Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன?

தென்பகுதியில் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பரை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தமை வரலாறு.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழில் பாதிப்படைந்துள்ளது.

89-3-2-1024x576.jpgமாவட்டத்தின் எல்லை கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்றி விவசாயம் செய்வதற்கான காணி வழங்க ஆட்சியிலுள்ள அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியோரின் உதவியுடன் பௌத்த தேரர் தலைமையில் குடியேற்றம் இடம்பெறுகிறது.

இவ்விரு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணி கிழக்கு மாகாண ஆளுநர் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் கோரியுள்ளார். இதில் ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கர் காணி அம்பாறை மாவட்டத்திற்கும் ஏனைய ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கரும் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணக்கம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் எடுத்து நீதிமன்ற நடவடிக்கையின் போது அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மேச்சல்தரை காணியை நோக்கி அத்துமீறிய படையெடுப்பi மேற்கொள்ளத் ஆரம்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் தெஹித்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குவான மகாவன்வெலா ஆரியவன்ச தலைமையிலான குழுவில் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் என கூறுகின்றார்.

இவர்கள் அம்பாறை மாவட்டத்தின் தெஹித்தகண்டி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்துவந்து மட்டக்களப்பு மாவட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுக்குள் அத்துமீறி குடியேற முற்படுவதனால், மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கையும் பாதிப்படைகிறது.

இப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை இப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அதுமாத்திரமல்ல, கிழக்கு மாகாண ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்ற முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுயதொழில் திட்டங்களை வெகுவாக பாதித்து, மொத்தத் தேசிய வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

500 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்துவரும் நிலையில், குடிநீர், போக்குவரது, காட்டுயானை தாக்கம் மற்றும் முறையான சந்தைவாய்ப்புயில்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களும் நிலங்களை அபகரிக்கும் போது பண்ணையாளர்களின் வாழ்வாதாரத் தொழில் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகிறது.

கடந்த 07.09.2020 அன்று மாவட்டச் செயலகத்தில் மகாவலி அதிகாரிகள் பண்ணையார்களையும், அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, 3025 ஹெக்டர் நிலப்பரப்பு மாத்திரம் பண்ணையார்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை பண்ணையார்கள் நிராகரித்தனர். எம்மிடம் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளதால் சுமார் பத்தாயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு வேண்டும் என அரசாங்க அதிபார் திருமதி பத்மராஜா ஊடாக கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையை நிர்ணயம் செய்து வெளிமாவட்டங்களில் இருந்துவருகைதருபவர்களை தடுக்கும் நோக்கில் கடந்த 14.09.2020 அன்று எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் அம்மணி அனுராதா யகம்பத் திடீரென சோளம் செய்கைத் திட்டத்தை அறிவித்து அதனுடாக சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான பாரிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய 30.09.2020 அன்று கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பெரேரா அவர்களை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எல்லைப்பகுதியில் அப்பாவி தமிழ் சிங்கள மக்களை மோதவிடும் நடவடிக்கையில் அரசியல் சக்திகள் செயற்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புத் தொடர்பாக அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://thinakkural.lk/article/78390

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கு கிழக்கு மாகாணம் பற்றி முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களிலும் தவறாமல் வந்து அரசுக்கும், அரசின் பினாமிகளுக்கும்  முண்டுகொடுத்து , திரும்பத் திரும்ப ஒரே கீறல் விழுந்த தட்டினைப்போல் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்று நியாயம்பேசும் சிலர் இந்த ஆக்கிரமிப்புப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இதுகூட அவர்கள் பேசும் அபிவிருத்தியின் ஒரு அங்கமோ? 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாயாவின் ஆட்சியில், தமிழர்களின் நிலங்களில் அதிகரிக்கும் சிங்கள குடியேற்றங்கள்!

1-30-696x435.jpg
 29 Views

புதிய ஆட்சி வந்ததன் பின்னர் பெரும்பான்மையின சமூகத்தினர் சட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு குடியேற்றுகின்ற, குடியேறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஞா.சிறிநேசன், இவர்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு நிலைமை காணப்படுகின்றது கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஞா.சிறிநேசன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் கடக்கப் போகின்றது. அதேபோல சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சிபீடமேறி இரண்டு மாதங்கள் கடந்துள்ளது. இந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசுகின்ற மக்கள் அனுபவிக்கின்ற சில கஷ்ட நஷ்டங்கள் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக மயிலத்தமடு,மாதவனை ஆகிய பிரதேசங்கள், எங்களுடைய பண்ணையாளர்கள் காலகாலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திவந்தவையாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் தற்போது திட்டமிட்ட அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

தெஹியத்த கண்டியவைச் சேர்ந்த தேரரொருவரின் தலைமையிலும் உள்ளுர் அரசியல்வாதிகளின் வழிகாட்டலுடனும் மீண்டும் குடியேற்றங்கள் நடப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. காடழிப்பு நடைபெற்றிருக்கின்றது. மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட பிரதேசம் எனக்கூறப்படுகின்ற பிரதேசங்களில் காடழிப்பு நடைபெற்று  பெரியமரங்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த விடயம் சம்பந்தமாக சட்டத்தை நிலைநாட்டவேண்டியவர்களது கருத்துக்கள், அங்கு செல்லுபடியாகுவதாகத் தெரியவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில்கூட அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குடியேறியிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினைகள் எதுவுமின்றி உரிய அதிகாரசபையோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றுகின்ற செயற்பாடுகள் மிகவும் துல்லியமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது.

ஆனால் அந்தக்காலம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்காலமாக அமைந்திருந்தது. தற்போது புதிய ஆட்சி வந்ததன் பின்னர் பெரும்பான்மையின சமூகத்தினர் சட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு குடியேற்றுகின்ற, குடியேறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிலுக்கின்றார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு நிலைமை காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கோட்டபாயாவின்-ஆட்சியில்/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அத்துமீறி காணி அபகரிப்பு- கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றம்

 
TNA-Batti-696x367.jpg
 38 Views

மட்டக்களப்பு மயிலந்தனமடு-மாதவனை பகுதியில் கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணிகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், புத்தபிக்குகள் சிலரும் அத்துமீறி அபகரிப்பதை தடுப்பதற்கான தீர்மானங்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திட்டமிட்ட காணி அபகரிப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமிக்க கலந்துரையாடலானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்.செல்வராசா தலைமையில்  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், த.கனகசபை, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் பொ.செல்லத்துரை, ஓய்வுநிலை அரசாங்க அதிபர் மா உதயகுமார், ஓய்வுநிலை மாவட்ட காணி ஆணையாளர், க.குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் காணி அபகரிப்பு தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

இதன்படி காணி அபகரிப்பு தொடர்பில் ஐந்து கட்டங்களாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முதலாவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மற்றும் காணி தொடர்பாக விடங்களை கையாளும் மேலதிக அரச அதிபர் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய சந்திப்பு ஒன்றை ஏற்படுத்துதல்.

