Jump to content

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍

 

போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதநீர் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள் 😀

கேள்வியே பிழை பிறகெப்படி பதில் எழுதுவது 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍

 

போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀

ஐயோ.....ஐயோ மதுவும் மாதுவும் ஒண்டாய் நிக்குதே..
கையோடை சூடை மீன் பொரியலும் இருந்தால் எல்லாம் சொர்க்கமே..😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐயோ.....ஐயோ மதுவும் மாதுவும் ஒண்டாய் நிக்குதே..
கையோடை சூடை மீன் பொரியலும் இருந்தால் எல்லாம் சொர்க்கமே..😍

சாதாரண மனித புத்தியே இதுதான் 
இன்னமும் மனித குலம் சீர்கெட்டு அழிவதுக்கு 
அடிப்படை காரணமே இதுதான் 

இவ்வளவும் இருக்கும்போது 
ஆகா இந்த இரண்டுமே ஒன்றாக கிடைத்திருக்கிறதே 
நான் ஒரு பாக்கியசாலி என்று உணர்ந்து 
சொர்க்கத்தை அனுபவிக்க சாதாரண 
மனித அறிவு எனோ மறுக்கிறது 
எதும் இல்லாத ஒன்றை அதுக்குள் 
புகுத்தி அது இல்லாமல் போய்விட்டதே 
என்று கையில் இருப்பதின்  அருமையும் அறியாமல் 
வீணாகி ஏங்கி ஏங்கி அலைகிறார்கள்.  

ஒரு அழகிய பெண்ணும் 
தென்னம் கள்ளும் கூடவே இருக்கு 
இதுக்குள் மீன் பொரியல் இல்லை என்று 
ஏங்குவது என்பது எங்கள் எல்லோருக்கும் 
இருக்கும் சாதாரண அறிவுதான் 

இதைக் கடந்து  நீங்கள் ஒரு ஜோகி போல 
இந்த பிரபஞ்சம் இததனை அழகா?
என்று பூரித்து ரசித்து பிரமித்து 
வாழ்வை ஒவ்வரு நாளும் ரசனையுடனும் 
மகிழ்வாகவும் வாழ 

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

வடிவங்கள் ஊடக 
வடிவமைத்தவனுடன் 
உறவு கொள்ளும் ஓர் பாக்கிய நிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

சாதாரண மனித புத்தியே இதுதான் 
இன்னமும் மனித குலம் சீர்கெட்டு அழிவதுக்கு 
அடிப்படை காரணமே இதுதான்
 

இவ்வளவும் இருக்கும்போது 
ஆகா இந்த இரண்டுமே ஒன்றாக கிடைத்திருக்கிறதே 
நான் ஒரு பாக்கியசாலி என்று உணர்ந்து 
சொர்க்கத்தை அனுபவிக்க சாதாரண 
மனித அறிவு எனோ மறுக்கிறது 
எதும் இல்லாத ஒன்றை அதுக்குள் 
புகுத்தி அது இல்லாமல் போய்விட்டதே 
என்று கையில் இருப்பதின்  அருமையும் அறியாமல் 
வீணாகி ஏங்கி ஏங்கி அலைகிறார்கள்.  

ஒரு அழகிய பெண்ணும் 
தென்னம் கள்ளும் கூடவே இருக்கு 
இதுக்குள் மீன் பொரியல் இல்லை என்று 
ஏங்குவது என்பது எங்கள் எல்லோருக்கும் 
இருக்கும் சாதாரண அறிவுதான் 

இதைக் கடந்து  நீங்கள் ஒரு ஜோகி போல 
இந்த பிரபஞ்சம் இததனை அழகா?
என்று பூரித்து ரசித்து பிரமித்து 
வாழ்வை ஒவ்வரு நாளும் ரசனையுடனும் 
மகிழ்வாகவும் வாழ 

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

வடிவங்கள் ஊடக 
வடிவமைத்தவனுடன் 
உறவு கொள்ளும் ஓர் பாக்கிய நிலை 

மனிதன் மனிதனாக இருப்பதில் தவறில்லையே 😂 

நான் மனிதன் 😎

(😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Maruthankerny said:

...

