கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 Just now, Justin said: உங்கள் களவிதி பற்றிய கரிசனையை மெச்சினோம்! நான் பதில் தந்த உங்கள் ஒரிஜினல் கருத்தில் "சீமான்" இல்லையோ? அது முன்னைய உங்கள் கருத்துக்கு எழுதப்பட்ட பதில் . சீமான் விடையத்தை வலிந்து இந்த வலிந்து என்ற அர்த்த்தமாவது புரியுமா உங்களுக்கு ? .இங்கு சேதுபதி முரளிதரன் பற்றிய திரி இதுக்குள் ஏன் சீமான் ? வேணுமென்றால் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சீமானை திட்டும் திரி ஒன்றை திறவுங்கள் அங்கு கதைப்பம் . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,139 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ ! சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்.... காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !? ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?! வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா ? நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் ! என்னது...நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா ? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ? அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'? நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ?? நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும். தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி, மூன்றுவேளை சோறு ???? தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் ! . தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் ! https://www.facebook.com/thamarai.kavignar Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Nathamuni 2,781 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 (edited) யாரப்பா இது.... விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் நடத்தும் கூட்டம்....பால் குடம் சகிதம்.... உங்கை வந்திட்டுது போலை கிடக்குது... Edited October 14, 2020 by Nathamuni Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 1 minute ago, Nathamuni said: யாரப்பா இது.... விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் நடத்தும் கூட்டம்....பால் குடம் சகிதம்.... உங்கை வந்திட்டுது போலை கிடக்குது... அவையள் சேதுபதி ரசிகர் கூட்டமில்லை. யார் யாரெல்லாம் தமிழினத்துக்கு சார்பாக் ஆதரவாய் கதைக்கினமோ அந்த இடத்திலை எதிராய் நிண்டு குத்தி முறிவினம் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 1 minute ago, குமாரசாமி said: அவையள் சேதுபதி ரசிகர் கூட்டமில்லை. யார் யாரெல்லாம் தமிழினத்துக்கு சார்பாக் ஆதரவாய் கதைக்கினமோ அந்த இடத்திலை எதிராய் நிண்டு குத்தி முறிவினம் பிரியோசனமாய் எழுதினாலும் பரவாயில்லை எதிர்க்கவேணும் என்பதுக்கு எழுதிறது மொக்கையாகி வளமை போல் நாங்களும் தமிழ் தேசியம் என்று கடைசியில் கூவுவினம் . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 37 minutes ago, Justin said: தமிழன் யாரென்று கேட்டீர்களானால்... இவன்தான் மான தமிழன். 6 minutes ago, பெருமாள் said: பிரியோசனமாய் எழுதினாலும் பரவாயில்லை எதிர்க்கவேணும் என்பதுக்கு எழுதிறது மொக்கையாகி வளமை போல் நாங்களும் தமிழ் தேசியம் என்று கடைசியில் கூவுவினம் . முரளி வேண்டுமென்றால் இந்தி நடிகரை / சிங்கள நடிகரை வைத்து எடுக்கட்டுமே !! தமிழ் நாட்டு திரைத்துறையை நோண்டுவதன் நோக்கம் என்ன ? 