Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வென்றார் முரளி! சேதுபதி?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kuna kaviyalahan said:

 

குணா,

முரளி ஏன் படம் எடுத்துவிட்டு அரசியலுக்கு வரவேண்டும்? கொழும்பு போன்ற ஒரு மாவட்டத்தில் அரச கட்சியில் இறங்கினால் சிங்கள வாக்குகளால் மட்டுமே எம்பியாக வரலாம். இல்லாவிடில் இருக்கவே இருக்கு தேசிய பட்டியல். 

“முரளி நமது ஆள்” என்பதை அவர் போதுமானவரை சிங்கள மக்கள் மனங்களில் பதிய வைத்து விட்டார், இனி அப்படி ஒரு தேவை இருப்பதாக தெரியவில்லை.

நான் நினக்கிறேன் அவர் இந்த படத்தை தமிழகத்தில் எடுக்க காரணம் - சந்தை, தொழில்நுட்ப வசதிகளில் சிங்கள சினிமா கோடம்பாக்கத்தின் 10% கூட இல்லை என்பதால்தான்.

இந்த படம் சகல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் ஒரு கமெர்சியல் பிளாக்பாஸ்டராக திட்டமிடபடுகிறது. சிங்கள படமாக, இலங்கையில் எடுதால் ஒரு நல்ல ஆர்ட் பில்மாக எடுப்பார்களே ஒழிய - காசு பார்க்க முடியாது.

அதற்காக இந்த படத்தை எடுப்பதில் அரசியல் காரணம் இல்லை என நான் சொல்லவில்லை. நிச்சயமாக உண்டு. ஆனால் நீங்கள் சொல்வதல்ல அந்த காரணம் என்பதே என் கருத்து.

Link to post
Share on other sites

சிறிலங்கா சினிமா சர்வதேச தரம் வாய்ந்தவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
800 விக்கட் எடுத்ததும், உலக கோப்பையில் விளையாடி வென்றதும்  சிங்கள அரசின் ஏன் சிங்கள மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டார் முரளி.
வியாபார ரீதியாக சிந்திப்பதால் சிங்களத்தில் படம் எடுப்பதிலும் பார்க்க தமிழ் நாட்டில் படம் எடுப்பதன் மூலம் மேலும் புகழையும் பணத்தையும் தேட முடியும். அத்தோடு நீங்கள் சொல்வது போல் ஏனைய இந்திய மொழிகளிலும் எடுக்க முடியும்.
இலங்கை அரசுடன் இணைய வியாழேந்திரன் போன்றோர் இவ்வளவு கஸ்டப்படவில்லையே? முரளி ஏன் அதிக கஸ்டப்பட்டு தன்னை நம்பிக்கையானவராக காட்ட வேண்டும்? ஏற்கனவே அவர் அவர்களுக்கு நம்பிக்கையானவர் தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முரளி ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த பார்த்தார், சில வீழ்ந்தன, பல இல்லை, அவருக்கும் இது ஒரு பின்னடைவே. நன்றி பகிர்வுக்கு. இந்த ஏதிர்ப்பினால் இன்னும் அவருக்கு சிங்கள தரப்பில் ஆரதவு கூடும், அது மறுக்கு முடியாத ஒன்று. சிங்கள படங்களின் கதை தரமானது, மலையாளத்தை போன்று, ஆனா அவர்களால் உலக தரத்தில் எடுக்க இன்னும் வளரவில்லை. 

விஐய் சேதுபதிக்குதான் பாதிப்பு அதிகம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதத்தின் தமிழ்முகம்

 
1-58-696x348.jpg
 52 Views

‘முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்’ என்கிற அரசியல் பார்வை முன் வைக்கப்படுகிறது.

அது பலமடையுமா? அல்லது பலவீனமடையுமா? என்பதை சிங்களமே தீர்மானிக்கப் போகிறது.

‘ஒருவர் மீதோ அல்லது அவர் சார்ந்த கட்சியின் மீதோ விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவர்கள் அதனைச் தமக்குச் சாதகமாக மாற்றுவார்கள்’ என்பது இயல்பானது.

தேர்தல் காலங்களில்,’ரணிலைப் பகிரங்கமாக ஆதரித்தால், சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தருக்கு ஆதரவு அதிகரித்துவிடும்’ என்று கூட்டமைப்பினர் கூறுவதை நாம் அவதானித்துள்ளோம். அது ஓட்டு அரசியலின் மறைமுகமான தந்திரம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அரசியல் தந்திரோபாயக் களம் வேறு வகையானது .
முத்தையா முரளிதரன் என்கிற ‘சர்வதேச கிரிக்கட் முகம்’ பேசும் பேரினவாத சார்பு அரசியலால் வரும் தாக்கம் பெரியது. இதன் மீது தமிழ்த்தேசிய அரசியல் தொடுக்கும் விமர்சனப் போர், சிங்களத்தின் மனதில் தற்காலிக இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை முரளிக்குக் கொடுக்கலாம்.

ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் முதல்வர் மகிந்த இராஜபக்ச, இதனை எவ்வாறு தனது சர்வதேச அரசியல் நகர்வுகளுக்குப் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவதானிக்க வேண்டும். அதுதான் தமிழ்த்தேசிய விடுதலை அரசியல் எதிர்நோக்கும் சவால்.

லக்ஸ்மன் கதிர்காமரை தனது சர்வதேசப் பரப்புரைக்காக, சந்திரிகா விஜயகுமார ரணதுங்க எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

முரளியைப் பொறுத்தவரை அர்ஜுனா ரணதுங்க போல தானும் ஒரு அரசியல் பிரமுகராக வலம் வரவேண்டுமென்கிற ஆசை இருக்கலாம்.

எவ்வாறு இந்திய-அமெரிக்க உறவில் இலங்கையை இணக்கமாகப் பொருத்திப் பார்ப்பதற்கு , அமெரிக்க நண்பர் மிலிந்த மொரகொடவின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோன்று வழுவழுத்த இந்திய-இலங்கை தடுமாற்ற உறவில் தானும் ஒரு தமிழ் மிலிந்தாவாக ஆகிவிட முடியாதாவென முரளி கற்பிதம் கொள்ளலாம்.

ஆகவே கிரிக்கட்டால் பெற்ற புகழ்வெளிச்சத்தை, சினிமா ஊடாக இந்தியாவெங்கும் பரவவிட்டு, தனக்கான கொழும்பு -இந்திய சிம்மாசனத்தை முரளி உருவாக்க எண்ணுகிறார் போலுள்ளது.

கடந்த தேர்தலில் மகிந்த சார்பில் நுவரெலியாவில் தனது சகோதரரை இறக்கினார்.
அது தோல்வியிலேயே முடிந்தது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.சிங்களக் கடும்போக்காளர் விமல் வீரவன்சவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அவருடைய சகல அரசியல் நகர்வுகளும் சிறுதளவேனும் வெற்றி வாய்ப்பினை அளிக்கவில்லை.
‘இவரல் எந்த நாடாளுமன்ற அரசியல் இலாபமும் தமக்கு இல்லை’ என்பதனை மகிந்த சகோதரர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள்.

பொதுவாகவே, தமது கட்சிக்கு வாக்குச் சேகரிக்க முடியாதவர்களை, இந்த அதிகாரத்தரப்பானது எப்போதுமே கெளரவ நடிகர்களாகவே வைத்துக் கொள்ளும்.

இராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு இப்போது சீனாவிற்கெதிரான வல்லரசுநாடுகளை சமாளிக்க, அந்த நாடுகளால் கனிவாகப் பார்க்கப்படும் நல்லெண்ணத் தூதுவர்கள் (அம்பாசிடர்ஸ்) தேவை.

முன்னாள் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் யாழ். விஜயத்தின் போதே சிங்களத்தின் ‘அம்பாசிடர் முரளிதரன்’ களமிறங்குகிறார்.

பிரெஞ்சு அதிபர் சென்றிருந்தால் வேறொருவர் சென்றிருப்பார்.
ஆதலால் கிரிக்கட் இரசிகரான கமரூன் வரும்போது முரளியை முன்னிறுத்துகிறது சிங்களத்தின் இராஜ தந்திரம்.

முரளியின் ஆட்டக்களம் எதுவென்பதை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

அவர்களே இவரின் இருப்பிடத்தைத் தீர்மானிப்பார்கள்.

கருணா போன்று, பொதுஜன பெரமுனவின் உப-உப- தலைவர்களில் ஒருவராகலாம்.
இல்லையேல் அம்சா போல, சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராகலாம். எதுவும் நடக்கலாம்.

பெற்ற பேரையும் புகழையும் காசாக்குவதற்கு கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரம் உண்டு.
ஆனால் சேர்த்த பணத்தையும் புகழையும் பாதுகாக்க, பலருக்கு தலையைச் சுற்றி ‘அரசியல் ஒளிவட்டம்’ தேவைப்படுகிறது.

இவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்.
அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை ஆதரிப்பது அவரின் சுயநலம் சார்ந்த உரிமை.
அதனை எதிர்ப்பது மக்கள்திரள் அரசியலின் தலையாய கடமை.

