Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

Recommended Posts

4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

நீங்கள் சரி என்றால் சரிதான்.

Link to post
Share on other sites
 • Replies 82
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மனித சுதந்திரம் பேச்சுரிமை பற்றி விவாதிப்பவர்கள் பிரெஞ்சு நாட்டவரின் நிலையிலிருந்தும் சிந்திக்க வேண்டும். 200 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சுப் புரட்சி மூலம் அரசாட்சியை அழித்து மக்களாட்சியை உருவாக்கியவ

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது !  ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து..... பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச்

கண்டபாட்டிற்க்கு உள்ள விடுவது ,பிறகு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது  அளவுக்கு அதிகமாக மனிதநேயம் இருந்தால் சிலவேளை இப்படியான சம்பவங்கள் ஐரோப்பியர்களின்  நெறிகட்டிப்போன மூளையை நீவி சரிசெய்யக்கூடு

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

அவர் கூறவருவது உங்களுக்கு புரியவில்லை கபிதன் 

உலக அரசியலில் எவ்வளவோ திரை மறைவு நாடகம் நடக்கிறது 

இதை ஒரு இசுலாமியர்தான் செய்தார்  என்று எப்படி அடித்து கூறுகிறீர்கள்?
இஸ்லாமியர் மீது பழிபோட என்றும் செய்திருக்கலாம் என்ற கோணம்?

அரசு மீது கேள்வி எழுப்பாமல் இருக்க மக்களை ஒரு பதற்ற நிலையில் வைத்திருக்க 
வேண்டிய நிலைமை பல மேற்கு அரசுகளுக்கு உண்டு 

Libya is turning into a battle lab for air warfare

FGBWDHP5JVDDFGSTVNWEG3E7RY.jpg

The U.S. military in June published imagery that officials said show Russian aircraft being used to support private military companies sponsored by the Russian government to fight in the Libyan war. (U.S. Defense Department)

https://www.defensenews.com/smr/nato-air-power/2020/08/06/libya-is-turning-into-a-battle-lab-for-air-warfare/

Rafale Jets Evade All Radars, Air Defence Systems; Bombs Turkish Facilities In Libya

Recently, the al-Watiya airbase in Libya was reportedly bombed by Rafale jets, which either belonged to France or Egypt, the two nations within the range of the base that possesses these (Rafale) aircraft, writes the Arab Weekly.  

தயவு செய்து இதை எல்லோரும் வாசியுங்கள் 
தற்போதைய அரசியல் ஆர்கெஸ்ட்ரா நாடகங்களை கொஞ்சம் 
புரிய உதவும் 

https://eurasiantimes.com/rafale-jets-dodge-all-radars-air-defence-systems-bombs-turkish-facilities-in-libya/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே

உங்கள் கருத்து மதவெறிக்கு எதிரானதே 👍
நான் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மோசமான மதவெறி கருத்தை கண்டேன்.பின்பு பார்த்த போது அந்த கருத்து அகற்றபட்டிருந்தது அதை தான்அழித்துவிடுவது நல்லது என்றேன்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Ellam Theringjavar said:

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

எல்லாம் ஓவராத் தெரிஞ்சவர் கோவிக்கப்படாது.

நீங்கள்  காத்தான்குடியோ என்று ஒரு பகிடியாகத்தான் கேட்டேன். அது உண்மையாக இருக்கும் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. உண்மை என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கேட்டிருக்கமாட்டேன்.  

அதற்காக கல்லால் அடிக்கப்படாது. நாம் என்ன சவூதியிலா இருக்கிறோம் கல்லால் அடிப்பதற்கு... 😀

1 hour ago, goshan_che said:

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

இது ஏற்கனவே பல ஆய்வாளர்களாலும் அறிஞர்களாலு கூறப்பட்டு பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். 🙂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பாரீஸ், 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/20044637/School-teacher-assassination-IS-in-France-Terrorists.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்! | Athavan News

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர்.

பரிஸ், லியோன், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடிய ஆயிரக்கணக்கானோர், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.

