Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை! | Athavan News

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த இளைஞனை கைதுசெய்ய முயன்ற போது, அவர் தப்பியோடியதால், அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது, குறித்த இளைஞனிடமிருந்து சிறிய கைத்துப்பாக்கியும், ஒரு கூரான கத்தியும் பொலிஸார் கைப்பற்றினர்.

தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் மாஸ்கோவில் பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எங்களுடைய குடிமகன் ஒருவரை இழந்துவிட்டோம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கருத்து சுதந்திதத்தையும், நம்பகத்தன்மையையும் கற்றுக்கொடுத்ததற்காக! ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கும்’ என கூறினார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/பிரான்ஸில்-நபிகள்-நாயகத்/

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ellam Theringjavar said:

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜெகதா துரை said:

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

3 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

நிச்சயமாக. அது ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று இருக்கு. ஒரு நாள் உலகை ஆளும் அவர்களது கனவு வெகு தொலைவில் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது ! 

ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து.....
பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளவிடயம் வெளிநாட்டவர்களின் கட்டற்ற வருகையே எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிலர் வெளிப்படையகவே இஸ்லாமியரைப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இஸ்லாம் குடியரசுப் பெறுமானங்களுடன் ஒத்துப்போக முடியாத ஒன்று எனப் பிரலாபம் செய்கின்றனர். தீவிர வலதுசாரிக் கட்சிகளோ தாம் சொல்லுவதை அனேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
இம்மானுவெல் ஆசியர் பிரான்சில் வாழும் செச்சீனியா நாட்டின் இளைஞர் ஒருவரால் சிரைச்சேதம் செய்யப்பட்டதையடுத்து பிரான்சில் போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டவர்கள் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்ப்படுகிறது. 

மீளவும் வெளிநாட்டவர்கள் வருகை தொடர்பாகவும், இஸ்லாம்-குடியரசு அவற்றிக்கிடையேயான உடன்பாடு-முரண்பாடு தொடர்பாகவும் விவாதங்கள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த வேளையில், அழிவுகளிலிருந்த நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் தமது காலணியாகவிருந்த வட ஆபிரிக்காபிலிருந்து ஏராளமான இஸ்லாமியத் தொழிலாளர்கள் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் பலர் ஆண்களாக இருந்தனர். 72 ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் தமது குடும்பங்களையும் பிரான்சுக்குக் கூட்டிவரும் உரிமை வழங்கப்பட்டது. 
இவ்வாறான தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடுப்பங்களுக்குமென மத்திய நகரிலிருந்து சற்றுத் தொலைவிலான புறநகரங்களில்தொடர்மாடிக் கட்டடங்கள அமைக்கப்பட்டன. பிரான்சின் முக்கிய நகரங்களில் அனைத்தைச் சுற்றியும் இது நடைபெற்றது. பொருளாதார மையங்களாக இருந்த, இருக்கின்ற பெருநகரங்களின் யதாரத்தம் இதுதான். 
(சுருக்கமான முன்னோட்டமாக....) 

2019ம் ஆண்டு "மதசார்பின்மை அவதான மையம்" வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, பிரான்சில் ஒரு மதத்தைப் பினபற்றுபவதாகப் பிரகடனம் செய்பவர்களில் 14 வீதமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். 
இவர்களில் 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அண்ணளவாகப் பார்த்தால், 1990 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் இருமதத்தினரும் சம எண்ணிக்கையில் உள்ளனர். 

ஒட்டுமொத்த பிரான்சின் சனத்தொகையில் 6 வீதத்தினரே இஸ்லாமியராக இருக்கும்போதும் (4,1 மில்லியன்) கத்தோலிக்கர்களின் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கை அடியாகக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதம் சவூதி போன்ற நாடுகளின் பாரிய நிதிப்பங்களிப்புடன் பிரான்சில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது பொதுவான அவதானிப்பாக உள்ளது. பிரான்சில் உள்ள (பள்ளிவாசல்கள் உட்பட்ட) இஸ்லாமிய வழிபாட்டிடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமானதாகும். இவற்றுள் தீவிரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டவையுள்ளன என்கிறது உள்நாட்டமைச்சின் அறிக்கை யொன்று. 

இதன் விளைவுகளாகச் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்: 

முக்காடு போடும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு ஒரேயொரு இஸ்லாமியத் தனியார் பாடசாலையே பிரான்சில் இருந்தது. இன்று அது எண்ணிக்கையில் 120 ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் தொழுகைக்கான இட ஒதுக்கீடும் அதற்கான இலவச நேரமும் கோரப்படுகிறது. பாடசலை உணவகங்களில் "ஹலால்" உணவு கோரப்படுகிறது. பெண்களுக்குப் பெண்கள்தான் வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கோரப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதானால், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்கள் தம்மதக் கோட்பாடுகளுக்கு அமைவான வகையிலான வாழ்வுரிமையைக் கோருகிறார்கள். அல்லது நடைமுறைப்படுத்துகிறார்கள். 
ஆனால், பிரஞ்சுக் குடியரசு தான் மதசார்பற்றது என்ற கோசத்தைக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இங்கேதான் முரண்பாடுகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதில் சில விடயங்களை நாம் துல்லியமாகக் கருத்திலெடுக்க வேண்டும். 

