Jump to content

யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்.!

Screenshot-2020-10-10-15-34-58-052-com-a பால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்பில் இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் பசும் பாலுக்கான கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. ஆனால், உள்ளூரில் உற்பத்தியாகும் பசும் பால் உள்ளூர் நுகர்வுக்கே போதாத நிலைமை காணப்படுகிறது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்கோ பாற்பொருட்கள் உற்பத்தி விற்பனை நிலையம் யாழ்.மாவட்ட கால்நடை உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான லீற்றா்கள் பாலைகொள்வனவு செய்கிறது. அதன் பெரும் பகுதி தென்னிலங்கையின் பால்மா நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே பால் உலர்த்தப்பட்டு பொதிகளில் அடைக்கப்பட்டு திரும்பவும் வடக்குக்கு அதி கூடிய விலையில் விற்பனைக்கு வருகிறது. அதனை எம்மக்கள் வாங்கி மீண்டும் சுடுதண்ணீர் சேர்த்து கலக்கி குடிக்கும் அவலம் இடம்பெறுகிறது.

இதற்கு யாழ்கோவின் செயற்றிறன் இன்மை தான் பிரதான காரணமாக இருக்கிறது. காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக யாழ்கோ நிலையங்களில் பாலை நுகர்வோர்கள் பெற முடியாது. காலை மாலை இரு மணி நேரங்கள் மட்டும் தான் அங்கே வரையறுக்கப்பட்ட அளவில் பாலை பெற முடியும். அதனையும் விட தரமான பாலை அங்கு பெற முடியாத நிலைமை காணப்படுவதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவிக்கும் நிலை உள்ளது. கேள்விக்கேற்ற நிரம்பல் இல்லாததால் பாலை கொள்வனவு செய்ய முடியாமல் நுகர்வோர் தவிக்கும் நிலை உள்ளது. இருந்தாலும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சமூக எண்ணமுள்ள சில இளையோர்கள் பாலை நுகர்வோரிடம் சேர்த்து வருகின்றார்கள். அதில் முதன்மையானவர் சிவலிங்கம் யசிகரன் என்கிற பட்டதாரி இளைஞர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த யசிகரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் படித்து பட்டதாரியாகி வெளியேறியுள்ளார். ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கோண்டாவில் உப்பு மடம் சந்தியடியில் பால் கொள்வனவு விற்பனை நிலையத்தை நடாத்தி வருகின்றார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே யாழ்ப்பாணத்தில் பசும் பாலுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதனையும் பால் சங்கங்களின் தொடர்ச்சியான நிர்வாக நடவடிக்கைகளை பார்த்து வெறுப்படைந்து தான் பால் கொள்வனவு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்.

நுகர்வோருக்கு எந்நேரமும் தரமான பாலை கிடைக்கச் செய்வது தான் தனது ஒரே இலக்கு என அழுத்தமாக கூறும் இவர் தனது பால்பொருள் கொள்வனவு விற்பனை நிலையத்தை மேலும் விஸ்தரிக்கும் எண்ணத்துடன் தொழிற்படுகிறார். குடும்பத்தின் கஷ்டமான சூழலால் பெரும் முதலீடுகள் செய்து இயந்திர உபகரணங்களை வாங்க முடியாத நிலையில் இருந்தாலும் படிப்படியாக உயர்ந்து சிகரத்தை தொடுவேன் என்கிற நம்பிக்கையோடு இயங்கி வருகிறார். அவரிடம் பேசியவற்றை இங்கே பகிர்கிறோம்.

முதலில் யாழ்கோவிடம் இருந்து பாலை கொள்வனவு செய்து காய்ச்சினேன். வேறு வேலைகள் செய்து சிறிது நேரத்தின் பின் வந்து பார்த்த போதும் பால் பொங்கவில்லை. தண்ணீர் போல தளதளத்து கொதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தரமில்லாத பாலை தந்தமையை உணர்ந்து கொண்டேன். இந்தக் குறையை யாழ்கோவின் பல நுகர்வோர்களும் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

படிக்கும் போதே ஒன்றிரண்டு கால்நடை வளர்ப்பாளர்களிடம் பாலைக் கொள்வனவு செய்து நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகித்து எனது படிப்பு செலவுகளைப் முதலில் பார்த்துக் கொண்டிருந்தேன். பாலைக் கொள்வனவு செய்து எஞ்சினால் திருப்பி கொடுக்க முடியாது. சங்கங்களிடம் போய்க் கேட்டால் எடுக்கேலாது என்று பெரிய சட்டங்கள் கதைப்பார்கள். வேறு தனியார் கடைகளிடம் கேட்டால் அடிமட்ட விலைக்கே கொள்வனவு செய்யக் கேட்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு தான் பருத்தித்துறையில் இருந்து மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்தேன். இங்கு பால் வாங்குவதற்காக யாழ்கோவின் கிளை நிறுவனத்துக்கு சென்றால் அங்கு பால் இல்லை. காலை, மாலை குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் அங்கே பால் கிடைக்கும். ஒரு குழந்தைக்கு பால் தேவையென்றால் கூட எங்கும் வாங்க முடியாது. இந்நிலையை மாற்ற வேண்டுமென விரும்பினேன். இதனால் பால் 24 மணிநேரமும் கிடைக்க வேண்டுமென எண்ணித்தான் பால் கொள்முதல் விற்பனை நிலையத்தை நானே தொடங்கினேன். நானும் அப்பாவும் தான் இங்கே முழுநேரமும் செயற்பட்டு வருகிறோம்.

