Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் படத்த எடுக்க விடுவீங்களா.?!" இப்படி விஜய் சேதுபதி காசு பாக்கணுமா.??| பெ.மணியரசன் ஆவேசம்

திலீபனைப்பற்றி படமெடக்கவிடுவீர்களா???

 

Link to post
Share on other sites
 • Replies 215
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா  தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால்  உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம்  நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச

எத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

பஞ்சாயத்துத் தலைவியை  சாதி காரணமாக கூட்டங்களில் தரையில் அமர வைத்து திருப்த்திபட்ட தமிழ்நாட்டுக்கு அவசியமான பிரச்சனை தான்

இப்பத்தான் தெரிகின்றது விளக்கம் எந்தளவிலுள்ளது. தமழ்நாட்டில் உள்ளவர்களுக்குள்ள உணர்வின் ஒரு சதவீதமும் இல்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம், Getty Images

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் "800" திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார்.

இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

"என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்."

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக, எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள்தான்.

இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழுப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியேலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் "800".

இது நாள்வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது என் வாழ்க்கை வரலாற்றுப் படமான "800" திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

இது, இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக, நான் 2009ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019இல் கூறியதை, "தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்" என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில், எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளி காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது. ஒரு சராசரி மனிதனாக, பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த 10 வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதை மனதில் வைத்தே, "2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாள்" என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்.

அடுத்த எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறான செய்தி.

"தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்" என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர்.

இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால், எல்லோரிடமும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம், எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான், "தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்" என்ற எண்ணத்தில்தான் அப்படி கூறுனேன்.

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம், Muttiah Muralitharan / Facebook

 

என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனான நான், என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை. ஆனால், இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஐ.நாவின் உணவு தூதராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு LTTE கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல், பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.

போர் முடிவுற்ற பின் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான Foundation of Goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள்தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இது போல ஏராளமான விடயங்கள் உள்ளன.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தையும் விடுத்து சிலர், அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப்பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில், நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-54570673

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முரளியின் "இது என் வாழ்க்கையின் மிக நல்ல நாள்" என்ற கருத்து ஒரு ambiguous ஆன கருத்து. பலர் பல காரணங்களுக்காக தமக்குள் இதே கருத்தை அந்த நாளில் நினைத்தனர், முரளி வெளியே சொன்னார், அவர் பிரபலம் என்பதால் கருத்தும் பிரபலமாகி விட்டது.

முரளி பின்னர் சொன்ன கருத்துகளும், செயல்பட்ட விதமும் அவர் முன்னர் போகிற போக்கில்  சொன்ன கருத்திற்கும் ஒரு அர்த்தம் கொடுத்து விட்டது. ஆனால், அவரால் தமிழர்களுக்கு தீமை எதுவும் ஆகி விடவில்லை. டேவிட் கமரூனே காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றிய  முரளியின் கருத்தை "அது அவரது அபிப்பிராயம்" என்று தட்டி விட்டுப் போய் விட்டார் என்றால் முரளியின் அரசியல் கருத்துகளுக்கு இருக்கும் மதிப்பு என்னவென்று எமக்குத் தெரிய வேண்டும்! 

இவை எதுவுமே அவரது கிரிக்கெட் சாதனைகளை மங்கச் செய்யப் போதுமான குறைபாடுகள் அல்ல! இதைத் தான் வி.சே யும் இந்தப் படத்தை தயாரிக்க முனைவோரும் புரிந்து கொண்டு தங்கள் முடிவை எடுக்கப் பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு பதிவு உலாவுகின்றது.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

23 minutes ago, Justin said:

முரளியின் "இது என் வாழ்க்கையின் மிக நல்ல நாள்" என்ற கருத்து ஒரு ambiguous ஆன கருத்து. பலர் பல காரணங்களுக்காக தமக்குள் இதே கருத்தை அந்த நாளில் நினைத்தனர், முரளி வெளியே சொன்னார், அவர் பிரபலம் என்பதால் கருத்தும் பிரபலமாகி விட்டது.

முரளி பின்னர் சொன்ன கருத்துகளும், செயல்பட்ட விதமும் அவர் முன்னர் போகிற போக்கில்  சொன்ன கருத்திற்கும் ஒரு அர்த்தம் கொடுத்து விட்டது. ஆனால், அவரால் தமிழர்களுக்கு தீமை எதுவும் ஆகி விடவில்லை. டேவிட் கமரூனே காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றிய  முரளியின் கருத்தை "அது அவரது அபிப்பிராயம்" என்று தட்டி விட்டுப் போய் விட்டார் என்றால் முரளியின் அரசியல் கருத்துகளுக்கு இருக்கும் மதிப்பு என்னவென்று எமக்குத் தெரிய வேண்டும்! 