- பிரான்சில் சமூக-பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டுள்ளது, 
- பிரான்சில் இஸ்லாமியருக்கு எதிராக குறிப்பாகப் பிரான்சில் வாழும்அரபுகளுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. 
- இதன்காரணமாக அது தன்னையொரு ஒதுக்கப்பட்ட தனித்த அலகாக்க கருதி இஸ்லாமை மையப்படுத்திய வாழ்கையை நோக்கிச் சென்றுடிகொண்டிருக்கிறது, 
- இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. 
- இஸ்லாமியக் குழந்தைகளின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பிரஞ்சும் சமூகம் மிகக் குறுகிய காலத்துள் "சமூகங்களாகப்" பிரியும் ஆபத்து யாதார்த்தமாகிவிட்டது. தற்போது அரசியல் வாதிகளும் சமூக விஞ்ஞானிகளும் இவ்விடயத்தைத் தெளிவாகப் புரிந்து அதற்குரிய, இந்நிலையைத் தடுக்கும் வகையிலான சட்ட மாற்றங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

இஸ்லாமியப் பிறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெண்களின் "சுதந்திரத்தை" வலியுறுத்வேண்டும் எனும் நோக்கில், பொதுவாகவே குடும்பத்தில் பெண் சுயாதின உரிமையுடையவாக வாழவேண்டும் எனும் முற்போக்குக் கருத்தை முன்நிறுத்திச்   சட்டவியல் திருத்தங்கள் செய்தார்கள். பெண்விடுதலையெனும் கோசத்தை முன்வைத்த பொதுச்சங்களுக்கு அரசு பாரிய நிதியை ஒதுக்கியது. 
விளைவு: பிரான்சில் குடும்பப் பிளவுகள் பாரிய அளவில் ஏற்பட்டன. விவாக ரத்துகள் அதிகரித்தன. தீவிர பெண்ணியம் தலையெடுத்து ஆண்-பெண் உறவுகளை மேலும் விரிசலாகின. திருமண வீதங்கள்வீழ்ச்சியடைந்தன. பிரஞ்சுக் காரரின் பிறப்புவீதம் சரிவடைந்தது. சமபால் உறவுகள் அதிகரித்தன. ஆனால் இச்சட்டங்கள் இஸ்லாமியக் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத்தின் இறுக்கமாக சுவர்களை இச்சட்டங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 

தற்போதைய மக்ரோனின் அரசாங்கள் "பிரிவினை" க்கெதிரான சட்ட ஆக்கங்களுக்கான முனைப்பில் உள்ளது. அதுவும் வெற்றுத் தோட்டாவாக முடியவடையலாம். 

லெபனான் ஹிஸ்பொள்ளா இயக்கம் பிரான்ஸ் விரைவில் இஸ்லாமியக் குடியரசாக மாறும் என்று வேறு கட்டியம் கூறியுள்ளது. 

இப்பின்னணியில்தான், "சார்லி எப்டோவின்"கேலிச் சித்திரங்களை ஆராய வேண்டும். இக்கேலிச்சித்திரங்கள் முதலில் ஆத்திரமூட்டும் நோக்கத்திலேயே வரைந்து வெளியிடப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதரைக் வேகலப்படுத்தி மலினப்படுத்தி இஸ்லாமியரை வம்புக்கிழுத்தார்கள் இந்த கேலிச் சித்திரக்காரர்கள். இவர்களுக்குப் பின்னால் அதிகார மையங்களின் கரம் இருந்ததை பலர் கண்டுகொள்ளவில்லை. "கருத்துச் சுதந்திரம்" பறிபோகிறது என்று அலறினார்கள். 
ஆனால், மற்றைய மதங்களைக் கேலி செய்தவர்களின் "கருத்துச் சுதந்திரத்தை" குழிதோண்டிப் புதைத்தவர்கள் பலரும் இவர்கள்தான் என்பது முரண்நகை. 

சிரைச்சேதம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர் யாருக்குப் பலியானார் ? ஒரு பதினெட்டு வயது மடையன் யாரோ சொன்னவற்றைக் கேட்டு அந்த ஆசரியரைச் சிரைச்சேதம் செய்தான். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "இல்-து-பிரான்ஸ்" என அழைக்கப்படும் பரிசையும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் எந்தப்பாடசாலையை எடுத்தாலும் அங்கு இஸ்லாமிய மாணவர்கள் இல்லாதிருப்பது அரிது. 

இது இப்படியிருக்க, 

- புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம். 
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

இங்கேதான் ஒரு அரசியல் தெளிவாக முன்வந்து நிற்கிறது. ஆற்றாமையின் அரசியல். பிரஞ்சுக் குடியரசு தன் அரசியலில் அதாவது மக்கள் தொகை, குடிவரவு போன்ற விடயங்களில் பாரிய தோல்வியை அடைந்துவிட்டது. இஸ்லாம் ஒரு நாள் தன்தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனும் தூரப்பார்வையை அது கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆத்திரமூட்டல்களால் மிதவாத இஸ்லாமியர்களையும் தீவிர வாதத்தை நோக்கி நகர்திக்கொண்டிருக்கிறது. 