இரண்டாவதாக கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தி உடனடியாக மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி பயிர்ச்செய்கை செய்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.

மூன்றாவதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளல்.

நான்காவதாக பண்ணையாளர்கள் மற்றும் காலநடை வளர்ப்பாளர்களுடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துதல்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்வதுடன் இந்த நான்கு விடயங்களுக்கும் சாதகமான பதில்கள் கிடைக்காதுவிடின், ஐந்தாவதாக உச்ச நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அதற்கான சகல ஆவனங்களையும் உடன் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக அடுத்த கூட்டங்களில் ஆராய்வது எனவும் இக் கூட்டமானது நிறைவுறுத்தப்பட்டது.

https://www.ilakku.org/மட்டக்களப்பில்-அத்துமீற/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென்னமரவாடியில் தேரரால் 358 ஏக்கர் அபகரிப்பு!

IMG_5351-960x640.jpg?189db0&189db0

 

திருகோணமலையில் தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 24ம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை கற்கள் இடப்பட்டு வருவதை அறிந்து அப்பகுதிக்கு சென்ற தென்னமரவடி மக்கள் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அரிசிமலை பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் பிரதேசமாக அடையாள படுத்தபட்டு எல்லை கற்கள் இடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/தென்னமரவாடியில்-தேரரலால/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று சிலர் புனிதர்களாக பிதற்றுகின்றனர் – இந்திரகுமார்

 

 

DSCN2262-960x720.jpg?189db0&189db0

2009 தொடக்கம் 2015 வரை அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு தற்போது பலர் புனிதர் போல் பேசுகின்றனர். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தை மிக முக்கியமாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டது. ஆனால், நாங்கள் அதனைத் தம்பட்டம் அடிக்கவில்லை, சலசலப்பில்லாமல் செய்து முடித்தோம். தற்போதைய ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதும் அது மீண்டும் தலைதூக்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

மாதவணை, மயிலத்தடு மேய்ச்சற்தரை அயல் மாவட்டத்தவர்களால் அத்துமீறி கைப்பற்றப்படுகின்றமை தொடர்பில் இன்று (12) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பேசுபொருளாக அமைந்துள்ள எமது மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் பாரம்பரிய மேய்ச்சற்தரையான மாதவணை, மயிலத்தமடு பிரச்சினை தொடர்பில் பலரும் பலவாறு கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். சிலர் அதன் வரலாறுகள் தெரியாமல் பிதற்றுகின்றனர்.

எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மீட்கப் புறப்பட்டவர்கள் பதவிகளையும், பவுசுகளையும் வகித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே எமது இப்பிரதேசத்தில் முதன் முதலில் ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே இவ்வாக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததாக நாங்கள் யாரும் சொல்லவில்லை. அங்கு வந்து குடியேறிய சிங்கள மக்களே தெரிவித்த காணொளிகளில் தான் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 2015ம் ஆண்டுக்கு முன்னர் அவர்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இருந்ததில்லை எனவும் அந்த அத்துமீறிய குடியேற்றக் காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தின் ஆக்கிரமிப்பு வரலாறு தெரியாமல் அவர் ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெற்றதாக அவர் தெரிவிக்கின்றார். மீண்டும் ஆக்கிரமிப்பு என்றால் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது எப்போது என்று கூறவேண்டும். ஆனால் அதனைக் கூறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வாயாலேயே அவர்களின் காலத்தில் தான் என்று கூறமுடியாது தானே அதுதான் காரணம்.

2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட இந்த ஆக்கிரமிப்பு 2015ம் ஆண்டு நல்லாட்சி காலம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை ஆட்சியில் பங்காளியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் இவ்விடயத்தை மிக முக்கியமாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டோம். ஆனால், நாங்கள் அதனைத் தம்பட்டம் அடிக்கவில்லை. சலசலப்பில்லாமல் செய்து முடித்தோம். முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைசசர் கி.துரைராசசிங்கம் அவர்களின் தலைமையில் இச் செயற்திட்டம் மிகக் கட்சிதமாக மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.

2015ன் பின் மாதவணை, மயிலத்தமடு அத்துமீறலை மிகப் பாரிய பிரயத்தனத்துடன் தடுத்து நிறுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. 2009 தொடக்கம் 2015 வரை இவ் அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு தற்போது பலர் புனிதர் போல் பேசுகின்றனர். அரச தரப்பில் இருக்கும் சிலரின் கருத்துக்கள் ஏதோ அவர்கள் 2015ன் பின்னர் தான் அரசியலுக்கு வந்தவர்கள் போலுள்ளது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அனைத்தையும் வாரி வழங்கிவிட்டு, அத்துமீறில்களை, காணி அபகரிப்புகள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்து விட்டு 2015ம் ஆண்டின் பின் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு முட்டுக் கொடுத்தமையால் தான் இவை இடம்பெற்றது என பொய்களையும், புனைகதைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்கின்ற விடயத்தையே அதற்கு முன்பிருந்தவர்கள் எவரும் அறியவில்லை. இது மாவட்ட அதிகாரத்திற்குள் வரும் விடயம் என்று தான் அனைவரும் நினைத்திருந்தார்கள். அவ்விடயத்தை ஆராய்ந்து உரிய இடங்களுக்குச் சென்று இறுதியில் மகாவலி அதிகார சபையின் மூலம் அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அவ்விதம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ச அவர்கள் பதவியேற்றதைத் தொடந்து இவ்வாக்கிரமிப்பு செயற்பாடுகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தன. பின்னர் தற்போது அது உக்கிரமடைந்த அத்துமீறலாக இடம்பெற்று வருகின்றது.

இந்நில ஆக்கிரமிப்பு விடயத்தில் இத்தனை செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் எதுவுமே அறியாதவர்கள் போன்று தற்போதைய அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கொண்டிருப்பவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பிதற்றல்களை நிறுத்தி எமது மாவட்டத்தின் சொத்தினை எமது மாவட்டத்தவர்களே பயன்படுத்த வேண்டும். அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது பாரம்பரியமாக எமது மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தும் பிரதேசம். அதுவும் காட்டு வளங்கள் அருகிக் கொண்டு வரும் இந்நிலையில் அவ்வளத்தினையும் பாதுகாத்து அவர்கள் இந்நிலத்தை மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எவரும் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்க முடியாது.