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted October 14, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 14, 2020 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 எட்டப்பன் வேலை செய்யலாமா விஜய் சேதுபதி? இது ஒரு ரசிகன் கோரிக்கை Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 விஜய் சேதுபதி ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள்? தமிழர்களுக்கு மிகவும் சோகமான வேதனைக்கு உரிய நாள் இவருக்கு "தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்". சர்வதே அளவில் ஒரு சிறிய நீதி கிடைக்காத என ஏங்கி போராடிய மக்களை. போராட்டம் செய்தவர்கள் போலிகள் போலும் எனவும் டேவிட் கேமரூன் பிழையாக வழி நடத்தப்பட்டார் என முரளி சர்வதேச ஊடகம் சேனல் 4 (UK) இட்கு கூறி Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 உங்களை வாழவைத்த மக்களைவிட இப்படம் பெரிதல்ல... விட்டுவிடுங்கள் - விஜய் சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சேரன் அந்த வகையில், இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது”. என பதிவிட்டுள்ளார். https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/15144411/1974704/cheran-request-vijay-sethupathi-to-quit-800-movie.vpf Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 முரளிதரன் நம்பிக்கை துரோகி.... அவர் பயோபிக்கில் நடிப்பதை தவிருங்கள் - விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் . விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன். விஜய் சேதுபதி, பாரதிராஜா எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகம் வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா. எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/15123658/1974680/Bharathiraja-request-vijay-sethupathi-to-step-out.vpf Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 இந்த படம் வேண்டாம் அண்ணா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 On 14/10/2020 at 08:02, Justin said: On 14/10/2020 at 13:25, விளங்க நினைப்பவன் said: அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான். யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை. இருவரும் பார்க்க வேண்டிய காணொளிகள் பல மேலே இருக்கு, உங்களின் இன மான உணர்வுகள் எப்படி? நீங்களும் எங்கள் உணர்வை சிதைக்கலாமா.!?" ஈழத்தமிழர் அகரன் ஆதங்க பேட்டி Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,213 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 1 hour ago, குமாரசாமி said: அவர் ஒற்றுமை பற்றி பேசுகிறாராம் ........இவர் வெளிக்கொணருகிறாராம். இந்த ஏமாற்று வேலைக்கு போகாதே என்றுதான் கேட்க்கிறோம். இன்றும் எம்கக்காக இறந்த திலீபனுக்கு கூட அஞ்சலி செய்ய மக்களுக்கு தடை. இப்போதும் இனவாதம் எங்கள் கழுத்தில் கத்தி வைத்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் இவர் ஒற்றுமை பற்றி கிழிக்க ஒன்றும் இல்லை .. அவர்களுக்கு இரத்த கறைகளை கழுவ வேண்டிய தேவை மட்டும் இருக்கிறது 2 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ragaa 42 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 12 minutes ago, உடையார் said: இருவரும் பார்க்க வேண்டிய காணொளிகள் பல மேலே இருக்கு, உங்களின் இன மான உணர்வுகள் எப்படி? நீங்களும் எங்கள் உணர்வை சிதைக்கலாமா.!?" ஈழத்தமிழர் அகரன் ஆதங்க பேட்டி உடையார், நீங்கள் நினைக்கிறீர்களா Justin மற்றும் விளக்கமற்றவரும் இந்தக்காணொளிகளை பார்த்து அட டா நீங்கள் சரி என்று சொல்வார்களென்று. அவர்கள் வாருவதே ஏடாகுடாமக கதைப்பதற்கு மட்டும் தான் அவர்களுக்கு ஒருவரும் பதிலளிக்காதீர்கள் 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 நீங்க தமிழனா.!? சொல்வீங்களா.!? பாயும் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் colomban 363 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 இனப்படுகொலையை நியாயப்படுத்திய முரளிதரன் பேரினவாதத்தின் கைக்கூலியே! விஜய் சேதுபதிக்கு சீமான் விடுத்த எச்சரிக்கை முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முற்படுவது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல எனவும், உடனடியாக படத்திலிருந்து விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணி தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவிய புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப்பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன். 