Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களால்த்தான் மக்கள் அதிகமாகக் கொல்லப்பட்டார்கள் என்று கூறுவது ஏற்கமுடியாதது. இது புலத்தில் இருப்பவர்கள் உங்களின் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள், தாயகத்தில் இருப்பவர்கள் தமது பிரச்சினையைப் பார்த்துக்கொள்வார்கள் எனும் அதே தொனிதான்.

புலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களினால்த்தான் அங்கே நடந்துகொண்டிருந்த இனக்கொலை வெளித்தெரிந்தது. அப்போராட்டங்கள் நடைபெறவில்லையென்றாலோ அல்லது புலத்தில் மக்களின் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றிருக்கவில்லையென்றாலோ இந்த அக்கிரமங்கள் வெளியே வந்திருக்காது. 

நடத்தப்பட்ட இனக்கொலை புலத்தில் போராட்டங்கள் நடந்தால் என்ன, நடக்கவில்லையென்றால் என்ன நடந்துதான் இருக்கும். தயவுசெய்து தாயகத் தமிழனையும், புலத்திலுள்ள உறவுகளையும் பிரிக்கும் கைங்கரியத்தை நிறுத்துங்கள். தமிழன் போராடாமல் இருந்திருந்தாலே சிங்களவன் எமக்கு எல்லாவற்றையும் தந்திருப்பான் என்னும் இன்றைய பேரினவாதத்தின் எண்ணக்கருத்தினை நீங்களும் காவித்திரியாதீர்கள்.

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!

இந்த சிங்கள பெளத்த பேரினவாதியின் கூற்றுக்கும், தமிழர்கள் போராடாமல் இருந்திருந்தால் உங்களில் அரைவாசியைத்தான் கொன்றிருப்போம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? 

Edited by ரஞ்சித்
Link to post
Share on other sites
 • Replies 89
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

போர் முடிந்த போது தமிழர்களின் தாகமும்  நீர்த்து விட்டது இனி இவர்களை நாங்கள் எதிர்க்க முடியாது வாழ்ந்து செல்ல கட்டாயம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னமும்  இவர்களை எதிர்த்து சண்டித்தனம் மட்டுமே

"நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை." இதை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் எல்லோரும் பொருளாதார-அரசியல் புலம்பெயரிகள்  எமது ஆணிவேர் என்பது தாய்நாடுதான் க

அண்ணா இங்கு எழுதுபவர்கள் புதிதாக எதையும்  எமக்கு சொல்லிவிடமுடியாது இதையெல்லாம்  கண்டு  தாண்டி அனுபவித்து வேறு வழியெதுவும்  கிடைக்காதநிலையில் தான் எமது தலைமுறை   அடுத்த  கட்டத்துக்க

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

தாயகம்  எந்த  நேரமும்  கொடூரமான இன  ஒடுக்குமுறைக்கு ஆளாகலாம்

வெளியிலிருந்து தாயக  மக்களுக்கு குரல்கள் கட்டாயம்  வேண்டும்

குரல் கொடுக்கலாம் தப்பில்லை அந்த குரல்களுக்கு இங்கே பலகுரல்வளை நெரிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே எனது எண்ணம் அது உங்களுக்கு புரியும் என நினைக்கிறன் 

6 hours ago, குமாரசாமி said:

 கிழக்குவாசிகள் அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தான் கட்சிகள் சரியில்லை என்றுவிட்டு குத்துக்கரணம் அடித்து ஆளும் கட்சிகளுடன் இணைந்து அமைச்சர் பதவிகளும் பெற்று,உயர்பதவிகளும் பெற்று  கிழக்கு மண்ணுக்கு தொண்டாற்றியவர்கள். நல்ல விடயம்.
ஆனால் என்னவொன்று ஆட்சி அதிகாரங்களிலிருந்தும் இதுவரை உங்களவர்கள் எதுவுமே செய்யவில்லை போல் தெரிகின்றது. குத்துக்கரண அரசியல் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகின்றது.புத்த பிக்குகளிடமும் முஸ்லிம்களிடமும் இன்றும் அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.உங்கள் அரசியல் வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்.tw_glasses:

அப்படியானால் கிழக்கு ஒரு சிங்கப்பூராக இருந்திருக்க வேண்டும் ஈழத்தில் போர் நடந்தாலும் கிழக்கு வடக்கை விட அதிக இழப்பை சந்தித்து இப்பவரைக்கும் அதே நிலையில் உள்ளது ஆனால் வடக்கு போர் நடந்த நிலையில் இல்லாமல் முற்றாக மாறி மாற்றம் பெற்றுள்ளது ஆனால் வாதிகள் அரசியல் செய்தி கொண்டிருக்கிறார்கள் 
நீங்கள் குறிப்பிட்ட முந்தய காலம் தொடக்கம் இப்பவரைக்கும் என்ன அபிவிருத்தி அரசுடன் சேர்ந்து நடத்தி இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா ?? 
தற்போது ஓரளவு கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது வீடுகள் வீதிகள் குழாய் கிணறுகள் , கிணறுகள் விவசாயத்திற்க்கான வாய்க்கால் குளம் திருத்துதல் வேலைகள் அரசை எதிர்த்து நின்றால் இன்னும் பிச்சை எடுக்கிற நிலைதான் 🤭

நல்லையா, ராஜதுரை, தேவநாயகம் என்று பலர் கிழக்கு மாகாணத்தில் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்டவர்கள். வடமாகாண அரசியல்க் கட்சிகளைக் குற்றஞ்சாட்டிக்கொண்டே அரசுடன் இணைந்தவர்கள். பாராளுமன்றப் பதவிகளை ஏற்றுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அபிவிருத்திகளை, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியவர்கள். வாழைச்சேனை காகித ஆலை முதல் இன்னும் சில அபிவிருத்தித் திட்டங்கள் இவர்கள காலத்திலேயே அங்கு மேற்கொள்ளப்பட்டது. இவர்களை ஒத்த வடக்கின் டக்கிளஸ் தேவானந்தா தன்னைச் சுற்றியிருந்த சிலருக்கு பெற்றுக்கொடுத்த சலுகைகளைவிட, இவர்கள் கிழக்கு மாகாணத்திற்குச் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குள் இருக்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், டக்கிளஸ் துணை ராணுவக் குழுவின் தலைவர், மற்றையவர்கள் வடக்கிலிருந்து பிரிந்து கிழக்கிற்கென்று தனியே அரசியலை முன்னெடுத்த அரசுக்குச் சார்பான மக்கள் பிரதிநிதிகள். ஆகவே, இவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை அன்றைய சிங்கள அரசுகளுக்கு இருந்தது. ஆனால் என்ன, இன்றுவரை கிழக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது, அபிவிருத்தி எதுவுமே நடக்கவில்லையென்றுதான் கூறுகிறோம்.  இது ஓரளவிற்கு உண்மையானதும் கூட. கிழக்கில் இனிச் செய்யப்படப்போவதாக அவர்கள் கூறும் அபிவிருத்தி கூட கண்துடைப்பிற்காகச் செய்யப்படப்போகும் அபிவிருத்தித் திட்டங்களேயன்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவை எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. தமிழருக்குத் தேவையான அபிவிருத்தியை உண்மையிலேயே வழங்க அரசுகளுக்கு விருப்பமிருந்தால் அது எப்போதோ நடந்திருக்கும், கருணாவும், வியாழேந்திரனும், பிள்ளையானும் வரும்வரை பார்த்திருக்கவேண்டிய தேவையில்லை. ஆக, இன்று அரசு செய்வது தனது பினாமிகளை வைத்து கிழக்குத் தமிழர்களை சில அபிவிருத்தி மாயைகளைக் காட்டி வடக்கிலிருந்து பிரித்தெடுப்பதுதான். அவர்கள் என்னதான் சொன்னாலும், இதுதான் உண்மை. 