கையாளாகாத அரசியல் வங்குரோத்து நிலைமையினை மறைக்க அனைத்து சேறுபூசல்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது திணித்து அவர்கள் மீட்பர்கள் என்ற பட்டத்தினைத் தக்க வைக்கப் பார்க்கின்றார்கள். இந்த வங்குரோத்து நிலைமைக்கு எதிர்வரும் காலங்களில் மக்கள் தகுந்த பாடங்களை வழங்குவார்கள். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்தது, முட்டுக் கொடுத்தது என்று சொல்லிச் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடுபவர்களின் இயலுமை தற்போது எமது மக்களுக்கு விளங்கிக் கொண்டு வருகின்றது.

தொல்லியல் பிரச்சினை, நில ஆக்கிரமிப்புகள், இராணுவ அடக்குமுறைகள் என்று எமது மக்கள் மீது அனைத்து விதமான அத்துமீறல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான பதிலையோ, தீர்வினையே இன்று அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பவர்கள் செய்யாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழியைச் சுமத்தி அரசியல் இலாபம் தேட நினைக்கின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் பொய்களை கேட்டு மக்கள் சற்று தளர்ந்துள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதுவே தொடர்ந்தும் இடம்பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றர்கள். இந்தநினைப்பு வெகு காலத்திற்கு நிலைக்காது” என்று தெரிவித்தார். (150)

https://newuthayan.com/இன்று-சிலர்-புனிதர்களாக/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சூடு பிடிக்கும் மேய்ச்சல் தரை விவகாரம்- அரசாங்க அதிபர் மாற்றம்! யார் காரணம்?

 
IMG_0142-696x522.jpg
 71 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம் பெற்ற அரசியல் பழிவாங்கள்கள் கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் தொடர்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிலர் கிழக்கு மாகாண ஆளுநரின் உதவியுடன் அபகரித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்ததன் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அரசாங்க அதிபராக கருணாகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படும் அரசாங்க அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றப்படுவதும் அதனை மாவட்ட அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்ப்பதும் மாவட்ட அரச நிர்வாகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாறி மாறி வரும் அரசாங்கங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடயத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது பக்கச்சார்பாக அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு ஒரு அதிகார வர்க்கத்தை திருப்திப் படுத்துவதற்காக அரசாங்க அதிபர் பதவிகளை பாவிப்பதற்கு முற்படுகின்றனர்.

இது கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி என தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் தொடர்கிறது என்பதே உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊழல் அதிகாரிகள் 15 வருடங்களுக்கு மேல் அரசியல் வாதிகளின் ஆதரவோடு தொடர்ந்து இதே மாவட்டத்தில் பணியாற்றும் போது புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டு ஒருவருடங்கள் கூட ஆகாத நிலையில் திடீரென அரசாங்க அதிபரை பணி இடைநீக்கம் செய்ய காரணம் என்ன? அவ்வாறு அவசரமா பணி இடைநீக்கம் யாருக்காக செய்யப்பட்டது என்ற கேள்விகள் எழுகிறது. இதன் பின்னால் உள்ள அரசியல் காரணிகள் என்ன? என்பதை பொது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான இடமாற்றங்களை அனுமதிக்க முடியாது அனுமதிக்கவும் கூடாது.

சட்டவிரோத சிங்கள குடியேற்றம் ஒன்றை தடுத்ததற்காகவும் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மண் அனுமதி பத்திரம் வழங்க மறுத்ததற்காகவும் ஒரு அரசாங்க அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த போக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நல்லதல்ல.

மக்களுக்காக பணியாற்றுவதற்கே ஒரு அரசாங்க அதிபர் தேவை அரசியல் வாதிகளுக்கும் மண் மாபியாக்களுக்கும், காணி மாபியாக்களுக்கும் பணியாற்றுவதற்காக இந்த மாவட்டத்தில் பல அரசாங்க அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை செய்யாத அரசாங்க அதிபர்கள் பழிவாங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடப்பதும் அது தான். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வது கவலைக்குறியது.

எந்தவொருஅரச உயர் அதிகாரிகளின் நியமனமும், இடமாற்றமும் அரசாங்க நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறவேண்டுமே தவிர அரசியல் தலையீடுகள் காரணமாக ஒரு அரச உயர் அதிகாரி மாற்றம் செய்யப்படுவதை யாரும் இனி வரும் காலங்களில் அனுமதிக்க கூடாது.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்ய கொடுக்க முடியாது என தற்போதைய அரசாங்க அதிபர் கூறியமை, அதனால் ஆத்திரமடைந்த கிழக்கு மாகாண ஆளுநர், வயல் காணிகள் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு மண் அனுமதி பத்திரம் வழங்க முடியாது என கூறி தற்காலிகமாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதை நிறுத்தியமை, மாவட்டத்தில் அரச காணிகளை அபகரிக்கும் மாபியாக்களுக்கு உதவி செய்யயாமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://www.ilakku.org/சூடு-பிடிக்கும்-மேய்ச்சல/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நில அபகரிப்பு- மட்டக்களப்பில் போராட்டம்!

 
IMG_4783-696x392.jpg
 23 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்த, ஜனாதிபதியை தலையிட வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மக்கள் தேசிய கட்சி மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

IMG_4764.jpg

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை காணிகளை அபகரிக்காதீர்கள்,எங்கள் மேய்ச்சல் தரை நிலம் எங்களுக்கு வேண்டும்,பிரதமரே மாடுகள் உணவு உண்டுவாழ வழியேற்படுத்துங்கள் போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் இலங்கை மக்கள் தேசிய கட்சி செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,கால்நடை வளர்ப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_4757.jpg

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மயிலத்தமடு,மாதவனை உட்பட மேய்ச்சல் தரை பகுதியில் இருந்து காணி அபகரிப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

IMG_4813.jpg

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும் இன்று தங்களை அங்குவரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

https://www.ilakku.org/நில-அபகரிப்பு-மட்டக்களப/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டு மேய்ச்சல் தரை விவகாரம்; அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் அவசர கூட்டம்

 
sa-0.png
 4 Views

கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது.