2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச்சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனவழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் தான் முத்தையா முரளிதரன். இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுத்த மகிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர். அங்கு நடந்த தேர்தல்களின் போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த்தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்திட்ட முத்தையா முரளிதரனை பன்னாட்டுச் சமூகத்திற்கு தமிழினப்படுகொலை நிகழவில்லை எனக் கூற வைக்கவே சிங்களப்பேரினவாத அரசும், அதன் ஆட்சியாளர்களும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத் தான் அமையும் எனவும் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ நிலத்தில் நடைபெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் எனப் பழிசுமத்தப்பட்டு, முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டப் பின்னர், அந்நிலத்தில் இறக்கப்பட்ட புலிக்கொடியை தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான தமிழகத்தில் ஏற்றி நிறுவியிருக்கிறோம். இந்நிலையில், சிங்களக்கொடி பொறித்த இலங்கையின் சீருடையோடு தம்பி விஜய் சேதுபதி திரையில் தோன்றி, அதனை தமிழக வீதிகளில் திரைப்படங்களின் வழியே கொண்டுபோய் சேர்க்க நினைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும்? திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என தம்பி விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும். விஜய் சேதுபதி உலக அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல. அவர் ஆளும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட நேரத்திலெல்லாம் அவருக்கு ஆதரவாகவே நாம் நின்றிருக்கிறோம். இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக்கும் அரசியலின் ஆபத்தை உணர்ந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். அதனை விஜய் சேதுபதி உணர்ந்துகொள்ள படத்திலிருந்து விலகுவதற்கான காலநேரத்தை அவருக்கு அளித்தோம். ஆனால், அதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாது படத்தை உருவாக்கம் செய்ய முனைந்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாகவே இருக்கிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும், முத்தையா முரளிதரன் அதனை நியாயப்படுத்திப் பேசுவதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இது அறியாமையால் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்ஷவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும் போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக்காணொளி வெளியீட்டை செய்தீர்கள்? இனத்துரோகி முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டுவிடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது? முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன் எனவும் சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://www.ibctamil.com/india/80/152347?ref=imp-news Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,678 Posted October 15, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 'கருணாவுக்கு படம் எடுத்தா நடிப்பீங்களா.!?முனைவர் விஜய் அசோகன் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் 2,807 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 துரோகம் நிறைந்த வரலாறு. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் vasee 77 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 தமது பிள்ளைகளை, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் கண்ணீரை கேலிப்பொருளாக்க சாதாராண மக்களால் முடியாது, அவர்களது கண்ணீரை பொய் என்று கூற ஒரு பைத்தியக்காரனால்தான் முடியும் " அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தைத்தேய்க்கும் படை" ஏழைகளின் அமைதியான கண்ணீர் சந்ததியை அழிக்கும் கூர் வாளாகும் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 Mano Ganesan மனதில்… (15/10/20) “கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார். முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்சாரும், மறுபுறம் தமிழக அரசியல் கட்சிகளும் விடாது. மேலும் அப்படி கதையமைத்து வம்பில் விழ தயாரிப்பாளர்களுக்கும் தேவை இராது. முரளியின் வீச்சுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, ஒருவித நிறவாதம் கலந்த எதிர்ப்பு, மற்றும் பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஆகியவை திரைகதையை சுவாரசியமாக்கும் என எண்ணுகிறேன். அதேவேளை முரளியின் தராதரத்துக்கு, அவர் எதோ ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் கப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆகவில்லை என்பதற்கு அவர் ஒரு தமிழர் என்பதுவே பிரதான காரணம் என நான் நினைக்கிறேன். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும். சொல்வார்களா என தெரியவில்லை. அதேவேளை முரளியின், ஆஸ்திரேலிய பந்து வீச்சு கஷ்ட காலத்தின் போது அவருக்கு முதல் துணையாக இருந்தவர், அன்றைய இலங்கை அணி கப்டன் அர்ஜுன ரணதுங்க. என் நண்பரும், இன்றைய எதிரணி அரசியல்வாதியுமான அர்ஜுனா, ஒரு சிங்கள பெளத்தர். சிங்களவராக என்பதை விட, ஒரு இலங்கையராக, ஆஸ்திரேலியே மைதானத்திலேயே, அவர் முரளிக்கு பக்கத்துணையாக தன்னை முரட்டுத்தனமாக அடையாளப்படுத்தினார். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும். கிரிகட்டுக்கு வெளியே, இலங்கை இனக்கலவரங்களில், முரளியின் ஒரு தொகுதி குடும்ப சொத்துகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன என நான் எங்கேயோ கேள்வி பட்டேன். இதுவும் கதையில் வருமா என தெரிவில்லை. இங்கே இப்போது பிரச்சினை, முரளி என்ற நபர் மீதுதான். படம் வேண்டாம் என்று சொல்பவர்களின் முதல் அல்லது முழு வாதம், இலங்கையில் தமிழர் கொல்லப்படும் போது, இவர் இங்கே பிடில் வாசித்தார், போர் நடத்திய தரப்புடன் கூட்டாக இருக்கிறார், என்று போகிறது. இந்த குற்றச்சாட்டு இப்போ, ரொம்ப லேட் மற்றும் தர்க்க பொருத்தமற்றது என எண்ணுகிறேன். இங்கே, பிடில் வாசிப்பது என்றால் என்ன? கோரப்போர் நடக்கும் போது அதுபற்றி ஒன்றும் தெரியாததை போல் இருப்பது என நினைக்கிறேன். ஆனால், இதைவிட போரையும், போர் மரணங்களையும் நியாயாப்படுத்துவது என்பது மகா கொடுமையானது. தமிழகத்தை சொல்லும் முன் நம் இலங்கையை நாம் பார்க்க வேண்டும். கோரப்போர் நடந்த போது, கண்டுக்கொள்ளாமல் பிடில் வாசித்தவர்களும் உள்ளார்கள். அப்புறம் போரை நியாயப்படுத்திய, பிரபல அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், இலங்கையிலும் இருந்தார்கள். தமிழகத்திலும் இருந்தார்கள். “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன தமிழக தலைவர்களும், “மக்கள் சாகிறார்கள்தான். ஆனால், (போரின் தமிழ் தரப்பாக அறியப்பட்ட) புலிகள் தோற்று தொலைந்துபோனால் நிம்மதி” என்று சொன்ன இலங்கை தமிழ் தலைவர்களும் இருந்தார்கள். இப்போது கடைசியாக நடைபெற்ற தேர்தலில், அன்று போரை நடத்திய இன்றைய அரசு கூட்டணி சார்பாக ஐந்து தமிழ் எம்பீக்களை, போரால் உக்கிரமாக துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களே தெரிவு செய்துள்ளார்கள். இது சொல்லும் செய்தி என்ன? அந்த மக்களே போரை, போர் கொடுமையை மறக்க விரும்புகிறார்கள் என்பதாகும். இதுதான், சிலர் மறைக்க விரும்பும், இன்றைய கசப்பான உண்மை. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் என்ன சொல்கிறேன்? போரில் கொல்லப்பட்ட, காணாமல் போன, உறவுகளை இழந்த, தமிழ் மக்களின் நிலைமை அகோரமானது. அதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. ஆகவே போர் நடத்தப்பட்ட முறை முற்றிலும் பிழையானது. ஆனால், இன்று போர் இல்லை எனபதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு முன் போர் நடந்துக்கொண்டிருந்த போது, நான் ஒருபோதும் “பிடில் வாசிக்கவில்லை”. “போரை நியாயப்படுத்தவும் இல்லை”. மாறாக, போரால் துன்பப்பட்ட தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக, இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்தபடியே, உயிர்கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடினேன். ஆர்பாட்டம் செய்தேன். அன்றைய, ஐநா மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரை கொழும்பு வரசெய்தேன். அரசின் கோபத்துக்கு ஆளானேன். இந்த நெருக்கடியான வேளையில், என் “கடமையை செய்தேன்” என்ற சுய உணர்வுதான், எனக்குள் இருந்து என்னை எப்போதும் கவசமாக காத்து வருகிறது. ஆகவே இன்று முரளியை இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும். உண்மையில் இந்த முரளி எதிர்ப்பு பிரசாரத்தை இன்னமும் தூண்டி விட்டு, நான்தான் அதில் குளிர்காய வேண்டும். ஏனெனில், கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, போதாதுக்கு போர்வெறி அரசியல் செய்யும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்காக கூட்டம் கூட்டி, என் பெயரையே பகிரங்கமாக குறிப்பிட்டு, “மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என தமிழ் வாக்காளர்களிடம் சொன்னவர், இந்த கிரிகட் முரளி..! ஆனால், கொழும்பில் நான் வென்றேன். இங்கே எனது வாக்காளர்கள் முரளி சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை. அப்போது எனது அணியில் இருந்து, என்னை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்த விரும்பிய ஒருவர்தான், முரளி எனக்கு எதிராக, என் பெயர் சொல்லி பேசியமைக்கு பின்னணி காரணம் என நான் பிறகு அறிந்தேன். எப்படியும் முரளி மீது எனக்கு இது தொடர்பில் வருத்தமில்லை. மேலும் முரளி, மலைநாட்டு நுவரெலியா தொகுதியில், அரசு சார்பாக தன் சகோதரனை, தேர்தலில் களமிறக்கி, தமிழ் வாக்குகளை சிதறடித்தார். அவரது சகோதரர் அங்கு வெல்லவில்லை. ஆனால், முரளியின் சகோதரர், வாக்குகளை சிதறடிக்காமல் இருந்திருந்தால், நுவரெலியாவில் இன்னொரு தமிழ் எம்பி, (அரசு தரப்பில்) வெற்றி பெற்றிருப்பார். இது இவரது பொறுப்பற்ற அரசியலுக்கு உதாரணம். எங்களுக்கு எதிரணியான அரசு தரப்பாக இருந்தாலும், அங்கே இன்னொரு தமிழ் எம்பி வரும் வாய்ப்பு கைநழுவியதையிட்டு, கவலையடைவது, எங்கள் பொறுப்புள்ள அரசியலுக்கு உதாரணம். முரளியின் தந்தை திரு. முத்தையா கண்டியில் எல்லோர் மனங்களையும் கவர்ந்த நல்ல மனிதர். முரளியின் உறவுமுறை அண்ணன் மனோகரன் என் நல்ல நண்பர். அவர் இன்று உயிருடன் இல்லை. இவர்கள் எங்கே இருந்தாலும், என் மீது அன்புள்ளவர்கள். ஆனால், முரளிக்கு அது இல்லை. ஆகவேதான் இங்கு வந்து, விமல்வீரவன்சவின் கையை பிடித்துக்கொண்டு, எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார். இவற்றை விளக்கமாக சொல்லக்காரணம், முரளிக்கு அரசியல் பூஜ்யம், என்பதை சுட்டிக்காட்டவே..! அவர் “கிரிக்கட்டில்” ஹீரோ. “பொலிகட்டில்” ZERO. முரளியை விட, சிங்கள மக்களுடன் ஐக்கியமாக நெருங்கி வாழ்பவன், நான். ஆனால், தேசிய ஐக்கியத்துக்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவன், நான். அவருக்கு இது தெரியவில்லை. ஆகவே காலத்துக்கு காலம், தன் பொருளாதார இருப்பை தக்க வைக்க, தனக்கு விளங்காத தேசிய அரசியலை பேசுவதை அவரும், அவரது “அரசியலை” சும்மா எழுதி, காட்டி மிகைப்படுத்தும் வேலையை, ஒருசில ஊடக சிறுபிள்ளைகளும் கைவிட வேண்டும். உண்மையில் அரசியல் பேசுவதில்தான், முரளி ஒரு விளையாட்டுபிள்ளை. கிரிகட் விளையாட்டில் அவர் ஒரு “சீரியஸ்பிள்ளை”. முரளி, உலகத்தரம் வாய்ந்த கிரிகட்டர். இதில் சந்தேகமேயில்லை. நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். கண்டியில், நான் படித்த கல்லூரியில்தான் அவரும் படித்தார். அவர் எனக்கு ரொம்ப ஜனியர். நம்ம கல்லூரி அணியிலேயே இடம்பெற அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. ஒரு கத்தோலிக்க கல்லூரியான அங்கேயே இனவாதம் இருந்ததை நான் நேரில் அறிந்தவன். பிறகு அவர் தேசியரீதியாக, சிறந்த பாடசாலை விளையாட்டு வீரராக வந்து, தேசிய அணியில் இடம் பிடித்து, அங்கும் அவரது பந்து வீச்சு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, உலக மைதானங்களிலும், பந்து வீச்சு ஆய்வுகூடங்களிலும், போராடிதான், முரளி உலக வீரராக இன்று அடையாளம் பெற்றுள்ளார். அவரது திரைப்படம், அவரது பொறுப்பற்ற அரசியலை நியாயப்படுத்தாதவரை, வந்து போகட்டும்..! ஒரு தமிழரின், ஒரு இலங்கையரின், வாழ்க்கை போராட்டம், திரைப்படமாக வரட்டும்..! https://www.facebook.com/ManoGanesanDPF/ Quote Link to post Share on other sites
