Jump to content

விடுதைப்புலிகள் அழைத்ததன் பேரிலேயே நோர்வே சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்தது- எரிக் சொல்ஹெய்ம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதைப்புலிகள் அழைத்ததன் பேரிலேயே நோர்வே சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்தது- எரிக் சொல்ஹெய்ம்

Screenshot-2020-10-14-12-49-18-557-org-m விடுதைப்புலிகள் விரும்பி தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அந்த நேர் காணலில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கைக்கான சமாதான அனுசரணை பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் இலங்கைக்கான அனுசரணை பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக 1998 ம் ஆண்டு நோர்வேயில் உள்ள தமது அலுவகத்திற்கு நேரில் வருகை தந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார் .

அந்த சமயம் நோர்வேயின் தலையீட்டுடன் நாட்டில் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையிலான அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதான பேச்சுக்கள் பல கட்டங்களாக இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

https://thamilkural.net/newskural/leadnews/80879/

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 விடுதைப்புலிகள் விரும்பி தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்கைய்ம் என்பவர் ஆரம்பம் முதல் இந்தியாவின் ஏயெண்டாக செயல்பட்டது யாவரும் அறிந்ததே. இவர் இலங்கை வந்து சிங்கள அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியபின், இந்தியா செல்லாமல் தனதுநாடு திரும்பியதில்லை. இந்தியா நேரில் வந்தால் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அறிந்து வைத்துள்ள இந்திய அரசு எரிக் சொல்கைய்ம் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

எரிக் சொல்கைய்ம் என்பவர் ஆரம்பம் முதல் இந்தியாவின் ஏயெண்டாக செயல்பட்டது யாவரும் அறிந்ததே. இவர் இலங்கை வந்து சிங்கள அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியபின், இந்தியா செல்லாமல் தனதுநாடு திரும்பியதில்லை. இந்தியா நேரில் வந்தால் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அறிந்து வைத்துள்ள இந்திய அரசு எரிக் சொல்கைய்ம் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டது.  

பாஞ்ச் அண்ணை.... நீங்கள் சொல்வது சரி

அதுகும் விடுதலைப் புலிகள் இல்லாத நேரம்... இப்படியான கருத்தை, எரிக் சோல்கைம் சொல்லி சுய இன்பம் காண்பதன் மர்மம் என்ன

Link to comment
Share on other sites

On 14/10/2020 at 12:49, தமிழ் சிறி said:

அதுகும் விடுதலைப் புலிகள் இல்லாத நேரம்... இப்படியான கருத்தை, எரிக் சோல்கைம் சொல்லி சுய இன்பம் காண்பதன் மர்மம் என்ன

தமிழ் சிறி அவர்களே! இதில் மர்மம் எதுவுமில்லை, எந்த வழியும் அற்ற (No Way) நிலையில் ஒருவரைச் சுய இன்பம் ஆட்கொள்கிறது எரிக் சொல்கைம் நோ வே நாட்டைச் சேர்ந்தவர்.😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.