Jump to content

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம்


Recommended Posts

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம்

  by : Dhackshala

http://athavannews.com/wp-content/uploads/2020/08/government.jpg

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருத்தல், வீடுகளை விட்டு வெளியேறும் போது முகக்கவசங்கள் அணிதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/wp-content/uploads/2020/10/EjjYZlEUwAANrli.jpg

http://athavannews.com/இலங்கையில்-அவசரகால-நிலைய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20’வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊர்வலம் போகாமல் இருப்பதற்காக,  கொரோனாவை சாட்டி  இந்த அவசரகால சட்டமாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

20’வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊர்வலம் போகாமல் இருப்பதற்காக,  கொரோனாவை சாட்டி  இந்த அவசரகால சட்டமாகவும் இருக்கலாம்.

கொரொனா வர காரணமே அது தான் என நினைக்க்றன் 😂😂

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

20’வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊர்வலம் போகாமல் இருப்பதற்காக,  கொரோனாவை சாட்டி  இந்த அவசரகால சட்டமாகவும் இருக்கலாம்.

ஈழத் விடுதலைக்குச் சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதிலெல்லாம் சிங்களத்திற்குச் சார்பாக ஏதாவது ஒன்று தோன்றி உதவிபுரிந்துவருவது ஏன், எப்படி.... புரியவில்லை!. எங்களால் கெட்டவர்கள் என்று புறம்தள்ளப்படுபவர்களையும், கெட்டவை என்று ஒதுக்கப்படுபவைகளையும் அவர்கள் உள்வாங்கிக்கொள்கிறார்களே அதனாலா?. 

ஊரோடு ஒத்துவாழ் என்று சொல்லித்தந்தவர்கள் உலகத்தோடு ஒத்துவாழ் என்று போதிக்கவில்லையே!. உலகம் இன்று நல்லவர்களால் ஆளப்படவில்லை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்காக நாங்கள் கெட்டவர்களாக மாறவேண்டும் என்பதல்ல, கெட்டவர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டிய நிலையை..., நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என எண்ணவேண்டியுள்ளது.🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

20’வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊர்வலம் போகாமல் இருப்பதற்காக,  கொரோனாவை சாட்டி  இந்த அவசரகால சட்டமாகவும் இருக்கலாம்.

சரியாச் சொன்னீங்கள். சொறீலங்காவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போதே தேர்தலை நடத்த திட்டமிட்டவர்கள்.. சாராயச் சாலைகளை திறந்தவர்கள்.. ஒரு தொற்றைச் சாட்டு வைத்து.. மொத்த நாட்டையும் முடக்குவதன் பின்னால்.. மகிந்த - கோத்தா ஆதாய அரசியல் தான் இருக்கிறது என்பது வெளிப்படை.

கொரோனாவை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும்.. ஒரே நாடு சொறீலங்காவே முதன்மையாக இருக்க முடியும்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.