தற்போது "ஆற்றா நண்டு" தணலைக் கவ்வும் வேலையைச் செய்கிறது. அதாவது, கல்வி அமைச்சின் ஊடாக இஸ்லாமியச் சந்ததியை அதன் மத நம்பிக்கைகளிலிருந்து பிடுங்க நினைக்கின்றது பிரஞ்சுக் குடியரசு. அதற்குக் கருவியாகிப் பலியாகிவர்தான் பாவம் அந்த சாமுவேல் பத்தி ஆசிரியர். இது அரசின் ஆராக்கியமான போக்கல்ல. அரசின் கல்விக் கொள்ளை நிiதானமானதாக இல்லை. சமூக அமைதியைப் பேணுவதாக இல்லை. ஆத்திமூட்டல்களால் ஏதும் நடைபெறப்போவதில்லை. 

எத்தனை ஊர்வலங்களை நடாத்தினாலென்ன, மெழுகுவரத்திகளை ஏற்றினாலென்ன, பூங்கொத்துகள் விதைத்தாலென்ன, கோசங்களை எழுப்பினாலென்ன, எத்தனை சட்டங்களைப் போட்டாலென்ன, மிதவாதச் சத்திகளை தன்னுடன் இணைத்து ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து முன்நகர்ந்தாலன்றி, பாரிய சமூக சச்சரவுகளுக்கு ஒட்டுமொத்தத் பிரஞ்சு தேசமும் முகம் கொடுக்கவேண்டியேற்படும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. 

வாசு தேவன்
18.10.2020.

6 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம்
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

மன்னிக்கவும் சகோ நேரமின்மையால் இதை இணைக்கின்றேன் போதுமான விளக்கம் இதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

உண்மையில் உங்கள் கருத்து சரியான கருத்து. 
மதமும் திருமணமும் அவரவர் தனிப்பட்ட விடயம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து.

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

நாம் நல்ல காரியங்களுக்காக மெழுகுவர்த்தியும் குத்துவிளக்கும் ஏற்றுகின்றோம். அதுவும் நெருப்பு.
வீடு பற்றி எரிவதும் நெருப்பு.

தாகத்திற்கு குடிப்பதும் தண்ணீர்
சுனாமியாக வருவதும் தண்ணீர்
மல வாசலை கழுவுவதும் தண்ணீர்.

விளங்க நினைப்பவன் இதை விளங்கினால் பிஸ்தா 🤣 :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

https://www.facebook.com/100021631899416/posts/755326001865123/?extid=0&d=w

எங்கே போய் எங்கே வந்து நிற்கிறோம். 

☹️

Edited by Kapithan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்டபாட்டிற்க்கு உள்ள விடுவது ,பிறகு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது 
அளவுக்கு அதிகமாக மனிதநேயம் இருந்தால் சிலவேளை இப்படியான சம்பவங்கள் ஐரோப்பியர்களின்  நெறிகட்டிப்போன மூளையை நீவி சரிசெய்யக்கூடும், கொத்துக்கொத்தாக செத்துவிழும் போது எதற்காக மற்றைய அரபுநாடுகள் இந்த முஸ்லிம்களுக்காக எல்லையை திறக்கவில்லை என்றும் எதற்க்காக அவர்களது நாடுகளில் வேற்று நாட்டவருக்கு குடியுரிமை இல்லை எனபதையும் ஐரோப்பியர்கள் முதலிலேயே மண்டையை உபயோகித்து சிந்தித்திருந்தால் இப்போது வெங்கிளாந்திகள் போல முழுசும் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள்  

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மன்னிக்கவும். இசுலாமியர்களின் செயற்பாடுகளை நான் ஒருபோதும் ஆதரிக்காதவன். இங்கு மட்டும் அல்ல தாயகத்திலும். ஆனால் இந்த ஆசிரியர் அவர்களின் மூர்க்கத்தை கணக்கிலெடுக்காமல் சீண்டியதைத்தான் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம் என்றேன் மற்றும் படி இனக்கொலையை எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்;'...(அல்குர் ஆன் 33:6)   

Link to post
Share on other sites
15 hours ago, Kapithan said:

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

Link to post
Share on other sites
15 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

1 hour ago, Ellam Theringjavar said:

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக "ரெபியூஜி" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. "அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்," என்று கேட் கூறுகிறார். அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது." "நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார். "இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்," என்கிறார் கேட். இன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார். "அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்." இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.   குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'மேலாண்மை செய்யும் ஆண்கள்' "இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார். "இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்" என்கிறார் அவர். பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். "நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது" என்று சூ கூறுகிறார்.   "தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்" என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும். ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. "குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு." முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார். "பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை பட மூலாதாரம், Getty Images   குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர். தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், "தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார். வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். "வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. "இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது" என லெஸ்லி கூறுகிறார்.https://www.bbc.com/tamil/science-54599833
  • விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் "நன்றி.. வணக்கம்" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். "விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். "ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே.." என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023
  • நானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡
  • 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன். சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்)  நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும். இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/92563
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.