இங்கு கால்நடை வளர்ப்பாளர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பால் கொண்டு வந்து தருகிறார்கள். தைப்பொங்கல் போன்ற விசேட நாள்களில் இரவு 2 மணிக்கும் வந்து பால் வாங்கி செல்கிறார்கள். இப்போது எனது பாலகத்தில் பால், தயிர், மோர், சர்பத், பன்னீர் போன்ற பால் பொருள்களையும் பருத்தித்துறை வடை, முறுக்கு, உளுத்தம்மா, லட்டு, எள்ளுப்பா போன்ற எங்கள் வீட்டில் உற்பத்தியாகும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தற்சமயம் 74 கால்நடை வளர்க்கும் விவசாயிகள் எங்களுக்கு பாலை வழங்குகிறார்கள். அவர்களுக்கு 80 – 85 ரூபாய் வரை கொடுத்து பாலை கொள்வனவு செய்கிறோம். இரவு 6 மணிக்கு பிறகு மேய்ச்சல் மாடுகளில் இருந்து வரும் பால் அடர்த்தி கூடி நல்ல தரமாக இருக்கும். மாடுகளுக்கு மாஸ் போட்டு பெறும் பால் நேரத்துக்கு கெட்டு விடும். தரமில்லாமலும் இருக்கும். அப்படியான பாலை நாங்கள் எடுப்பதில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிக் கடைகளுக்கும் எமது பன்னீர் போகின்றது. எங்களது கொழுப்பு நீக்காத பன்னீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் வருகின்ற எவ்வளவு பாலையும் எங்களால் கொள்வனவு செய்ய முடிகிறது. பன்னீரை ஒரு மாதம் வரை கெடாமல் வைத்திருக்கவும் முடியும்.

Paneer_header.jpg இங்கு தென்னிலங்கை பால் பொருள் உற்பத்தி சார்ந்த தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் தான் பாலை கொள்முதல் செய்கின்றார்கள். சில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு மாட்டு தீவன லோன், கொட்டகை அமைக்க என பல்வேறு கடன்களை வழங்கி அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் முழுவதும் அவர்களுக்கு பால் ஊற்ற வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்படும் நிலை உள்ளது.

யாழ்ப்பாணத்தில் எங்கே சர்பத் வேண்டினாலும் ரின் பாலும், பால் பவுடரும் தான் இருக்கும். நாங்கள் மட்டும் தான் தனி மாட்டு பாலை காய்ச்சி ரோஸ்மில்க் பவுடர், சீனி போட்டு சர்பத் செய்கின்றோம். அதற்கு இங்கே நல்ல வரவேற்பு உள்ளது. நாளாந்தம் 80 லீற்றர் பாலை சர்பத், தயிர், மோர், பன்னீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றோம்.

விவசாயிகள் தரமான பாலை வழங்க வேண்டும். நுகர்வோருக்கு நல்ல தரமான பாலை வழங்க வேண்டும் என்கிற உயரிய எண்ணம் பால் சாலைகளுக்கு இருக்க வேண்டும். என்னைப்போல பல தனியார் பால் சாலைகள் உருவாகும் பட்சத்தில் எம்மக்களுக்கு எந்நேரமும் தரமான பால் கிடைப்பதனை உறுதி செய்ய முடியும் என்றார்.

https://puthusudar.lk/2020/10/10/யாழில்-பால்-விற்பனையில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தோழர்.மட்டுக்கள் யாராவது இந்த பதிவை தாயகத்தில் முதலீடு என்னும் பகுதிக்கு மாற்றி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தோழர்.

அடுத்தமுறை போகும் போது இந்த கடைக்கும் ஒரு விசிட் அடிக்கத்தான் இருக்கு.

நல்ல முன்மாதிரியான இளைஞர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பட்டதாரி இளைஞனை நோக்கி செல்லும் மக்கள்-ஏன் தெரியுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன்  

"யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்" எனும் முயற்சியாளர் குறித்த சிறு கட்டுரை நிமிர்வு இதழின் வைகாசி - ஆனி இதழில் முதலில் வெளியாகி பின் நிமிர்வு இணையத்திலும் வெளியாகி பலரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தது. 

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த  சிவலிங்கம் யசிகரன்  என்கிற இளைஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் படித்து பட்டதாரியாக வெளியேறி தற்போது கோண்டாவில் உப்புமடம் சந்திக்கருகில் 24 மணிநேர பால் விற்பனை சேவையை நடாத்தி வருகிறார். 

எம் சமூகத்துக்கு முன்மாதிரியாக விளங்கும் இந்த இளைஞர் தான் பால் விற்பனை சேவையை தொடங்கியதன் பின்னணி மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருள்கள், உள்ளூர் உற்பத்திகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். கேளுங்கள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.