Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா?

இயக்குனர் சீனு ராமசாமியின் பதிவு

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இப்படி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/10160504/1963559/Seenu-Ramasamy-Request-to-Vijay-Sethupathi.vpf

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • Replies 195
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா  தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால்  உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம்  நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச

எத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத

 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை/ மதிவாணன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விஜய்சேதுபதிக்கு எச்சரிக்கை!-இளஞ்சென்னியன்

இந்த நூற்றாண்டில் மனித குலம் வெட்கி தலைகுனியத்தக்க இனப்படுகொலையை நிகழ்த்திய அரசின் பக்கமாக நின்று ஓர் இனத்தின் விடுதலை போராட்டத்தை அதனை தலைமையேற்று நடத்திய விடுதலை இயக்கத்தை கொச்சைபடுத்தி பேசி வரும் அறமற்ற விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் அவரின் இனத்துரோக வரலாறே முதன்மையானது. அதை தவிர்த்து அவரது விளையாட்டு வாழ்க்கையை பதிவு செய்ய போவதாக தாங்கள் சொன்னால் அது உங்கள் மீதான நன்மதிப்பை கேள்விக்கு உள்ளாக்கும். சமூகம்சார்ந்த சனநாயக கருத்துக்களை தொடர்ந்து ஆளும் வர்க்கத்து அஞ்சாது கூறிவந்த நீங்கள் சிங்கள இனப்படுகொலை ஆட்சியாளர்களின் கருத்துருவாக்கவாதியாக நின்றால் தமிழினத்துக்கு எதிரான அணியிலையே காலம் உங்களையும் வைத்து பார்க்க வைத்து விடும். உடனடியாக இந்த பட ஒப்பந்தங்களில் இருந்து தாங்கள் தங்களை விடுவித்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் உரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி வண்டியும் ,தொந்தியுமாய் இருக்கிறார் ...எப்படி முரளியின் வேடத்திற்கு பொருந்தி வருவார்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் விபரீதம் விஜய்சேதுபதி | ராஜபட்சே கொண்டாடுவது தமிழினத்திற்கு எதிரானது

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில் வருகின்ற படத்தில் திரு விஜய்சேதுபதி அவர்கள் நடிக்க இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொது உளவியல் தன்மைக்கு எதிரானது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்கள் செல்வனா சிங்கள செல்வனா | விஜய் சேதுபதியிடம் அன்பான வேண்டுகோள் | Vijay sethupathi | Himlar

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 22:39, உடையார் said:

அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா..

எத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட; மேலே குறிப்பிட்ட, அவருக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பது தான் அவருக்குப் பெருமை என்பது எனது பணிவான கருத்து. இதை விடுத்துப் பல கோடித் தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் வேதனையானது. 

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதில நா.த.க குரல்கள் ஓங்கி ஒலிப்பதால் மட்டும் கேட்கிறேன், யாராவது பதில் தெரிந்தால் தாருங்கள் (நாக்கை நீட்டாமல்!)

"எவனிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" - இது சீமான் அவர்கள் ஹிற்லரின் வாசகமொன்றை மேற்கோள் காட்டிய பின்னர் சொன்னது. 

இலங்கையில், முன்னேறக் கஷ்டப் படும் ஒரு சமூகத்தில் இருந்து வந்து, உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஒரு தமிழர்! சமாதான காலத்தில் புலிகளால் வரவேற்கப் பட்டு வன்னி போய் அவர்களது விளையாட்டு அபிவிருத்தி மீதான ஆர்வத்தை வெளியுலகுக்குக் காட்டியவர். இப்படி பல நல்ல விடயங்கள் இருக்க, இப்ப ராஜபக்ஷவின் நண்பன் என்பதால் மட்டுமே ஏன் இப்படி எதிர்ப்பு? 

இவர் ஹிற்லரை விட மோசமானவரா? 🤔 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்கை எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனா இவரை கொண்டாடி படமெடுக்குமளவுக்கு பொது வாழ்கையில் நல்லவரா?

இவரை W.A Silva Mawatha இல் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி காணலாம், அங்கு போக முதல் Hamdon Lane இல் ஒரு பாமர்சி இருக்கு அங்கும் அடிக்கடி வருவார், அந்த பாமர்சிக்கு பக்கத்தில் தான் என் நண்பர்கள் கடை வைத்திருந்தார்கள், அங்குதான் கூட நேரமிருப்பது, இவரின் தனிப்பட்ட வாழ்கையும் ????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

அதெல்லாம் பதிவில் இருக்கே உடையார், அதுவா என் கேள்வி? இதெல்லாம் சொல்லியிருந்தாலும் அவர் புலிகளை அழிக்கவில்லை, தமிழரைக் கொல்லவில்லை, யாரையும் கொல்லவில்லை! 

உங்கள் தல சீமானின் கொள்கைப் படி இவரது சாதனையை நாம் ஆவணப்படுத்த வேண்டாமா என்றே கேட்டேன்! ஏனென்றால், 10 மில்லியன் பேரைக் கொன்ற ஹிற்லரில் இருந்தே நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டுமெண்டல்லோ சொல்லியிருக்கிறேர்? 

இல்லையா? 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 
5 minutes ago, உடையார் said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

யாரைப் பற்றி படம் எடுப்பதென்று விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவை இருவரும் அல்லாதோர் ஏன் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டும்? படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 
நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 
யாரைப் பற்றி படம் எடுப்பதென்று விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவை இருவரும் அல்லாதோர் ஏன் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டும்? படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

படம் பார்ப்பவர்களால்தான் இவர்கள் வாழ்கை ஓடுகின்றது, பார்பவர்களுக்கும் உரிமையிருக்கு, மக்கள் இல்லையேல் இவர்கள் இல்லை, இது ஒரு சின்ன பிள்ளைக்கு கூடவிளங்கும் - உங்களுக்கு?

நமல் ராஐபகசவின் ஊடுருவல் - இதுதான் அரசியல் 

வேண்டாம் விஜய்சேதுபதி | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

தமிழ் தேசியம் பேசினாலே நாம் தமிழர் கட்சி என சிந்திப்பவர்கள் இக்காணொளியைப்பார்த்துவிட்டு யோசியுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

 • Like 3
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

16 minutes ago, Maruthankerny said:

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

நன்றி மருதங்கேணி & பெருமாள்

 இதை சேதுபதி சீரியசாக எடுத்தால், நல்ல நடிகர் என்ற பெருமையடன் இன்னும் மிளிர்வார், பார்ப்போம்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக "ரெபியூஜி" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. "அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்," என்று கேட் கூறுகிறார். அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது." "நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார். "இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்," என்கிறார் கேட். இன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார். "அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்." இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.   குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'மேலாண்மை செய்யும் ஆண்கள்' "இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார். "இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்" என்கிறார் அவர். பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். "நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது" என்று சூ கூறுகிறார்.   "தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்" என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும். ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. "குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு." முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார். "பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை பட மூலாதாரம், Getty Images   குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர். தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், "தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார். வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். "வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. "இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது" என லெஸ்லி கூறுகிறார்.https://www.bbc.com/tamil/science-54599833
  • விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் "நன்றி.. வணக்கம்" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். "விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். "ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே.." என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023
  • நானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡
  • 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன். சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்)  நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும். இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/92563
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.