அடுத்தது வடக்குத் தமிழர்கள் கிழக்குத் தமிழர்கள் போன்று யுத்தத்தில் பாதிக்கப்படவில்லையென்பதும், வடமாகாணம் யுத்தத்தில் அழியவில்லை என்பதும். மிகத் தவறான தகவல். சொத்திழப்பிலும், ஆள் இழப்பிலும் தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளுமே ஒரே விதத்திலேயே பாதிக்கப்பட்டன. இதில் மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தன் என்று பிரித்துப் பார்த்து பேரினவாதம் எம்மை அழிக்கவில்லை. யாழ்ப்பாணம் 1995 வரை கண்டிராத அழிவா? அல்லது வன்னி 80 களிலிருந்து 2009 வரை கண்டிராத அழிவா? கிபிர், மிக், புக்காரா, சியாமாச்செட்டி, எம் ஐ 24, பெல் என்று சிங்கள ராணுவத்தின் அனைத்து அழிவு ஆயுதங்களும், இந்தியா ராணுவத்தின் தாங்கிகள், மிராஜ், எம் ஐ 24 என்று அந்நிய நாடொன்றிற்கெதிராகப் பாவிக்கும் ஆயுதங்களைப் பாவித்து அழிக்கப்பட்டதுகூட யாழ்ப்பாணமும் வன்னியும்தானே? அப்படியிருக்க யாழ்ப்பாணம் அழியவில்லை, மக்கள் கொல்லப்படவில்லையென்று சகட்டுமேனிக்குச் சொல்லிவிட்டுப் போவதெப்படி முடிகிறது? 2009 இல் ஒன்றரை லட்சம் பேரைக் காவுகொடுத்த இழப்பு ஒரு இழப்பாகத் தெரியவில்லையோ? அநியாயத்திற்கு வடிவேலுவின், "உனக்கு வந்தால் ரத்தம், எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா" என்பதுதான் நினவிற்கு வந்து தொலைக்கிறது. தயவுசெய்து இந்த கிழக்கில்த்தான் அழிவு, வடக்குத் தப்பிவிட்டதெனும் பொய்யான பிரச்சாரத்தினை இவர்கள் நிறுத்தவேண்டும். அழிவு எல்லோருக்கும் பொதுவானது, இதில் உனக்கில்லை எனக்குத்தான் எல்லாமே நடந்ததெனும் சப்பைக் கட்டல்கள் வேண்டாம்.