இதன்போது ஆசிரியர்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்தியதோடு, சார்லி ஹெப்டோவின் முதல் பக்கத்தைக் காட்டும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பரிஸின் பிளேஸ் டி லா ரெபுப்ளிக் மற்றும் அதைச் சுற்றிலும் நடைபெற்ற போராட்டங்களில், பரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ, இளநிலை உட்துறை அமைச்சர் மார்லின் ஷியாப்பா, கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் பிற அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், 18 வயது இளைஞனொருவர் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/விரிவுரையாளர்-படுகொலை-ப/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan News

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://athavannews.com/பிரான்ஸில்-விரிவுரையாளர/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

 • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

https://thinakkural.lk/article/81938

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 11:36, தமிழ் சிறி said:

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை 
இலங்கையில் வைத்த குண்டால்  காலம் காலமாக பேணிப்பாதுகாத்த அரசியல் அம்பேல் 
இந்த விவாகரத்தால் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

அது ஒரு போதும் நடக்காது. இவர்கள் வைரஸ்மாதிரி எல்லா இடங்களிலும் பரவிவிட்டார்கள்.குக்கிராமத்திலும் ஒரு முஸ்லீமாவது இருக்கும். அதுவும் கோபக்கார முஸ்லீம்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

Edited by tulpen
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்த மதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது ஒழிந்து கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

*****

நல்லவர்களும் தீயவர்களும் உலகில் இருப்பதால் உங்களை போற்றவர்களுக்கு நல்லதைப்பார்க்க நல்ல மனம் வேண்டும், அது காலம் கடந்துதான் உங்களிற்கு வரும் அதுவரை இப்படி புலம்பிகிட்டு இருங்கள்

ஒவ்வொருவரின் பார்வைகளும் வித்தியாசம். ..... உங்களின் சிந்தனை வேறு, சக மனிதர்களின் சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும் மதிக்க  தெரிந்தவன் சிறந்த மனிதன், தனக்குதான் தெரியும் தான் சொல்வதுதான் சரியென நினைப்பவன் ஆணவக்காரன், அதுவரை இந்த மமதை மாறாது

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன.

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁 🤣

Link to post
Share on other sites
18 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

மதங்கள் பற்றிய மிகச்சரியான கணிப்பீடு 💐

7 hours ago, tulpen said:

இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

💯

இப்போது முஸ்லிம் மத கொலைவெறியை நியாயபடுத்துவதன் மூலம் அங்கேயும் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

Edited by விசுகு
 • Like 1
Link to post
Share on other sites
4 minutes ago, விசுகு said:

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

உண்மை. இதைப்புரியாதவர்கள் இன்னமும் எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

சைவர்கள் முன்னேறி எங்கோ சென்றுவிட்டார்கள். நீங்கள் பழைய சக்கட்டைகளை வைத்து குண்டுச்சட்டிக்குள் ஏரோப்பிளேன் ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் ஜெகோவா சாட்சிகள் காவிக்கொண்டு திரிவது போல்.......
இந்தக்காலத்தில் இந்த புத்தகங்களை யார் படிக்கின்றார்கள்? யார் வைத்திருக்கின்றார்கள்? யார் புத்தகத்திலிருப்பதை கடைப்பிடிக்கின்றார்கள்?

4 hours ago, தமிழ் சிறி said:

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁🤣

ஒல்லாந்தர் காலத்திலையிருந்து அவர் நகரவேயில்லை. 🤣

4 hours ago, Ellam Theringjavar said:

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

கற்காலத்தில் நடந்ததையும் வைத்து காமெடி பண்ணுவார்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

69862445_2441827619364997_3667214622613569536_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=soUiJjVpx00AX9JHuub&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5c956207c000e4075289807723f670df&oe=5FBA52BC

ருல்பன்... இந்தப்  புத்தகத்தை, 
பூபாலசிங்கம்  புத்தகக் கடையில்,  வாங்கலாமா ❓ 😜   
என்ன விலை,  விற்கிறார்கள் என்றும்.. அறிய ஆவலாக உள்ளது. :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2020 at 02:39, செண்பகம் said:

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

 • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

https://thinakkural.lk/article/81938

கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முழுசா சந்திரமுகி ஆக , மாறிவிட்ட அக்காவுக்கு, ரெண்டும் ரெண்டகப்பை, ரெண்டும் கலண்டகப்பை எண்டு கேள்விப்பட்டிருப்பியள்... கோத்தாவை தூக்கி கொண்டாடுமளவுக்கு, அவர் யோக்கியர் இல்லை. அதேவேளை இந்தியர்களையும் நாம் நம்ம முடியாது. உந்த மீன்பிடி பிரச்னை காலகாலமாக இருந்து வருகிறது. நிழலி சொன்னது போலை, தமிழக அரசியவாதிகள், மீன்பிடி தொழிலில் பெருமுதல் இட்டு செய்கிறார்கள். மறுபக்கம் அதே அரசியல்வாதிகள், சிங்களத்துடன் ஓட்டுறவை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இந்த மீன்பிடி பிரச்சனை இதுவரை, இலங்கை கடற்படை, தமிழக மீனவர் என இருந்ததை, திட்டமிட்டு, 4 தமிழக மீனவரை கடலில் கொலையினை செய்தபின், அதே சூட்டுடன், வடபகுதி மீனவரை தூண்டி விட்டு, பிரச்சனையினை, வேறு பரிமாணத்துக்கு தள்ளும், அரசியல் முயல்வினை பாருங்கள். சிங்களம், வழமைபோல, நரி மூளையுடன் செயல் படுவது புரியும். 
  • தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் தீவக பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் சீனாவினால் நிறுவப்பட்டது அந்த அனல் மின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்படுவதும் மாதக்கணக்கில் திருத்துவது போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.தீவுப்பகுதியில் புதுப்பிக்கத்தக எரி சக்தி அமைப்பை உருவாக்குவது என்பது தமிழ் மக்களுக்கும் இந்தியாவின் மக்களுக்கும் உகந்த செயல் அல்ல. இது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே இருக்கும்.யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ள தீவாகும். இங்கு உருவாக்கப்படுகின்ற தொழில்நுட்பம் என்பது இந்தியாவுக்கு எதிராக செயற்படும் செயற்பாடாகவே இருக்கும்.அது வடக்கிலுள்ள மக்களுக்கும் பிரச்சினையாகவே இருக்கும். சாவகச்சேரியில் 60 பேருக்கு மேற்பட்ட சீனாவைச்சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தீவுகளை நோக்கி சீனாவின் அபிவிருத்தி என்பது இந்தியாவை சீண்டுவதாகவே உள்ளது. சிறிய தீவாகவுள்ள நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் எரி சக்தி நிறுவனங்களை உருவாக்குவதற்கு சீனாவை இந்த மண்ணுக்கு கொண்டு வருவது என்பதை புத்தி சாலித்தனமான விடயமே அல்லவெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். https://visiontamil.com/2021/01/24/யாழ்-சாவகச்சேரியில்-பதுங/
  • கதை எழுதுவதற்கு இயன்றவரை ஆராய்ச்சி செய்யவேண்டும், தகவல்களைத் திரட்டவேண்டும். கூகிளையும் பயன்படுத்தவேண்டும். சொற்களை  வைத்து கதையைச் செதுக்கும் நுணுக்கம் தெரிந்தவர் ஷோபாசக்தி!