இந்த கூட்டத்திற்கு மட்டக்களப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் , பா.உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக மங்களேஸ்வரி சங்கர், கட்சியின் பொதுச்செயலாலர் பிரசாந்தன் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சனைகளை ஆராய்வதற்கான குழுவில் பாராளூமன்ற உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் சாணக்கியன் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாலர் பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அடங்கலாக அதிகாரிகள், பண்ணையார்கள், சிவில் சமூக பிரதிநிதி என பலரையும் உள்ளீர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் நவம்பர் 2 ஆம் திகதி குறித்த பிரதேசத்திற்கு களவிஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.இதன் போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

https://www.ilakku.org/மட்டு-மேய்ச்சல்-தரை-விவக/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மேச்சல் தரை விவகாரம்- பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை

October 25, 2020
IMG-20201023-WA0041-696x522.jpg

20 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயித்தமடு,மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை,  பெரும்பான்மை  இனத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராய, குழு ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஒழுங்கமைப்பில்,அமைச்சர் சாமல் ராஜபக்ச தலைமையில்  மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மாதவன மயித்தமடு  பகுதியில்  கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையில் பெரும்பாண்மை இனத்து மக்கள் மேற்க்கொள்ளும் சோளன் பயிற் செய்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

02.jpg

அதே நேரம் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாரை தெய்யத்த கண்டியை சேர்ந் சோளன் பயிர் செய்கைக்கு பொறுப்பாக உள்ள விவசாய சங்கத்தின் தலைவர் லியனகே தாங்கள் நெடுங்காலமாக இவ்விடத்தில் வாழ்து வருவதாகவும்  அதற்கான பிறப்பு சான்றுதல்கள் வாழ்விடப் பதிவு என்பவற்றை  சமர்ப்பித்தார். ஆனால் 2011 ஆண்டு வரையப்பட்ட நில அளவை படத்தின் ஆதாரத்தை மேற்க்கோள் காட்டி லியனகே முன்வைத்த ஆதாரங்கள் பொய் என நிறுவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணியும் அபிவிருத்தி குழு செயலாளருமான  மங்களா சங்கர் 2015ஆம் ஆண்டு அமைச்சரவையில்  எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேய்ச்சல் தரையை வர்த்த மாணி அறிவித்தல் செய்யப்படவில்லை என விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து, மேற்க்கொண்டு புதிதாக இனி மேல் சோளன் பயிர் செய்கைக்கு யாரையும் சேர்த்து கொள்ள வேண்டாம் என ஆளுனருக்கு  உத்தரவிட்டார் அமைச்சர் சமல் ராஜபக்ஸ.

மேலும் இந்த  கூட்டத்தில் வேலி அமைத்து மாடுகளை மேய்க்க கேட்டுக்கொள்ளப்பட்டதிற்கு, கால் நடை உரிமையாளர்களினால் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து இராஜங்க அமைச்சர் ச. வியாழேந்திரன்,  

1.உடனடியாக சோளன் பயிர்ச் செய்கையை நிறுத்துவது.  

2.இப் பிரச்சனையை ஆராய்வதற்க்கென குழு ஒன்றை அமைப்பது என்று முன் வைத்த ஆலோசனை ஏக மனதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வெளிக்கந்தை மகாவெளி அலுவலகத்தில்  மேச்சல் தரை விவகாரம் குறித்து ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிக்கு அப்பால்  தமிழர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த பண்ணையாளர்களின் விவகாரத்தில் செயற்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/மட்டக்களப்பு-மேச்சல்-தரை/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேச்சல் தரை விவகாரம்- பொலிஸார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு

 
IMG_7551-696x392.jpg
 41 Views

மேச்சல் தரைகளில் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை விதிக்கும் நோக்கில்,  பொலிசார் பொய்யான வழக்குகளை போடுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரை காணிகளாக பயன் படுத்திய  நிலங்களில், தங்களது மாடுகளை நீண்ட காலமாக மேய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலான மேய்ச்சல் தரை பகுதிகளுக்கு நேரடியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சந்தித்து கலந்துரையாடிய பண்ணையாளர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலானை பகுதிக்கு மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டு சென்று வருவதாக கூறும் அவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை செய்யப்படும் காலத்தில் மூன்று மாத காலத்திற்கு மட்டுமே தமது மாடுகளை மேய்ப்பதற்கு அம்பாறை திம்புலான பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு கொண்டு சென்று மேய்ப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், தற்போது வந்த புதிய ஆட்சியில் மீண்டும் இந்த பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு வரக் கூடாது என்றும் இந்த பகுதியில் உள்ள பொலிசார், வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தி வழக்கு தாக்கல் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக் குறித்து மேலும் அவர்கள் கூறுகையில்,

“இன்று வரை இருபதுக்கு மேற்பட்ட வழக்குகளை தாக்குதல் செய்துள்ளனர். இதில் எங்கள் மீது பல பொய்யான வழக்குகளை போடுகிறார்கள். வடிசாராயம் காய்ச்சிய வழக்குகளை கூட எம் மீது போடுகிறார்கள். ஒரு வழக்கிற்கு 20,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கின்றனர். பண்ணையாளர்கள் தங்களது பண்ணையாளர் அடையாள அட்டையை காட்டியும் அதனை தூக்கி எறிந்து கைது செய்கின்றனர்.

சிலர் எங்களது மாடுகளை கட்டிவைத்து அளவுக்கு அதிகமாக பணத்தை கோருகின்றனர் இதனால் எமது பண்ணையாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மயிலத்த மடு மாதவனை பகுதிகளில் சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்ய அந்த பகுதி பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இந்த பகுதியில் எங்களது மாடுகளை மேய்ப்பதற்கு சிங்கள அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைகளை கேட்டறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன். நேரடியாக அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டி மட்டக்களப்பு அம்பாறை அதிகாரிகள் மட்டத்தில் ஒரு முடிவு வரும் வரை பண்ணையாளர்கள் மீது வழக்கு போடும் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.ilakku.org/மேச்சல்-தரை-விவகாரம்-பொல/

Link to post
Share on other sites

வியாழேந்திரன், முரளிதரன் ஆகியோர் இது பற்றி ஏதும் பறைஞ்சவையளோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வியாழேந்திரன், முரளிதரன் ஆகியோர் இது பற்றி ஏதும் பறைஞ்சவையளோ?

ஆரது 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 01:27, ரஞ்சித் said:

இங்கு கிழக்கு மாகாணம் பற்றி முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களிலும் தவறாமல் வந்து அரசுக்கும், அரசின் பினாமிகளுக்கும்  முண்டுகொடுத்து , திரும்பத் திரும்ப ஒரே கீறல் விழுந்த தட்டினைப்போல் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்று நியாயம்பேசும் சிலர் இந்த ஆக்கிரமிப்புப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இதுகூட அவர்கள் பேசும் அபிவிருத்தியின் ஒரு அங்கமோ? 

