Jump to content

சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது: ஆராய்ச்சி முடிவில் தகவல்


Recommended Posts

சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது: ஆராய்ச்சி முடிவில் தகவல்

siddha-treatment-for-covid-19 நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்.
 

திருப்பத்தூர்

நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 60 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் இதுவரை 490 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 437 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இறப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நேற்றைய நிலவரப்படி 5,495 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், நாட்றாம்பள்ளி அரசு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 7 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (CTRI) ஒப்புதலோடு நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளின் ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதற்கான ஆய்வில் 20 கரோனா நோயாளிகள் கலந்து கொண்டனர். அதில், 19 பேர் 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆய்வின் ஆதாரமாக உள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், முதன்மை சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார் கூறியதாவது:

"மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சித்த மருத்துவர் சுசி.கண்ணம்மா தீவிர முயற்சியால், நாட்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் நம் மரபுகளை நாம் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகிறோம் எனக் கூறிக்கொண்டு நம் அடையாளங்களைத் தொலைத்து வருகிறோம். அதை நாங்கள் மீண்டும் திருப்பி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்.

நம் உடலுக்கும், மனத்துக்கும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பாரம்பரிய உணவுகளை நம்மில் பல பேர் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மக்கள் மறந்துபோன உணவு வகைகளை மீண்டும் காட்சிப்படுத்தி அதை நம் முன்னோர்கள் எப்படி சமைத்துச் சாப்பிட்டார்களோ அதைப்போலவே சமைத்துக் கொடுத்து, கரோனா போன்ற கொடிய வைரஸ் நோயில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தோம். மருந்துகள் சாப்பிட்ட பிறகும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக IL-6, LDH, D-Dimer, COVID Anti Body என்ற ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருந்துகளின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கரோனா நோய் காரணமாக ரத்தத்தில் அதிகரித்திருந்த பல விஷயங்கள் ஆய்வின் முடிவில் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும், இருமல், சளி, மூக்கடைப்பு, மணம் அறியாமை, சுவை அறியாமை, தொண்டைக்கரகரப்பு, வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சித்த மருந்துகள் மூலம் படிப்படியாக குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த செயல்பாடுகளில் ஆய்வுக்கு முன்பும், பின்பும் மிகப்பெரிய மாற்றங்கள் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் உலகைத் திரும்பிப் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்கான ஆய்வறிக்கையை தற்போது தொடங்கியுள்ளோம். விரைவில் அறிவியல் தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் பதிவு செய்யப்படும்".

இவ்வாறு விக்ரம்குமார் தெரிவித்தார்.

https://yarl.com/forum3/forum/222-covid-19-coronavirus-பாதுகாப்பு-வழிமுறைகள்-மற்றும்-ஆலோசனைகள்/?do=add

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.