  • மம்முடு-கோமகன் பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில்  ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு.   07 மார்கழி 2018 000000000000000000000   கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி  செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்டது என்று  எல்லாமே நான் தான். எனக்கு தங்கையோ சகோதர்களோ இருக்கவில்லை. ஒருவேளை எனக்கு ஒரு தங்கைச்சியோ அக்காவோ இருந்திருந்தால் பெண்வாசம் என்றால் என்னவென்று தெரிந்திருக்குமோ என்னவோ. இப்பொழுதெல்லாம் எனக்கு கலியாணத்தில் பெரிதாக ஆர்வம் வரவில்லை. உடல் மனம் இரண்டின் தேவைகளை அதன் போக்கில் இயல்பாக இருக்க விட்டு விட்டேந்தியாக வாழ்வதும் ஒரு ஜென் நிலைதான் என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. சிலவேளைகளில் அதிக பொறுப்புகளை எடுப்பதற்கு நான் அஞ்சுகின்றேனோ என்றும் கூட எண்ணியதுண்டு. இந்தப் பொறுப்புகளே ஒருவிதமான சுமைதானே? எனது அம்மாவும் அப்பாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட இச்சையால் அம்மாவுக்கு நான் பத்துமாதங்கள் சுமையானேன். பின்னர் சனத்தொகையில் ஒரு இலக்கத்தைக் கூட்டி நான் வாழுகின்ற இந்த உலகத்துக்கு சுமையானேன்.  மூன்று அரைக் கிலோ சுமையாக இருந்த என்னைச்  சுமக்க அம்மா எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பா? அம்மாவை நினைக்கவே ஒருபக்கம் கவலையாகவும் பாவமுமாக இருந்தது. சம்பவத்தில் அம்மாவும் அப்பாவும் தான் சம பங்காளிகள். ஆனால் அப்பா சம்பவம் முடிந்தவுடன் கெத்தாக மீசையை முறுக்கிக் கொண்டு ராஜநடை போட்டார் ஆனால் அம்மாவோ சம்பவத்துக்கு சாட்சியாக பத்து மாதம் மூன்று அரைக் கிலோ சுமையுடன் நடக்க விட்ட இயற்கையின் சிஸ்ரத்தின் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் இப்பொழுது அம்மா எனக்கு ‘சந்தோசம்’ என்று இன்னுமொரு சுமையை கொண்டுவரத் துடியாய் துடிக்கின்றா. எனக்குப் பெண்கள் விடயமென்றால் அதுவொரு வேண்டாத ஆணியாகவே எனக்குத் தோன்றியது. முன்பின் தெரியாதவர்களை கலியாணம் என்ற சடங்கால் இணைந்து அவர்களைச்  சில நேரங்களில் எமக்குப் பிடிக்கா விட்டாலும் எங்களது சுயத்தை ‘சமரசம்’ என்ற பெயரில் போலிக்கு ஒழித்துக்கொண்டு அவர்களுடன் வாழ்வது என்பது என்னைப்  பயமுறுத்தியது என்றும் சொல்லலாம். இதனால் நான் அம்மாவின் கவலைக்குரியவனாக மாறி விட்டிருந்தேன். கண் தெரியாத இடத்தில் ஒரு நல்ல பெண் துணையுடன் பிள்ளைகளை பெற்று நான் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது அம்மாவின் தினசரிக்கவலைகளில் ஒன்று. அவரவருக்கு அவர்கள் பிரச்சனை. பனிக்காலத்து அதிகாலைப்  பனிமூட்டம் நிலத்தைக் கௌவியிருந்த வேளையொன்றின், வீட்டில் அடைந்து கிடக்காது வெளியே வேகநடைபயிற்சிக்கு நான் செல்ல முதல், மேசையில் இருந்த எக்ஸ்பிறாசோவை சிப்பியவாறு கணனியில் இருந்து மெதுவாகக் கசிந்து கொண்டிருந்த பிரான்ஸ் இன்போ செய்திகளை உள் வாங்கியபடியே நான் எழுத வேண்டிய சிறுகதைக்காகக் கணனியின் தட்டச்சுப்பலகையில் எனது விரல்கள்  நடனம் ஆடிக்கொண்டிருந்தன. இடையில் பிரான்ஸ் இன்போவில், கடந்த இரவு மாலியில் இரண்டு பிறெஞ் இராணுவப்படையினர் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியின் விபரிப்பினால் எனது கைவிரல்கள் சோர்ந்து விழுந்தன. பிரான்ஸ் எப்பொழுதுமே இப்படித்தான் தனது நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளை அடக்கியாள வக்கில்லாது றோட்டில் போகின்ற ஓணான்களைத் தூக்கித் தனது கவட்டுக்குள் விட்டுக்கொண்டிருந்தது. அதில் ஒரு ஓணான் தான் மாலி. முன்னொருகால் இந்த மாலியில் நாடு பிடித்து அடித்த கொள்ளையின் விசுவாசத்துக்காகவும், பின்னொருகால்  இதனைச் சாட்டி வந்த குறைந்த கூலிகளான ஆபிரிக்கர்களின் வம்சாவளிகளைத் தனது நாட்டில் சந்தோசப்படுத்தவும், மாலியில் தன்னால் கொண்டு வரப்பட்ட பொம்மை அரசுக்கு முண்டு கொடுக்கவும், அங்கே மாலியின் வடக்கு பிரதேசத்தில் போராடிக்கொண்டிருந்த ட்யூரெக் (Tuareg)  ஜிகாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அத்துடன் அங்கே பரந்து விரிந்திருந்த தங்க வயல்களில் மீது ஒரு கண் வைக்கவும், அங்கே 2013-ல் இருந்து இந்த பிரான்ஸ் கடும் பஞ்சாயத்து ஒன்றினைச் செய்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான் நேற்றுத் தனது இரண்டு இளம் வயது படைவீரர்களைப் பலி கொடுத்து விட்டுச் சனங்களைச்  சாந்தி செய்வதற்காக வீரவசனங்களை அள்ளி எடுத்து விட்டுக்கொண்டிருந்தது பிரான்ஸ். இந்த நேரத்தில்தான் நான் மறக்க நினைக்கின்ற மம்முடுவின் நினைப்பு மீண்டும் வந்து என் கண்ணைக் கண்ணீரால் நிறைத்தது. அவ்வளவு தூரத்திற்கு அவன் எனது மனமெங்கும் விரவி அலைக்கழித்துக்கொண்டிருந்தான். இந்த அலைக்கழிப்பை சொல்வதில் எனக்கு ஒரு விதமான அகச்சிக்கலும் இல்லை. ஒருவகையில் அவன் என்னைக் கொள்ளை கொண்டவன் என்பது தான் உண்மை. ஆனாலும் எனது மனக்குழப்பங்கள் மம்முடுவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். 0000000000000000000000000000 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதான ஒரு கோடைக்காலத்தில்தான் மம்முடு பதினாறு மாடிகளைக் கொண்ட எனது குடியிருப்பின் ஒரே தளத்தில் நேர் எதிராக இருந்த 56-ஆவது இலக்க வீட்டிற்கு அயலவனாக வந்திருந்தான். மம்முடு அப்பொழுதுதான் முப்பது வயதைக் கடந்திருந்தான் என்று எனக்கு எண்ணத் தோன்றியது. அவன் ஒரு சாதாரணப்பட்ட ஆபிரிக்கன் போல் இல்லாது நெடுநெடுவென்ற வளர்ந்து  குறுக்குப்பாடாக அகன்ற வாட்டசாட்டமான பிரகிருதி. அவனின் கரிய நிறத்திற்கு அவனது செக்கச்சிவந்த கண்கள் கொஞ்சம் எடுப்பாகவும் துலாம்பரமாகவும்  தெரியும். கம்பளி ஆடுகளின் மயிர்கள் போல் அல்லாது, ஓரளவு நீளமான மயிருடன் அவனது தலை இருக்கும். மம்முடு எப்பொழுதும் முழங்கை கட்ஸ்கள் வெளியே தெரியும் படிதான் தனது சேர்ட்டின் கையை மேலே மடித்து விடுவான். அவனது தொய்வில்லாத அகன்ற மார்பும் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் முழங்கை கட்ஸ்களும் எந்தவொரு பெண்ணையும் அவனது காலடியில் சுருட்டி விழுத்தும் வல்லபத்தை பெற்றிருந்தன. அத்துடன் அவனை உடல்ரீதியாக எதிர்ப்பதற்கு யாரும் அஞ்சும்படியாகவே அவனது உடல்வாகு அமைந்திருந்ததது. ஒருநாள் காலையில் நான் எனது வீட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வேலைக்கு இறங்கும் பொழுது எதிரே மம்முடுவும் தனது வீட்டைப் பூட்டிக்கொண்டு என்னுடன் சேர்ந்து லிப்ட்-ல் இறங்கினான். இருவரும் யார் முதலில் பேசுவதென்ற