வெள்ளம் வர முன்னர்தான் அணை பற்றி யோசிக்கலாம் 
வெள்ளம் வந்த பின்பு வெள்ளத்துடன் எவ்வாறு போராடி இருப்பதை 
மீட்பது என்று சிந்திப்பதே பலன் தரும் இல்லாதுபோனால் வெள்ளத்தில் 
எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும்.

இலங்கையின் எதிர்காலத்தை பொருளாதர மற்றும் பிராந்திய அரசியல் 
ஊடாக பார்த்தால் சிங்கள மக்கள் தமிழர் நிலப்பரப்புக்குள் குடியேறுவது இனி தடுக்க 
முடியாதது இன்னுமொரு 20 வருடத்தில் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் அனைவருமே 
மெது மெதுவாக கொழும்பை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் விலைவாசி என்பது 
அப்போது வானை தொடுமளவுக்கு ஏறியிருக்கும் அதை இலங்கையில் ஊதியம் பெறுபவர்களால் 
முகம் கொடுக்க முடியாது. 

இந்த குடியேறும் சிங்கள மக்களை இனி எதிரிகளாக பார்த்து பகைத்தால்போல 
இது நின்றுவிட போவதில்லை இது அனைத்தும் அரசு திட்டமிடலுடன் நடப்பதால் 
உள்ளூரில் யாருக்கும் தடுக்கும் உரிமையோ சக்தியோ இல்லை.

ஆனால் இதை தடுக்கும் சக்தி புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு  
உள்ளூர் மக்களுடன் இவர்களை ஒன்றிணைத்து தமிழர்கள் கலாச்சாரம்  
உயர் கல்வி  மேம்பட்ட பொருளாதாரம் வேலை வாய்ப்பு போன்றவற்றுடன் 
மெதுவாக உள் இழுத்து இவர்களை எங்களால் தமிழர்கள் ஆக்க முடியும் 
புத்த மதம் தொடரும் ... குறைந்த படசம் தமிழ் பௌத்தர்கள் ஆக்க முடியும். 

"சகோரத்துவம்"
என்ற மாஜிக்கல் வார்த்தை ஊடாக இதை சாதிக்க முடியும் 

"எதிரியை எதிரி எதிர்பார்க்கும் இடத்தில் வைத்து எதிர்பார்க்காத விதத்தில் 
எதிர்பார்க்காத நேரத்தில் அடிக்க வேண்டும்  அதுதான் வெற்றி தரும்"
                                                                                              தலைவர் பிரபாகரன்  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டு மேய்ச்சல் தரை குறித்த நேற்றைய கூட்டம் ரத்து; நேரில் சென்ற கஜேந்திரன் ஏமாற்றம்

01-8-696x392.jpg
 15 Views

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக நேற்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரiதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் சாமல் ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இ கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். சிவஞாகம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், ரெலோ அமைப்பைச் சேர்ந்த கருணாகரன், செல்வன் அடைக்கலம்நாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் மேச்சல் தரை பகுதியில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதனையும் குறித்த காணிகளில் சிங்கள மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதனையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி கோரிக்கை தொடர்பில் தற்காலிக இணைக்கம் ஏற்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த குழுவானது நேற்று திங்கட்கிழமை வெலிக்கந்தையில் உள்ள மாகவலி பிராந்திய அலுவலகத்தில் சந்தித்து குறித்த விடயம் பற்றி விரிவாக கலந்துரையாடிய பின்னர் குறித்த காணி அமைந்துள்ள மயிலத்தமடு பகுதிக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் இளைஞர் அணிச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்த்தர்களுடன் குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற பின்னர்தான் குறித்த கூட்டம் கொறோனோ நெருக்கடி காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

புதிய திகதி பின்னர் அறிவிக்கபடுமென குறித்த அலுவலத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/மட்டு-மேய்ச்சல்-தரை-குறி/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஆளுநரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது- கருணாகரன்

 
1-1.jpeg
 33 Views

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை விடுத்து ஆளுநர் எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ தலைமையிலான குழு  ஒன்று அமைக்கப்பட்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயற்பாட்டுக்கு எதிராக மட்டக்களப்பு ஆளுநர் தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கருத்து தெரிவிக்கையில்,

“மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பிரச்சனை பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளதுடன் பேசும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச செயலப் பிரிவின் கீழ் உள்ள மயிலத்தனை மாதனை மேச்சல்தரை பிரதேசத்துக்குள் திட்டமிட்டு அயல் மாவட்ட சிங்கள மக்களை கொண்டுவந்து சேனைப் பயிர் செய்கை என்ற பேர்வையிலே ஒரு குடியேற்ற நிகழ்வை நிகழ்த்திக் கொள்வது வேதனைக்குரிய விடயமாகும்.

கடந்த 21 ம் திகதி ஒக்டோபர் மாதம் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திலே நானும் எனது சக நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்து கலந்துரையாடலின் அடிப்படையில் 23 ம் திகதி சமல் ராஜபக்ஷவின் அலுவலகத்தில் வடக்கு கிழக்கைச் சோந்த கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொது ஜன பெரமுனை 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொலநறுவையைச் சேர்ந்த மகாவலி அதிகாரசபையின் இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர், செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடியதன் நிமிர்த்தம் இந்த மயிலத்தனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு காணப்படமுடியாத இடத்தில் இந்த மாதம் 2ம் திகதி வெலிகந்தை மகாவலி காரியாலயத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடாத்துவதாகவும் அந்த குழுவிலே 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் 3 பொதுஜன பொரமுனை உறுப்பினர்களும் பொலநறுவை மாவட்டத்தில் இராஜங்க அமைச்சர் சிறிபால சம்பத், அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏறாவூர்பற்று கிரான் பிரதேச செயலாளர்கள் மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் உட்பட ஒரு குழுவை அமைத்து பிரச்சனைக்குரிய மயிலத்தனை மடு பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அந்த குழு ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டும் என்ற ரீதியிலே அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வகையில் நாட்டில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என அறிய கிடைத்தது.

