவது. மக்கள் முண்ணனி செய்வது இந்த அரசியல். யாழில் கருத்தெழுதுபவர்கள் பலர் இதை விரும்புவதாக படுகிறது. 

3. சகித்து கொண்டு, நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மேலே தூக்கி விடுவோம் எனும் “வரப்புயர நீருயரும்” அரசியல். இதன் தொடர்சியாகவே உள்ளூர் அரசசார் கட்சிகளின் தேர்வும் வருகிறது. தனி, அக்னி, இன்னும் பல ஊர்வாசிகள் இதை விரும்புவதாக படுகிறது.

முதல்வன் என்று நினக்கிறேன் இன்னொரு திரியில் சொன்னார் இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் கைகொள்ளலாம் என்று.

இப்போது அதுதான் நடக்கிறது. ஆனால் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல்.

இதை ஒருங்கிணைக்கவும் முடியுமா தெரியவில்லை. 3ம் பிரிவினரை 1,2 உடன் ஒருங்கிணைப்பது முடியாததாகவே படுகிறது.

இது எனது கோழைதனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு 2ம் வழி அவ்வளவு பயன் கொடுக்கும் வழியாக தெரியவில்லை. ஒரு மாற்று அழுத்தம் என்றவகையில் இந்தியாவுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க இந்த வழியும் முண்ணனியும் பயன்படலாம்.

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

2009 இல் இந்தியாவின் உதவியின்மூலம் தமிழரின் விடுதலை வேட்கையினை அழித்தாலும்கூட, சிங்கள ஆட்சியாளர்களின் ஆழ்மனதில் இந்தியாவென்பது எப்போதாவது தனது நலனுக்காக இலங்கையில் மீண்டும் உள்நுழையலாம் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா இன்று குரல் கொடுப்பதும், தமிழர்கள் அதே சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்பதும் சிங்களவர்களைக் கடுப்பாக்கியிருக்கிறது. மகிந்தவின் "பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களுக்கூடாக, அனைத்து மக்களின் நலன்களும் கருத்தில் எடுக்கப்பட்டு ஒரு தீர்வு" என்பதோ, அல்லது மாகாணசபைகளுக்கான அமைச்சரின் "இலங்கையில் என்னவகையான தீர்வொன்றை வழங்கவென்று இந்தியாவாலோ மோடியாலோ தமக்கு நிர்ப்பந்தம் கொடுக்கமுடியாது" என்று கர்ஜிப்பதோ கூறும் விடயம் என்னவென்றால் இந்தியா மீண்டும் தலையிடுவதுபற்றி இலங்கை கவலைப்படுகிறது என்பதைத்தான். இது எம்மைப்பொறுத்தவரையில் நல்லதொரு விடயமே. எம்மையழித்த இந்தியாவஏ எமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது விசித்திரமாக இருந்தாலும்கூட, வேறு தெரிவுகள் எதுவுமேயில்லாத நிலையில், இதைக் கைவிட தமிழர் தயாரில்லையென்பதே உண்மை.

உங்களின் மூன்று தெரிவுகளுக்கும் வந்தால், முதலாவது தெரிவே எனது தெரிவும். ஆனால், இந்தியா இன்னும் அதிகமாக இதுபற்றி அழுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது இந்தியாவின் மென்மையான போக்கு இலங்கையினை பெரிதாகப் பயங்கொள்ளவைக்கப் போதுமானதாக இல்லையென்பதே எனது கருத்து. அல்லது, திரைக்குப் பின்னால் நடக்கும் பல விடயங்களை அடக்கிவாசித்து இந்தியா மென்போக்கினைக் கடைப்பிடிக்கிறதோ என்றும் சந்தேகம் இருக்கிறது.

அடுத்தது கஜேந்திரக்குமார் தலைமையிலான முன்னெடுப்பு. இன்டிபாடாவுக்கு நிகரான மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது சுலபமானதா? இந்தியாவினை விலத்தி முன்னெடுக்கப்படும் எந்த மக்கள் போராட்டமும், வெளியுலக கவனத்தினை ஈர்க்கப்போவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் 2008 - 2009 இல் சர்வதேசத்தின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். 2009 இல் என்று நினைக்கிறேன். அவுஸ்த்திரேலிய தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரை சந்திக்க அப்போதைய பிரதமர் கெவின் ரட் பல அழுத்தங்களுக்குப் பிறகு சம்மதித்திருந்தார். வன்னியில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்த்திரேலிய அரசு தலையிடவேண்டும் என்று கோரியபோது, "உங்களின் பிராந்திய வல்லரசு இந்தியா, நீங்கள் சொல்லுவதுபோல இந்தியாவே இந்தப் போரினை நடத்துகிறதென்றால், இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை" என்றி கைவிரித்துவிட்டார். ஆகவே, இந்தியாவினை விலத்தி மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் வெளியுலக ஆதரவும் கிடைக்காது, சிங்களப் பேரினவாதம் மீண்டும் ஒருமுறை எம்மீது இனக்கொலையொன்றினைப் புரியும், இது நடக்கும்.