இவை எதுவுமே அவரது கிரிக்கெட் சாதனைகளை மங்கச் செய்யப் போதுமான குறைபாடுகள் அல்ல! இதைத் தான் வி.சே யும் இந்தப் படத்தை தயாரிக்க முனைவோரும் புரிந்து கொண்டு தங்கள் முடிவை எடுக்கப் பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.

 எதுக்கு  இத்தனை சடையல்???

அந்த நேரத்தில் தமிழர்களின் மனநிலையும்

அவர் நின்று  சொன்ன  இடமும் மிகமிக தவறானவை

அதற்கான  ஒரு மன்னிப்பைக்கூட அவரால்  இதுவரை  சொல்லமுடியவில்லை

எந்தவிதமாக எவர்  செத்தாலும்

அங்கே நின்று இந்தநாள்  மகிழ்ச்சியான நாள்  என்று  எவரும் எப்போதும் சொல்லமாட்டார்கள்

சொல்லக்கூடாது

இது கூட  தெரியாதவரா நீங்கள்????

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

 

 எதுக்கு  இத்தனை சடையல்???

அந்த நேரத்தில் தமிழர்களின் மனநிலையும்

அவர் நின்று  சொன்ன  இடமும் மிகமிக தவறானவை

அதற்கான  ஒரு மன்னிப்பைக்கூட அவரால்  இதுவரை  சொல்லமுடியவில்லை

எந்தவிதமாக எவர்  செத்தாலும்

அங்கே நின்று இந்தநாள்  மகிழ்ச்சியான நாள்  என்று  எவரும் எப்போதும் சொல்லமாட்டார்கள்

சொல்லக்கூடாது

இது கூட  தெரியாதவரா நீங்கள்????

 

 

தமிழரோ, சிங்களவரோ, எவரோ, ஒரு யுத்தம் முடிந்ததை "நல்ல நாள்" என்று சொல்லாமல் எப்படி சொல்லியிருக்க வேண்டும்? கீழ் வரும் வசனங்கள் சொல்லியிருக்க வேண்டுமா?

"இன்று என் நாளில் சோகமான நாள்" 

""யுத்தம் முடிவுக்கு வந்தமை மிகவும் இருண்ட நாள்" 

 "யுத்த தொடர்ந்திருக வேண்டுமென்று விரும்புகிறேன்" 

 அதிருக்கட்டும் விசுகர், வன்னிக்குள் இருந்து வந்த எத்தனை பேர் இப்படி நினைத்தனர் அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் வெளிப்படுத்தினர் என்றாவது தெரியுமா உங்களுக்கு? தவறில்லா ஒன்றுக்கு மன்னிப்பு எதற்கு?  இது கூட தெரியாதவரா நீங்கள்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முரளியின் காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றிய கருத்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டிய கருத்து. இப்போது கூட அவர் அதைச் செய்யலாம் என்பது என் கருத்து. ஆனால், ராஜபக்ஷக்களோடு இருக்கிற நெருக்கம் காரணமாக அல்லது இன்னும் காணாமல் போனோர் என்ற தரப்பினர் இருக்கின்றனர் என்ற அறிவில்லாததாலோ அவர் அதைச் செய்யாமல் இருக்கிறார். 

ஒரு ஒப்பீட்டுக்குப் பார்த்தால் வேறு யார் இப்படி காணாமல் போவோர், அல்லது தமிழ் அரசியல் கைதிகள் பற்றி நல்ல கருத்துகள் எதுவும் கூறாமலே தமிழர்களிடையே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்? 
 அங்கஜன் என்ன சொல்லியிருக்கிறார் இதெல்லாம் பற்றி? 

எனவே, இதையெல்லாம் முரளியிடம் இப்போது எதிர்ப்பார்ப்பது ஆற்றில் தேட வேண்டியதை குளத்தில் தேடுவது போன்றது!  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" -விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்களுக்கு நடிகை ராதிகா கேள்வி

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ராதிகா

பட மூலாதாரம், RADHIKA SARATHKUMAR FB

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வலுத்து வரும் குரல்களுக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கடந்த மூன்று தினங்களாக விஜய் சேதுபதி, தமிழ் இன வெறுப்பாளரான முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிய ராஜா, கவிஞர் தாமரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனும் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தமிழ் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் போனால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் கருத்து வெளி வந்துள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? ஏன் இவர்கள் "சன் ரைஸர்ஸ்" குழுவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை? அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..?