அடுத்தது, புலத்தில் நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள் எனும் கருத்து. புலத்தில் ஒலிக்கும் குரல்களால், தாயகத்தில் பல குரல்வளைகள் நசுக்கப்படுகிறதாம். புலத்திலிருப்போர் பேசுவது தாங்கள் இழந்த உறவுகளுக்காக, தம்மேல் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதிகேட்டு, தமது தாயகம் பேரினவாதிகளால் கபளீகரம் செய்வதை எதிர்த்து, இன்றும் தாயகத்தில் சிங்கள அடக்குமுறைகளுக்குள் அகப்பட்டு வாழும் தமது உறவுகளுக்காக. ஆகவே இதைச் செய்யவேண்டாம் என்று கேட்பவர்கள் இன்று செய்வதெல்லாம், சிங்களத்தைக் கோபப்படுத்தவேண்டாம், அவர்களின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவேண்டாம், ஆக்கிரமிக்கப்படும் தாயகம்பற்றிப் பேசவேண்டாம், அடக்குமுறைக்குள் வாழும் உறவுகள் பற்றிப் பேசவேண்டாம் என்பதைத்தான். 
 இதைச் செய்யும்படி இவர்களைக் கேட்பது யாரென்று பார்த்தால் இந்தக் கூப்பாடுகளின் அடிப்படையினைப் புரிந்துகொள்வது கடிணமானதாக இருக்காது என்பது எனது எண்ணம். இவர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியிருக்கிறது. புலத்திலுள்ளவர்களும் பேசக்கூடாது, நீங்களும் பேசப்போவதில்லை (எம்மை ஆக்கிரமிப்பவனுடன் சேர்ந்துநின்றுகொண்டு அவனது அடக்குமுறையினைக் கேள்விகேட்கமுடியாதென்பதை புரிந்துகொள்கிறேன்) என்றால், தாயகத்தில் அடக்குமுறைக்கு இன்றுவரை உள்ளாகும் எமது உறவுகள் பற்றிப் பேசப்போவது யார்? அல்லது எதுவுமே பேசவேண்டாம், பேசாமல் வாயைமூடிக்கொண்டிருங்கள், அவனது நாடு, ஆகவே அவன் பிடிக்கிறான், எம்மை அழிக்கிறான் என்றுவிட்டு இருந்துவிடலாம் என்பதுதானே இதன் பொருள். சரி, ஒரு கதைக்கு புலத்திலுள்ளவன் எதுவுமே பேசவில்லையென்று வைத்துக்கொள்வோம், பேரினவாதம் தமிழருக்கான உரிமைகளைத் தந்துவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்களா? எதுவுமே தரப்போவதில்லை. ஆக்கிரமிப்பும், குடியேற்றமும், தமிழ்க் கலாசாரா அழிப்பும் முன்னெப்போதைக் காட்டிலும் இன்று மிக வேகமாக நடைபெற்றுவருகிறது இவர்களின் ஆதரவில். ஆனால், இவர்கள் இதைப்பற்றிப் பேசப்போவதுமில்லை, மற்றையவனைப் பேச விடப்போவதுமில்லை. காரணம், அபிவிருத்தியும், சலுகைகளும் கிடைக்காது போய்விடுமாம். உங்கள் இருப்பே கேள்விக்குறியாகும்பொழுது, அபிவிருத்தியும் சலுகைகளும், தெருக்களும், மலசலகூடங்களும் என்ன செய்யும்? 

மன்னிக்கவேண்டும் குசா, உங்களை விளித்து எனது கருத்தைப் பதியவேண்டியதாயிற்று.

 • Like 1
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குரல் கொடுக்கலாம் தப்பில்லை அந்த குரல்களுக்கு இங்கே பலகுரல்வளை நெரிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே எனது எண்ணம் அது உங்களுக்கு புரியும் என நினைக்கிறன் 

அப்படியானால் கிழக்கு ஒரு சிங்கப்பூராக இருந்திருக்க வேண்டும் ஈழத்தில் போர் நடந்தாலும் கிழக்கு வடக்கை விட அதிக இழப்பை சந்தித்து இப்பவரைக்கும் அதே நிலையில் உள்ளது ஆனால் வடக்கு போர் நடந்த நிலையில் இல்லாமல் முற்றாக மாறி மாற்றம் பெற்றுள்ளது ஆனால் வாதிகள் அரசியல் செய்தி கொண்டிருக்கிறார்கள் 
நீங்கள் குறிப்பிட்ட முந்தய காலம் தொடக்கம் இப்பவரைக்கும் என்ன அபிவிருத்தி அரசுடன் சேர்ந்து நடத்தி இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா ?? 
தற்போது ஓரளவு கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது வீடுகள் வீதிகள் குழாய் கிணறுகள் , கிணறுகள் விவசாயத்திற்க்கான வாய்க்கால் குளம் திருத்துதல் வேலைகள் அரசை எதிர்த்து நின்றால் இன்னும் பிச்சை எடுக்கிற நிலைதான் 🤭

எதிர்த்து நிற்பதையும்/நின்றதையும்/நிற்க சொல்லவுமில்லை.