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

...

giphy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

மனிதன் மனிதனாக இருப்பதில் தவறில்லையே 😂 

நான் மனிதன் 😎

(😜)

மனிதர்கள் மனிதர்களாக இல்லை 
அதுதான் அடிப்படை பிரச்சனையே 
நாம் எல்லோரும் மனிதர்களாக 
இருந்து இருப்பின் சொர்க்கம் போன்ற 
இலங்கை தீவில் அமைதியாக வாழ்ந்திருப்போம் 
இனம் மதம் சாதி என்று சண்டை போட 
எமக்கு நேரம் இருந்து இருக்காது 
எமது ஆயுள் வெறும் 100  வருடம்தான் 

3000 வருடங்கள் முன்பு எங்கள் 
மூதையார்கள் கண்ட சமணம் சைவம் 
போன்ற மதங்கள் ஊடாக நீங்கள் 
படிக்கும்போது அவர்கள் 
மனிதர்களுக்கு 9 அறிவு என்கிறார்கள் 
இதில் நிறைய தர்க்கம் இருக்கலாம் 
ஆனால் அவர்கள் செல்ல வரும் 
அடிப்படை கருவில் தர்க்கம் செய்ய ஒன்றும் இல்லை 
நாம் எமது மூளையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே 
பயன்படுத்துகிறோம் எமது முன்னோர்கள் 
சமணம் சைவம் ஊடக மிகுதி இரண்டு பகுதியையும் 
எவ்வாறு செயல்படுத்துவது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்
(பிரைன் இன்பினிட்  சேர்குய்ட்) உருவாக்கி 
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் 
எவ்வளவு வேண்டுமானலும் பாடமாக்கி வைத்து கொள்ளலாம் 
எவ்வளவு காலத்துக்கும் அதை ஞாபகம் வைத்து கொள்ளலாம் 
அதுக்கு இதுதான் எல்லை என்று ஒரு அளவு இல்லை 
எனறும் அந்த மூளையின் பகுதிகளை எவ்வாறு 
தியானத்தின் ஊடாக தூண்டுவது என்றும் 
எழுதி வைத்திருக்கிறார்கள். 

மிருகங்களுக்கு ஐந்து அறிவு 
அதுக்கு உணவு தேட தெரியும் 
வாழ்வதுக்கு உரிய சூழலை கண்டறிய தெரியும் 
எதிரி வந்தால் சண்டை போட்டு 
தற்காத்து கொள்ள தெரியும் 
உடலுறவு செய்ய தெரியும் 
அதன் மூலம் வரும் சிசுவை பிறப்பித்து 
வளர்த்து ஆளாக்க தெரியும் 
(சில மனிதர்கள் இதுக்கும் தள்ளாடுகிறார்கள்.
இது பகிடி இல்லை நீங்களே எத்தனையோ கவுன்சிலிங் 
ஆபீசுகளை கண்டிருப்பீர்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்) 
இது ஒரு சாதாரண 3 வயது மனித குழந்தையின் 
அறிவோடு ஒப்பிட்டு பார்க்கலாம் 
பின்பு மனிதன் வளர வளர அறிவு வளர்கிறது.

 
எமது மூதாயரின் எழுத்துக்களின் படி 
அவர்கள் ஏழாவது அறிவை தலைமை தகவத்துவமாக 
கொள்கிறார்கள் ஆறாம் அறிவு குழு ஒன்றை 
வழி நடத்துவது இதுக்குள் விஞ்ஞானிகள்  கண்டுபிடிப்பாளர்களை 
தத்துவ ஞானிகள் அறிஞர்களை கவிஞர்களை உள்ளடக்குகிறார்கள் 
அவர்களுக்கு அந்த ஏழாம் அறிவு தூண்டும்போது 
இவ்வாறான ஒரு சக்தியை மூளையில் உருவாக்கி கொள்ள முடியும் 

