Jump to content

கொரோனா வைரஸ்: "செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: "செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்"

12 அக்டோபர் 2020
கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 

சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்படும் வைரஸ் பரவுவதால் ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பேசும்போதே பரவுகிறது.

ஆனால், காற்றில் மிதக்கும் துகள்களாலும் இது பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. கொரோனா வைரஸ் படர்ந்துள்ள உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றை தொடுவதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பரவக்கூடும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது இந்த ஆய்வு?

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில், பணத்தாள்கள் மற்றும் கண்ணாடிகளில் கொரோனா வைரஸ், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் துருவுறா எஃகு மீது ஆறு நாட்கள் வரையிலும் உயிர்ப்புடன் இருக்கும் என்று கண்டறியப்பட்டிருந்தது.

இருப்பினும், ஆஸ்திரேலிய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸானது, செல்பேசி திரைகளில் காணப்படும் கண்ணாடி, பிளாஸ்டிக், பணத்தாள்கள் போன்ற மென்மையான பரப்புகளில் 28 நாட்கள் தொற்றும் தன்மையுடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, இருட்டில், 20 டிகிரி செல்ஸியஸ் அறை வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண காய்ச்சலை ஏற்படும் வைரஸ்கள் இதே சூழ்நிலையில் அதிகபட்சம் 17 நாட்கள் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருக்கும். 

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

வைராலஜி ஜர்னல் என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையில், SARS-Cov-2 வைரஸ் குளிர்ந்த வெப்பநிலையை விட வெப்பமான சூழ்நிலையில் குறைந்த நேரம் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 40 டிகிரி வெப்பநிலையில் சில பொருட்களின் மேற்பரப்புகளில் 24 மணி நேரத்திற்குள் வைரஸ் தொற்றும் தன்மையை இழந்துவிடுவதும் தெரியவந்துள்ளது.

துணி போன்ற நுண்ணிய பொருள்களைக் காட்டிலும் மென்மையான, நுண்துளை இல்லாத பரப்புகளில் கொரோனா வைரஸ் நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

கருத்து வேறுபாடுகள் என்னென்ன?

பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் காமன் கோல்டு மையத்தின் (Common Cold Centre) முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான ரான் எக்லெஸ், கொரோனா வைரஸ் பல்வேறு பரப்புகளில் 28 நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்ற ஆய்வு முடிவு "பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை" ஏற்படுத்துவதாக விமர்சனம் செய்துள்ளார்.

 

"இருமல், தும்மல் உள்ளிட்டவற்றின்போது வெளியேறும் சளி மற்றும் அழுக்கு விரல்களின் மூலம் பரப்புகளில் வைரஸ்கள் படர்கின்றன. ஆனால், இந்த ஆய்வில் மனிதர்களின் சளியை முதலாக கொண்டு சோதனை நடத்தப்படவில்லை" என்று அவர் கூறினார்.

"வைரஸ்களை அழிக்க நொதிகளை உருவாக்கும் ஏராளமான வெள்ளை செல்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பிற ரசாயனங்களை கொண்டுள்ளதால் சளி, வைரஸ்களுக்கு எதிரான சூழலாகும். எனவே, என்னைப்பொறுத்தவரை பரப்புகளில் படரும் சளியில் உள்ள வைரஸ்கள் சில மணிநேரங்கள் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருக்குமே தவிர, நாட்கணக்கில் அல்ல" என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஜூலை மாதம் இதையொத்த தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் எமானுவேல் கோல்ட்மேன், "உயிரற்ற மேற்பரப்புகள் வழியாக நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதற்கு நேரெதிரான கருத்துகளை முன்வைக்கும் ஆய்வுகள் 'நிஜ வாழ்க்கையுடன்' ஒத்தில்லாத சூழ்நிலையில் மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியரான மோனிகா காந்தி, கொரோனா வைரஸ் உயிரற்ற பரப்புகள் வழியே பரவவில்லை என்று கூறியிருந்தார்.

இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

"வைரஸ் உண்மையில் எவ்வளவு காலம் பல்வேறு பொருட்களின் மேற்பரப்பில் தொற்றும் தன்மையுடன் இருக்கிறது என்பதை நிறுவுவது, அதன் பரவலை இன்னும் துல்லியமாக கணிக்கவும் குறைக்கவும் உதவுகிறது" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான லாரி மார்ஷல் கூறியுள்ளார்.

குளிரான வெப்பநிலையில் துருவுறா எஃகு பரப்புகளின் மீது கொரோனா வைரஸ் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பது அந்த வைரஸ் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அமைத்துள்ளன.

கொரோனா வைரஸ்
 

உலகமெங்கும் இறைச்சி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, போதிய சமூக இடைவெளி இன்றியும், குளிர்ச்சியான அல்லது ஈரமான இடத்திலும், இயந்திரங்களின் சத்தத்திற்கு எதிராக வலுவாக கத்தி பேசுவது உள்ளிட்டவற்றின் காரணமாக நோய்த்தொற்று அதிகம் பரவுவதாக கூறப்பட்டது. 

புதிய மற்றும் உறைந்த நிலையில் உள்ள உணவில் வைரஸ் உயிர்வாழ முடியும் என்று கூறிய முந்தைய ஆய்வு முடிவுகளையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர்.

"தற்போதைய சூழ்நிலையில், உணவு அல்லது உணவு பொட்டலங்கள் வழியே கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை" என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனினும், மறைமுகமாக வழிகளில் நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அது பட்டியலிட்டுள்ளது.

 

https://www.bbc.com/tamil/science-54506516

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.