Jump to content

பனையோலை உற்பத்தி பற்றிய அறிவு

Recommended Posts

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரிலேயே இலங்கையில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. பனையோலையில் செய்யப்படும் தொப்பி, கைப்பை, இடைப்பட்டி போன்றவற்றுக்கு நல்ல சந்தைவாய்ப்பு சர்வதேச மட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த பொருட்களுக்கு தேவையான குருத்தோலை குறைவாகவே கிடைக்கிறது. இதுபற்றி தெரிந்தவர்கள் கருத்து சொல்ல முடியுமா? போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சமுகசேவை நிறுவனங்களூடாக உதவ இந்த கருத்துபரிமாற்றம் வழிவகுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கற்பகதரு இதற்கு பல காரணங்கள் இருக்கு

1. பலரின் வீடுகளின் கூரைகள் இப்ப பனையொலை இல்லை- அதனால் குருத்தோலை கிடைப்பது கஷ்டம்

2. போரினல் பல பனைகள் அழித்துவிட்டது.

3. இருக்கும் பனைகளை பராமரிப்பது குறைவு கள்ளெடுக்கும் பனைகளை தவிர. இதனால் மரத்தில் ஏறுவது கஷ்டம் பன மட்டைகள் இருப்பதால்

4. ஒரு குருத்தோலைக்கு பனை ஏறி இறங்க கொடுக்கும் கூலி கூட, ஒருவரால் 10 பனைக்கு மேல் ஏறுவது கஷ்டம் அப்படி ஏறுபவர்கள் இப்ப குறைவு.

நவீன முறையில் இயந்திரங்களை வைத்து ஏறுவதற்கு வழி கண்டு பிடிக்கனும்

பனையொலை உற்பத்தி பொருட்களுக்கு கேள்வி குறைவு. கனக்க செலவிழிக்க முடியாது. இலகுவாக வெட்டி எடுப்பதற்கு ஏணி போன்ற உபகரணங்களை கண்டுபிடிக்க வேண்டும்

4 hours ago, கற்பகதரு said:

பனை நடுகையை ஊக்கப்படுத்த வேண்டும் வட கிழக்கில்

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

நன்றி, பனங்கொட்டையிலிருந்து பனம் வடலி ஒன்று உருவாகி, குருத்தோலை தருமளவுக்கு வளர எவ்வளவு காலம் எடுக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

நன்றி, பனங்கொட்டையிலிருந்து பனம் வடலி ஒன்று உருவாகி, குருத்தோலை தருமளவுக்கு வளர எவ்வளவு காலம் எடுக்கும்? 

முழுப் பனை வளர்ச்சிக்கு 12-15 வருடமெடுக்குமென கேள்விப்பட்டேன,

சிறிய பனை வடலிகளின் குருத்தோலைகள் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை, தரம் குறைவாக இருக்குமென நினைக்கின்றேன். குருத்தோலை அளவும் சிறியதாக இருக்கும்

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

முழுப் பனை வளர்ச்சிக்கு 12-15 வருடமெடுக்குமென கேள்விப்பட்டேன,

சிறிய பனை வடலிகளின் குருத்தோலைகள் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை, தரம் குறைவாக இருக்குமென நினைக்கின்றேன். குருத்தோலை அளவும் சிறியதாக இருக்கும்

தகவல்களுக்கு நன்றி.

பனைமரங்களின் சொந்தக்காரருக்கு எப்படி பணம் கொடுக்கப்படுகிறது என்று தெரியமா? வருடம் காணிக்கு குத்தகை மாதிரியா? அல்லது மரத்துக்கு பணம் கொடுக்கப்படுகிறதா?

மரம் ஏறும் தொழில் இலாபமற்றது என்பது புரிகிறது. பனையை பணம் தரும் பயிராக்க மரம் ஏறும் இயந்திரங்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கி இருக்கின்றன. இவற்றில் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நான் 80களில் ஒரு மரத்திற்கு 150/-  உரிமையாளருக்கு கொடுத்தவர்கள் கள்ளு இறக்குவதற்கு  (ஒரு சீசனுக்கு), பனை ஓலை வெட்ட 50-75 ரூபா ஒரு மரத்திற்கு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும், இப்ப சத்தியமா தெரியாது.

குருத்தோலை வெட்டுவது மட்டுமென்றால் குறைவாக இருக்கும்.

நீங்கள் திருவடிநிலை பொன்னாலை காட்டுக்கு போனால் அங்கு பல மரங்கள் இருக்கின்றது இப்பவும், இலவசமாக வெட்டி எடுத்து வரலாம். ஒரு ஏணி கொண்டு போனால் சரி. ஏதுக்கும் ஊர் விதானையுடன் ஒரு ஒப்பத்தம் போட்டால், நல்ல குருத்தோலைகள் வெட்டி எடுக்காலம்.

எனக்கு இப்ப அங்கு யாரையும் தெரியா, தெடர்பு எடுத்து தருவதிற்கு

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

நல்ல தகவல்ளுக்கு நன்றி. மேலும் ஒரு ஆய்வாளரை சம்பளத்துக்கு அமர்த்தி இன்றைய விலைகள், இலவசமாக பனையேறக் கூடிய இடங்களை ஆய்வு செய்ய நினைக்கிறேன். பனையோலையை கடதாசியால் 6 மாதங்களுக்கு மூடிவிட்டால் குருத்து போல வெளிறிவிடும் என்று யாழ். பல்கலைக்கழக ஆய்வு தெரிவிப்பதாக பனம்பொருள் அபிவிருத்தி சபை தகவல் பரிமாறியுள்ளது. ஆகவே  குருத்தோலை கிடைக்கும் அளவை கூட்டவும் முடியும். கீழே உள்ளது போன்ற ஏணியை உள்ளூரில் உற்பத்தி செய்தால் பனையேற உதவும் போல தெரிகிறது. இது 21 அடி உயரம்.

4265989_2000x2000.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருத்தோலையை கவனமாக வெட்டி காயவிட்டு நன்றாக பதப்படுத்தி எடுத்தால்தான், நீண்ட காலத்திற்கு பயன்படும், தரமானதாக இருக்கும். வடிவாக காய விடாத குருத்தோலைகளை சேமித்து வைக்கும் போது இலைகளுக்குகிடையில் பூச்சனம் பிடித்துவிடும், கவனமாக இருக்கவேண்டும் இதில்

சூரிய ஒளியில் இயற்கையாக காயவிட்டு எடுத்த குருத்தோலைகள் நீண்ட காலத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் பழுதாகமல் இருக்கும்.

குளிர் காலங்களில் பூச்சனம் பிடிக்கும் சாத்தியம் அதிக மென்பதால் குருத்தோலைகளை விரிந்து வைப்பது நல்லது

Link to comment
Share on other sites

11 hours ago, உடையார் said:

உடையார்,

பனம் பொருள் அபிவிருத்தி சபை இணைத்தளம் பூஞ்சணத்தில் இருந்து பாதுகாக்கவும் நிறத்தை பேணவும் சில இரசாயனங்களை பரிந்துரைத்துள்ளனர். அவர்களிடம் இதற்கான ஆய்வுகூடமும் உள்ளது. இந்தியாவில் மஞ்சள் நீரில் குருத்தோலைகளை அவிப்பதாகவும் விளக்கி உள்ளனர். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.