Jump to content

பிரதமரின் இணைப்பாளராக கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இணைப்பாளராக கருணா

October 13, 2020

FB_IMG_1602590964975.jpg

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)   அலரிமாளிகையில் வைத்து  உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார்  30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்  கேட்டிருந்தார்.

இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர்

received_3786984294687384.jpeg

 


 

https://globaltamilnews.net/2020/151794/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பக்கத்தில் இருக்கிற கதிரையில் இருந்து விட்டு போகட்டுமேன். அவசரத்துக்கு படம் காட்டி, தமிழருக்கும் அரசியலில்  சம அந்தஸ்து அளித்திருக்கிறோம் என்று விளக்கம் கொடுக்க உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த! | Athavan News

கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30ஆயிரம் அளவிலான வாக்குகளைப் பெற்ற தனக்கு, மக்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா அம்மான் கேட்டிருந்தார். இதற்கமைய பிரதமரால் இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானுக்கு தற்போது மேலும் ஒரு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கருணாவுக்கு-முக்கிய-பதவி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கர்ணா அம்மான் ( முரளிதரன் )😜😜😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த கருணா அம்மானுக்கு கிடைத்த மஹிந்தவின் தற்காலிக இணைப்பாளர் பதவி

 
bb6e8835f27c37804e4a904b0776dbe6_XL.jpg


கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு    வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது .  கருணா அம்மானிற்கு தேசிய பட்டியல் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் மஹிந்த தரப்பால் வழங்கப்படவில்லை . 

அம்பாறைக்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியலை அம்பாறைக்கு வழங்கினர். 

கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது . 

 

http://www.battinews.com/2020/10/blog-post_375.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது . 

எதை எங்க  வைக்கணும் என்று சிங்களத்துக்காவது  தெரிந்திருக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானுக்கு... ஆளுநர் பதவி எல்லாம்,

”குருவி தலையில், பனங்காயை வைத்தது போல் இருக்கும்” 😁

ரதி... வர முதல், நான் எஸ்கேப்பு. 🏃🏽🏃🏽‍♂️ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு    வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது . 

சிங்களப் பேரினவாதிகளால் இறக்கிவிடப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பிற்கு ஒரு ஆசனம் அம்பாறையில் கிடைக்காமல்ப் போனது. ஆனால், செய்தியில் சிதறடிக்கப்படாமையால் கூட்டமைப்புத் தோற்றது என்று எழுதப்பட்டிருக்கிறது. 

ஆனாலும், தனது தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்குக் கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு தேசியப்பட்டியல்மூலம் ஆசனத்தைக் கொடுப்பதைக் கூட அவரது எஜமானர்கள் விரும்பவில்லை. போனால்ப் போகுதென்று இணைப்பாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். இது முதலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவிதான், அதனை வைத்து கிழக்கினை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டிருந்தார். அதனை மீளவும் இனித் தொடர்வார் என்று நாம் நம்பலாம். 

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

மட்டக்களப்பில் காணி அபகரிப்பிற்கு இவரின் படை தேவை, எப்பதான் உணர்வார்களோ எம் மக்கள்

1 hour ago, விசுகு said:

எதை எங்க  வைக்கணும் என்று சிங்களத்துக்காவது  தெரிந்திருக்கு???

இவர் ஒரு கறிவேப்பிலை, ஆனா இனிமேல் அதற்கு கூட ஒப்பிட என் மனம் இடம் கொடுக்கவில்லை, கருவேப்பிலையில் நல்ல பல பலன்கள் இருக்கு

 

curry leaves are best|சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி  எறிபவர்கள் கவனத்துக்கு...- Dinamani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

மட்டக்களப்பில் காணி அபகரிப்பிற்கு இவரின் படை தேவை, எப்பதான் உணர்வார்களோ எம் மக்கள்

அபிவிருத்தியா நிலமா என்று வரும்போது அபிவிருத்தியே பிரதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிலம் இன்றிருக்கும், நாளை போகும், அபிவிருத்தியென்பது அப்படியா? நிரந்தரமானதல்லவா? நிலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சிங்களவன் ஆக்கிரமிக்கும் எமது நிலத்தில் நாம் எமது அபிவிருத்தியைத் தொடர்வோம். 

