Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரண்டாம் குத்து 

திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது? 

திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கும் ஒரு ஆய்வக இதை எழுத தொடங்குகிறேன் 
நீட்டி நீட்டி எழுதினால் வாசிப்பவர்களுக்கும் நேரம் இருக்காது. ஆகலும் சுருக்கி எழுதினால் 
சொல்ல வரும் விடயங்கள் வாசிப்பவர்களுக்கு புரியாது போகும் ஆகவே தொடராக போதுமான 
சுருக்கத்துடன் திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கலாம் என்று எண்ணுகிறேன். 
என்னிடம் மைக்ரோசொப்ட் வேர்ல்ட் இல்லை ஆதலால் இதை ஒரு கட்டுரை வடிவில் கூட எழுதி 
எழுதி சேமித்து ஒரு அழாகான கட்டுரையாக இணைக்க முடியாதிருக்கிறது. கூகிள் டைப்பில் டைப் பண்ணி 
இணைப்பதால் கொஞ்சம் அலங்கோலமாக இருப்பின் பொறுத்தருள்க. 

How exactly Krishna saved Draupadi during her chir-haran? – Empty Space

கிறிஸ்துவுக்கு முன் 10ஆம் நூற்றாண்டளவில் மகாபாரதம் நடந்ததாக கூறுகிறார்கள் 
சிலர் 15 ஆயிரம் ஆண்டுகள் முன்பு நடந்ததாக கூறுகிறார்கள். எங்கு எப்போ நடந்தது என்பதை 
கடந்து எமது மனிதகுலம் முழுதான நாகரிகம் அடைய முன்பே என்ன நடந்தது என்பதே 
இங்கு தேவையானதாக இருக்கிறது. பெண்ணின் நிர்வாணம் ஆண்களின் ஒரு ஆதிக்க  போக்கால் 
அடைய முற்பட்டு இருப்பதுதான் இங்கு தேவையானது. ஒரு பகுதியால் திரௌபதி துகில் உரியப்பட்ட 
அதே நேரம் இன்னொரு  சக்தியால் (கிருஷ்ணர்) காப்பற்றபட்டிருக்கிறாள். ஆக கடந்த 15 ஆயிரம் ஆண்டுகளாக இன்று வரையிலும் பெண்கள் துகில் உரியப்படும் அதேநேரம் ... ஒரு சாராரால் ஒரு சார் பெண்கள்  பாதுக்காக்க பட்டும் கொண்டிருக்கிறார்கள். தனது தாரத்தையோ தங்கையையோ தாயையோ துகிலுரிப்பில்  இருந்து காக்க நினைக்கும் அதே ஆண்கள் இன்னொரு பெண்ணை துகிலுரிக்கிறார்கள் என்பதைத்தான் சொல்ல வருகிறேன். ஆகவே இந்த துகில் உரிப்பு தெரியாமல் நடக்கும் ஒரு தவறாக இல்லை 
தெரிந்தும் எதோ ஒரு ஆதிக்க சக்தி கூடும்போது அதனால் நடக்கிறது ... ஆதிக்கம் என்பது உடல்பலம்  பணபலம்  ஆயுதப்பலம்  அறிவுப்பலம் இராணுவபலம் அரசபலம் என்று தொடர்கிறது. ஆனால் எதோ ஒரு பலம்  கிட்டும்போதும் ஒரு பலவீனமான பெண் கிட்டும்போதும் கடந்த 15 ஆயிரம் ஆண்டுகளாக திரௌபதியின்  சேலை இன்னமும் இழுக்க படுகிறது என்பதும் ........திரௌபதிகள் இன்னமும் யாரிடமோ கையேந்தி  உதவி கோருகிறார்கள் என்பதுவும்தான் இங்கே நான் எழுத முற்ப்படுவது. 
பல்வேறு ஆதிக்கம் பல ஆயிரம் திரௌபதிகள் என்பதால் தான் இது தொடராக நீட்ட வேண்டிய தேவை வந்தது. இதில் எது சரி எது பிழை என்ற வாதத்துக்கு நான் போக முற்படவில்லை  அதுபற்றி நீங்களே முடிவு செய்யுங்கள்  எங்கே என்ன நடக்கிறது? என்ற  வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு  எழுதவே முனைகிறேன். ஆகவே இங்கேயும் சில திரௌபதிகள் துகிலுரியப்படலாம் .... வாசிக்கும் சிலரின் விமர்சனங்கள்  அவர்களுக்கு சேலை கொடுக்கலாம். 