மூன்றாவது வழிமுறை. நீங்கள் எதையும் செய்யாமலிருந்தாலேயே இது நடக்கும். அப்படியே எம்மையும், எம்மைச் சுற்றியிருப்போரையும் அபிவிருத்தி செய்துவிட்டு, தாயகம், உரிமை , தீர்வு பற்றிப் பேசாமலிருப்பது. இன்னும் சொல்லப்போனால், சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குள் விரும்பியே உள்வாங்கப்படுவது. புலம்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுப்பது தவறென்பதோ, இந்தியாவை கடுமையாக எதிர்ப்பதென்பதோ அல்லது இந்திய தலையீட்டினைக் கோரும் தமிழ்க் கட்சிகளை தேசிக்காய்கள் என்று கடிந்துகொள்வதோ சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுடனேயே பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடு தாம் ஆதரிக்கும் அரசியல்ப் பிரமுகர்களின் அரசியல் நடவடிக்கைகளால் உந்தப்பட்டது என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால், தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் நான் நினைத்தது தவறென்று புகட்டுவதுடன், இது நான் நினைப்பதைக் காட்டிலும் தீர்க்கமான, நீண்ட பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடாக இப்போது தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் எந்தச் செயற்பாட்டிலும் இந்திய மத்திய அரசு இறங்காமல் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்
13  ஜக் கூட முழுமையாக அமுல்படுத்துவதில்  இந்தியாவின்
நிலைப்பாடு அரைமனதாகவே இருக்கின்றது
இந்திய அரசு தேவைக்கேற்ப ஈழத்தமிழர்களை பயன்படுத்தி வரும்
அது சிங்கள அரசிற்கும் தெரியும்
இலங்கையைப் பிரிக்கும் நோக்கில் இனிமேல் இந்தியா இலங்கைக்குள் உள்நுழையும் என்பது நிலாவைக் காட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

இலங்கையைப் பிரிக்கும் நோக்கில் இனிமேல் இந்தியா இலங்கைக்குள் உள்நுழையும் என்பது நிலாவைக் காட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்றதே

நிச்சயமாக இல்லை வாத்தியார். நான் கூறவந்தது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத்தான். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் கூட இப்போது இல்லையென்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

நிச்சயமாக இல்லை வாத்தியார். நான் கூறவந்தது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத்தான். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் கூட இப்போது இல்லையென்பதே உண்மை.

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே
தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவும் சிங்கள அரசும்
மக்களை காய்களாகப் பயன்படுத்துகின்றனர்
மக்களும் தங்களின்  நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடன் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இதற்கான அணுகுமுறையே வேறானது. அமைதியாக, சர்வதேச புவிசார் அரசியல் மாறும் நிலையை அவதானித்து, வாழு, வாழ விடு என்ற அடிப்படையில், எதிரிகளை உருவாக்காத தீர்வை, அது உடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும் பிடி-22 போன்ற ஒன்றாக அடையாளம் கண்டு, அதை நிறைவேற்றி கரைசேர்க்கத்தக்க சாணக்கியம் தேவை.

இப்பொழுது ஏதோ ஆயதப்போராட்டம் நடப்பது போலல்லவா இருக்கிறது உங்களது  பேச்சு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதென்பது இவற்றினையும் சேர்த்துத்தானே? ஆனால் 1987 இல் இந்தியாவின் இறையாண்மைக்கு இருந்த ஆபத்தினைக் காட்டிலும் இன்று அதிகமான ஆபத்து இருக்கிறது. ஆகவே, அன்று கண்டும் காணமல் இருந்ததுபோன்று இந்தியா இப்பொழுதும் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. தனக்குத் தேவையென்றால், 13 ஆம் திருத்தத்தினை காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களோடு முற்றாக அமுல்ப்படுத்தும்படி இந்தியா கேட்கலாம். 

இவையெல்லாமே எனது அனுமானம்தான். நடந்தால் நல்லது, இல்லாவிட்டால் என்ன செய்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

2009 இல் இந்தியாவின் உதவியின்மூலம் தமிழரின் விடுதலை வேட்கையினை அழித்தாலும்கூட, சிங்கள ஆட்சியாளர்களின் ஆழ்மனதில் இந்தியாவென்பது எப்போதாவது தனது நலனுக்காக இலங்கையில் மீண்டும் உள்நுழையலாம் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா இன்று குரல் கொடுப்பதும், தமிழர்கள் அதே சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்பதும் சிங்களவர்களைக் கடுப்பாக்கியிருக்கிறது. மகிந்தவின் "பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களுக்கூடாக, அனைத்து மக்களின் நலன்களும் கருத்தில் எடுக்கப்பட்டு ஒரு தீர்வு" என்பதோ, அல்லது மாகாணசபைகளுக்கான அமைச்சரின் "இலங்கையில் என்னவகையான தீர்வொன்றை வழங்கவென்று இந்தியாவாலோ மோடியாலோ தமக்கு நிர்ப்பந்தம் கொடுக்கமுடியாது" என்று கர்ஜிப்பதோ கூறும் விடயம் என்னவென்றால் இந்தியா மீண்டும் தலையிடுவதுபற்றி இலங்கை கவலைப்படுகிறது என்பதைத்தான். இது எம்மைப்பொறுத்தவரையில் நல்லதொரு விடயமே. எம்மையழித்த இந்தியாவஏ எமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது விசித்திரமாக இருந்தாலும்கூட, வேறு தெரிவுகள் எதுவுமேயில்லாத நிலையில், இதைக் கைவிட தமிழர் தயாரில்லையென்பதே உண்மை.