சில்லறை ஈகோவினால் தள்ளுமுள்ளுப்பட்டுக்கொண்டிருந்த பொழுது அவனே பேச்சை ஆரம்பித்தான், “காலை வணக்கம் மிஸ்யூர்( மிஸ்ரர்) . எனது பெயர் மம்முடு சுலைமான். உங்கள் அயலவனாக குடிவந்திருக்கின்றேன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.” என்றவாறு கை கொடுப்பதற்குத் தனது அகன்ற பெரிய கையை நீட்டினான்.” “ஓ ……… மிக்க மகிழ்ச்சி மிஸ்யூர் மம்முடு. எனது பெயர் ‘அன்ரனிப் பிள்ளை’. எனக்கும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.” மாலையில் நேரமிருந்தால் நீங்கள் வீட்டுப்பக்கம் வந்து இரண்டு வேர் (கிளாஸ்) எடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.” “மன்னிக்க வேணும் அன்ரனி, நான் மதுபானம் அருந்தவதில்லை. அத்துடன் எனது கலாச்சாரமும் அதை அனுமதிக்காது.” “சரி மதுபானம்தான் வேண்டாம். ஒரு கப் தேநீராவது …………” ஆ ……………. அப்படியானால் கட்டாயம் வருகின்றேன். அதுவும் உங்கள் நாட்டுத் தேநீர் போல் நான் வேறெங்கும் கண்டதில்லை, அதன் லாகிரியே தனியானதுதான்.” மம்முடு எமது தேநீரின் அருமை பெருமைகளை சிலாகித்துக் கதைத்ததில் எனக்குக் கொஞ்சம் அனுக்கமாகவே வந்துவிட்டிருந்தான். அவனில் இருந்து ஒரு மென்மையான பெர்பியூம் வாசம் வீசிக்கொண்டிருந்தது. சாதாரணமாக 147 பஸ்சுக்கு காத்திருந்து காலைநேரப் பூராயங்களை விடுப்புப் பார்த்து இரண்டு பஸ் நிறுத்தங்களை கடந்து செவ்ரன் தொடரூந்து நிலையத்தில் இறங்குகின்ற நான், அன்று இருவரும் நடந்தே சென்று தொடரூந்து நிலையத்தை அடைந்து, அங்கே வந்து நின்ற தொடரூந்தில் ஏறிக்கொண்டோம். 00000000000000000000000000 அன்று மாலையில் வேலையால்  வந்து அவனுக்காக இரண்டு மெழுகு திரிகளை ஏற்றி, இலங்கையால் வரும் பொழுது வாங்கி வந்த  சுட்ட மண்ணில் செய்யப்பட்ட  தேநீர் சிட்டிகளை தயார்நிலையில்  வைத்து விட்டுக் கூடுதல் அழகிற்காகக் கண்ணாடிக்குடுவை ஒன்றில் இரண்டு ரோசா பூக்களையும் வைத்த பொழுது தான் எனக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை மம்முடு சொல்லியவாறு அன்று பின்னேரம் எனது வீட்டிற்கு வரவில்லை. அது எனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டது. முதல் சந்திப்பே இவ்வாறு கோணலாகியது எனக்கு உறுத்தியது. தானாக வலிய வந்து அறிமுகமாகி, எனது வீட்டிற்கு வருவதாக வாக்கும் தந்து அவன் தனது வருகையை புறக்கணித்தது என்னை அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அதன் பின்னர் வேலைக்குப் போகும்பொழுது அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தேன். அன்றில் இருந்து சரியாக இரண்டு கிழமைகளின் பின்னர் ஒரு செக்கல் பொழுதொன்றில் மம்முடு எனது வீட்டு கதவின் அழைப்பு மணியை ஒலிக்கச்செய்தான். ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியால் வெளியே பார்த்து விட்டு கதவை அகலத்  திறந்தேன். என்னையறியாமலே அவன் மீது கொண்ட நான் கொண்ட கோபம் மெல்ல எட்டிப்பார்த்தாலும் அதனை அடக்கிக் கொண்டு முகத்தில் ஒரு மென்நகையை வரவழைத்துக்கொண்டே. வணக்கம் அமிகோ ………….