Jump to content

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை! பிரதமர் முன்மொழிவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை! பிரதமர் முன்மொழிவு

தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார்.

spacer.png

அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 

2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வது அத்தியவசியமாகும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தலுக்கான வைப்பு தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், 

தேர்தல் இடம்பெறும் தினத்தில் வாக்களிப்பதற்கு முடியாத நபர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், 

18 வயது பூரணமானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல், 

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல், வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை ஏற்படுத்துதல் 

 விசேட திட்டத்தின் கீழ் இணைய வாக்களிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலின் போது பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, கணேஷ் தர்மவர்தன (சட்டம்), தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டி.டீ.ஹேரத், பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
https://www.virakesari.lk/article/92295

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உறவுகளும் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

புலம்பெயர் உறவுகளும் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா?

நீங்கள் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கண்டிப்பாக.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நீங்கள் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கண்டிப்பாக.  

நான் புலம்பெயரவில்லை, வாக்காளர் எண்ணிக்கை குறைவால் தமிழ் பா.உ எண்ணிக்கை குறைவதால் வந்த கேள்வி இது.

Link to comment
Share on other sites

வாழ்வுரிமை வாக்குரிமை  எதற்கு முன்னுருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

புலம்பெயர் உறவுகளும் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா?

புலம் பெயர்ந்தும், தொடர்ந்து இலங்கை கடவுசீட்டில் இருந்தால் கிடைக்கும் என நினைக்கிறேன்.

கடவுசீட்டு மாறும் போதே இலங்கை பிரஜா உரிமையும், வாக்குரிமையும் போய்விடும்.

பின்னர் இரெட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்து, கிடைத்தால் மீண்டும் வாக்களிக்கலாம். ஆனால் பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

Link to comment
Share on other sites

5 hours ago, Ellam Theringjavar said:

வாழ்வுரிமை வாக்குரிமை  எதற்கு முன்னுருமை

ஊரிலே வாழ்வுரிமையும் வாக்குரிமையும் கொண்டு வாழ்கிறார்கள், புலம்பெயர்ந்த நீங்கள் உரிமையை பேரம் பேசுகிறீர்கள். உரிமைகள் வேண்டாம் என்றா ஓடிவந்தீர்கள்? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஊரிலே வாழ்வுரிமையும் வாக்குரிமையும் கொண்டு வாழ்கிறார்கள், புலம்பெயர்ந்த நீங்கள் உரிமையை பேரம் பேசுகிறீர்கள். உரிமைகள் வேண்டாம் என்றா ஓடிவந்தீர்கள்? 😃

அப்ப  அங்கை பிரச்சனை ஒண்டுமில்லை எண்டுறியள்? சம்பந்தன் என்னத்துக்கு கருமங்கள் நிறைவேற்றப்படவேணும் எண்டுறார். மற்றவர் மாவை போராட்டம் வெடிக்கும் எண்டுறார் ....

9 minutes ago, குமாரசாமி said:

அப்ப  அங்கை பிரச்சனை ஒண்டுமில்லை எண்டுறியள்?

ஜேர்மனியில இல்லாத பிரச்சினையா? பிரச்சினை இல்லாத இடமில்லை. பிரச்சினை எண்டு சாட்டு சொல்லி அங்கை இருக்கிற சனம் தங்கட உரிமைகளை பேரம் பேசி விற்றுப்போட்டு ஓடிவரவில்லை. 

12 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தன் என்னத்துக்கு கருமங்கள் நிறைவேற்றப்படவேணும் எண்டுறார். மற்றவர் மாவை போராட்டம் வெடிக்கும் எண்டுறார் ....

இப்பிடியான அப்பாவியா நீங்கள்? இன்னமும் மாவையும் சம்பந்தனும் சொல்லுறதை நம்பிறீங்களா? அரசியல்தான் அவர்களுக்கு வருமானம். இப்பிடி போராட்டம் என்று புலம்பாவிட்டால் நீங்கள் அள்ளி அள்ளி கொடுப்பீர்களா? இல்லைதானே? அதனால்தான் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  அங்கே வாழ்வுரிமை இல்லாவிட்டால் இப்பிடி போராட்டம் வெடிக்கும் என்று புலம்பிக்கொண்டு வாழ முடிந்திருக்குமா? இவர்கள் அனுபவிக்கும் வாழ்வுரிமையை அங்கே போய் நீங்களும் அனுபவிக்கலாம். மக்களுக்கு வாக்குரிமை இருக்கிறதால தானே கஜேந்திரகுமாரையும் விக்னேஸ்வரனையும் பாராளுமன்றம் அனுப்ப முடிந்தது? அங்கே போனால் உங்களுக்கும் உங்கள் மண்ணில் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கும். இவற்றை பேரம்பேசி என்ன உரிமை கிடைத்திருக்கிறது?

Link to comment
Share on other sites

20 hours ago, கற்பகதரு said:

ஊரிலே வாழ்வுரிமையும் வாக்குரிமையும் கொண்டு வாழ்கிறார்கள், புலம்பெயர்ந்த நீங்கள் உரிமையை பேரம் பேசுகிறீர்கள். உரிமைகள் வேண்டாம் என்றா ஓடிவந்தீர்கள்? 😃

என்னது. நல்லாய்  தெரியுது. எங்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டதால்த்தான் இங்கே பிரச்சனையே.

வெளியில் வாழ்வோர் வாக்குபோடுவதால் யாருக்கு தேவை யாருக்கு இலாபம்.

பிறகென்ன ஓடி வந்தீர்கள் நடந்து வந்தீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அப்ப  அங்கை பிரச்சனை ஒண்டுமில்லை எண்டுறியள்? சம்பந்தன் என்னத்துக்கு கருமங்கள் நிறைவேற்றப்படவேணும் எண்டுறார். மற்றவர் மாவை போராட்டம் வெடிக்கும் எண்டுறார் ....

அவைக்குத்தான் சனம் வாக்களிக்குது. என்னதான் அவர்கள் பிழைப்புக்காக அரசியல் செய்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் முக்கால் வாசி தமிழ் மக்களுக்கு பைத்தியம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி நினைக்கறவ இங்கே இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

அவைக்குத்தான் சனம் வாக்களிக்குது. என்னதான் அவர்கள் பிழைப்புக்காக அரசியல் செய்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் முக்கால் வாசி தமிழ் மக்களுக்கு பைத்தியம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி நினைக்கறவ இங்கே இருக்கிறார்கள். 

விசுகர்! நீங்கள் வர வர கமலகாசன் கவிதை மாதிரியே எழுதுறியள். 😁

👍🏽

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.