இதை தாண்டி எட்டாம் அறிவு தூண்டும்போது 
அவர்கள் ஆன்மீகவாதி ஆகிறார்கள் 
கள்ள சுவாமிகளை விட்டு விட்டு பெருத்த ஆண்மீகவாதிகளை 
பார்த்தீர்களே ஆனால் அவர்கள் பெருத்த படிப்பு படித்து 
பல சாதனை செய்தவர்களாக இருப்பார்கள் 
ஏன் இவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு 
வெறுமனே ஆண்மீகம் என்று போகிறார்கள் என்றால் 
எட்டாம் அறிவின் தூண்டுதல்தான் 
அடிப்படை காரணமாகிறது என்று 
எமது சமண சமயம் சொல்கிறது 
மனிதர்களின் அறிவை ஐ க்கு மூலம் 
அளவிடலாம் என்றால் இவர்களை எஸ் க்கு 
என்கிற ஸ்பீருச்சுவல் கேள்விகள் மூலம்தான் 
அளவிட முடியும் அவர்கள் ஆதி மூலத்தை 
அறிகிறார்கள் அல்லது உணர்கிறார்கள் 
என்று கொள்ளலாம் இப்போதான் சாமி ஆனால் 
இமயமலைக்கு ஓடிவிடுவான் என்று 
அற்பமாகவும் பிச்சை கராராகவும் பார்க்கிறார்கள் 
முன்னைய காலத்தில் ரிஷிகள்தான் 
எமக்கு தேவையான அற்ப அறிவு பெட்டகங்களை தந்தவர்கள் 

9 து முழுமை அடைவது 

இது பற்றி எழுத ஒரு தனி திரி வேண்டும் ஆதலால் 
இங்கு நிறுத்திக்கொள்கிறேன் இவற்றை எல்லாம் 
செய்ய நீங்கள் துறவம்  கொள்ள தேவை இல்லை 
காவி என்பதே இப்போ சங்கராச்சாரியார் காலத்தின் பின்பு 
வந்தது முன்பு எமது திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் 
எல்லாம் குடும்ப வாழ்வில் இருந்து ஞானம் கண்டவர்கள்தான் 

நீங்கள் ஒரு என்ஜியாராக இருந்துகொண்டு இந்த ஆற்றலை 
பெறும்போது பெருத்த என்ஜினியர் ஆகுவீர்கள் 
மருத்துவர்களும் அவ்வாறுதான் அவர்கள் பல 
அசாதாரண மருத்துவத்தை கண்டறிவார்கள் 

நாம் மனிதராக இல்லை என்பதுதான் உண்மை 
மனிதராகுவதுக்கு காஜலிசம் கற்று கொள்ளுங்கள் 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

 

3 hours ago, Maruthankerny said:

 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

மனிதர்கள் மனிதர்களாக இல்லை 
அதுதான் அடிப்படை பிரச்சனையே 
நாம் எல்லோரும் மனிதர்களாக 
இருந்து இருப்பின் சொர்க்கம் போன்ற 
இலங்கை தீவில் அமைதியாக வாழ்ந்திருப்போம் 
இனம் மதம் சாதி என்று சண்டை போட 
எமக்கு நேரம் இருந்து இருக்காது 
எமது ஆயுள் வெறும் 100  வருடம்தான் 

3000 வருடங்கள் முன்பு எங்கள் 
மூதையார்கள் கண்ட சமணம் சைவம் 
போன்ற மதங்கள் ஊடாக நீங்கள் 
படிக்கும்போது அவர்கள் 
மனிதர்களுக்கு 9 அறிவு என்கிறார்கள் 
இதில் நிறைய தர்க்கம் இருக்கலாம் 
ஆனால் அவர்கள் செல்ல வரும் 
அடிப்படை கருவில் தர்க்கம் செய்ய ஒன்றும் இல்லை 
நாம் எமது மூளையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே 
பயன்படுத்துகிறோம் எமது முன்னோர்கள் 
சமணம் சைவம் ஊடக மிகுதி இரண்டு பகுதியையும் 
எவ்வாறு செயல்படுத்துவது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்
(பிரைன் இன்பினிட்  சேர்குய்ட்) உருவாக்கி 
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் 
எவ்வளவு வேண்டுமானலும் பாடமாக்கி வைத்து கொள்ளலாம் 
எவ்வளவு காலத்துக்கும் அதை ஞாபகம் வைத்து கொள்ளலாம் 
அதுக்கு இதுதான் எல்லை என்று ஒரு அளவு இல்லை 
எனறும் அந்த மூளையின் பகுதிகளை எவ்வாறு 
தியானத்தின் ஊடாக தூண்டுவது என்றும் 
எழுதி வைத்திருக்கிறார்கள். 