இதுவரைகாலமும் அரசுடன் சார்ந்து ஆட்சி செய்தும் இன்று பிள்ளையானை நம்ப / எதிர்பார்த்திருக்கும் நிலையைத்தான் சொன்னேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

எதிர்த்து நிற்பதையும்/நின்றதையும்/நிற்க சொல்லவுமில்லை.

இதுவரைகாலமும் அரசுடன் சார்ந்து ஆட்சி செய்தும் இன்று பிள்ளையானை நம்ப / எதிர்பார்த்திருக்கும் நிலையைத்தான் சொன்னேன்.

அண்ணா

இங்கு எழுதுபவர்கள் புதிதாக எதையும்  எமக்கு சொல்லிவிடமுடியாது

இதையெல்லாம்  கண்டு  தாண்டி அனுபவித்து

வேறு வழியெதுவும்  கிடைக்காதநிலையில் தான்

எமது தலைமுறை   அடுத்த  கட்டத்துக்கு சென்றோம்

இவர்களும்  வருவார்கள்

என்ன  தாங்களும்  வாங்கித்திருந்தணும்  என்கிறார்கள்

சிங்களம்  நிச்சயம்  இவர்களையும் எம்முடன் கை கோர்க்க வைக்கும்

அதுவரை........????

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எதிர்த்து நிற்பதையும்/நின்றதையும்/நிற்க சொல்லவுமில்லை.

இதுவரைகாலமும் அரசுடன் சார்ந்து ஆட்சி செய்தும் இன்று பிள்ளையானை நம்ப / எதிர்பார்த்திருக்கும் நிலையைத்தான் சொன்னேன்.

இங்குள்ள மக்களுக்கு கிடைப்பது லாபமே  இந்தனை ஆண்டுகள் எந்த அரசும் அள்ளிக்கொடுக்கவில்லை கிள்ளிக்கொடுப்பதை கூட பெற்றுக்கொள்ள நினைக்கிறம் இல்லாவிட்டால் அது கூட வேற இடத்துக்கு செல்லும் 

உதாரணம் வடகிழக்கிற்கு அபிவிருத்திக்கென வந்த பணம் மீளவும் திரும்பிச்சென்றன 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்குள்ள மக்களுக்கு கிடைப்பது லாபமே  இந்தனை ஆண்டுகள் எந்த அரசும் அள்ளிக்கொடுக்கவில்லை கிள்ளிக்கொடுப்பதை கூட பெற்றுக்கொள்ள நினைக்கிறம் இல்லாவிட்டால் அது கூட வேற இடத்துக்கு செல்லும் 

உதாரணம் வடகிழக்கிற்கு அபிவிருத்திக்கென வந்த பணம் மீளவும் திரும்பிச்சென்றன 

இதைத்தான் ஆண்டாண்டு காலம் கிழக்கு செய்கிறது. அதன் பலன் காத்தான்குடியும் கல்முனையும் நல்ல அறுவடை. தொடருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎10‎-‎2020 at 00:01, goshan_che said:

உங்களோடு முரண்படவில்லை,

ஆனால் வெஸ்மினிஸ்டர் போராட்டம் போல் ஒரு நிகழ்வை நான் முன்பும் பின்பும் லண்டன் வாழ் தமிழர் மத்தியில் கண்டதில்லை. 

அடடே இவர்களும் வந்துள்ளார்களே என நினைக்கும் படி பலர் வந்தார்கள்.  நேர்முகத் தேர்வை தவறவிட்ட, சோதனையை தள்ளி வைத்த சிலரையும் தெரியும்.

இந்த போராட்டங்கள் எதுவும் சாதிக்கவில்லை என்பது சரியே.

ஆனால் இதை செய்யாமல் விட்டிருந்தால் இழப்பு குறைந்திருக்கும் என எதை வைத்து சொல்கிறீகள்?