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

விஜய் சேதுபதி ஒரு நடிகர். நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது.." என்று குறிப்பிட்டுள்ளார்.

ராதிகாவின் இந்த டிவிட்டர் பதிவு வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் இரண்டு இடுகைகளை அவர் மீண்டும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அதில் "சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை கலக்காமல் தொழில்முறையில் அவற்றை தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?" என்று ராதிகா கேள்வி எழுப்பினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

பிறகு மூன்றாவதாக பதிவிட்ட டிவிட்டில், "நான் அந்த ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலை மற்றும் தொழில்முறையுடன் அணுகும் போக்குக்கு சாட்சியாக சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்," என்று ராதிகா கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-54563590

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 

தமிழரோ, சிங்களவரோ, எவரோ, ஒரு யுத்தம் முடிந்ததை "நல்ல நாள்" என்று சொல்லாமல் எப்படி சொல்லியிருக்க வேண்டும்? கீழ் வரும் வசனங்கள் சொல்லியிருக்க வேண்டுமா?

"இன்று என் நாளில் சோகமான நாள்" 

""யுத்தம் முடிவுக்கு வந்தமை மிகவும் இருண்ட நாள்" 

 "யுத்த தொடர்ந்திருக வேண்டுமென்று விரும்புகிறேன்" 

 அதிருக்கட்டும் விசுகர், வன்னிக்குள் இருந்து வந்த எத்தனை பேர் இப்படி நினைத்தனர் அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் வெளிப்படுத்தினர் என்றாவது தெரியுமா உங்களுக்கு? தவறில்லா ஒன்றுக்கு மன்னிப்பு எதற்கு?  இது கூட தெரியாதவரா நீங்கள்?

யுத்தம் முடிக்கப்பட்ட விதத்தை  பார்த்த  எவரும் அப்படி  கூறமாட்டார்கள்

இத்தனை  பேர் எதிர்ப்புத்தெரிவிக்கும்  போது   அவ்வாறு  சொன்னது எவரையாவது  புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்பதற்கு கூடவா மனித  உயிர்கள்  மலிவானவை???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

யுத்தம் முடிக்கப்பட்ட விதத்தை  பார்த்த  எவரும் அப்படி  கூறமாட்டார்கள்

இத்தனை  பேர் எதிர்ப்புத்தெரிவிக்கும்  போது   அவ்வாறு  சொன்னது எவரையாவது  புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்பதற்கு கூடவா மனித  உயிர்கள்  மலிவானவை???

இது உங்கள் எதிர்பார்ப்பு அல்லது அபிப்பிராயம். இப்படி நினைக்க உங்களுக்கு உரிமையுண்டு.

ஆனால் இன்னொருவரின் கருத்துக்கு உங்கள் வியாக்கியானத்தை வலிந்து திணித்து அதன் அடிப்படையில் ஒரு நடவடிக்கையை எடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது! 

நான் தனிப்பட்ட உரையாடல்கள் பலவற்றில் ஊரில் கேட்டதன்படி எந்த மனித உயிரிழப்பு குறித்த கருத்துகளும் அற்று இப்படிச் சொன்ன வன்னி மக்கள் பலர்! இவர்களின் கருத்து "எப்படியாவது இது முடிந்ததே" என்றிருக்கவில்லை, முடிந்து விட்டது என்ற நிம்மதி தான். இந்த நிம்மதியை புலம்பெயர் நாடுகளில் இருந்து யுத்தத்தை கணணித் திரையில் பார்த்த பலர் அனுபவத்தில் உணர முடியாது என்பது என் அபிப்பிராயம். இதை உங்களை நோக்கிச் சொல்லவில்லை, சில புலம் பெயர் தமிழரின் நிலை அது. இந்த தாயக புலம்பெயர் உணர்வு வேறு பாட்டை நீக்குவது எப்படி என்று தான் யோசிக்க வேண்டுமேயொழிய இதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்று திட்டம் போடுவது நல்லதல்ல!     

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இது உங்கள் எதிர்பார்ப்பு அல்லது அபிப்பிராயம். இப்படி நினைக்க உங்களுக்கு உரிமையுண்டு.

ஆனால் இன்னொருவரின் கருத்துக்கு உங்கள் வியாக்கியானத்தை வலிந்து திணித்து அதன் அடிப்படையில் ஒரு நடவடிக்கையை எடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது! 