ஏன் இதற்கு இரண்டாம் குத்து என்று தலைப்பு? என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம்  இங்கு இரண்டாம் குத்து பற்றி ஒரு பதிவு இருந்தது அதில் சிலர் தங்கள் கருத்துக்களை பதிந்து  இருந்தார்கள் அதை வாசித்துக்கொண்டு போகும்போது  ஒருவரின் கருத்து முதலாம் குத்துக்கே தடை போட்டிருந்தால் இப்போ 
இந்த அசிங்கம் நிகழ வாய்ப்பு இருந்திருக்காது என்று எழுதி இருந்தார். அது எனக்குள் சில கேள்விகளையும் பதில்களையும்  உருவாக்கி இருந்தது. இரண்டாம் குத்ததுதான் இறுதி குத்தா? அல்லது முதலாம் குத்துதான்  ஆரம்பமா? என்பதுதான் எனக்குள் எழுந்த கேள்விகள். இரண்டுக்குமே இல்லை என்பதுதான் நிதர்சனமான பதில்  ஆகவே ஏன் இரண்டாம் குத்தை புறக்கணிக்க வேண்டும்? என்று ஒரு கேள்வி வருகிறது அல்லவா?
இப்போதான் நாம் திரௌபதியிடம் செல்லவேண்டி வருகிறது.... சில ஆண்கள் துகில் உரியும்போது இன்னொரு ஆண்தான்   சேலையை கொடுத்துக்கொண்டும்  இருக்கிறான் அல்லவா? ஆகவேதான்  நான் முதலில் கூறினேன்  எது சரி எது பிழை என்ற வாதத்துக்குள் நான் வரவில்லை என்று அதை தவிர்த்து எழுதவே விரும்புகிறேன்  காரணம் நான் எழுதவருவதை அந்த தர்க்கம் திசை தீர்ப்பும் என்பதால்தான். 

இந்திய சினிமாவின் தாயக பொலிவூட் இருக்கிறது அங்கிருந்துதான் மற்ற தெலுங்கு தமிழ் மராத்தி பங்களா மலையாளம்  பீஹார் போன்ற சினிமாக்கள் தொழில்நுட்பம் பெற்றுக்கொள்கின்றன என்றால் இவை ஒவ்வொன்றும்  தமக்கு என்று ஒரு தனி பாணியையும் கொண்டிருப்பவை. அந்த பொலிவூடில் முதலாம் குத்து  
2012இல் வெளியானது அப்போது இங்கு போலவே எதிர்ப்பும்  வரவேற்பும் இருந்தது அவற்றை எல்லாம் தாண்டி 
கடந்த ஆண்டு 5தாம் குத்து வெற்றிகரமாக வெண்திரையை அலங்கரித்தத்து ஆகவே தமிழ் சினிமாவிலும்  
குத்து தொடர போகிறது என்பது குத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். இடைக்கால தமிழ் சினிமாவில்  தமிழ் சமூகத்துக்கு ஒவ்வாத கள்ள காதல் புருசனுக்கு தெரியாமல் உறவு போன்ற சர்ச்சையான  கதைகள்  மூலம் விளம்பரம் தேடி வெற்றி கண்டவர் டைரக்டர் பாலச்சந்தர். அப்போது பெண்களுக்கு சேலைக்கொடுக்கும் சாரர்கள் விமர்சனங்களால் எதிர்கொள்ளும் போதெல்லாம் அவருடைய பதில் நான் படித்தவருக்கு படம்  எடுக்கிறேன் எனபதுதான்.   இந்த பதில்லால் பாலச்சந்தருடன் கூடி அந்நாளில் துகில் உரிந்தவர்கள்  தம்மை படித்தவர்கள் என்று காட்டிக்கொள்ள கூடிய ஒரு வித மாயாவி கூட்டம்தான். 