மே 17 வரைக்கும் புலிகளுக்கு எதிரான தடையை எடு என்று தான் கத்திக் கொண்டு இருந்தோம்.
இரு தரப்பும் சண்டை பிடித்து கொண்டு இருக்கும் போது நாங்கள் ஒரு தரப்பை பார்த்து யுத்தத்தை நிப்பாட்டு என்று கத்தினோம்...எங்களுக்கு உண்மையிலயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் , இருவரையும் யுத்தத்தை நிப்பாட்ட சொல்லி கேட்டு இருப்போம்.
 புலிகள் யுத்தத்தை நிப்பாட்ட தயாராய் இருந்தார்கள் .ஆனால் அரசு நிப்பாட்டவில்லை என்று சிலர் சொல்லுவார்கள்...வெல்லும் தருவாயில் இருக்கும் ஒருவர் தான் வெல்லத் தான் பார்ப்பார் .
நாங்கள் புலம் பெயர் நாடுகளில் செய்த ஆர்ப்பாட்டம் ஆனது அவர்களது ஆக்கிரோசத்தையும் கோபத்தையும் தூண்டி விட்டு இருக்கலாம்.
எப்படியாவது அங்குள்ள கடைசி தமிழன் செத்தாலும் பரவாயில்லை பிடித்தே திரோணும் என்னும் ஆக்கிரோசத்தை கொடுத்திருக்கலாம் 
எம்பசிக்கு முட்டை எறிதல் , வீதிகளை மூட வைத்தல் போன்றன பிரித்தானிய அரசையும் சினம் கொள்ள வைத்திருக்கும் .
புலிகளை அழிப்பது என்பது உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து முதலே திட்டமிட்டு விட்டது . அதை மாற்ற முடியாது ...மக்கள் இழப்பை குறைத்து இருக்கலாம் என்பது என்னுடைய ஊகம்...பிழை இருந்தால் சொல்லுங்கள்  
 
On ‎10‎-‎10‎-‎2020 at 00:12, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை கண்ணிலையும் காட்டக்கூடாது என சொல்லிக்கொண்டு திரிந்தவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இறுதிக்கட்ட நிதியுதவி கூட செய்திருந்தார்கள்.

ஆம் அண்ணா ...இது ஒன்று தான் நன்மையான விடயம்  மற்றப்படி எதையும் எம்மால் அந்த நேரத்தில் மாற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளாத தான் வேண்டும் 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

.வெல்லும் தருவாயில் இருக்கும் ஒருவர் தான் வெல்லத் தான் பார்ப்பார்

இதே நிலையில் புலிகள் இருந்த போது, சந்திரிகா அம்மையார் இந்தியாவிடம் கெஞ்சினார், வடக்கில் புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்டு இருக்கும் நாற்பத்தையாயிரம் சிங்கள படைகளை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.  புலிகள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றதால் மீண்டு வந்த  சிங்களப்படை சர்வதேசத்தின் உதவியோடு போர் செய்து, சர்வதேசம் வென்ற போரை தாம் வென்றதாக  இன்று முழக்கமிடுகிறார்கள். தன் சொந்த மக்கள் மீது அல்ல, எதிரிகள் மீதே வெற்றி கொண்டது போல கொண்டாடுகிறார்கள். தன் சொந்த மக்களை அகதியாக்கியவன் இறுதியாக எல்லோராலும் அருவருக்கப்பட்டு மாளுவான். அவனுக்காக துக்கம் கொண்டாட யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணம் இடி அமீன், ஜே. ஆர். ஜெயவர்த்தன. இன்னும் பலர் தேடித் பார்த்தால் தெரியும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On ‎13‎-‎10‎-‎2020 at 01:20, satan said:

சந்திரிக்கா கெஞ்சினாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது ...ஆனால் யாருடைய பேச்சை நம்பி யுத்தத்தை நிப்பாட்டினது புலிகளது பிழை ...அவர்களுக்கு அரசியல் சாணக்கியம் இல்லை .
ஆமாம் தெரியாமற் தான் கேட்க்கிறேன் ஜே ஆர் அருவருக்க தக்க வகையிலா இறந்தார் ?...அவருடைய செத்த வீட்டுக்கு போய் ஒருத்தரும் அழவில்லையா?
எழுதும் போது தயவு செய்து யோசித்து எழுதுங்கள் ...இதையே தலைவருக்கு என்ன நடந்தது என்று கேட்டால் என்ன சொல்லுவீ ங்கள் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 20:14, ரதி said:

மே 17 வரைக்கும் புலிகளுக்கு எதிரான தடையை எடு என்று தான் கத்திக் கொண்டு இருந்தோம்.
இரு தரப்பும் சண்டை பிடித்து கொண்டு இருக்கும் போது நாங்கள் ஒரு தரப்பை பார்த்து யுத்தத்தை நிப்பாட்டு என்று கத்தினோம்...எங்களுக்கு உண்மையிலயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் , இருவரையும் யுத்தத்தை நிப்பாட்ட சொல்லி கேட்டு இருப்போம்.
 புலிகள் யுத்தத்தை நிப்பாட்ட தயாராய் இருந்தார்கள் .ஆனால் அரசு நிப்பாட்டவில்லை என்று சிலர் சொல்லுவார்கள்...வெல்லும் தருவாயில் இருக்கும் ஒருவர் தான் வெல்லத் தான் பார்ப்பார் .
நாங்கள் புலம் பெயர் நாடுகளில் செய்த ஆர்ப்பாட்டம் ஆனது அவர்களது ஆக்கிரோசத்தையும் கோபத்தையும் தூண்டி விட்டு இருக்கலாம்.
எப்படியாவது அங்குள்ள கடைசி தமிழன் செத்தாலும் பரவாயில்லை பிடித்தே திரோணும் என்னும் ஆக்கிரோசத்தை கொடுத்திருக்கலாம் 
எம்பசிக்கு முட்டை எறிதல் , வீதிகளை மூட வைத்தல் போன்றன பிரித்தானிய அரசையும் சினம் கொள்ள வைத்திருக்கும் .
புலிகளை அழிப்பது என்பது உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து முதலே திட்டமிட்டு விட்டது . அதை மாற்ற முடியாது ...மக்கள் இழப்பை குறைத்து இருக்கலாம் என்பது என்னுடைய ஊகம்...பிழை இருந்தால் சொல்லுங்கள்  
 
நான் இப்படி நினைக்கவில்லை.

நீங்கள் சொல்வது போல் வேலையை முடிப்பது என்று எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள்.

வேலையை இப்படிதான் முடிப்பது என்றும் முடிவாகிவிட்டது.

நம்மை, நாம் கத்தியதை இலங்கையும் பொருட்டில் எடுக்கவில்லை. மேற்கும் எடுக்கவில்லை.

ஆகவே நாம் கத்தினாலும், கத்தியிராவிட்டாலும் விசயம் இப்படித்தான் முடித்து வைத்திருக்கப்பட்டிருக்கும்.

எப்படியும், எவ்வளவு மக்களை அழித்தும் முடிக்க வேண்டும் என்ற ஆக்ரோசம் இலங்கைக்கு போதுமானனளவு ஏலவே இருந்தது. நாம் கத்தியாதால் ஆக்ரோசம் கூடியது என்பதை விட, அது ஏற்கனவே 100% இருந்ததது என்பதே என் கணிப்பு.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

எப்படியும், எவ்வளவு மக்களை அழித்தும் முடிக்க வேண்டும் என்ற ஆக்ரோசம் இலங்கைக்கு போதுமானனளவு ஏலவே இருந்தது. நாம் கத்தியாதால் ஆக்ரோசம் கூடியது என்பதை விட, அது ஏற்கனவே 100% இருந்ததது என்பதே என் கணிப்பு.

ஆம், சொறி சிங்களம் இதை முற்றக்கூடிய திட்டமிட்டு, பாரிய அளவு சல்பூரிக் அமிலமும், பாரிய எரியூட்டிகளையும் order செய்து விட்டு, முற்றபணமும் கட்டி  இருந்தது (ஏனெனில் இவை உடனடியாக பெரிய அளவில் வாங்குவது மிகவும் கடினம்).