நான் தனிப்பட்ட உரையாடல்கள் பலவற்றில் ஊரில் கேட்டதன்படி எந்த மனித உயிரிழப்பு குறித்த கருத்துகளும் அற்று இப்படிச் சொன்ன வன்னி மக்கள் பலர்! இவர்களின் கருத்து "எப்படியாவது இது முடிந்ததே" என்றிருக்கவில்லை, முடிந்து விட்டது என்ற நிம்மதி தான். இந்த நிம்மதியை புலம்பெயர் நாடுகளில் இருந்து யுத்தத்தை கணணித் திரையில் பார்த்த பலர் அனுபவத்தில் உணர முடியாது என்பது என் அபிப்பிராயம். இதை உங்களை நோக்கிச் சொல்லவில்லை, சில புலம் பெயர் தமிழரின் நிலை அது. இந்த தாயக புலம்பெயர் உணர்வு வேறு பாட்டை நீக்குவது எப்படி என்று தான் யோசிக்க வேண்டுமேயொழிய இதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்று திட்டம் போடுவது நல்லதல்ல!     

உங்களது அபிப்பிராயமும் அதே கணணித்திரை  தான் என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றீர்கள்

மற்றும்படி அவரவர்  சேர்க்கைகள் சார்ந்தே கருத்துக்களும் கேள்வி  ஞானங்களும் கிடைக்கும்

உங்களது  கேள்வி  ஞானம் எனக்கு புரிகிறது

ஆனால் எனது  கேள்வி  ஞானங்களை  உங்களுக்கு புரிய  வைக்கமுடியாது

காரணம் அது  செவிடன் காதில்  சங்கூதுவது என்பதை நானும்  யாழும் அறியும்

எனவே நேரம்  பொன்னானது காண்.

டொட்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உங்களது அபிப்பிராயமும் அதே கணணித்திரை  தான் என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றீர்கள்

மற்றும்படி அவரவர்  சேர்க்கைகள் சார்ந்தே கருத்துக்களும் கேள்வி  ஞானங்களும் கிடைக்கும்

உங்களது  கேள்வி  ஞானம் எனக்கு புரிகிறது

ஆனால் எனது  கேள்வி  ஞானங்களை  உங்களுக்கு புரிய  வைக்கமுடியாது

காரணம் அது  செவிடன் காதில்  சங்கூதுவது என்பதை நானும்  யாழும் அறியும்

எனவே நேரம்  பொன்னானது காண்.

டொட்.

நான் நேரே சென்று பேசிய அனுபவங்களும், உள்ளே மாட்டுப் பட்டு தப்பிவந்தவர்களுடனான தொலைபேசி உரையாடல்களும் கணணித் திரைக் காட்சிகளை விட நம்பகமானவை என்று ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்கும், புரிந்து கொள்கிறேன், நீங்கள் விளக்க வேண்டியதில்லை! 

ஆனால் உங்கள் கேள்வி ஞானம் பற்றிய ஒரு உதாரணத்தை, செவிடனாக இருந்தாலும் இங்கே சுட்டிக் காட்ட அனுமதியுங்கள்: 

காணாமல் போனோர் யாரால் காணாமல் போனார்கள்? மகிந்த குழுவால்.

மகிந்த 2005 இல் வெல்லக் காரணமானது யார்? புலிகளின் தேர்தல் யுக்தி. இதை "இராசதந்திரம்" என்று இன்றும் புகழ்பவர் நீங்கள். 

பிறகு 2015 வரை அவரது ஆட்சியும் காணாமல் போதல்களும்.

 இன்னும் சிலர் இந்தக் களத்திலேயே, 2018 இலும் , 2020 இலும் மகிந்த குழு வந்தால் அவர்  தமிழர்களை மேலும் துன்புறுத்த, சர்வதேசம் கேட்கும், எனவே வர விடுங்கள் என்று வாதிட்டது இரகசியமல்ல! 

 கேள்வி: இந்த நிலையை நீங்களும் இன்னும் சிலரும் கொள்கையளவில் எடுத்த போது, எங்கே இருந்தது உங்கள் காணாமல் போகப் போகிற/போன உயிர்கள் பற்றிய கரிசனை? 

உங்களிடம் இல்லாத இந்த அக்கறையை, அரசியலில் செய்தி கூட வாசித்தறியாத  முரளியிடம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா?

இவாவுக்கு  நேரம் சரியில்லை .

