Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்ட விரோத மண் அகழ்வு – பலியாகும் உயிர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட விரோத மண் அகழ்வு – பலியாகும் உயிர்கள்!

 
IMG_4212-696x392.jpg
 34 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில்  மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கித்துள் பகுதியில் உள்ள முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த ஆற்றுப்பகுதியின் ஓரத்தில் சுரங்கம் அகழ்ந்து மண் எடுத்துக்கொண்டிருக்கும் போது குறித்த மண் மேடு இடிந்துவீழ்ந்துள்ளது.

IMG_4282.jpg

இந்த விபத்தில் சிக்கிய கரடியனாறு, இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் 20 வயது என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4294.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் அண்மைக் காலமாக மண் அகழ்வுகளினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளினால் அதிகளவான உயிர்கள் பறிபோகும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான சட்ட விரோத மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

IMG_4269.jpg

முந்தானையாற்றுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக இன்றுடன் இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இந்த சட்ட விரோத மண் அகழ்வுக்கு இளைஞர்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டு இவ்வாறான சட்ட விரோத மண் அகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG_4254.jpg

ஒருசில அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு பலநூறுக்கணக்கான அனுமதிப்பத்திரங்கள் பயன்படுத்துவது போன்று மண் கொள்ளைகள் நடைபெற்றுவருவதாகவும் இதனை அதிகாரிகள் கண்டும் காணதுபோன்று செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 05மணி தொடக்கம் இரவு 10.00மணி வரையில் குறித்த பகுதியில் மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

IMG_4206.jpg

முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக குறித்த ஆற்றுப்பகுதி மோசமாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வினை தடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரும்போதே எதிர்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்கமுடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

https://www.ilakku.org/சட்ட-விரோத-மண்-அகழ்வு-பலி/

Link to post
Share on other sites

அழகான வீடிருக்கும் 

ஊரை அழகுபடுத்திய ஆறிருக்காது

நாட்டை அழகுபடுத்திய மலையிருக்காது.

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும்.  இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 
    • கமலா ஹரிஸ்.... பண்டி இறைச்சி சாப்பிடுகின்றவர். அவரை சரஸ்வதி பூசை நேரம், துர்க்கையுடன் ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது.
    • மருதங்கேணியில் 21 கொரோனா நோயாளிகள் அனுமதி!   மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (19) காலை, மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை, உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/மருதங்கேணியில்-21-கொரோனா-ந/   மினுவாங்கொடை தொற்று 2222 ஆனது! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,222 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,685 ஆகும். https://newuthayan.com/மினுவாங்கொடை-தொற்று-2222-ஆனத/
    • கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு     அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்ட அவரது மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதிவு: அக்டோபர் 20,  2020 16:39 PM வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார்.  இவரது மருமகள் மீனா ஹாரிஸ் (வயது 35).  வழக்கறிஞராக உள்ளார்.  குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  அந்த பதிவில், கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்டு படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அந்த படத்தில், கமலா ஹாரிஸ் கடவுள் துர்க்கையாக காட்சி அளிக்கிறார்.  மகிசாசுரன் ஆக அதிபர் டிரம்ப் காட்டப்பட்டு இருக்கிறார்.  அவரை ஹாரிஸ் குத்தி கொல்வது போன்று உள்ளது. இதேபோன்று ஜனநாயக கட்சிக்கான அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், துர்க்கையின் வாகனம் ஆன சிங்கம் போன்று காட்டப்பட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியிடப்பட்டு சற்று நேரத்தில் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.  இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்து அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் சுஹாக் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் கடவுளான அன்னை துர்க்கையின் முகவடிவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பது, உலகம் முழுவதும் உள்ள பல இந்து மக்களை ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று இந்து அமெரிக்க அரசியல் செயற்குழு, அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்களுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கடந்த வார இறுதியில், நவராத்திரியை முன்னிட்டு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அல்லவை அழிந்து நல்லவை வெற்றி பெறட்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன். நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் பதிவிட்டார்.   https://www.dailythanthi.com/News/World/2020/10/20163911/Hindu-organizations-are-strongly-opposed-to-the-niece.vpf    
    • டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி   இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.   இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.   https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20132124/1995834/Vijay-Sethupathis-daughter-gets-rape-threats-online.vpf
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.