இருந்தும் கடந்த மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அதன் பின்னர் 30ம் திகதி ஊடகங்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை சேனைப்பயிர் செய்கைக்காக கொடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையிலே நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரனாக அமைச்சரினால் ஏற்படுத்தப்பட்ட குழு 2ம் திகதி கூடுவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாக அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பதானது வேதனைக்குரிய விடயம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி கூறியிருக்கும் இந்த வேளையில் சம்மந்தப்பட்ட அமைச்சரினால் கூட்டப்பட கூட்டத்தையும் அவரினால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த குழுவையும் உதாசீனம் செய்து அமைச்சரையும் அந்த குழுவையும் அவமதித்து ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த அடிப்படையில் நேற்று உடனடியாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத், மகாவலி அதிகாரசபை ஜெனரல் ஆகியோருக்கு இந்த பிரச்சனைக்கு சம்மந்தப்பட் அமைச்சார் சமல் ராஜபக்ஷ தலையிட்டு அவரினால் உருவாக்கப்பட குழு மீண்டும் கூடி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்வரை அந்த பிரதேசத்தில் நடைபெறும் சேனைப்பயிர் செய்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு நான் வேண்டி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனவே அமைச்சர் சமல் ராஜபக்ஷ முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

 

https://www.ilakku.org/மேய்ச்சல்-தரை-விவகாரத்தி/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

November 7, 2020
PL_01012020_SPP_CMY-1.jpg

 

கிழக்கு மாகாணத்தின் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சுட்டிக் காட்டினாலும், பல பிரச்சினைகள் தொடர்ச்சியாக முளைவிடும் நிலையிலேயே இருந்து வருகின்றன.

குறிப்பாக கிழக்கில் காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களப் பிரச்சினையென பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது.

கிழக்கில் தமிழ் மக்களுக்கு எழும் பிரச்சினைகளை நாங்கள் பேசிவிட்டு கடந்து செல்லும் நிலையே தொடர்ச்சியாக இருந்து வருகின்றதே தவிர, அதற்கான எவ்வாறான தீர்வினை வழங்கலாம் என்பதை கண்டுபிடித்து வழங்குவதற்கு நாம் தவறுகின்றோம்.

குறிப்பாக வடகிழக்கில் தமிழர்களின் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுவதாக நாங்கள் பலகாலமாக குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால் எமது தாயகப் பகுதிகளை பாதுகாப்பதற்கு நாங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

இன்று புலம்பெயர்ந்துள்ள மக்கள், வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதி சிங்களவர்களினால் அபகரிக்கப்படுகின்றது, வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இக்குற்றச்சாட்டினை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால் அக்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அவற்றினை தடுப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பாரிய கடமையாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் பறிக்கப்படுவதற்கு வெறுமனே பேரினவாதத்தினை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இதனை யாரும் ஏற்றுக்கொண்டாலும்சரி, ஏற்றுக்கொள்ளா விட்டாலும்சரி இதுதான் உண்மை.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்ட காணிகள், இன்று சிங்களவர்களினால் மிகவும் இலகுவாக பிடிக்கப்பட்டு, அங்கு சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்ததிற்கு முன்பாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் செறிவாக இருந்த தமிழர்கள், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் செறிவாக வாழும் நிலையுள்ளது.

குறிப்பாக, தமிழர்கள் வாழும் நிலங்கள் வளம் மிக்கதாக காணப்பட்டதன் காரணமாக, அவை திட்டமிடப்பட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புக்கள் என்பது விவசாய செய்கை, தோட்டச் செய்கை, சேனைப் பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவலி அபிவிருத்தி, மதுறு ஓயா அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழர்களின் சரியான நகர்வுகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் அசண்டையீனம், அக்கறையின்மை போன்றவையும் இதற்கு காரணமாக கொள்ள முடியும்.

கடந்தக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அங்குள்ள காணிகளை பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும்; புலம்பெயர்ந்துள்ள மக்கள் எல்லைப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவ்வாறான எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் நடைபெற்றதை காண முடியவில்லை. அதற்கு அக்கறை செலுத்தும் நிலைமை உருவாகக்கூடவில்லையென்பதே கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலந்தனை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் சிங்களவர்களினால் காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். 2010ஆம் ஆண்டு தொடக்கம் சிங்களவர்களின் அத்துமீறல்கள் இப்பகுதியில் இருந்தபோதிலும், இங்குள்ள காணிகளை பாதுகாப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

01-4.jpg

குறிப்பாக குறித்த பகுதி வளமான பகுதியாகும். அது மேய்ச்சல் தரைக்கு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டபோதிலும், அவற்றிற்கான உரிமமோ அதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களோ இல்லை. குறித்த பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மேய்க்கப்படுகின்றன. ஆனால் அங்கு பால் பதனிடும் தொழிற்சாலை அமைத்து, அங்கு பெறப்படும் பாலை மூலப்பொருளாக கொண்டு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான ஏது நிலைகள் உள்ள போதிலும் அதனை மேற்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை.

அல்லது அங்குள்ள காணிகளைப் பெற்று கால்நடை வளர்ப்புடன், உப பயிர்ச் செய்கை அல்லது வேறு உற்பத்திகளை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ள போதிலும், அவற்றினை முன்னெடுப்பதற்கான முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள சிங்களவர்களை அரசாங்கம் பயன்படுத்தி, அங்கு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது திட்டமிடப்பட்ட வகையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

இதே போன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் காணப்படுகின்றன. இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காடுகள் சார்ந்த பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பகுதிகள் அபகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

IMG_0109.jpg

இவ்வாறுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், எல்லைப் பகுதிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் அரசுகளினால் மிகவும் சூட்சுமமான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமது கால்நடைகளை தமது பகுதிக்குள் வளர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எமது நிலங்களை நாங்கள் பாதுகாக்கத் தவறியதேயாகும். எல்லைப் பகுதியில் உள்ள காணிகளை குறைந்தது நீண்டகால குத்தகை அடிப்படையிலாவது கொள்வனவு செய்து, அவற்றினை விவசாய செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும்போது, அந்த காணிகளை பாதுகாக்க முடியும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பாலான தமிழர்கள் அங்கு இல்லை. அம்பாறை நகரில் இருந்த தமிழர்களும் தற்போது அங்கு இல்லை. எல்லைப் பகுதிகள் முற்றாக பறிபோய் விட்டன. அதன் காரணமாகவே அந்த மாவட்டங்களில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகும் நிலையேற்பட்டுள்ளது.

IMG_0105-1.jpg

இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களால் தமிழர்களின் வளங்கள் பெருமளவில் சுரண்டப்பட்டு விட்டன. அந்த வளங்கள் சுரண்டப்பட்டு செல்வதற்கு எமது சரியான திட்டமிடல் இல்லாமையும் காரணமாக அமைந்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இன்று அக்கரைப்பற்று தொடக்கம் பொத்துவில் வரையான பகுதியிலேயே தமிழர்களின் காணி வளம் ஒரளவு இருக்கின்றது. அவற்றினையும் நாங்கள் சரியான திட்டமிடல் மூலம் பாதுகாக்க தவறுவோமானால் அதனையும் இழக்கும் நிலையேற்படும்.