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருபோதும் சிறிலங்கன் கிரிக்கெட் அணியை ஆதரித்ததில்லை. முரளிதரன் அதிகூடிய விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அவரது bowling action எப்போதும் ஒரு மறுவாகவே இருக்கும். முரளிதரனைப் பற்றி படம் எடுத்து அவரது  bowling action க்கு வெள்ளையடிப்பது போல ராஜபக்‌ஷக்களை ஆதரிக்கும் அரசியலுக்கும் வெள்ளையடிப்பார்கள்.

ஆனால் இந்தப்படத்திற்கு எதிராகக் கூவுகின்ற சிலர் சிறிலங்கன் கிரிக்கெட் அணியை ஆதரித்தவர்கள்/ஆதரிப்பவர்கள். அதுதான் முரண்நகை!

 

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:
1 hour ago, பிழம்பு said:

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா?

இவாவுக்கு  நேரம் சரியில்லை

சிங்களத்தில் படித்த தமிழ் பொண்ணு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசிற்கு எதிராய் தொடங்கிய போராட்டம் ,கூட போராடப் போன சக தமிழனை அழிக்க தொடங்கி ,உலக நாடுகள் ,சமாதானம் பேச வந்த நாடுகள் எல்லாத்தையும் துரோகியாக்கி, இறுதியில் பணத்திற்காய் நடிப்பவரை துரோகியாக்கும் நிலைக்கு வந்திருக்குது ...மகிழ்ச்சி 
இந்தியர்கள் இந்த படத்தை எதிர்ப்பதற்கு தமிழ் உணர்வு மண்ணாங்கட்டி காரணம் இல்லை ....பிராமணர்களுக்கு தமிழ் நாட்டினை சேர்ந்த ஒருவர் இலங்கையில் பிறந்து சர்வதேச அளவில் சாதித்து , அவருடையதும் இலங்கையணி புகழ் பாடும் ஒரு படத்தில் இந்தியரான சேதுபதி நடிப்பது அவர்களது நாட்டிற்கே அவமானம் அல்லவா?...இது தெரியாமல் இலங்கையை சேர்ந்தவர்கள் சேர்ந்து குதிப்பதை பார்க்க சிரிப்பாய் இருக்குது 
 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சிங்களத்தில் படித்த தமிழ் பொண்ணு.

அதுதான் ஏற்கனவே  அங்கு சினிமா போதை தொடர்ந்து ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்த சனம்  கொரனோ  புண்ணியத்தில் தெளிவுக்கு வந்திருக்குதுகள் .இந்த நேரத்தில் இவ வாயக்குடுத்து வாங்கி கட்டப்போறா .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இப்படியும் ஒரு பதிவு உலாவுகின்றது.

 

 

சங்கா இப்ப நல்லவரா அண்ணா:unsure: கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் அவரை துரோகி என்று எழுதின நினைவு 

 

1 hour ago, விசுகு said:

யுத்தம் முடிக்கப்பட்ட விதத்தை  பார்த்த  எவரும் அப்படி  கூறமாட்டார்கள்

இத்தனை  பேர் எதிர்ப்புத்தெரிவிக்கும்  போது   அவ்வாறு  சொன்னது எவரையாவது  புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்பதற்கு கூடவா மனித  உயிர்கள்  மலிவானவை???

யுத்தம் எப்படா முடியும் என்று காத்திருந்த புலி ஆதரவு தேசியவாதிகள் யுத்தம் முடிந்த கையேடு ஓடிப் போய் ஊரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கவில்லை...முரளி வெளிப்படையாய் சொன்னார் ...அவர்கள் சொல்லவில்லை ...யுத்தம் முடிந்த கையேடு மகிந்தாவோடு டீலிங் வைத்திருந்த லைக்கா சுபாஸ்கரனை விட முரளி துரோகி ...ஐயோ ஐயோ 
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

விஜய் சேதுபதி நீங்கள் விவேகி - வைரமுத்து

 

வயசு வித்தியாசம் பாராமல் சினிமா சான்ஸ் வேண்டுமென்றால்  படுக்க வா என்று கூப்பிட்ட பொறுக்கி இப்ப ,நல்லவராகிட்டார் 

39 minutes ago, கிருபன் said:

நான் ஒருபோதும் சிறிலங்கன் கிரிக்கெட் அணியை ஆதரித்ததில்லை. முரளிதரன் அதிகூடிய விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அவரது bowling action எப்போதும் ஒரு மறுவாகவே இருக்கும். முரளிதரனைப் பற்றி படம் எடுத்து அவரது  bowling action க்கு வெள்ளையடிப்பது போல ராஜபக்‌ஷக்களை ஆதரிக்கும் அரசியலுக்கும் வெள்ளையடிப்பார்கள்.