 இரசாயன ஆயுதங்களும், இவையும்ம்,  சீனாவில் இருந்து வாங்கப்பட்டதான ஆதாரங்கள்  பிரகீத் இன் கொலையை விசாரித்த cid இந்த கைக்கு கிடைத்து, பின்பு கோத்த  அந்த cid களை விரட்ட, அவர்கள் ஐரோப்பா இல் இருக்கும் இரு நாடுக்ளிட்ற்கு (எந்த நாடுகள் என்பது தெரியவில்லை)  தப்பி ஓடி வந்து ஆதாரங்களை கையளித்து உள்ளார்கள். 

கிந்தியாவும், இரசாயன ஆயுதங்கள் கொடுத்ததாக கதை உண்டு. ஆனல் அது இந்த ஆதாரங்களில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  

ஆனால் சிங்களம் எதில் வெளிப்படையான பிடி கொடுத்துள்ளது என்றால், பாரிய உடல் சேதம் உள்ளவர்கல் உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கப்படவில்லை என்பதில்.
 
இது கருணாவுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது என்பதே நான் அறிந்த வரையில். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் இப்படி நினைக்கவில்லை.

நீங்கள் சொல்வது போல் வேலையை முடிப்பது என்று எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள்.

வேலையை இப்படிதான் முடிப்பது என்றும் முடிவாகிவிட்டது.

நம்மை, நாம் கத்தியதை இலங்கையும் பொருட்டில் எடுக்கவில்லை. மேற்கும் எடுக்கவில்லை.

ஆகவே நாம் கத்தினாலும், கத்தியிராவிட்டாலும் விசயம் இப்படித்தான் முடித்து வைத்திருக்கப்பட்டிருக்கும்.

எப்படியும், எவ்வளவு மக்களை அழித்தும் முடிக்க வேண்டும் என்ற ஆக்ரோசம் இலங்கைக்கு போதுமானனளவு ஏலவே இருந்தது. நாம் கத்தியாதால் ஆக்ரோசம் கூடியது என்பதை விட, அது ஏற்கனவே 100% இருந்ததது என்பதே என் கணிப்பு.

நான் சொன்னதை தான் மாத்தி ,கீத்தி நீங்களும் சொல்கிறீர்கள் ... மொத்தத்தில்  போய் ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் வீண்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

நான் சொன்னதை தான் மாத்தி ,கீத்தி நீங்களும் சொல்கிறீர்கள் ... மொத்தத்தில்  போய் ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் வீண்

அதை நான் எனது முதல் பதிவிலேயே சொல்லி விட்டேன். என்ன நாளைக்கு என் பேரப்பிள்ளைகள் என்ன தாத்தா செய்தாய்? என கேட்டால் சும்மா வேடிக்கை பார்க்காமல் ஒரு சிறு முயற்சியாவது செய்தேன் என சொல்லும் தைரியம் இருக்கும். அவ்வளவுதான்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவருடைய செத்த வீட்டுக்கு போய் ஒருத்தரும் அழவில்லையா?

அவர் ஒரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி. அவர் இறப்புக்கு  கொடுக்கப்படவேண்டிய  மரியாதை கொடுக்கப்படவில்லை, அரசியலில் அவர் செய்தவை அனைத்தும் கண்டுகொள்ளப்படவில்லை, ஒதுக்கப்பட்டவராக சாதாரண மனிதரின் இறப்புபோல நடந்தது.  என் தலைவர் வஞ்சனையால் கொல்லப்பட்டவர். அவரோடு பலமக்கள் கொல்லப்பட்டனர். அவருக்காக அந்த இனமே அழுதது. நீங்கள் அழாமல் இருந்திருந்தால் அது எனது தவறில்லை.

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.