Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு

காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்!

 
எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மட்டுமே நிதானமாக வாயை திறப்போம் என்பது 27 சதவீதத்தினரின் கருத்தாக இருக்கிறது.

5 சதவீதத்தினர் வீட்டில் சொல்லவே மாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

(காதலிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்லும் தைரியத்துடனே இருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்)

‘உங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு..

குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காதலை அப்போதே கைவிட்டுவிடுவேன் என்பது 9 சதவீதத்தினரின் கருத்து.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுவேன் என்பது 13 சதவீதத்தினரின் பதில்.

67 சதவீத பெண்கள் பெற்றோருக்கு எடுத்துச்சொல்லி காதலை புரியவைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்கிறார்கள்.

9 சதவீதத்தினர் பெற்றோரை மிரட்டி பணியவைக்க முயற்சிப்போம் என்றும், 2 சதவீதத்தினர் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் லிவிங் டுகெதர் ஜோடிகளை பற்றிய கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார்கள்!

மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வாழ்க்கைமுறை உருவாகத்தான் செய்யும் என்பது 14 சதவீத பெண்களின் கருத்து.

சிறிது காலம் அப்படி வாழ்ந்து பார்த்துவிட்டு, பிடித்தால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரலாம் என்பது 24 சதவீதத்தினர் கருத்து.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையே தவறு என்று 60 சதவீத பெண்கள் ஆணித்தரமாக பதிலளித்திருக்கிறார்கள்.

2 சதவீதத்தினர் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

‘உங்களுக்கு திருமணம் முடிந்ததும், கணவருக்கு பழைய காதல் தொடர்புகள் ஏதேனும் இருந்ததா என்று தோண்டித்துருவுவீர்களா?’ என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் வித்தியாசமானது.

61 சதவீதத்தினர் அதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை என்று, பக்குவமாக கூறியிருக்கிறார்கள்.

19 சதவீதத்தினர் நேரம் பார்த்து நிதானமாக அதை கேட்டு தெரிந்துகொள்வோம் என்றிருக்கிறார்கள்.

15 சதவீதத்தினர், ‘பழையது எதுவாக இருந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இனி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்’ என்று கூறுவார்களாம்.

5 சதவீதத்தினர் அதை உடனே கேட்டு தெரிந்துகொண்டால்தான் மனம் அமைதியடையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வே இன்றைய இளம் பெண்களின் மாறிவரும் மனோநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/10/12110914/1963940/live-in-relationship.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் சொத்தை எதிர் பார்ப்பவர்கள் நிதானமாய்த்தான் முடிவு எடுப்பார்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணனுக்கு தம்பியினதும் அவன் குடும்பத்தினரதும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  🌞🌞
    • ஊரென்ன உலகமே அவர் பிறந்தநாளை கொண்டாடும் ஆனால் அவரோ  அன்று உணவு தவிர்த்து தன் தோழனின் நினைவில் மூழ்கியிருப்பார் அவர்தான் தலைவர் பிரபாகரன்.
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று புலிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் வடபகுதியைச் சேர்ந்த தமிழர்கள் கருணா குழுவின் கொலை மிரட்டலினையடுத்து ஆயிரக்கணக்கில் வெளியேறிவரும் நிலையில், அவர்களை வெளியேற வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது. கருணாவின் முறைகேடான நடத்தைகளுக்காக புலிகளியக்கம் அவரை வெளியேற்றியிருக்கிறது. தனிப்பட்ட ஆளாக இருக்கும் கருணா மட்டக்களப்பு அம்பாறை புலிகள் என்கிற பெயரில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருவதோடு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கெதிரான அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களை துன்புறுத்தி விரட்டிவரும் கருணா, அம்மக்களின் உடமைகளை அவரது துணை ராணுவக் குழு கொண்டும், இன ஒற்றுமையினைச் சிதைக்கும் சக்திகளின் துணைகொண்டும் சூரையாடி வருகிறார். கருணாவினால் வெளியிடப்படும் எந்த அறிக்கையினையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழினத்தின் ஒரு பகுதியினருக்கெதிராக கருணாவினால் இன்று மேற்கொள்ளப்படும் கட்டாய சொத்துப் பறிமுதல்கள், சொத்தழிப்புக்கள், கடத்தல்கள் ஆகியவை மனித நாகரீகத்திற்கெதிரான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் என்று நாம் கண்டிக்கிறோம்.  கருணாவினால் விடுக்கப்படும் எந்த அறிவுருத்தல்களையும் செவிமடுக்கவேண்டாமென்றும், தமது வாழிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வடபகுதித் தமிழர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் அயலவர்கள் அத்தமிழர்களின் பாதுகாப்பில் கவனமெடுக்கவேண்டும் என்றும், உதவிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.  என்றும் அவ்வறிக்கை கோரியது.  
    • இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். மேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் தொலைபேசி  ஊடாகவும், கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கொழும்பிலுள்ள இந்தியத்  தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடற்படையினர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இருந்தபோதும் கொவிட் சூழலால் அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடற்படையினரின் உதவியைப் பெற்றாவது இந்திய மீனவர்களின் வருகையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். இது விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். கிரிந்த மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவில் முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி வலியுறுத்தினார். இது தொடர்பில் அமைச்சு ஏற்கனவே கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். ஒலுவில் துறைமுகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/95342  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.