உங்களின் மூன்று தெரிவுகளுக்கும் வந்தால், முதலாவது தெரிவே எனது தெரிவும். ஆனால், இந்தியா இன்னும் அதிகமாக இதுபற்றி அழுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது இந்தியாவின் மென்மையான போக்கு இலங்கையினை பெரிதாகப் பயங்கொள்ளவைக்கப் போதுமானதாக இல்லையென்பதே எனது கருத்து. அல்லது, திரைக்குப் பின்னால் நடக்கும் பல விடயங்களை அடக்கிவாசித்து இந்தியா மென்போக்கினைக் கடைப்பிடிக்கிறதோ என்றும் சந்தேகம் இருக்கிறது.

அடுத்தது கஜேந்திரக்குமார் தலைமையிலான முன்னெடுப்பு. இன்டிபாடாவுக்கு நிகரான மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது சுலபமானதா? இந்தியாவினை விலத்தி முன்னெடுக்கப்படும் எந்த மக்கள் போராட்டமும், வெளியுலக கவனத்தினை ஈர்க்கப்போவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் 2008 - 2009 இல் சர்வதேசத்தின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். 2009 இல் என்று நினைக்கிறேன். அவுஸ்த்திரேலிய தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரை சந்திக்க அப்போதைய பிரதமர் கெவின் ரட் பல அழுத்தங்களுக்குப் பிறகு சம்மதித்திருந்தார். வன்னியில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்த்திரேலிய அரசு தலையிடவேண்டும் என்று கோரியபோது, "உங்களின் பிராந்திய வல்லரசு இந்தியா, நீங்கள் சொல்லுவதுபோல இந்தியாவே இந்தப் போரினை நடத்துகிறதென்றால், இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை" என்றி கைவிரித்துவிட்டார். ஆகவே, இந்தியாவினை விலத்தி மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் வெளியுலக ஆதரவும் கிடைக்காது, சிங்களப் பேரினவாதம் மீண்டும் ஒருமுறை எம்மீது இனக்கொலையொன்றினைப் புரியும், இது நடக்கும்.

மூன்றாவது வழிமுறை. நீங்கள் எதையும் செய்யாமலிருந்தாலேயே இது நடக்கும். அப்படியே எம்மையும், எம்மைச் சுற்றியிருப்போரையும் அபிவிருத்தி செய்துவிட்டு, தாயகம், உரிமை , தீர்வு பற்றிப் பேசாமலிருப்பது. இன்னும் சொல்லப்போனால், சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குள் விரும்பியே உள்வாங்கப்படுவது. புலம்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுப்பது தவறென்பதோ, இந்தியாவை கடுமையாக எதிர்ப்பதென்பதோ அல்லது இந்திய தலையீட்டினைக் கோரும் தமிழ்க் கட்சிகளை தேசிக்காய்கள் என்று கடிந்துகொள்வதோ சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுடனேயே பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடு தாம் ஆதரிக்கும் அரசியல்ப் பிரமுகர்களின் அரசியல் நடவடிக்கைகளால் உந்தப்பட்டது என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால், தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் நான் நினைத்தது தவறென்று புகட்டுவதுடன், இது நான் நினைப்பதைக் காட்டிலும் தீர்க்கமான, நீண்ட பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடாக இப்போது தோன்றுகிறது.

வாத்தியார் அண்ணா, ரகு,

ஒரு நல்ல கருத்துபரிமாற்றதுக்கு நன்றி.

ரகு- நீங்கள் நினைப்பது போல அவர்கள் ஒரு நிகழ்சி நிரலுக்குள் உள்வாங்க பட்டதாகவோ, அமைய செயல்படுவதாகவகோ நான் நினைக்கவில்லை. அவர்களின் பெயரை ஒரு உதாரணமாக கூறினேன். அதனால் இதையும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நீங்கள் கடைசியாக எப்போ ஊருக்கு போனீர்கள் என்பது தெரியவில்லை ஆனால் வட கிழக்கில் 50% மக்களாவது இந்த நோக்கில்தான் சிந்திக்கிறர்கள். சந்திரகாந்தனுக்கு மட்டும் விழுந்த விருப்பு வாக்கு 50,000 அத்தனை மக்களுமா ஒரு நிக்ழசி நிரலில் இழுபட்டார்கள். வியாழேந்திரன், அங்கயன், திலீபன், இவர்களின் எழுச்சி சொல்லும் செய்தியும் இதுதான்.