கொலிவூட் பொலிவூட் குத்துக்கள் ......... இதோடு நாளை தொடர்கிறேன் 

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது பாகம் 2
முத்தம் 
நடக ஆர்கெஸ்த்ராவில் இருந்து மனிதன் ஒளிப்பதிவு சாதனங்களை கண்டு பிடிக்க 
அவை ஒளிப்பதிவு காட்ச்சிகளாக திரைக்கு தாவியது அண்ணளவாக அப்போதைய  நாடக பங்குதான் 
ஒளிப்பதிவு செய்யப்பட்டு திரையிடும் முறைக்கு வந்தது அவ்வாறு வெளியான முதல் படத்தின் பெயரே 
தே கிஸ்  அதாவது "முத்தம்" என்பதுதான் இது 1896இல் வெளியானது. பெயரே முத்தம் எவ்வாறு முத்தம் இன்றி படத்தை முடிப்பது? ஆகவே படத்தின் இருந்து காட்ஸியில் ஒரு முத்த காட்ச்சியை ஒளிப்பதிவு செய்து திரை இட்டார்கள் இது வெறும் 18 வினாடிகள் நீடித்த முத்தமாக காட்ச்சி அமைந்தது. இது முதல் படம் என்றதும் இதுவே முதலாவது படம் என்று முடிவு கொள்ளாதீர்கள் முதலாவது ஒளிப்பதிவு திரை காடசி 1888இல் ஒரு பிரஞ்சு நாட்டு கண்டுபிழைப்பாளரால் 2.11 செக்கெண்ட்கள் நீளமான ஒரு ஒளிப்பதிவு திரையிட பட்டது அதுதான் முதலாவது ஒளிப்பதிவு என்றாலும் தி கிஸ் தான் முதல் குறும்படமாக வெளியானது. முழு நீள திரைப்படம் 1906இல் ஆஸ்திரியாவில் 60 நிமிடங்கள் நீளமான திரைப்படம் ஒளிப்பதிவு செய்து திரையிடபட்டது.

m.media-amazon.com/images/M/MV5BMDRhNGI5M2QtZjc...

தி கிஸ் இப்போதைய இரண்டாம் குத்துபோலவே பல விமர்சனங்களுக்கு ஆளானது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான முத்தம் எவ்வாறு கணவன் மனைவி அல்லாத இருவர் கொள்ளலாம் என்று சர்ச்சை கிளம்பியதுபடம்பார்க்க சென்றவர்கள் எல்லோருமே சாக் ஆகியே இருந்தனர் அப்போதைய ரோமன் கத்தோலிக்க சேர்ச்சுக்கள் போர்க்கொடி தூக்கின அந்த காடசி உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று  வழக்கு கூட தொடர்ந்தார்கள். எப்படி ஒரு முத்த காடசியை காண்பிப்பது என்று பல சர்ச்சை கிளம்பியது ...இதில் ஒரு திகில் என்ன என்றால்  இன்று அண்ணளவாக ஒட்டு 120 வருடம் கழித்தும் இரண்டாம் குத்துக்கு விமர்சன சர்ச்சை  எவ்வாறு விளம்பரம் ஆனதோ அதுபோலவே தி கிஸ் சுக்கும் விளம்பரம் ஆகியது. அப்போதிருந்த சில பத்திரிகைகள் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் என்று எழுத தொடங்கின. இதையே படம் தயாரித்தவர்கள் பிடியாக  பிடித்து கொண்டார்கள் ஆதலால் பார்வையாளர்களை கவருவத்துக்காக அடுத்தடுத்து அவர்கள் தயாரித்த  படங்களில் முத்த காட்ச்சிகள் தவிர்த்த்து கொண்டாலும் படங்களின் பெயரை 
சம்திங் குட் -நீக்ரோ கிஸ் 1898 Something good- Negro kiss
தி கிஸ் இன் தி டுநல் 1899  The Kiss in the tunnel 
மீண்டும் தி கிஸ் என்றே 1900 இலும் பெயரை சூட்டி கொண்டார்கள். முத்தம் பார்க்க மக்களை திரை அரங்குக்கு கொண்டுவருவதுதான் அவர்கள் யுத்தி. அதுபோல மக்களும் திரள தொடங்கினார்கள் முத்தத்துக்காக  மட்டுமே என்றும் கூற முடியாது ஒளிப்பதிவு காடசிகளை திரையில் காணும் அந்த அற்புதத்தை  காணவும் கூடினார்கள். 

