Jump to content

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை

 

கூடலூர், 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைகிறது. இதை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் பொங்கல் வைத்தும், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.


தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் கட்டினார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தமிழக அரசு கூடலூர் லோயர்கேம்பில் நினைவு மணிமண்டபமும், முழு உருவ வெண்கலசிலையும் அமைத்துள்ளது.

கடந்த 1895-ம் ஆண்டு பென்னிகுவிக் இந்த அணையை கட்டி முடித்தபின் அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதன்முதலாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு நேற்றுடன் 125 ஆண்டு முடிவடைகிறது.

இதை முன்னிட்டு 5 மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் குருவனாற்று பாலத்தில் இருந்து முல்லைப்பெரியாற்றில் மலர்கள் தூவி விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணி கடந்த 1887-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 1895-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு அதே வருடம் அக்டோபர் 10-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் உயரம் 155 அடியாகும். இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்)ஆகும்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக 1886-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சென்னை மாகாணம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டு வாடகையாக ரூ.5 கட்டவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/11053540/Farmers-respect-Pongal.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி..

உயர்ந்த மலை முகடுகளுக்கு நடுவே பெரியார் அணை அமைக்கப்பட்டுள்ள நீர்பிடிப்பு பகுதி, கட்டியுள்ள அணையை பார்த்தால் புரியும். எனக்கு அந்த அருமையான வாய்ப்பு அரசுப் பதவியில் இருக்கும்போது கிட்டியது.

இப்பகுதியில் அணை அமைத்து தண்ணீரை சேமித்து, பின்பக்கமாக தமிழகத்திற்கு திருப்பிவிட மலையில் கால்வாய், குகை அமைத்துள்ள பொறிமுறை, இயற்கையின் சவால்களுக்கு முகம் கொடுத்து வறண்டிருந்த கம்பம், தேனி பகுதிகளுக்கு பசுமையை காட்டியது. வைகை அணைக்கு நீரை தருபவைகளில் இதுவும் ஒன்று.

பொறியாளர் திரு.பென்னிகுயிக் என்றும் போற்றுதலுக்கு உரியவர்..! 🙏

இவரின் நினைவாகவே இன்றும் தேனி பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக் பெயரும், தமிழக அரசின் சார்பாக கம்பம் பள்ளத்தாக்கில் அவருக்கு நினைவு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

1*iY_tuAb0tcEEbuhaYs4yAg.jpeg

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோண் பென்குவிக் கட்டிய அணைக்குப் பின்னர் வேறு அணைகள் தமிழகத்தில் ஏதேனும் கட்டப்பட்டதா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

ஜோண் பென்குவிக் கட்டிய அணைக்குப் பின்னர் வேறு அணைகள் தமிழகத்தில் ஏதேனும் கட்டப்பட்டதா 🤔

இருக்கின்றன..

ஏறக்குறைய 115 அணைகள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

https://en.wikipedia.org/wiki/List_of_dams_and_reservoirs_in_Tamil_Nadu

ஆனால் இவற்றில் வடிமைத்து கட்டி முடிக்க சவாலானது, முல்லைப் பெரியார்(176 ft) மற்றும் சோலையாறு(106 ft) அணைகள் மட்டுமே..ஏனெனில் இவற்றின் ஆழம் 100 அடிகளுக்கு மேலே.

அணையின் ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க தண்ணீரின் அழுத்தம்(Water head or Hydraulic head) அணையின் அடியில் மிக அதிகமாகவே இருக்கும், அதுவே பொறியாளர்களுக்கு நீண்ட காலத்துக்கு அணையின் இருப்பை வடிவமைக்க சவாலானது.

Hydraulic_head.PNG

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.