இதேபோன்ற நிலைமைதான் இன்று திருகோணமலை மாவட்டத்திலும் இருக்கின்றது. அங்கு வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளும், இன்று சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால், இன்று திருகோணமலை மாவட்டம் முழுமையாக  சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

அம்பாறை – திருகோணமலை மாவட்டங்களுக்கு ஏற்பட்ட நிலைமை, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினை நாங்கள் கட்டுப்படுத்தி, எமது தாயகப் பகுதியின் இதயப் பகுதியை பாதுகாக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் சிறந்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்பு  ஒன்றினை உருவாக்க வேண்டும்.

அந்தக் கட்டமைப்பானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசியத்துடன் செயற்படும் சிவில் சமூக பிரதிநிதிகள், நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசிய அரசியலில் உள்ள அரசியல்வாதிகள் ஆகியோர் இணைக்கப்பட்டு, இந்த குழு அமைக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக பிரதேசங்களில் உள்ள வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக காணிகளை பாதுகாக்க முடியும் என்பதுடன்; பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் ஏற்படுத்தி. வேலையில்லா திண்டாட்டங்களை தமிழர் பகுதிகளில் குறைத்திடவும் வழியேற்படுத்தும்.

IMG_0142.jpg

இவற்றினை நாங்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தும்போதே எமது காணிகளையும், எமது வளங்களையும் பாதுகாக்க முடியும். மாறாக நாங்கள் எமது பகுதிகளை அபகரிக்கும்போது, வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு, காரசாரமான பதிவுகளை இடுவதன் மூலமோ புலம்பெயர் தேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்துதன் மூலமோ எமது காணிகளை பாதுகாக்க முடியாது.

இனிவரும் காலங்களிலாவது வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியவாதிகளும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் தேசியவாதிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

 

https://www.ilakku.org/எமது-தாயகப்-பகுதிகளை-பாத/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேச்சல் நில விவகாரம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 
IMG_1398-696x392.jpg
 70 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்பகுதியான மயிலந்தனை,மயிலத்தமடு பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுக்க மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜயம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியம்,கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் துஷித பி விஜயசிங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண வலியுறுத்தினார்.

குறிப்பாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை காரணமாக அங்கு கால்நடைவளர்ப்போர் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன் எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களிடையே வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதனை தொடர்ந்து மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோதமான முறையில் சிலர் காணிகளில் சோளன் செய்கை மேற்கொள்வதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் முரண்பாடுகள் இரு சமூகங்களுக்குள் ஏற்படும் நிலையுள்ளதாகவும் இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

2010ஆம் ஆண்டு தற்போதைய அபிவிருத்திக் குழுவின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராகயிருந்த சந்திரகாந்தனின் காலப்பகுதியிலேயே குறித்த பகுதி தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டு குறித்த பகுதியை கால்நடை மேய்ச்சல் காணியாக வர்த்தமானிப்படுத்த பரிந்துரைசெய்யப்பட்ட காணிக்குள்ளேயே தற்போது சேனைப்பயிர்ச்செய்கை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் சுட்டிக்காட்டினார்.

எனினும் குறித்த பகுதியில் தேசிய கொள்கைகளுக்கு அமைவாகவே சோளன் செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் முன்னெடுனக்கப் படுவதாகவும் இங்கு கிழக்கு மாகாண ஆளுனரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் கால்நடை வளர்ப்போர் மாடுகளை மேய்க்கும் இடங்களில் அத்துமீறி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இதனை ஒரு திட்டமிட்ட காணி அபகரிப்பு செயற்பாடகவும் சட்ட விரோத செயற்பாடாகவும் காணப்படுவதனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கையெடுக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதிகள் நடைபெற்ற போதிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரினால் எல்லைப்பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு 02ஆம் திகத கூட்டம் நடாத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

https://www.ilakku.org/மேச்சல்-நில-விவகாரம்-நடவ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல் தரை செய்திகளை வெளியிட்ட விவகாரம்- ஊடகவியலாளர் மீது தீவிர விசாரணை!

 
1-99-696x394.jpg
 43 Views
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை  பகுதி மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக  செய்திகளை வெளியிட்டதாகக் கூறி  ஊடகவியாலாளர் ஒருவர் பொலிஸாரின் கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினர் அபகரித்து வருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில்,  மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் நடைபெறும் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் அதன் ஊடாக பண்ணையாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் இன்று பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 

இன்று மதியம் அவரது வீட்டிற்கு  சென்ற நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு ஊடகவியலாளர் நிலாந்தனை சுமார் ஒன்றரை மணித்தியாலம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்து அவரது கையொப்பத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

எந்த வித முன் அறிவித்தலோ அல்லது எழுத்து மூல அழைப்பாணையோ வழங்காது திடீரென அவரது வீட்டிற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் வீட்டுக்குள் நுளைந்து விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

இது குறித்து தெரியவருவதாவது,
 
“மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக  செய்திகளை வெளியிட்டதாகக் கூறி இன்று மதியம் எனது வீட்டிற்கு வருகை தந்த நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு, என்னை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் எனது வாக்குமூலத்தை பதிவு செய்து சென்றனர்.
 
திடீரென எனது வீட்டிற்குள் நுளைந்த பொலிசார் மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்கள் விபரம் அங்கு செய்திகளை சேகரித்து எந்த எந்த மீடியாக்களுக்கு அனுப்புகிறீர்கள். மீனகம் இணையத்தளத்திற்கு நீங்கள் செய்தி அனுப்புகிறீர்களா? நீங்கள் எந்தெந்த மீடியா செய்கிறீர் உள்ளிட்ட பல தகவல்களை பதிவு செய்து சென்றனர்.
 
ஏன் எனது வீட்டிற்கு திடிரென பொலிசார் வந்தார்கள்? யார் கொடுத்த முறைப்பாட்டிற்காக என்னை விசாரணை செய்தார்கள்? ஏன் வீட்டிற்கு பொலிஸ் வாகனத்தில் வந்து எனது குடும்பத்தினர் அச்சப்படும் வகையில் விசாரணை செய்தனர் என்பது குறித்த எந்த தகவலம் தெரியவில்லை.”என விசாரணைக்கு உள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார் என  சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது.
 