kamasutra

ஏன் இப்போ முத்தத்துக்கு எவ்வளவு சர்ச்சை? ஒளிபடத்துக்கு முன்பு மனிதர்கள் முத்தமே இடவில்லையா?
அப்படியானால் எப்போ மனிதர்கள் முத்தம் இட தொடங்கினார்கள் என்று தேட தொடங்கினால்......... நம்ப கொஞ்சம் கஷடம்தான்  முத்தம் தொடங்கிய இடம் என்று நாம் தலைப்புக்கே திரும்ப வேண்டி வருகிறது.   இதழோடு இதழை சேர்த்து முத்தம் என்பது எழுத்து வடிவில் முதன் முதலாக பாண்டவரான அர்ஜூனனுக்கும் திரௌபதிக்கும் இடையேயான முத்தம்தான் காலம் முந்தியதாக பதிவில் இருக்கிறது. திரௌபதி அர்ஜுனனின் தயாருடனும் உரிய நேரத்தில் தன்னை காக்க வரவில்லை என்று கிருஷ்னருடனும் வெறுப்பில் இருந்தாள்  அப்போது அர்ஜுனனுடன் அவள் வாதம் செய்கிறாள் வாதத்தின் முடிவில் அர்ஜுனன் அவளை இறுக்க கட்டி அணைத்து இதழ் மேல் இதழ்கள் வைத்து முத்தம் இட்டு கொள்கிறான். இன்று வரை எழுத்து வடிவில்  முத்தம் இங்கேதான் தொடங்குகிறது. 

Porn Poetry

(ராதாவை முத்தத்தில் புரட்டி எடுக்கும் கிருஷ்ணர்) 

இதன் பின்பு இந்திய இலக்கியங்கள் பலவும் முத்தமழையில் நனைந்தாலும் ஐரோப்பா எங்கேனும் முத்த  சத்தம்  எனோ எழுத்தில் இல்லை. ஐரோப்பாவுக்கு முத்தத்தை மகா அலெக்ஸாண்டர் தான் கைப்பற்றிய இந்திய  பஞ்சாப் பகுதியில் இருந்து கற்று வந்து இங்கே முத்தம் இட தொடங்கியதாகவும் ஒரு கதை உண்டு.
முத்த ஆய்வாளர்கள் அப்படிதான் சொல்கிறார்கள். ஆரம்ப கால உதட்டு முத்தம் என்பது இந்தியாவில் வேத காலம்  தொட்டே தொடர்கிறது என்றாலும் அமெரிக்க டெக்சாஸ் எ அண்ட் எம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த  மானுடவியலாளர் வான் பிரையன் 3500 ஆம் ஆண்டளவில் சுமேரியர்களின் கவிதை ஒன்றில் முத்தம் வருவதாக  இந்த கவிதையை சுட்டி காட்டுகிறார். 