மேலே வாத்தியார் கோடிட்டு காட்டுவது கூட இதைத்தானே.

12 minutes ago, வாத்தியார் said:

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே
தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவும் சிங்கள அரசும்
மக்களை காய்களாகப் பயன்படுத்துகின்றனர்
மக்களும் தங்களின்  நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடன் இல்லை

உண்மைதான். உண்மையில் எமக்கு பொலீஸ் அதிகாரம் கூட இப்போதைக்கு வேண்டாம். போதியளவு தமிழ் பேசும் பொலிசை வட கிழக்கில் போட்டு, இப்போ இருக்கும் நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. போலீஸ் அதிகாரம் வடகுக்கும் கிழக்குக்கும் கொடுப்பது சிங்கள பகுதியில் “விற்க முடியாத” விடயமாகவே இருக்கும்.

தவிரவும் ஒரு நீதியான பொலீஸ் அமைப்பை நடத்துவார்கள் என கைகாட்ட கூடிய ஒரு தமிழ் அரசியல்வாதியும் இல்லை. காவல்துறை போல இருக்காது வடக்கு, கிழக்கு மாகாண பொலீஸ். தமிழ் நாடு போல அரசியல்வாதிகளின் ஒரு ஏவல் துறையாகவே இருக்கும். ஆகவே பொலீஸ் அதிகாரத்தை பற்றி பிறகு பார்க்கலாம் என நினைத்தாலும் சரியே.

நான் கதைத்த மட்டில் மக்கள் அதிகம் அன்றாரட பிரச்சனைக்கு அடுத்து கவலைபடுவது, காணி, குடியேற்ற, இனப்பரம்பல் மாற்றம் பற்றியே.

அடிப்படையிலே நாம் கேட்டது கூட “மண் மீட்புதானே”. ஆனால் இதைதானும் தர பேரினவாதம் தயார் இல்லை என்பது மட்டும் இல்லமால் இதற்கு நேர் எதிர் நடவடிக்கைகளை முடுக்க்கியும் விட்டுள்ளது.

நிச்சயமாக இதை ஏதாவது ஒரு வகையில் checkmate பண்ணாவிட்டால், குடாநாடும், மட்டு நகரை அன்றிய நிலப்பரப்பும் மட்டுமே தமிழர் பெரும்பான்மை மண்ணாக மீதமாகும் நாள் தொலைவில் இல்லை.

மக்கள் கணிசமானோர் நிச்சயமாக இந்த ஆபத்தை உணர்கிறார்கள். தடுக்க விரும்புகிறார்கள்.

ஆனால் எம்மை போல அவர்களுக்கும் வழிதான் தெரியவில்லை.

ஆனால் எம்மை போலன்றி அவர்களுக்கு அன்றாட வாழ்வின் சுமையும் இருக்கிறது.

நாம் கொள்கை ரீதியாக 3 இல் ஒரு வழியை தேர்ந்து விட்டு, நமது பாட்டை பார்க்கலாம். எனது வாழ்வில் அது 1% கூட பாதிக்காது. 

அவர்களுக்கு அப்படி இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

புலம் பெயர் தமிழரின் நடவடிக்கைகள் காரணமாக தாயக தமிழருக்கு அடி விழுந்தாலும், தாயக தமிழருக்கு உங்களைக் கேட்க உரிமையில்லையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

புலம் பெயர் தமிழரின் நடவடிக்கைகள் காரணமாக தாயக தமிழருக்கு அடி விழுந்தாலும், தாயக தமிழருக்கு உங்களைக் கேட்க உரிமையில்லையோ? 

ஐனநாயக ரீதியில்

சட்ட ரீதியில்

சர்வதேச ஒழுங்கு ரீதியில்

அவர்கள்  தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டுமே தவிர

எங்களை அடிப்பார்கள்

நீங்கள்  பொத்திக்கொண்டிருங்கள்  என்பது  எந்த வகைக்குள்  வரும்  என்பதனையும் நீங்க சொல்லலாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஐனநாயக ரீதியில்

சட்ட ரீதியில்

சர்வதேச ஒழுங்கு ரீதியில்

அவர்கள்  தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டுமே தவிர

எங்களை அடிப்பார்கள்

நீங்கள்  பொத்திக்கொண்டிருங்கள்  என்பது  எந்த வகைக்குள்  வரும்  என்பதனையும் நீங்க சொல்லலாமே???

அவர்களுடைய எதிர்பார்ப்பு commonsense வகைக்குள் வரும் என்று தான் நான் நினைக்கிறேன்!

உங்களுக்கு மேற்கு நாடுகளில் சட்டப் பாதுகாப்புண்டு, அங்கே சட்டப் பாதுகாப்பும் இல்லை. இதற்குள் எந்த ஜனநாயக வழியில் தாயக தமிழர் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டுமென்றும் சொன்னால் உங்கள் பதில் பூரணமடையும்!

