Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

 

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

நம் மூர்களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நம் மூர்களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்

அப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.

தமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.

மேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.

அங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நீங்கள் சொல்லுவது புரிகிறது. அநேகமாக அவர்கலின் வருத்தத்தை சாட்டி, உண்மையான கொலையை இயற்கயான இறப்பாக காட்டுவது.

அப்படியானால், இங்கு மேற்கில் எம்மவரிடையே, இந்த autism பாதிப்பு மிகவும் குறைவாக தானே இருக்கிறது. இது எனது தனிப்பட்ட அவதானம் மாத்திரமே. 

ஆனாலும், வெள்ளையரில் (இப்பொது) வருவதற்கு, அவர்களின் மனதை கட்டுப்  படுத்த முடியாத வாழ்க்கை முறை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அதாவது, மகப்பேறு காலத்தில், தமக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது, சிசுவின் நலம் என்று கூட பாராமல்.

இல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.

இங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.

காரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே. 

குறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இருக்கலாம்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

         Goundamani GIFs | Tenor

                                                                         

 Top 30 Sivaji GIFs | Find the best GIF on Gfycat

எப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரியுது போல......!   😈

 

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

         Goundamani GIFs | Tenor

                                                                         

 Top 30 Sivaji GIFs | Find the best GIF on Gfycat

எப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரியுது போல......!   😈

 

நெடிய பயணத்தின் போது இந்த சுற்றுலாதலம் போரடித்தால் அடுத்த தலம் எப்படி இருக்கும் என பார்க்க விழைவது வழமைதானே🤣.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்களைக் கொல்வது எங்கள் சமூகத்தில் மரபுவழியாக நடைபெறுவது ஒன்று. அன்று வயது முதிர்ந்ததபின் சிலர் சேடமிழுத்து இறப்பதைக் கண்டுள்ளோம். அப்படிச் சேடம் இழுக்கும்போது வாய்க்குள் பால் ஊற்றுவார்கள், உயிர் பிரிந்துவிடும். சேடம் இழுக்கும்போது பால் ஊற்றினால் அது மூச்சுக்குழாயை அடைத்து ஆளைக் கொன்றுவிடும் என்பதை அறியாது அதனை ஒரு கருணையாக எண்ணிச் செய்வார்கள். இன்றும் ஒருவர் வாய்திறந்து குறட்டைவிடும்போது பால் அல்லது தண்ணீரை வாய்க்குள் ஊற்றினால் ஆள் அவ்வளவுதான்.😲

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

லா ஒவ் அட்டிராக்‌ஷனோ தெரியவில்லை- இங்கே இதை பற்றி உரையாடிவிட்டு இணையத்தில் உலாத்தினால் இந்த சுய-மரண அறிவித்தல் கண்ணில் படுகிறது🤣

https://www.thenewsminute.com/article/my-party-over-chennai-mans-self-obituary-life-lesson-all-us-135555?amp&__twitter_impression=true 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.

தமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.

மேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.

அங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....

 

11 hours ago, Nathamuni said:

இல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.

இங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.

காரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே. 

குறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இருக்கலாம்.

நல்ல கருத்துக்களும் தகவல்களும் நாதமுனி. 👍🏽

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும். இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும்.  
    • சிம்பிள் ஆன்சர்; முடிவிலி. முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும். பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.
    • கடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள். இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும்.
    • உண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா? ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது. deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது  ஓட்டைகள் என்று கருதப்படுவதும்    அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது. ஓட்டைகள் என்று கருதப்படுவது  எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால்,  run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும்.  அனால்,pca  கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும்.    இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software  determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது. software  determinacy,  hardware determinacy இல் தங்கி இருக்கிறது இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic  இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது. ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம். எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.
    • நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁 சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு. நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது. உதாரணமாக யாராலுமே உடைக்க முடியாது என்று விளம்பரப்படுத்தப்பட்ட சந்தைக்கு போகவுள்ள, பூட்டினை, சந்தையில் ஒருவர் உடைத்தெறிந்து கரி பூச முன்னர், நிறுவனத்தின் இன்னும் ஒரு பகுதி.... உடைக்க முணைந்து.... முடியாது என்ற நிலையில் சந்தைக்கு அனுப்புதல் போன்றது. உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.