ஆனால் இந்தப்படத்திற்கு எதிராகக் கூவுகின்ற சிலர் சிறிலங்கன் கிரிக்கெட் அணியை ஆதரித்தவர்கள்/ஆதரிப்பவர்கள். அதுதான் முரண்நகை!

 

 

ஓமோம் நீங்கள் லண்டனில் பிறந்து வளர்ந்த சாள்ஸ் பரம்பரை ...இலங்கையணியை பிடிக்காது tw_lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஓமோம் நீங்கள் லண்டனில் பிறந்து வளர்ந்த சாள்ஸ் பரம்பரை ...இலங்கையணியை பிடிக்காது tw_lol:

சிறிலங்கா சிங்களவர்களின் நாடு, தமிழர்களின் நாடு அல்ல என்ற புரிதல் இருந்ததால் சின்ன வயதில் இருந்தே இந்திய அணிக்கு ஆதரவு☺️ 

இங்கிலாந்து அதற்கு அப்புறம்தான்😁

 

புலம்பெயர் தமிழர் யார் கூட சவுண்ட் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அள்ளியும், கிள்ளியும் கொடுப்பார்கள். அதுதான் ஒரு சிலர் கூடுதலாகக் கூவுகிறார்கள்🤪

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராதிகா சரத்குமார் தேவையில்லாமல், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து சொல்ல கிளம்பி, வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறா.... தமது பின்புலம் புரிந்து அமைதியாக இருந்திருக்கலாம்.... தவளை கத்தித்தான், பாம்பை இழுத்து வரப்பண்ணும். 🤐

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1. முரளிதரன் ஒரு சாதனையாளரே அல்ல. லக்ஸ்மன் கதிர்காமர், அர்ஜுன ரணதுங்க முயற்சியால்- தெற்காசிய நாடுகள் அனைதினதும் கூட்டு பலத்தை ஒன்று திரட்டி - இலங்கை மிக கச்சிதமாக காய் நகர்தி, பந்து வீசும் போது ஸ்பின் போலர் கைகளை 5 பாகைக்கு மேல் மடக்குதல் ஆகவே ஆகாது, என்ற விதியை முரளிக்காக, கைகளை 15 பாகை வரை மடக்கலாம் என மாற்ற வைத்தனர். இந்த விதி மாற்றம் பூகோள அரசியலால் மட்டுமே ஏற்பட்டது. விதி இப்படி மாறி இருக்காவிட்டால் - முரளி இன்றைக்கும் chucker தான். எனவே ஒரு ஏமாற்றுகாரனை போற்றத் தேவையில்லை. வேணும் என்றால் Shane Warne ஐ பற்றி படம் எடுக்கலாம்.

2. முரளி தனக்கு தமிழ் தெரியாது என 1992 முதல் சொல்லி வந்தது உண்மை. எனக்கு தனிபட்ட அனுபவம் உண்டு. ஆர்னோல்ட் ஒரு போதும் அப்படி சொன்னதில்லை. முரளி போல் ராஜபக்சேகளுக்கு ஆர்னோல்ட் ஆலவட்டம் பிடிக்கவும் இல்லை. ஆகவே யாழ்பாண வம்சாவழி ஆர்னோல்ட், கண்டி முரளி என்ற பார்வை அபத்தமானது.

3. இலங்கையில் ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் எவரும் இன முறுகல் பற்றி வாயே திறக்க முடியாது என்பதே உண்மை. இங்கே எழுதும் பலரும் இலங்கைக்கு கொலிடே போனால் கூட நவதுவாரங்களையும் மூடியபடிதான் போய் வருவார்கள். ஆகவே முரளி கருத்து சொல்லாமல் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் எதிர் பாட்டு, மிகவும் மோசமாக பாடியவர். ஆகவே அவர் விமர்சனத்துகுரியவரே.

4. புள்ளி 3 இல் சொன்ன காரணதுக்காக முரளி படத்தில் நடிக்க வேண்டாம் என வி.சே யை கேட்பது நியாயமானதே.

5. ஆனால் இனி படத்தை ஓட்டி பார், சினிமா வாழ்கையையே செஞ்சிடுவோம், அவகாசம் தந்தோம் இனி வேலையை காட்டுவோம், என்று எக்காளம் இட்டு, நேற்று வரை தமிழன் என்று கொண்டாடிய ஒருவரை இன்று தெலுங்கன் எனப் பழிப்பது எல்லாம் சுத்த மடமை.  எதிர்ப்பை பதிவு செய்வது வேறு, அநாகரீகமாக ஒருவரின் சிருஸ்டிக்கும் தனியுரிமையில் தலையிடுவது வேறு.

