Jump to content

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம்


Recommended Posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை.

  • அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததோ கிடையாது. வெல்லும் கட்சிக்கே எல்லாம் (Winner takes all) என்ற மரபு தான் இங்குண்டு.
  • ஜனநாயகக் கட்சி (Democratic Party) 1828 இல் ஆரம்பிக்கப்பட்டது. நவதாராள கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. குடியரசுக் கட்சி (Republican Party) 1854 இல் ஆரம்பிக்கப்பட்டது. அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவானது. சிறிய அரசாங்கம், கட்டற்ற பொருளாதாரம், தனி மனித சுதந்திரம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இதுவரை 14 ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளும், 19 குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளும் ஆட்சி செய்திருக்கிறார்கள். 44 வது ஜனாதிபதியான பராக் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாவார்.
  • ஜனாதிபதி தேர்தல் 4 வருடங்களுக்கு ஒரு தடவை, நவம்பர் மாதத்தில் வரும் முதலாவது செவ்வாயன்று நடைபெறுகிறது.
  • அரசாங்கம் (Congress), 435 மக்கள் சபை உறுப்பினர்களையும், 100 செனட்சபை உறுப்பினர்களையும் கொண்டது. இதன் அரசியலமைப்பு செப்டம்பர் 17, 1787 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவரை 27 திருத்தங்கள் அமுற்படுத்தப்பட்டுள்ளன.
  • ஏனைய நாடுகளைப் போல் அமெரிக்க மக்கள் தமது ஜனாதிபதியை நேரடியாகத் தெரிவுசெய்வதில்லை. ஒவ்வொரு மாநிலங்களிலுமுள்ள மக்கள் தமக்கு விருப்பமான ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள். அவ்வாக்குகளின் பிரகாரம் அம்மாநிலம் தனது சனத்தொகைக்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ‘பிரதிநிதிகளை’ (electors)த் தெரிவுசெய்யும். தலைநகர் வாஷிங்டன் D.C. க்கு வழங்கப்பட்ட 3 ஐயும் சேர்த்து, மொத்தமாக 538 பிரதிநிதிகள் இருப்பார்கள் (435 மக்கள் சபை + 100 செனட் சபை). இதைத்தான் Electoral College votes என்கிறார்கள். இதில் 270 பிரதிநிதிகளின் வாக்குக்கள் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே ஜனாதிபதியாகிறார்.
  •  
  • சனத்தொகை கூடிய மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதிகள் கிடைக்கும். உ+ம்: கலிபோர்ணியா (55), டெக்சாஸ் (38), நியூயோர்க் (29), ஃபுளோறிடா (20, இலினோய் (20), பென்சில்வேனியா (20)…
  • சனத்தொகை குறைந்த மாநிலங்கள் Caucuses எனவும் கூடிய மாநிலங்கள் Primaries எனவும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலங்களும் தமது சட்டங்களுக்கேற்ப பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்றன. அநேகமாக Caucuses எனப்படும் மாநிலங்களில் வெளிப்படையான வாக்கெடுப்பாகவும், Primaries எனப்படும் மாநிலங்களில் இரகசிய வாக்க்கெடுப்பு மூலமும் பிரதிநிதிகள் தெரிவாகிறார்கள்.
  • அயோவா மாநில சட்டத்தின்படி, இங்குதான் முதலாவது Caucuses அல்லது Primaries தேர்தல் நடைபெற வேண்டும்.
  • கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை

  • அமெரிக்கா பெரும்பாலும் இரு கட்சி ஆட்சிமுறையில்தான் இயங்குகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தமது கட்சிக்கெனப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்றன. ஜனநாயகக்கட்சிக்கு மொத்த மாநிலங்களிலும் 4763 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். எவர் ஒருவர் 2807 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுகிறாரோ அவரே அக் கட்சியின் வேட்பாளராகத் தெரியப்படுவார். குடியரசுக் கட்சியில், 2,472 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 1,237 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றவர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுகிறார். நாடு தழுவிய ரீதியில் நடக்கும் கட்சியின் தேசிய மாநாட்டில் அவ்வேட்பாளர் முறையாகப் பிரகடனப்படுத்தப்படுவார்.
  • தேசிய மாநாடு முடிவுற்று ஓரிரு மாதங்களுள், வேட்பாளர் தனது உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வார். அது அவருடைய விருப்பப்படி நடக்கும். தேர்தல் இல்லை.
  • ஜனாதிபதி தேர்தல்

  • இரு கட்சிகளின் தேசிய மாநாடுகளில் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு நான்கு / ஐந்து மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் மாதத்தின் முதலாவது செவ்வாயன்று இது நடைபெறுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 18ம் நூற்றாண்டிலிருந்து தொடர்கிறது.
  • நவம்பர் தேர்தலின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தபால் மூலமோ வாக்களிக்கிறார்கள். வாக்குச் சீட்டில் இருக்கும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோ, ஜனாதிபதி, உபஜனாதிபதிகளின் பெயர்களில் விரும்பிய கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்கலாம். இதைவிட, அரசியலமைப்பில் திருத்தம் செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான மக்கள் கருத்தை அறியும் தேவைக்காகவும் ஜனாதிபதி தேர்தல் பாவிக்கப்படுகிறது.
  • ஒரு மாநிலத்தில் ஒரு குறிக்கப்பட்ட வேட்பாளர் 50%த்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்தால், அந்த மாநிலத்துக்கென ஒதுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையும் அவ் வேட்பாளருக்குக் கிடைத்துவிடும். ஆனால் அப் பிரதிநிதிகள் கட்டாயமாக மக்களின் விருப்பப்படி தமது வாக்குகளை மக்கள் விரும்பிய வேட்பாளருக்கே கொடுக்கவேண்டிய கட்டாயமில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டபடியே நடந்துவருகிறது.
  • இப்படியாக, எந்த வேட்பாளருக்கு 270 பிரதிநிநிதிகள் கிடைக்கிறார்களோ அவரே ஜனாதிபதியாகிறார்.
  • https://marumoli.com/அமெரிக்க-ஜனாதிபதி-தேர்தல/?fbclid=IwAR0-yBQ520vJn_IO_jmDkFqwhcvNOSXqhO3XhWymbN4RILv67pKdEjvBP8g

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.