மிருகங்களுக்கு ஐந்து அறிவு 
அதுக்கு உணவு தேட தெரியும் 
வாழ்வதுக்கு உரிய சூழலை கண்டறிய தெரியும் 
எதிரி வந்தால் சண்டை போட்டு 
தற்காத்து கொள்ள தெரியும் 
உடலுறவு செய்ய தெரியும் 
அதன் மூலம் வரும் சிசுவை பிறப்பித்து 
வளர்த்து ஆளாக்க தெரியும் 
(சில மனிதர்கள் இதுக்கும் தள்ளாடுகிறார்கள்.
இது பகிடி இல்லை நீங்களே எத்தனையோ கவுன்சிலிங் 
ஆபீசுகளை கண்டிருப்பீர்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்) 
இது ஒரு சாதாரண 3 வயது மனித குழந்தையின் 
அறிவோடு ஒப்பிட்டு பார்க்கலாம் 
பின்பு மனிதன் வளர வளர அறிவு வளர்கிறது.

 
எமது மூதாயரின் எழுத்துக்களின் படி 
அவர்கள் ஏழாவது அறிவை தலைமை தகவத்துவமாக 
கொள்கிறார்கள் ஆறாம் அறிவு குழு ஒன்றை 
வழி நடத்துவது இதுக்குள் விஞ்ஞானிகள்  கண்டுபிடிப்பாளர்களை 
தத்துவ ஞானிகள் அறிஞர்களை கவிஞர்களை உள்ளடக்குகிறார்கள் 
அவர்களுக்கு அந்த ஏழாம் அறிவு தூண்டும்போது 
இவ்வாறான ஒரு சக்தியை மூளையில் உருவாக்கி கொள்ள முடியும் 

இதை தாண்டி எட்டாம் அறிவு தூண்டும்போது 
அவர்கள் ஆன்மீகவாதி ஆகிறார்கள் 
கள்ள சுவாமிகளை விட்டு விட்டு பெருத்த ஆண்மீகவாதிகளை 
பார்த்தீர்களே ஆனால் அவர்கள் பெருத்த படிப்பு படித்து 
பல சாதனை செய்தவர்களாக இருப்பார்கள் 
ஏன் இவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு 
வெறுமனே ஆண்மீகம் என்று போகிறார்கள் என்றால் 
எட்டாம் அறிவின் தூண்டுதல்தான் 
அடிப்படை காரணமாகிறது என்று 
எமது சமண சமயம் சொல்கிறது 
மனிதர்களின் அறிவை ஐ க்கு மூலம் 
அளவிடலாம் என்றால் இவர்களை எஸ் க்கு 
என்கிற ஸ்பீருச்சுவல் கேள்விகள் மூலம்தான் 
அளவிட முடியும் அவர்கள் ஆதி மூலத்தை 
அறிகிறார்கள் அல்லது உணர்கிறார்கள் 
என்று கொள்ளலாம் இப்போதான் சாமி ஆனால் 
இமயமலைக்கு ஓடிவிடுவான் என்று 
அற்பமாகவும் பிச்சை கராராகவும் பார்க்கிறார்கள் 
முன்னைய காலத்தில் ரிஷிகள்தான் 
எமக்கு தேவையான அற்ப அறிவு பெட்டகங்களை தந்தவர்கள் 

9 து முழுமை அடைவது 

இது பற்றி எழுத ஒரு தனி திரி வேண்டும் ஆதலால் 
இங்கு நிறுத்திக்கொள்கிறேன் இவற்றை எல்லாம் 
செய்ய நீங்கள் துறவம்  கொள்ள தேவை இல்லை 
காவி என்பதே இப்போ சங்கராச்சாரியார் காலத்தின் பின்பு 
வந்தது முன்பு எமது திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் 
எல்லாம் குடும்ப வாழ்வில் இருந்து ஞானம் கண்டவர்கள்தான் 

நீங்கள் ஒரு என்ஜியாராக இருந்துகொண்டு இந்த ஆற்றலை 
பெறும்போது பெருத்த என்ஜினியர் ஆகுவீர்கள் 
மருத்துவர்களும் அவ்வாறுதான் அவர்கள் பல 
அசாதாரண மருத்துவத்தை கண்டறிவார்கள் 

நாம் மனிதராக இல்லை என்பதுதான் உண்மை 
மனிதராகுவதுக்கு காஜலிசம் கற்று கொள்ளுங்கள் 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

