Jump to content

இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா!

இலங்கையில் போர் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே போர் நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, போர் முடிவுக்கு வரும் வேளையில் சரத் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, போர் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோது கீழ்மட்ட அதிகாரிகளின் பணிகள் மட்டுமே அவசியம் என்ற நிலைப்பாடு இருந்தது என்று கூறினார்.

அப்போது இராணுவத்துக்கு போர்த் தாங்கியொன்று தேவைப்பட்டது எனவும், அதனைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அதனைப் பெறுவதற்காக தாம் நேரடியாகவே சீனாவுக்குச் செல்ல நேரிட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். "குறித்த தினத்துக்குள் வராவிட்டால் போர்த் தாங்கிகள் எமக்கு வழங்கப்படாது எனக் கூறினார்கள். அதற்காகவே நான் அங்கு (சீனா) சென்றேன்" என்றார் பொன்சேகா.

"ரணில், மைத்திரி போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் எம்மால் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாது. அதனை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://aruvi.com/article/tam/2020/10/09/17707/?fbclid=IwAR02w9Jh4SK1zKqVBAgwFi98dJ6mMWdjhFE2Y1hD_YSi6DQMj0NXPwoA5G0

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது.

கிந்தியா, தன்னை அறியாமலேயே (இல்லை அறிந்துமோ தெரியாதது), RAW  சீனாவின் ஏவல் படையாக / சக்தியாக சிங்களத்தின்  வழியே இருந்திருக்கிறது என்பதும் வெளியில் வருகிறது.

ஆனால், மலையாள மேனன்கள், நாராயணங்கள், rao க்கள், நம்பியார்கல், அந்தோணிகள், பஞ்சாபி பிரதமர், பெங்காலி முகர்ஜி இப்படி முழு இந்திய அர்ஷின் அச்சனி முடுக்குகள் எல்லாருமே ஏவல் படையாக மாறியது சீனப் பணமா அல்லது தத்துவமா?       

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

உங்களுக்கு புரியவில்லை, இல்லையா? சீனா, இந்தியா, இலங்கை, இந்து சமுத்திர பிராந்திய வல்லரசுகளின் நகர்வுகள், கொள்கைகள் பற்றிய அறிவில் தவறிருப்பதை அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் இது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால்  4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று  நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர் சீனாவில் இருந்து வழிநடத்தினோரோ.. வழிஞ்சிட்டு இருந்தாரோ தெரியாது.. ஹிந்தியா அதன் உச்ச சற்றலைட் வலுவையும் பாவித்து இஸ்ரோவின் உதவியோடு வன்னியில் புலிகளின் நகர்வுகளைக் கண்காணித்து களத்தில் இருந்த தனது படைகளுக்கு உதவியது.. இந்தப் போரை வெற்றி கொள்ள. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒண்டும் கிழிக்கவில்லை...

இவர் சீனத்து வவ்வால் திண்டு போட்டு படுத்துக் கிடந்தவர்..😁

எங்கண்ட கோத்தா ஐயா தான் வழி நடத்தினவர்....😜

அது சரி.... கொஞ்ச நாளா மாரித்தவளை கத்துது.... கோத்தா பாம்பு, உள்ள தூக்கி போடப்போகுது.... கவனம்... 🥴

Edited by Nathamuni
 • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால்  4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று  நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.

நான் முன்பும் பலமுறை எழுதி நிர்வாகத்தால் தூக்கப்பட்ட கருத்துதான் இருந்தாலும் எழுதுகிறேன். போர் நிறுத்த காலத்தில் சீனாவிலிருந்து தலைவரை காண வந்த ஒரு உயர்மட்ட குழுவை அவரை பார்க்க விடாமல் திருப்பியனுப்பிய பெருமை சுப தமிழ்செல்வனையே சாரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இவர் சீனாவில் இருந்து வழிநடத்தினோரோ.. வழிஞ்சிட்டு இருந்தாரோ தெரியாது.. ஹிந்தியா அதன் உச்ச சற்றலைட் வலுவையும் பாவித்து இஸ்ரோவின் உதவியோடு வன்னியில் புலிகளின் நகர்வுகளைக் கண்காணித்து களத்தில் இருந்த தனது படைகளுக்கு உதவியது.. இந்தப் போரை வெற்றி கொள்ள. 

நீஙகள் இப்படி புட்டுப் புட்டு வைக்கிறியள்.

மகிந்தா அல்லக்கை.... வீரவன்சன்ச கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறார்.... புது அல்லக்கை ஆனந்த வீரசேகர.... இந்தியா ஒப்பந்தப்படி ஒண்டுமே செய்யேல்ல.... அதால...13A.... ஒப்பந்தம்.... கான்சல் எண்டுறாரே...

மகிந்தா நூல் விட்டுப்பாக்கிறார்...

‘பயப்படாதடா, நீ தான் தைரியமான ஆளாச்சே.... பயப்படாதே’ எண்டு சொல்ல... சீனாக்காரன் உடன வந்து இறங்கீட்டான்....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நான் முன்பும் பலமுறை எழுதி நிர்வாகத்தால் தூக்கப்பட்ட கருத்துதான் இருந்தாலும் எழுதுகிறேன். போர் நிறுத்த காலத்தில் சீனாவிலிருந்து தலைவரை காண வந்த ஒரு உயர்மட்ட குழுவை அவரை பார்க்க விடாமல் திருப்பியனுப்பிய பெருமை சுப தமிழ்செல்வனையே சாரும்.

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கொஞ்ச நாளா மாரித்தவளை கத்துது.... கோத்தா பாம்பு, உள்ள தூக்கி போடப்போகுது.... கவனம்...

ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு. தன்னிலை மறந்து உளறுவார் வீர அக்களிப்பில். எல்லாப் பழியையும் அவர் மேல் சுமத்தி, உள்ளுக்கை போட்டு பருப்பும், பாணும் குடுக்கேக்கை விழித்தெழுவார் இவர். 

 • Haha 1
Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

அவர்கள் இருவரும் எப்போதும் செய்யும் துரோகத்தனங்களையே செய்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால் ஒரு வல்லரசுக்கு நிகரான நாட்டுடன் தொடர்பிலிருக்கும் போராட்டக்குழுக்களை அவ்வளவு எளிதில் யாராலும் வெற்றி கொள்ள முடியாதென்பது வரலாறுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆயுத உதவிகளும் இலகுவாக கிடைத்திருக்கலாம்!!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 08:50, குமாரசாமி said:

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

சிங்களாஆட்சியாளருக்கு முழு ஆதரவு கொடுத்திருப்பார்கள்....

தாய்வானுக்கு ஆதரவு இந்தியா கொடுப்பதால் சீனா சிறிலங்காவுக்கு ஐ .நா  வில் ஆதரவு கொடுக்க உசாராக இருக்கினம் வில்

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.