முத்தம் ஒளிப்பதிவு ஊடாக திரைக்கு வந்தாலும் மனிதர்களின் ஆரம்ப கால கலைகளான சிற்ப கலை
ஓவிய கலைகளில் முத்தம் ஏற்கனவே இருக்கும்போது ஏன் திரையில் முத்தம் சர்ச்சைக்கு உள்ளானது?
ஓவியம் சிலைகள் பொருட்கள் வடிவில் கற்பனையாகவே இருந்தன திரையில் அவை உண்மையான ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையே பரிமாறியதுதான் இங்கே சர்ச்சையான விடயம். ஆரம்ப கால ஓவியம் என்றால்  1780 ஆம் ஆண்டில் வரையப்பட்டிருக்கும் களவாடிய முத்தம் எனும் இந்த ஓவியம்தான். 

File:Jean-Honoré Fragonard - The Stolen Kiss.jpg

 Around 3,500 years ago, according to Vaughn Bryant, an anthropologist at Texas A&M University who specializes in the history of the kiss.[3]

Both lip and tongue kissing are mentioned in Sumerian poetry:[4]

My lips are too small, they know not to kiss.

My precious sweet, lying by my heart,
one by one "tonguemaking," one by one.

When my sweet precious, my heart, had lain down too,
each of them in turn kissing with the tongue, each in turn

Link to post
Share on other sites
 • நியானி changed the title to திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது?
 • கருத்துக்கள உறவுகள்

திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது பாகம் 3

இதிகாசங்கள்!

 

எழுத்துவடிவில் கதைகளாலும் கவிதைகளாலும் உருவானவை இதிகாசங்கள். மனித குலம் தோன்றி 
நாகரீகம் அடைந்து ஒருவனுக்கு ஒருத்தி .... இவள் அவனையுடையவள் ... அவள் இவனுடையவன் என்ற 
வரையறை விலங்குகளில் இருந்து பிரிந்து மனிதன் வரித்துக்கொள்கிறான். மனிதரில் மட்டும்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்பது இருக்கிறதா என்றால் இல்லை சில பறவைகள் துணை பிரியும்போது தம்மையும் மாய்த்து கொள்கின்றன. பறைவைகளில் பெரும்பாலானவை மோனோகாமிஸ் (Monogamies) எனப்படும் ஒரே துணையுடன் வாள்பவைதான் என்றாலும் மக்ரோனி பென்குயின்ஸ் எங்கள் எல்லோரையும் அசத்த கூடிய காதல் ரொமான்சு என்று வாள்பவை. ஆகவே மனிதருக்கு முன்பே ஒருவனுக்கு ஒருத்தி எனும் சிர்த்தாந்தம் பூமியில் தோன்றிவிட்டது என்றாலும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை சட்டமாகவே ஆக்கி வாழ தொடங்கிய மனித ஆண்களுக்கு  பிற பெண்கள் மீது மோகம் என்பதும் எழுதாத விதியாக தொடருகிறது. ஒரு துணை இருக்கும்போது ஏன் இன்னொரு பெண்ணில் மோகம் வருகிறது என்றால்? இது எப்போது இருந்து இருக்கிறது என்றும் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது தேடினால் மனிதனால் எழுதப்பட்ட ஆரம்ப இதிகாசங்களில் இருந்தே  தோண்றுகிறது என்பதால் மனிதன் பேச தொடங்கு முன்பே இது இருக்கிறது என்றுதான் நான் எண்ணுகிறேன். 

 