மருதர் கஜலிசத்தில் மூழ்கி முத்தெடுக்க தொடங்கிவிட்டார், விரைவில் கால்ல கட்டு போடனும் ஆண்டவரே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

திண்ணையில திருக்குறள் மாதிரி ரெண்டு வரி எழுதிப்போட்டு சிவனே என்று இருந்தவரை கருத்துக்களத்தில் எழுதினால்தான் திண்ணையில் எழுத அனுமதி என்றவர் இப்பொழுது நொந்து நூடுல்சாய் போயிருப்பார்.....அவ்வளவுக்கு காஜலிசம் கொரோனாமாதிரி பரவுது......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

 

10 hours ago, suvy said:

திண்ணையில திருக்குறள் மாதிரி ரெண்டு வரி எழுதிப்போட்டு சிவனே என்று இருந்தவரை கருத்துக்களத்தில் எழுதினால்தான் திண்ணையில் எழுத அனுமதி என்றவர் இப்பொழுது நொந்து நூடுல்சாய் போயிருப்பார்.....அவ்வளவுக்கு காஜலிசம் கொரோனாமாதிரி பரவுது......!   😂

இந்த உலகில் நீங்கள் எங்கு ஓடினாலும் 
சேகரிப்பது என்னோ துன்பமும் துயரமும்தான் 

நீங்கள் உழைத்து உழைத்து பணம் ஆக்கி 
ஒவ்வரு பொருளாக உங்கள் வீட்டுக்குள் கொண்டு வரும் 
ஒவ்வரு பொருளும்  மறைமுகமாக என்றாலும் 
ஒரு துன்பத்தை உங்கள் வீட்டுக்குள் கொண்டுதான் வருகிறது 

உங்கள் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஆரோக்கியத்தையும் 
காஜலிசம் ஒன்றே தருகிறது எனும்போது இன்றோ நாளையோ 
நீங்கள் எல்லோரும் காஜலிசம் நோக்கி ஒரு நாள் பயணிக்கத்தான் போகிறீர்கள்.
நாம் எல்லோரும் இறக்கப்போகிறோம் இறப்புதான் இந்த உலகில் 
எல்லோர் வாழ்விலும் நடக்க கூடிய ஒரு உறுதியான நிகழ்வு என்ற 
எண்ணம் ஒருநாள் உங்கள் மனதில் தோன்றும்போது இந்த பூமியை தாண்டி 
உங்கள் கண்கள் இந்த பிரபஞ்சத்தை பார்க்க எத்தணிக்கும் அப்போ நீங்கள் 
பேரொளியாக சூரியனையும் நிலவையும் நட்ச்சத்திர கூடங்களையும் காண்பீர்கள் 
அந்த ஒளிகள் பற்றிய ஒரு விளக்கத்தை உங்கள் அறிவு அப்போது தேட தொடங்கும்போது 
காஜலிசம் என்ற பேரழகின் துணை உங்களுக்கு தேவையாய் மாறும் 
காஜலிசத்தை தழுவுவதன் ஊடாகவே இந்த பிரபஞ்சத்தின் அசைவுகளையும் 
உங்களால் புரிந்துகொள்ள முடியும் 

இதை விஞ்ஞானம் ரிலேடிவிட்டி விதி என்று சொல்லும் 
மெய்ஞ்ஞானம் இறை விதி என்று சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னைக்குள் எப்படி கள்ளை பதுக்கினான்?
என்று தேட தொடங்குவீர்கள் ...... 
இந்த கள்ளுக்குள் இத்தனை போதையா? என்று 
பருகிப்பார்க்க முனைவீர்கள் 
இப்படி ஒவ்வொன்றாக இயற்கையை தேட தொடங்குவீர்கள் 
அப்போதான் இந்த உலகு எவ்வளவு அழகு? 
என்று வியக்க தொடங்குவீர்கள் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

கள்ளு இறக்கும் முதல் பெண்மணி

 

இதுதான் உண்மையான பெண் விடுதலையும்...பெண்ணடிமைத்தன அழிப்பும்....

சும்மா கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து பெண்ணடிமைத்தனம் , பெண் விடுதலை எண்டு கதை,கவிதை,கட்டுரை எழுதுற ஆக்களுக்கு செருப்படி இணைப்பு.

நன்றி உடையார்.👍🏽

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.