6. இந்த திரியை வெளியில் இருந்து வாசிக்கும் போது இங்கே கருத்து எழுதும் பலரின் முகங்களை காண முடிந்தது. கிட்டதட்ட பிக்பாஸ் பார்த்த உணர்வு. லைக்காவுடன் உறவு வைக்கும் சீமான் விசே யை எதிர்கிறார். சுரேன் ராகவனுக்கு பூச்செண்டு கொடுத்த பாரதிராஜா வி.சே யை எதிர்கிறார். இதைதானே நாமும் செய்தோம் என்ற லஜ்ஜையே இல்லாமல்.

7. இதை போலவே யாழில் தமது நண்பர்கள் குழாமில் இருப்பவர்களின் “இலங்கை விசுவாசத்தை” கண்டும் காணாமல் போபவர்கள், அதை எதிர்த்து ஒரு கேள்வியாயினும் கேட்காதவர்கள் - முரளி சட்டையில் சிங்க கொடி இருந்ததே, நான் முதலில் இலங்கையன் பிறகு தமிழன் என சொன்னாரே என கெம்பி எழுபுகிறார்கள். முரளி கிடக்கட்டும். உங்கள் நட்பு வட்டத்தில் இதை ஒத்த இலங்கை அபிமான கருத்துகள் வந்தபோது, நீங்கள் ஆற்றிய எதிர்வினைதான் என்ன? உங்கள் யாழ் கள நட்புகளுக்கு ஒரு அளவுகோல், முரளிக்கு இன்னொரு அளவு கோலா? அப்போ முரளி உங்களுக்கு நண்பன் என்றால் அதிலும் அடக்கி வாசிப்பீர்கள்!

8. முடிவாக - மேலே புள்ளி 7இல் பார்த்தது போல - யாழ் களத்தில் எழுதுபவர்கள் முதல், சீமான், பாரதிராஜா வரை எல்லார் அணுகுமுறையில் தெறிப்பதும் சுயநலமே. 

இன அபிமானம், தார்மீக கோபம் எதுவுமில்லை. எமக்கு வேண்டபட்டவர் செய்தால் மூடிகொண்டிருப்போம். அதுவே ஒரு நடிகர், பொது வெளியில் உள்ளவர் என்றால் - ஆச்சோ, போச்சோ என்று எழுதுவோம்.

மக்கள் செல்வன், மக்களின் மன ஓட்டத்துக்கு மதிப்பளித்து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு தாழ்மையான வேண்டுகோள். அவ்வளவுதான்.

Edited by goshan_che
கைகளை மடக்கும் பாகை பற்றிய விதி பற்றிய மேலதிக விளக்கம் சேர்க்கப்பட்டது
 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

மானாட மயிலாட பார்த்துக்கொண்டாவது பணங்களையு உதவிகளையும் அள்ளி வழங்கி உணர்ச்சிகரமாக இருந்தனர்.இன்றும் தாயக ஏக்கங்களுடனேயே இருக்கின்றனர். உங்களைப்போல் விசா ஏக்கங்கள் இல்லை. விசாவிற்காக தாலி கட்டியவர்களும் அல்லர்.

ஆனால் அன்று தொடக்கம் இந்த நொடி வரைக்கும் புலிகளையே வசைபாடி வயிறு வளர்த்துக்கொண்டிருப்பவர்களை விட மானாட மயிலாடல்காரர் நேர்மை நியாயமானவர்கள்.

கடைசியாக தங்களுக்கு ஒரு வசனம். யாருமே  விஜய் சேதுபதிக்கு எதிரிகள் அல்ல. மாறாக ரசிகர்கள். விஜய் சேதுபதி தவறான ஒருவருக்கு  வேடம் கொடுத்து புனிதராக காட்டமுனையக்கூடாது என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂

கடைசியாக தங்களுக்கு ஒரு வசனம். யாருமே  விஜய் சேதுபதிக்கு எதிரிகள் அல்ல. மாறாக ரசிகர்கள். விஜய் சேதுபதி தவறான ஒருவருக்கு  வேடம் கொடுத்து ......முரளிதரனை  புனிதராக காட்டமுனையக்கூடாது என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

அண்ணை இதில் நம்மளப் பத்தி நல்ல கற்பனைகள் எழுதி இருக்கீங்க.