அந்தப் பதில் இல்லையென்றால் தாயக தமிழர் "அடக்கி வாசியுங்கள்" என்று சொல்லும் போது கேட்டுக் கொள்ள வேண்டியான் விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அப்போ அங்கே ஐனநாயகமில்லை

நீதியில்லை

அராயகம் நடக்கிறது

இதை  தானே நாங்க  வெளியில்   சொல்கிறோம்

சொல்லவேண்டிய தேவையும்  கடமையும் எமக்குண்டல்லே?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

வணக்கம் அண்ணா,

நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை.

ஆனால் நாம் இங்கே இருந்து செய்யும் ஊருக்கான அரசியல் அவர்களுக்கான பிரச்சனை பற்றியது.

நமக்கு இதில் இருக்கும் அக்கறையும், உணர்வுபூர்வ முதலீடும் (emotional investment) மறுக்க முடியாதது. 

எமது வதிவிடங்களில் எம்மை 100% பாதிக்கும், கல்வி சீர்திருத்தம், வரி, இலவச மருத்துவம், இன்னும் பல விடயங்களை இங்கும் வேறு தளங்களிலும் இலகுவாக கடந்து செல்லும் நாம், எம்மையோ எம் சந்ததிகளையோ 1% கூட பாதிக்காத ஊர் அரசியலுக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். குத்தி முறிகிறோம். இது எமது தனி நலன்களுக்கு உகந்ததா என்பதற்கப்பால், எமது அக்கறை போற்றபட வேண்டிய விடயமே.

ஆனால் - அவர்களுக்கான அரசியலை - அவர்கள் தீர்மானித்த திசைக்கு எதிர் திசையில் நாம் நடத்த விழைந்தால். இது வெளிநாட்டில் இருக்கும் டயாஸ்போராவின் சதி என்ற கூற்றை நாமே உண்மையாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை புலம் பெயர் சக்திகள் ஒருங்கிணைந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு கெளரவமான தீர்வு என்பதை நோக்கி நகர்ந்தால் ஊரில் வாழும் மக்கள் அதை வரவேற்பார்கள் என நினைக்கிறேன்.

அதற்கு முன் புலம் பெயர் நெல்லிகாய் மூட்டையை ஒன்றாக வேண்டும். அதை விட ஊரில் மேலே சொன்ன 3 பகுதியையும் இணைப்பது இலகுவாக இருக்கும்😩

பிகு:

நீங்கள் சொன்ன இயாலாமையின் வெளிப்பாடு என்பதை நான் முற்றாக ஏற்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

வணக்கம் அண்ணா,

நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை.

ஆனால் நாம் இங்கே இருந்து செய்யும் ஊருக்கான அரசியல் அவர்களுக்கான பிரச்சனை பற்றியது.

நமக்கு இதில் இருக்கும் அக்கறையும், உணர்வுபூர்வ முதலீடும் (emotional investment) மறுக்க முடியாதது. 

எமது வதிவிடங்களில் எம்மை 100% பாதிக்கும், கல்வி சீர்திருத்தம், வரி, இலவச மருத்துவம், இன்னும் பல விடயங்களை இங்கும் வேறு தளங்களிலும் இலகுவாக கடந்து செல்லும் நாம், எம்மையோ எம் சந்ததிகளையோ 1% கூட பாதிக்காத ஊர் அரசியலுக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். குத்தி முறிகிறோம். இது எமது தனி நலன்களுக்கு உகந்ததா என்பதற்கப்பால், எமது அக்கறை போற்றபட வேண்டிய விடயமே.

ஆனால் - அவர்களுக்கான அரசியலை - அவர்கள் தீர்மானித்த திசைக்கு எதிர் திசையில் நாம் நடத்த விழைந்தால். இது வெளிநாட்டில் இருக்கும் டயாஸ்போராவின் சதி என்ற கூற்றை நாமே உண்மையாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

உங்களது கருத்தோடு முரண்பாடில்லை

ஆனால் இந்தவகை முடிவை 

தாயகமும் புலமும்  சேர்ந்து எடுக்கவேண்டுமே அன்றி

புற சக்தியோ

எதிரியின் அழுத்தங்களோ அல்ல

அது தான்  உண்மையில் நிரந்தரமாகவோ நீதியாகவோ தேவையானதாகவோ இருக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரகு- நீங்கள் நினைப்பது போல அவர்கள் ஒரு நிகழ்சி நிரலுக்குள் உள்வாங்க பட்டதாகவோ, அமைய செயல்படுவதாகவகோ நான் நினைக்கவில்லை. அவர்களின் பெயரை ஒரு உதாரணமாக கூறினேன். அதனால் இதையும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நீங்கள் கடைசியாக எப்போ ஊருக்கு போனீர்கள் என்பது தெரியவில்லை ஆனால் வட கிழக்கில் 50% மக்களாவது இந்த நோக்கில்தான் சிந்திக்கிறர்கள். சந்திரகாந்தனுக்கு மட்டும் விழுந்த விருப்பு வாக்கு 50,000 அத்தனை மக்களுமா ஒரு நிக்ழசி நிரலில் இழுபட்டார்கள். வியாழேந்திரன், அங்கயன், திலீபன், இவர்களின் எழுச்சி சொல்லும் செய்தியும் இதுதான்.