நேற்றைய தினம் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஆளும் கட்சி அரசியல் வாதிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த காணொளி பல ஊடகங்களில் வெளியாகிய இருந்த நிலையில், இன்றை தினம் குறித்த செய்திகளை சம்பவ இடத்திற்கு சென்று சேகரித்த ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
ஊடகவியலாளர் நிலாந்தன் மீது இதற்கு முன்னரும் இலங்கை புலனாய்வு துறையினர், பொலிசார் பல்வேறுபட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவருடைய ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல் நில விவகாரம் – மாடுகளை சுட்டும், வெட்டியும் கொல்லும் பெரும்பான்மையினர்

 
IMG_0105-696x522.jpg
 10 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்aகளப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியது.

இந்த ஊடக சந்திப்பில்  மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.நிர்மலன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்க தலைவர் எஸ்.நிர்மலன்,

“மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் படும் துயரங்களை நாங்கள் பல தரப்பின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான தீர்வும் இதுவரையில் கிடைக்கவில்லை.

29-10-2020அன்று கிழக்கு மாகாண ஆளுனர் எமது பகுதிக்கு வருகைதந்து எமது பகுதிகளை பார்வையிட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையினையும் பார்வையிட்டார்.

கடந்த 02ஆம் திகதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள், ஆனால் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.ஒரு தடைவ 500 ஏக்கர் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் அங்கு அவ்வாறில்லாமல் மாடுகள் வளர்க்கப்படும் இடங்கள் அனைத்தும் உழவு அடித்து பயிர்செய்கின்றார்கள்.அங்கு எங்களது மாடுகளுக்கும் எங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கின்றார்கள்.

ஒரு எருமை மாட்டினை உழவு இயந்திரத்தினால் அடித்து கொலை செய்தார்கள், நேற்று மாடுகளை வெட்டினார்கள். இரவு நேரங்களில் பண்ணையாளர்களின் வாடிகளுக்கு வந்து அச்சுறுத்துகின்றனர்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பொலிஸார் உட்பட அனைவருக்கும் அறிவித்திருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்று காலை கத்தி,கோடாரியுடன் வந்த சிலர் மூன்று நாட்களுக்குள் மாடுகளை எடுத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு செல்லுமாறு சிலர் மிரட்டினர்.நாங்கள் வேறு மாவட்டங்களுக்குள் மாடுகளை மேய்க்கவில்லை.நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள்ளேயே மாடுகளை மேய்க்கின்றோம். அதனை மட்டக்களப்புக்கு கொண்டு செல்லுங்கள் என்றால் நாங்கள் எங்கு கொண்டுசெல்வது,கச்சேரிக்குள்ளா கொண்டு மாடுகளை கட்டுவது.

நாங்கள் இந்த மாடுகளை நம்பியே சீவியம் நடத்துகின்றோம். அம்பாறை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அங்கு காணிகள் நிறைய உள்ளது. அதனைவிடுத்து நாங்கள் மாடு மேய்க்கும் பகுதிக்குள் வந்துதான் உழவு செய்து சோளம் செய்கை நெற்செய்கை முன்னெடுக்கின்றனர். இது தொடர்பில் அனைவரும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்ஸ,பிரதமரும் எங்களது பிரச்சினைகளை தீர்த்து தரவேண்டும். அப்பகுதியில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஆகிய மூன்று இனங்களை சேர்ந்தவர்களும் மாடுகளை வளர்க்கின்றனர். அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது எங்களுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அடிக்கடி மாடுகள் சுடப்படுகின்றது,வெட்டப்படுகின்றது.

இன்று இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் உள்ள வாடிகளில் தங்குவதற்கு அச்சமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை காணிகளில் எவ்வளவோ சட்டவிரோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதனை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. காடுகளை அழிக்கின்றார்கள்,மாடுகளை கொல்கின்றார்கள்,புதையல் தோண்டுகின்றார்கள்.

மகாவலியில் இருந்துவருகின்றோம் என்று எங்களை மிரட்டுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் இருந்துவருகின்றோம் இங்கிருந்து செல்லுங்கள் என்கின்றனர். நீங்கள் உங்கள் அடையாளத்தினை நிரூபியுங்கள் என்றால் அவர்களிடம் எதுவும் இல்லை.

மூன்று தினங்களுக்குள் மேய்ச்சல் தரை பகுதிகளில் உள்ள மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களினால் தாங்கள் மிரட்டப்படுகின்றோம்.

மேலும் நாங்கள் 991பண்ணையாளர்கள் இருக்கின்றோம். அவர்களை நம்பி 2500 உதவியாளர்கள் இருக்கின்றனர். ஒருநாளைக்கு நாங்கள் மட்டும் அரசாங்கத்தின் பால்கூட்டுத்தாபனமான மில்கோவுக்கு ஒரு நாளைக்கு 6000லீற்றர் பால் வழங்குகின்றோம்.

நெஸ்லே நிறுவனத்திற்கு 3000 லீற்றர் வழங்குகின்றோம்.500லீற்றர் தயிர் விற்பனை செய்கின்றவர்கள் கொள்வனவு செய்கின்றனர்.இவ்வாறான பல குடும்பங்கள் பண்ணையாளர்கள் வாழுகின்றனர்.இவர்களின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் எமது பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையில் எங்களது பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கு எங்களுக்கு யாரும் உதவாத நிலையில் ஊடகவியலாளர்கள் தான் எமது பிரச்சினையை கொண்டுசென்றனர்.காட்டுக்குள் இருக்கும் எங்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டுவந்தனர்.இன்று அவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பாதுகாப்பு தரப்பினர் இருந்து அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளோம் ஆனால் அது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தாத நிலையே இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

https://www.ilakku.org/மேய்ச்சல்-நில-விவகாரம்-ம/

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல் நில விவகாரம் – முறைப்பாடுகளை பொலிஸார் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு

PL_01012020_SPP_CMY-1.jpg
 60 Views

மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள்,  தினமும் கால்நடை வளர்ப்பாளர்களை அச்சுறுத்திவருவதாக தெரிவிக்கும் பண்ணையாளர்கள், பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் கவனம் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது.

 இதில்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அரசார்பற்ற ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.பாரதிதாசன், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் கால்நடை பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்த போது,

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணிகள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அத்துமீறி பயிர்செய்கை மேற்கொள்வதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கிறோம்.

குறிப்பாக மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் தினமும் கால்நடை வளர்ப்பாளர்களை அச்சுறுத்திவருவதாகவும்  பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசென்றாலும் இது தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை.

எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய பிரச்சியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எனவே அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து தமது பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தரமுன்வரவேண்டும்”. எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.ilakku.org/மேய்ச்சல்-நில-விவகாரம்-ம-2/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.