அதைவிட்டிட்டு.. இப்ப விடயத்துக்கு வருவோம்..

முரளிதரனை மகிந்தவை ஆதரித்த..  தமிழினப் படுகொலையை.. ஆதரித்த.. புனிதராகக் காட்ட விஜய் சேதுபதி குறித்த பாத்திரத்தில்....நடிக்கிறாரா..??! இல்லை என்றே நினைக்கிறோம். ஒரு உலக சாதனை கிரிக்கெட் வீரர் என்ற வகையில் முரளியை பிரதியீடு செய்து பிழைக்க வந்திருக்கிறார் என்றே நினைக்கிறோம்.

விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றால்.. ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ நடித்து.. முரளியை எல்லா வகையிலும் புனிதனாக்கவும் முடியும் தானே..???! 

எமது போராளிகளை.. குழந்தைப் போராளிகளாகச் சித்தரித்து வந்த படத்துக்கு நாம என்ன தடையா வாங்கினோம்..?! எம்மவர்களே அதையொட்டி.. பிரான்சிலும் பிரன்ஞ் மொழியில் படம் எடுத்து.. தம்மை பிரபல்யமாக்கினார்களே... எம்மால் என்ன செய்ய முடிந்தது..

எவராவது.. எமது குழந்தைகள்.. சிங்களத்தால் படுகொலை செய்யப்பட்டதை படம் எடுத்துக்காட்டி இருக்கிறார்களா..

ஒரு குமுதினிப் படுகொலை.. ஒரு நவாலிப் படுகொலை.. ஒரு நாகர்கோவில் படுகொலை.. செஞ்சோலைப் படுகொலை..இப்படி எண்ணிலடங்காத படுகொலைகளில் எமது குழந்தைகள் கொல்லப்பட்டதை.. அரச படைகளால்.. அதன் கூலிக் கும்பல்களால் கொல்லப்பட்டதைக் காட்டியதே இல்லையே.. ஆனால்.. சிறுவர் போராளிகள் என்ற தலைப்பில் எம்மவர்களே படம் எடுத்து விட்டு எமது போராட்டத்தை கொச்சைப்படுத்திய போது நாம் வாழாது தானே இருந்தோம்.

எமது போராட்டத்தை மிகக் கீழ்த்தரமாக.. சித்தரித்து எமது போராளிகளை பாலியல் துஷ்பிரயோகக் காரர்களாக எம்மவர்களே சித்தரித்து..தம் எழுத்துப் புகழ்ச்சி தேடி இதே யாழில் எழுதிய போதும் கூட எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லையே..

அப்படி இருக்கும் போது.. ஒரு கிரிக்கெட் ரசிகனாக விஜய் சேதுபதிக்கு.. முரளியை பிடித்து.. (யாழில் முரளி.. சங்ககாராவுவின் இரட்டை அணுகுமுறைகளை முகத்திரைகளை கிழித்தெறிய தொடர்ந்து எழுதுவர்களில்.. நாங்களும் அடங்குவோம்.. இப்போதும் சொறீலங்கா கிரிக்கெட் அணியையோ அதுச் சார்ந்தவர்களையோ ஆதரித்தது கிடையாது.. கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்று சொறீலங்கா அணியை ஆதரிப்பதையும் சாடியவர்களில் நாங்களும் அடங்குவோம்..) திரை நகலாக நடிப்பது அவருடைய சொந்த விடயம்.

அவரா மக்களின் உணர்வுகளைப் புரிந்து விலகுவது வேறு.. நாங்கள் எல்லோரும்.. புனிதர்களாக இருந்து கொண்டு.. விஜய் சேதுபதி மட்டும் தான்.. முரளி கதாப்பாத்திரம் ஏற்றதன் மூலம் துரோகி ஆகிவிட்டார் என்பது என்னவோ... சகிக்கக் கூடியதாக இல்லை.

இதே களத்தில் எமது போராடத்தை கொச்சைப்படுத்தி.. ஆயுத எழுத்தை சாத்திரி என்பவர் எழுதிய போது.. அதற்கு மறைமுக ஆதரவு வழங்கியவர்கள் பலர். அதையே தடுக்க வக்கற்று நின்ற நாம்.. இன்று விஜய் சேதுபதியை திட்டுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இன்று அந்த சாத்திரி.. இலக்கிய கர்த்தா ஆகிவிட்டார்... நாளை சேதுபதி மகா நடிகன் ஆகினால்.. அதற்கும் நாம் தான் பொறுப்பு. முரளி அல்ல. 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.