நீங்கள் அப்படி நினைத்ததாக நான் கூறவில்லை. அவர்களின் அண்மைக்கால கருத்துக்களை வைத்தே அப்படிக் கூறினேன். 

நான் சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று கூறியது தமிழ்த் தேசியத்திற்கும், அதனை ஆதரிக்கும் சக்திகளுக்கும் எதிரான தொடர்ச்சியான அடக்குமுறை, உரிமைகள் தீர்வுகளற்ற அல்லது மறுக்கப்பட்ட வெற்று அபிவிருத்தி அரசியல், தாயகத்தில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு உள்ளடங்கிய விடயங்களைத்தான். 

இவை எதுபற்றியுமே சிலர் பேசுவதில்லை. ஒற்றைக் கேள்வியாக கூட்டமைப்பு அதிகாரத்தில் இருந்த காலத்தில் இவை நடக்கவில்லையா என்பதுடன் இவை அனைத்துமே நொடிப்பொழுதில் கடந்துபோகின்றன. உண்மையாகச் சொன்னால், நான் கிழக்கு மாகாண வாக்காளர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும், சிங்களப் பேரினவாத அரசின் பினாமிகளுக்குச் சார்பாகவும் தேர்தலில் வக்களித்ததை இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறேன். சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு கிழக்கில் எதுவுமே செய்யவில்லையென்றால், அதற்குப் பிரதியீடாக சிங்களப் பேரினவாதத்தினை ஏற்றுக்கொள்வது சரியானதா? பேரினவாதத்தினை ஆதரிப்பது எந்தவிதத்தில் தமிழர்களுக்கு நண்மையினைப் பெற்றுத்தரப்போகிறது? இவையெல்லாவற்றையும் அபிவிருத்தி எனும் ஒற்றைச் சொல்லில் கூறிவிட்டு கடந்துபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லீம்களுக்கெதிரான அரசியல் என்றால்க் கூட, அது சிங்களப் பேரினவாதத்தின் கீழ் செயற்படும் தமிழ் முஸ்லீம் பினாமிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் சண்டித்தனம் காட்டுவதென்பது சாத்தியாமனது அல்ல என்பதுடன் ஒரு பினாமிக்குச் சார்பாக மற்றைய பினாமியை பேரினவாதம் எதிர்க்கும் என்பதும் நம்பும்படியாக இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தியாவை இவர்கள் எதிர்க்கவேண்டிய தேவை என்ன? இவர்கள் நியாயப்படுத்தும் உரிமைகள் /  தீர்வுகள களைந்த அபிவிருத்தி அரசியலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? இவர்கள் தவிர்ந்து வேறு எவருக்கு இந்தியாவின் தலையீடு சங்கடமாக இருக்கிறது? இலங்கையரசுக்குத்தானே, அப்படியென்றால், இவர்கள் இலங்கையரசிற்குச் சார்பான நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டோ  அல்லது அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலினுள் தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கப்பட்டுவிட்டார்கள் என்று நான் நினைப்பது சாத்தியம்தானே? 

அடுத்ததாக, சீமான் மீதான இவர்களது வெறுப்பு. தமிழகத்தில் சீமானின் வளர்ச்சி எவ்வாறு இவர்களைப் பாதிக்கிறது? தமிழ்த் தேசியத்தைப் பேசுவதற்காக இவர்கள் சீமானை எதிர்க்கிறார்கள் என்பது இவர்கள் இதுவரை கூறிவந்த கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியவாதிகள் மீதுதான் எமது வெறுப்பேயன்றி, மொதத் தமிழ்த் தேசியம் மீது அல்ல என்னும் நியாயப்படுத்தலுடன் முரண்படுகிறதே? இந்தியாவிற்கு வெளியே சீமானின் வளர்ச்சியை உற்றுக் கவனிப்பவர்கள் யாரென்று பார்த்தால், இங்கே சீமானை எதிர்க்கும் சிலருக்கும் அவர்களுக்குமான தொடர்பு தெரிந்துவிடும். உடனேயே துல்பனும், ஜஸ்டினும், கோஷானும் ஓடிவந்து நாங்களும்தான் எதிர்க்கிறோம் என்று சொல்லவேண்டாம், நீங்கள் எதிர்ப்பதற்கும், இங்கே சிலர் எதிர்ப்பதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் எதிர்ப்பது தூய தேசியவாத அரசியலை, ஆனால் வேறு சிலர் எதிர்ப்பதோ தமிழ்த் தேசிய அரசியலை. 