-இதயச்சந்திரன்

https://www.ilakku.org/பேரினவாதத்தின்-தமிழ்முக/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விசைப்பலகை வீரர்களால் நடாத்தப்பட்ட போர் இதில் செய்தியாளர்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது எந்த முன்னணி பத்திரிகையின் ஆதரவும் இல்லை ஆனால் முரளிதரன் அலறுகிறார் .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ? “இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டாள்தனமாக தர்க்கம் செய்கின்றனர். அன்று ஜே.ஆர் ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தும் அந்த அதிகாரம் அவரை சர்வாதிகாரியாக்கியது. “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று சர்வாதிகாரப்போக்கில் செயல்பட்டார். ஜே.ஆரின் சர்வாதிகார செயல்பாடானது தமிழ் மக்களை அதிகம் பாதிப்படைய செய்ததுடன், பாரிய யுத்தம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றது. ஜே.ஆர் மட்டுமல்லாது அவருக்கு பின்பு ஆட்சி செய்த ஏனைய ஜனாதிபதிகளினது முழு கவனமும் தமிழ் மக்கள் மீது இருந்ததனால் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பினை முஸ்லிம்களால் உணர முடியவில்லை. ஆனால் 2010 க்கு பின்பு ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கினை முஸ்லிம்களும் உணர தொடங்கினார்கள். அது மட்டுமல்லாது இன்று உள்ள நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. அதாவது சர்வாதிகாரப் போக்குடைய முன்னாள் இராணுவ அதிகாரியின் கையில் இந்த அதிகாரம் செல்ல இருக்கின்றது. ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை சர்வாதிகாரியாக மாற்றிய அதி உச்ச அதிகாரமானது இராணுவ துறையை சார்ந்தவரின் கையில் சிக்கினால் நிலைமை என்னாகும் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.   அதிகாரம் குறைவாக இருக்கின்ற நிலையிலேயே சிவில் அதிகாரிகள் கடமை புரிகின்ற பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. இந்த நிலையில் இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவு வழங்குவதானது இராணுவ ஆட்சிக்கு மகுடம் அணிவிப்பது போன்றதாகும். அதாவது முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளையும் முழுமைப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் நிலங்களை இலகுவாக கையகப் படுத்திக்கொள்ள முடியும்.    முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில், நாங்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டும் சமூகம் பாதுகாக்கப்படும் என்றும், வாக்களிக்காவிட்டால் அது சமூகத்துக்கு பாதிப்பாக அமையும் என்றும் எமது உறுப்பினர்கள் கூறுவார்களேயானால், அது திரைமறைவில் இடம்பெறுகின்ற பணப் பெட்டிகளின் பரிமாற்றத்தின் பிரதிபலிப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.madawalaenews.com/2020/10/blog-post_509.html
  • alysha newman : தடியூன்றிப் பாய்தல்.....4.75 மீற்றர்.....!   🏌️‍♀️
  • அது ஒரு போதும் நடக்காது. இவர்கள் வைரஸ்மாதிரி எல்லா இடங்களிலும் பரவிவிட்டார்கள்.குக்கிராமத்திலும் ஒரு முஸ்லீமாவது இருக்கும். அதுவும் கோபக்கார முஸ்லீம்.
  • வணக்கம் வாத்தியார்.....! இந்த நிமிடம் நீயும் வளர்ந்துஎன்னைத் தாங்க ஏங்கினேன்அடுத்தக்கணமே குழந்தையாகஎன்றும் இருக்க வேண்டினேன்தோளில் ஆடும் தேனேதொட்டில் தான் பாதி வேளைசுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீஇசையாக பல பல ஓசை செய்திடும்இராவணன் ஈடில்லா என் மகன்எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணேஎனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணேஎன்னை விட்டு இரண்டு எட்டுthallip போனால் தவிக்கிறேன்மீண்டும் உன்னை அள்ளி எடுத்துகருவில் வைக்க நினைக்கிறேன்போகும் பாதை நீளம்கூரையாய் நீல வானம்பல நூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீபசி என்றால் தாயிடம் தேடும்மானிட மர்மம் நீநான் கொள்ளும் கர்வம் நீகடல் ஐந்தாறு மலை ஐநூறுஇவை தாண்டித் தானே பெற்றேன் உன்னைஉடல் ஜவ்வாது பிணி ஒவ்வாதுபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை--- கண்கள் நீயே ---
  • குரங்க பார்த்து புலி சூடு போட்ட கதை ..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.