-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர். https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/23140551/2288289/tamil-news-palani-thaipusam-devotees-kavadi.vpf -
ஜாதி காதவா. அல்லா திருப்பி குடுப்பான் சொல்ரது இதுதான் வா. கத எழுதுனவருக்கு அரபி மாலும் போல வா. கடம்மா, கபீல், தாள், தய்யூப் வார்த்தைகளை பார்த்தால் தெரிகின்றது.
-
By கிருபன் · பதியப்பட்டது
இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகி சிக்கியுள்ள கப்பலின் தற்போதைய நிலை என்ன ? (ஆர்.யசி) அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுள்ளது. கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கப்பலை நகரத்து பணிகளில் இலங்கை கடற்படையினரும், கரையோர பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக்கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டுல்லத்தை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் முயற்சியில் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது கண்டறிந்துள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறு இருப்பினும் கப்பலை நகர்த்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கோ அல்லது திருகோணமலைத் துறைமுகத்திற்கு கப்பலை இழுத்து செல்லும் முயற்சிகளை கையாண்டு வருவதாகவும் இலங்கை கடற்படையின் இரண்டு கண்காணிப்பு படகுகளும் ஒரு மீட்பு கப்பலும், இலங்கை விமானப்படையின் ஒரு ஹெலிகொப்டர் விமானமும் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கடற்படை பேச்சளார் இந்திக டி சில்வா தெரிவித்தார். இது குறித்து கரையோர பாதுகாப்பு அதிகாரச சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுற இது குறித்து தெரிவிக்கையில், குறித்த கப்பலின் மூலமாக கடல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தெளிவான சான்றுகளும் கிடைக்கவில்லை, எனினும் இலங்கை கடல் எல்லைக்குள் இயற்கை வளங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கப்பலின் உரிமையாளர், கப்பலின் வியாபார நிறுவனம் மற்றும் கப்பலின் கட்டளை தளபதி ஆகியோருக்கு எழுத்து மூலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கை கடற்படையும் மீட்பு படைகளும் சென்றுள்ள காரணத்தினால் எமது இயற்கை வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் நடவடிக்கை எடுக்கவே அவர்களும் முயற்சிக்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/99069 -
இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி (செ.தேன்மொழி) சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 138 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4105 பேர் குண்மடைந்துள்ளனர். இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 388 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள் , 489 ஆண் சிறைக் கைதிகள் , 11 பெண் சிறைக் கைதிகள் , 3ஆயிரத்து 520 ஆண் விளக்கமறியல் கைதிகள் , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/99070
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.