அடுத்ததாக, புலம்பெயர் தமிழரின் அழுத்தங்கள். புலம்பெயர் தமிழரின் அழுத்தங்கள் தேவையற்றவை என்று சொல்வதன்மூலம் லாபம் அடையப்போவது யாரென்று பார்த்தால் அது நிச்சயம் இலங்கையரசாக மட்டும்தான் இருக்கமுடியும். உள்நாட்டில் இருக்கும் தமிழராலும் தமக்கான உரிமைகள் பற்றிப் பேச முடியாது, புலம்பெயர்ந்தவர்களும் பேசக்கூடாதென்றால் எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு நடப்பவை பற்றி எவருமே பேசாமல், அமைதியாக நடப்பவற்றை ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போங்கள் என்பதுதானே? புலம்பெயர் தமிழரால் தமக்கு ஆபத்தென்று சிலர் புலம்புவது வேதனை. புலம்பெயர் தமிழர் பேசாது இருந்துவிட்டால்மட்டும் இவ்பர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுமா அல்லது சிங்களப் பேரினவாதம் தனது ஆக்கிரமிப்பினை நிறுத்திவிடுமா? அப்படியேதுமே நடக்கப்போவதில்லை. பேரினவாதம் புலம்பெயர் தமிழர்களை அடிபணியவைக்க உள்ளூரில் இருப்பவர்களை அச்சுருத்திவருகிறது, அதைச் சிலரும் தெரிந்தே ஆதரிக்கிறார்கள், புலம்பெயர் தமிழரை பேசாமல் ஒதுங்கிவிடுங்கள் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள். அவர்களாலும் எதுவும் முடியப்போவதில்லை, எம்மையும் எதுவும் செய்ய விடப்போவதில்லை. புலம்பெயர் தமிழர் வாய்மூடி மெளனமாக இருக்கவேண்டும் என்பது பேரினவாதத்தின் விருப்பம். ஆகவே அதனையே இங்கு பகிர்வோர் செய்வது அதே நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்த்தான் என்பது எனது எண்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

உங்களது கருத்தோடு முரண்பாடில்லை

ஆனால் இந்தவகை முடிவை 

தாயகமும் புலமும்  சேர்ந்து எடுக்கவேண்டுமே அன்றி

புற சக்தியோ

எதிரியின் அழுத்தங்களோ அல்ல

அது தான்  உண்மையில் நிரந்தரமாகவோ நீதியாகவோ தேவையானதாகவோ இருக்கும்???

நிச்சயமாக ஆனால் இதில் ஒரு கோழியா/முட்டையா சிக்கல் இருக்கிறது. 

நிலத்து அமைபுக்களும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வரும் வண்ணம் ஒரு மாநாட்டை கூட்டி வட்டுக்கோட்டை போல் ஒரு தீர்மானத்தை எடுகிறார்கள் என வைப்போம்.

1. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைக்குள்” என்பதை அறிவிக்காவிட்டால் - இலங்கையில் இது இன்னுமொரு தனிநாட்டு மாநாடு என பிரச்சாரம் நடக்கும். நாட்டில் இருந்து வர விரும்புவர்களும் வர முடியாது போகும்.

2. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைகுள்” என அறிவித்தால், புலம்பெயர் தேசத்தில் இதை ஒரு “துரோக மகாநாடு” என சித்தரித்து, பலர் பயத்தில் அந்த பக்கமே போகாமல் விடுவர். என்னை பொறுத்தவரை புலம் பெயர் மக்களில், பலர் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இன்றும் இதில் ஊக்கமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமது 2009 க்கு முன் முந்திய கொள்கையை கொஞ்சமும் மாற்றவில்லை. 

ஆகவே இப்படி ஒரு ஒன்றிணைந்த வேலைதிட்டமும் சாத்தியமிலாமல் போகிறது.

இது முதல் பிரச்சினை.

இரெண்டாவது பிரச்சினை, நாம் விரும்பாவிட்டாலும் வெளியார் தலையீடு தவிர்கவியலாதது. முடிந்தளவு வெட்டி ஆட முயற்சிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது.

ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. எமது அரசியல்ப் பலமும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிங்களவன் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகிறான், அவனது சிங்கள பெளத்த தேசியம் உருவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது நலனுக்காக எமக்கு ஒரு தீர்வைத் தருமாக இருந்தால் அதைதவிர மேலான எதுவும் எமக்கு இப்போதைக்கு இல்லை. இந்தியாவை மீறி எம்மால் தீர்வொன்றைப் பெறமுடியாது. இன்று சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் செய்யும் நகர்வுகள் எமக்கான ஒரு தீர்வையும் கூடவே வழங்குமென்றால், அதில் தவறென்ன? இந்தியாவையும், அமெரிக்காவையும் தாண்டி எமக்குத் தீர்வொன்றைத்தர வேறு யார் இருக்கிறார்கள்

ஏன்  இல்லை. மேல ஒருவர் சிவலிங்கத்தை வைச்சுக்கொண்டு திரிகிறார் அவரட்டை உது மாதிரி எத்தனை தீர்வுத்திட்டங்கள் இருக்கு தெரியுமே. அடிச்சுவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரைக்கொண்டுபோய் ஸ்ரீலங்காவிலே இறக்கிவிட்டீங்கள் என்றால் எமக்கான தீர்வு திட்டத்தை அவர் உடனையே எடுத்து தருவார் போல கிடக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

அப்போ அங்கே ஐனநாயகமில்லை

நீதியில்லை

அராயகம் நடக்கிறது

இதை  தானே நாங்க  வெளியில்   சொல்கிறோம்

சொல்லவேண்டிய தேவையும்  கடமையும் எமக்குண்டல்லே?????