ராசவன்னியன் 2,704 Posted October 15, 2020 Share Posted October 15, 2020 நீங்களும் வாக்களிக்கலாம்..! Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் vasee 77 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 https://www.youtube.com/watch?v=G_R1kKB5Ad4 விஜய்சேதுபதி விலகல் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 Posted October 15, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 15, 2020 முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி; 800 படத்துக்கு தொடரும் எதிர்ப்பு இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம். '800' படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பட மூலாதாரம், VIJAYSETHUPATHI fb இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம். இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது" என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் இது தொடர்பாக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பிச்சை எடுத்தாவது அட்வான்ஸை திருப்பித்தருகிறோம்: எழுத்தாளர் ஜெயபாலன் பிரபல எழுத்தாளர் ஜெயபாலன், "நடிகர் விஜய் சேதுபதி "800" படத்தில் நடிக்க ஒப்பந்தமான தகவல் கவலை தருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பவர் முத்தையா முரளிதரன். அவர் எந்த எண்ணத்தில் படத்தில் நடிக்க ஒப்பமானார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல பெயர், அவரது இளம் வயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. அதை இதுபோன்ற படத்தில் அவர் நடிப்பதன் மூலம் வீணாகி விடக்கூடாது. ஒருவேளை படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டதாக விஜய் சேதுபதி கருவாரானால், அந்த பணத்தை வீதி, வீதியாக பிச்சை எடுத்தாவது நாங்கள் திருப்பித் தருகிறோம். எனவே, அவர் படத்தில் நடிக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும்" என்று கூறியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு சீமான் அறிவுரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், இனத்துரோகி முரளிதரன் வாழக்கை படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் எண்ணம் எங்கிருந்தது வந்தது? முரளிதரன் எனும் சிங்கள கைக்கூலியை கொண்டாடினால் தமிழர்களின் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். "முரளிதரனின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழக வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்தில் இருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்" என்று சீமான் கூறியுள்ளார். பட மூலாதாரம், FACEBOOK இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் பெயர் எட்டப்பனின் பெயருக்கு இணையானதாக மாறிவிடக்கூடாது. அந்தப் படத்தில் நடிப்பதைத் தவிருங்கள் என கவிஞர் தாமரையும் கூறியிருக்கிறார். பட மூலாதாரம், facebook "முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டுவந்தது. முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே! எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்" என்று அவர் கூறியிருக்கிறார். பட மூலாதாரம், MUTTIAH MURALITHARAN FB தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், "விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இஸ்ரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக்கொண்டபோது அதை ஏற்று இஸ்ரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்துவிடக்கூடாது என விரும்புகிறேன், " https://www.bbc.com/tamil/arts-and-culture-54551167 Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.