The Rise and Fall of Adam and Eve: exploring the myth of the original sinners

பைபிளை எடுத்தால் அதில் கடவுள் ஆதாம் என்று ஒரு ஆணையும் ஏவாள் என்று ஒரு பெண்ணையும் படைக்கிறார் அவர்களுக்கு மகன்களாக கெய்ன் ஆபேல் சேத் என்று மூவர் பிறக்கிறார்கள் என்று இருக்கிறது ஆகவே அதன் பின்பும் மனித குலம் தொடர்கிறது என்றால் இந்த மூவரில் ஒருவர் அவர்களது தாயான  ஏவாவுடன்  உறவு கொண்டிருக்க வேண்டும். ஆகவே ஆரம்பமே அங்கு ஒரு பெண் இருவரால் பகிரப்படுகிறாள் .அப்போ எப்போது ஒருவனுக்கு ஒருத்தி என்று வரையறை தொடக்கி இருப்பார்கள் என்றால் ... அதே பைபிளின்  தொடர்ச்சிகளில் இந்த வரையறைகள் ஒருவனுக்கு ஒருத்தி எனும் நிலைப்பாடு சிதறியும் கிடக்கிறது . இதை கடந்து பரிணாமவளர்ச்சியில் மனிதன் தோன்றினான் என்றால் அங்கும் போலிகமிஸ் எனப்படும்  பல துணை சாத்தியமாகவே இருக்கிறது. எப்படியோ ஒருவனுக்கு ஒருத்தி என்று வரையறையை வகுத்து  உண்மை காதல் அன்பு என்று தத்துவங்களும் கொடுத்து அரசாங்க அதிகாரிகள் முன்போ அல்லது சமய  தலைமைகள் முன்போ இவருடன் இறுதிவரை இருப்பேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் சேர்ந்து வாழலாம் என்று  சட்ட ரீதியாக வாழ அனுமதிக்கிறார்கள். அதுக்குள் எம்மையும் தள்ளிவிட்டார்கள்   இனி  அது பற்றி பேசினாலும் பிரச்சனையில் முடியுமே தவிர மாறுதல்கள் என்பதுக்கு சாத்தியம் குறைவு என்றாலும்  பொலிகாமிஸ் எனும் பல துணையுடன் வாழுதல் பலதார திருமணங்கள் எங்கள் நாட்டிலும்  நடந்துதான்  இருக்கிறது.   

73104133_707996323051239_1642264420178460672_o.jpg?_nc_cat=101&_nc_sid=09cbfe&_nc_ohc=jOi5TmHp6McAX_zlvcF&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=575460d4f4b522a3c0cb4c765b9dd19d&oe=5FB7011D

ஆண்களுக்கு ஏன் பிற பெண்களில் மோகம் வருகிறது என்பதுக்கு  சைகொலோஜி ரீதியாக என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது. எனது தனிப்பட்ட எண்ணம் இந்த பூமியில் மிக மிக அழகான படைப்பு என்பது பெண்கள்தான்  அல்லது மிக அழகாக ஆண்களுக்கு தெரியும் ஒரு அற்புத படைப்பு பெண்தான். இதை மறுக்கவோ  மறைக்கவோ ஒரு ஆண் முயன்றால் அவரின் பார்வையில் ஏதும் கோளாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்த பூமியில் ஒரு ஆணை தனது அழகால் மட்டுமே அடிமை செய்ய முடியும் என்றால்  அது  நிற்சயமாக  ஒரு அழாகான பெண்ணால்தான் முடியும்.  பெண்ணின் அழகால் பல சாம்ராஜ்ஜியங்களே சரிந்த வரலாறு  இருக்கும்போது இதை என்னால் அடித்து கூற முடியும். ஆகவே இது என்னுடைய தனிப்பட்ட  இச்சையோ  எண்ணமோ இல்லை. மாறாக இது ஆண்களின் இச்சைதான் அதானல்தான் ஆண்கள் ஆரம்பத்தில்  எழுத தொடங்கிய இதிகாசங்களிலிலேயே திரௌபதிகளின் சேலை  இழுக்க பட்டு  சேலைக்குள் என்ன இருக்கிறது என்ற தேடல் தொடங்குகிறது. 