இதைச் சொல்ல வேண்டாமென்று யார் சொன்னது?  வெளியே விளம்பரம் இல்லாமல் வெளிநாட்டு அரசுகளோடு இதைப் பின்கதவு வழியாகப் பகிர்ந்து கொள்வது தான் நான் அறிந்த வரை வினைத்திறனான முறை.

ஆனால், சில அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொடி தான் தாயக மக்களை விட முக்கியமாகத் தெரிவதால் செய்வதெல்லாம் அந்தக் கொடிக்கு பின்னால் இருப்போர் என்ற தோற்றம் சிறிலங்காவிலும் வெளிநாட்டிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது! இது தான் தாயக மக்களால் விரும்பப் படாது என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

ஜஸ்ரின் அண்ணா,

நீங்களும் விசுகு அண்ணா இருவரும் சொல்வதுமே உண்மைதான். 

இயலாத்தனமே இப்போ எங்கள் யதார்தம்😔.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

இதைச் சொல்ல வேண்டாமென்று யார் சொன்னது?  வெளியே விளம்பரம் இல்லாமல் வெளிநாட்டு அரசுகளோடு இதைப் பின்கதவு வழியாகப் பகிர்ந்து கொள்வது தான் நான் அறிந்த வரை வினைத்திறனான முறை.

ஆனால், சில அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொடி தான் தாயக மக்களை விட முக்கியமாகத் தெரிவதால் செய்வதெல்லாம் அந்தக் கொடிக்கு பின்னால் இருப்போர் என்ற தோற்றம் சிறிலங்காவிலும் வெளிநாட்டிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது! இது தான் தாயக மக்களால் விரும்பப் படாது என நான் நினைக்கிறேன்.

இன்னும் சிங்களவனை மோட்டுச்சிங்களவன் என்ற  நினைப்பிலிருந்து  வருகிறது  இந்த கருத்து????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இயலாத்தனமே இப்போ எங்கள் யதார்தம்😔.

இதைவிட எமது நிலையை சுருக்கமாக சொல்லமுடியாது

இதுவும் கடந்து போகக்கடவது........😪

1 hour ago, goshan_che said:

நிச்சயமாக ஆனால் இதில் ஒரு கோழியா/முட்டையா சிக்கல் இருக்கிறது. 

நிலத்து அமைபுக்களும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வரும் வண்ணம் ஒரு மாநாட்டை கூட்டி வட்டுக்கோட்டை போல் ஒரு தீர்மானத்தை எடுகிறார்கள் என வைப்போம்.

1. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைக்குள்” என்பதை அறிவிக்காவிட்டால் - இலங்கையில் இது இன்னுமொரு தனிநாட்டு மாநாடு என பிரச்சாரம் நடக்கும். நாட்டில் இருந்து வர விரும்புவர்களும் வர முடியாது போகும்.

2. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைகுள்” என அறிவித்தால், புலம்பெயர் தேசத்தில் இதை ஒரு “துரோக மகாநாடு” என சித்தரித்து, பலர் பயத்தில் அந்த பக்கமே போகாமல் விடுவர். என்னை பொறுத்தவரை புலம் பெயர் மக்களில், பலர் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இன்றும் இதில் ஊக்கமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமது 2009 க்கு முன் முந்திய கொள்கையை கொஞ்சமும் மாற்றவில்லை. 

ஆகவே இப்படி ஒரு ஒன்றிணைந்த வேலைதிட்டமும் சாத்தியமிலாமல் போகிறது.

இது முதல் பிரச்சினை.

இரெண்டாவது பிரச்சினை, நாம் விரும்பாவிட்டாலும் வெளியார் தலையீடு தவிர்கவியலாதது. முடிந்தளவு வெட்டி ஆட முயற்சிக்கலாம்.

அதுவரை

விட்டுக்கொடுப்போடு தாயகமும்

விடாது புலமும்  இயங்கணும்

எம்மிடம் முள்ளிவாய்க்கால்  என்றொரு பாரிய கொடுமையும்

அதன் மீதான பொறுப்பும்  இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இன்னும் சிங்களவனை மோட்டுச்சிங்களவன் என்ற  நினைப்பிலிருந்து  வருகிறது  இந்த கருத்து????

 சிங்களவரின் அமைப்புகள் புத்திசாலித்தனமானவை, தமிழர்களின் அமைப்புகள், குறைந்த பட்சம் புலத்தில், குறைந்த புத்திசாலித்தனமானவை என்ற என் புரிதலில் இருந்து வந்த கருத்து அது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.