12 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

நாட்டின் பிரதமருக்கு நிகரான பதவி. இப்பதவிமூலம் அவர் அபிவிருத்தி, சலுகைகள், வேலைவாய்ப்பு, காணி-பொலீஸ் ஆகியவற்றின் மேலான அதிகாரம், நிதிவளம் என்று  பாரிய அதிகாரங்களையும், வல்லமையையும் கொண்டிருக்கப்போகிறார். நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ இவரை எதுவுமே கேட்கமுடியாதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

இவர் ஒரு கறிவேப்பிலை, ஆனா இனிமேல் அதற்கு கூட ஒப்பிட என் மனம் இடம் கொடுக்கவில்லை, கருவேப்பிலையில் நல்ல பல பலன்கள் இருக்கு

முதலில் புலிகளை அழிக்க இவரைப் பயன்படுத்தினார்கள். இப்போது, தமிழர் தாயகத்தில் அவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அழிக்கப் பாவிக்கிறார்கள். ஆக, இனிவரும் காலங்களில் எதோ ஒருவிதத்தில், குறைந்தது ஆட்களைக் கடத்திக் கொல்வதற்காகவாவது பாவிக்கலாம். சிங்களத்திற்கு நன்றியாக இருப்பவர்களை, சிங்களம் இலகுவில் கைகழுவிவிடாதென்றே நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக மாறி கிடக்கு.? இணை ஒருங்கிணைப்பாளர் எங்கப்பா..?👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் கர்ணா அம்மான் ( முரளிதரன் )😜😜😉

உ...வாவ்   பிறகென்ன....இனி மடைதிறந்த வெள்ளம் போல கிழக்கு அபிவிருத்தி அடையப்போகுது. மட்டகளப்பு ஏரியாவுக்கு இனி கொம்மான் கிட்டத்தட்ட பிரதமர் மாதிரி இருப்பார்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Magic word is "அபிவிருத்தி"  

என்ன இருந்தாலும் அவன்தானே உனக்கு "கட்டின 
புருஷன்" என்பதற்குள் எவ்வளவு வலி அடங்கும் என்பது 
சில பெண்களுக்கு மட்டுமே தெரியும். 

The magic word is "கட்டின புருஷன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 15:01, குமாரசாமி said:

உ...வாவ்   பிறகென்ன....இனி மடைதிறந்த வெள்ளம் போல கிழக்கு அபிவிருத்தி அடையப்போகுது. மட்டகளப்பு ஏரியாவுக்கு இனி கொம்மான் கிட்டத்தட்ட பிரதமர் மாதிரி இருப்பார்.😜

நான் அறிந்தவரையில 

முரளியிடம் இருக்கும்  சொத்தை  அவிட்டு விட்டாலே

மட்டக்கிளப்பு முழுமையாக  அபிவிருத்தி அடைந்துவிடும்

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

நான் அறிந்தவரையில 

முரளியிடம் இருக்கும்  சொத்தை  அவிட்டு விட்டாலே

மட்டக்கிளப்பு முழுமையாக  அபிவிருத்தி அடைந்துவிடும்

அபிவிருத்தி அடையட்டும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அங்குள்ள விருத்தைகளும் கவனமாக இருக்கவேண்டும்.😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில்.. ஒரு மாமா வேலை. அதுவே இதுக்குப் பெரிசு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎10‎-‎2020 at 11:55, தமிழ் சிறி said:

அம்மானுக்கு... ஆளுநர் பதவி எல்லாம்,

”குருவி தலையில், பனங்காயை வைத்தது போல் இருக்கும்” 😁

ரதி... வர முதல், நான் எஸ்கேப்பு. 🏃🏽🏃🏽‍♂️🤣

இல்லை இந்த பதவி கொடுத்ததிற்குகே  இங்க கண பேருக்கு பைத்தியம் பிடிக்குது ...ஆளுநர் பதவி கொடுத்தால் ஹாட் அட்டாக்கே வந்து விடும்  😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இல்லை இந்த பதவி கொடுத்ததிற்குகே  இங்க கண பேருக்கு பைத்தியம் பிடிக்குது ...ஆளுநர் பதவி கொடுத்தால் ஹாட் அட்டாக்கே வந்து விடும்  😉

ரதி, நீங்கள்  சண்டை பிடிக்க வருவீர்கள் என்று, நாம் பயந்து கொண்டிருந்தால்...
நீங்கள், "வெறி சிம்பிளாக"  விசயத்தை முடித்தது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.