Assyria - Wikipedia

இந்தியாவை தாண்டி ஆரம்ப கால எழுத்துக்கள் என்பது கி.மு 8ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது அதுக்குக்கான ஆதாரங்கள்தான்  இதுவரையில் எம்மிடம் உண்டு  மெசொப்பொத்தாமியான் மிதலொஜி தான் எகிப்து பிரமிட்டுகளில் இருக்கும் எழுத்துக்களை தாண்டி இருக்கும் ஆரம்ப இலக்கிய-இதிகாச  வடிவம் கொள்கிறது இவை மதம் சார்ந்த  கல்வெட்டுக்களாக மேற்கு ஆசியாவில் கண்டெடுக்க பட்டவை இவைகளை ஜில்கமெஷ் இதிகாச புரட்டுகள் என்றும் சொல்லலாம். இதில் முதலாவதான ஜில்கமேஷ் இதிகாசம் அண்ணளவாக  கி மு 2000 ஆண்டில் எழுதபட்தாக கூறுகிறார்கள். இதிலேயே பாலுணர்வு  தீண்டல்  பால் மயக்கம்  என்பன உள்ளடங்கலாக இருக்கிறது. ஆக கடந்த 4000 வருடமாக  திரளபதியின் சேலை இந்தியாவை தாண்டியும்  ஆண்களின் கற்பனையில் இழுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • படம் பார்க்கும் போது அநியாயத்தை கண்டு பொங்குற மனசு ..☺️  இடை வேளையில் முட்டை போண்டாவை GST +50 ரூ க்கு தின்டு அமைதி ஆகிறது .😢  
  • புளிசோத்துல முட்டைய வச்சு ஏமாத்துறிங்களேடா ..😢   எடுப்பு மீட்டிங்குல எவன்டா துடுப்பு வேலை பார்த்தது ..😢  
  • இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ? “இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டாள்தனமாக தர்க்கம் செய்கின்றனர். அன்று ஜே.ஆர் ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தும் அந்த அதிகாரம் அவரை சர்வாதிகாரியாக்கியது. “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று சர்வாதிகாரப்போக்கில் செயல்பட்டார். ஜே.ஆரின் சர்வாதிகார செயல்பாடானது தமிழ் மக்களை அதிகம் பாதிப்படைய செய்ததுடன், பாரிய யுத்தம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றது. ஜே.ஆர் மட்டுமல்லாது அவருக்கு பின்பு ஆட்சி செய்த ஏனைய ஜனாதிபதிகளினது முழு கவனமும் தமிழ் மக்கள் மீது இருந்ததனால் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பினை முஸ்லிம்களால் உணர முடியவில்லை. ஆனால் 2010 க்கு பின்பு ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கினை முஸ்லிம்களும் உணர தொடங்கினார்கள். அது மட்டுமல்லாது இன்று உள்ள நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. அதாவது சர்வாதிகாரப் போக்குடைய முன்னாள் இராணுவ அதிகாரியின் கையில் இந்த அதிகாரம் செல்ல இருக்கின்றது. ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை சர்வாதிகாரியாக மாற்றிய அதி உச்ச அதிகாரமானது இராணுவ துறையை சார்ந்தவரின் கையில் சிக்கினால் நிலைமை என்னாகும் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.   அதிகாரம் குறைவாக இருக்கின்ற நிலையிலேயே சிவில் அதிகாரிகள் கடமை புரிகின்ற பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. இந்த நிலையில் இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவு வழங்குவதானது இராணுவ ஆட்சிக்கு மகுடம் அணிவிப்பது போன்றதாகும். அதாவது முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளையும் முழுமைப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் நிலங்களை இலகுவாக கையகப் படுத்திக்கொள்ள முடியும்.    முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில், நாங்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டும் சமூகம் பாதுகாக்கப்படும் என்றும், வாக்களிக்காவிட்டால் அது சமூகத்துக்கு பாதிப்பாக அமையும் என்றும் எமது உறுப்பினர்கள் கூறுவார்களேயானால், அது திரைமறைவில் இடம்பெறுகின்ற பணப் பெட்டிகளின் பரிமாற்றத்தின் பிரதிபலிப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.madawalaenews.com/2020/10/blog-post_509.html
  • alysha newman : தடியூன்றிப் பாய்தல்.....4.75 மீற்றர்.....!   🏌️‍♀️
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.