(நண்பனே ) எப்படியிருக்கின்றாய் ? நலமாக இருக்கின்றாயா? குடும்பத்தவர்கள் நலமாக இருக்கின்றார்களா ? என்னை மன்னித்துக்கொள். என்னால்  உடனடியாக உனது அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த இரவுதான் மாலியால் திரும்பி வந்தேன் .” என்று அடுக்கிக் கொண்டு போனவனை இடைவெட்டி , “உள்ளே வா மம்முடு. உன்னைத்  திரும்பவும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்று அவனை ஆரத்தழுவி உபசரித்தேன். ஆமா ……….. எங்கே எனது தேநீர் ? “பொறு வருகின்றேன்.” என்றவாறே அவனுக்காகத் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன். குளிர்ந்த தண்ணீரை ஆவி பறக்கக் கொதிக்கச்செய்து அதில் தேயிலைச் சாயத்தை அளவாகப் போட்டு இறுதியில் அதனைக் கடுஞ்சாயமாக்காது மென்மையான பொன் நிறத்தில் வடித்தெடுப்பதென்பது ஒரு தனிக்கலைதான். நான் தேநீரைத் தயாரித்துக் கொண்டே, “எதெற்காக இருந்தாற்போல் மாலிக்கு சென்றாய் ?” என்ற எனது குரலில் பூராயம் அறியும் ஆவல் இருந்ததை அவன் கவனிக்கவில்லை. “அது ஒரு பெரிய கதை அமிகோ.” “சொல்லு……” “எனது அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள். நான், அவரது முதல் மனைவியின் மூத்த மகன். எனக்கு கீழே மொத்தம் ஒவ்வொரு அம்மாவுக்கும் தலா ஐந்து  பேராக, இருபது சகோதர சகோதரிகள். உனக்கு தெரியுமா…. ? எங்களது குடும்பமே ஒரு மினி கிராமம் தான்.” “அப்ப உனது அப்பா சுலைமான் என்ன வேலை செய்கின்றார் ?” “அவர் ஒரு ஒட்டகத் தரகர். எங்களது பரம்பரைக்கும் ஒட்டகத்துக்கும் மிகவும் நெருங்கிய பந்தம் ஒன்று இருந்தது. எனது முன்னோர்கள் அயல்நாடுகளுக்கெல்லாம் சென்று பெரிய  ஒட்டக வியாபாரிகளாக இருந்திருக்கின்றார்கள். அப்பா சுலைமானின் கண்ணில் எந்தவொரு உயர்சாதி ஒட்டகமும் தப்பி விட முடியாது. அதனால் கிழமையில் இரண்டு நாட்கள் கூடுகின்ற ஒட்டகசந்தையில் இவரது தரப்படுத்தலிலேயே ஒட்டகங்கள் விற்பனையாகும். அவரது சொல்லை யாரும் தட்டியதில்லை.” “அவசரமவசரமாக மாலியில் ஒரு அலுவல் இருந்தது அதுதான் உனக்கும் சொல்லாது போகவேண்டி வந்து விட்டது.” என்று இறைஞ்சும் குரலில் சொன்னான். பூராயம் அறிய இருந்த எனக்கு அவன் ‘அவசர அலுவல்’ என்று மொட்டையாகச் சொன்னது பெரிய ஏமாற்றமாகிப் போய் விட்டது. “நீ பிரான்சுக்கு வந்து எவ்வளவு காலம் ? எதற்காக இங்கு வந்தாய் ?” என்று வேறு திசைக்குப் பேச்சை  நான் மாற்றினேன். சிட்டியில் இருந்த தேநீரின் இறுதிச் சொட்டை மெதுவாக இழுத்து முடித்து விட்டு நாக்கினால் தனது தடித்த உதடுகளைத் தடவியவாறே, ‘பின்னொரு நாளில் ஆறுதலாகப் பேசுவோம் அமிகோ’ என்று விட்டு என்னிடம் இருந்து விடைபெற்றான் மம்முடு. அவன் என்னை விட்டுச்சென்றாலும் அவனது பேச்சின் லாவகமும் மென்மையான அணுகுமுறைகளும் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. 00000000000000000000000000000 மேபிள்  மரங்கள் எல்லாம் தங்கள் இலைகளை மண்ணுக்குத் தானம் செய்து வசந்தகாலத்து இறுதி நாட்களுக்குக் கணக்கிட்டுக் கொண்டிருந்த காலமொன்றில் தொடர்வேலையால் உடலும் மனமும் சலிப்புற்றுக் களைத்து இருந்த நான், பிரான்ஸின் வடமேற்குத் திசையில் இருக்கும் எனக்குப் பிடித்த துறைமுகநகரான செயின்ற் மலோ(Saint-Malo) நகரிற்குச்  செல்லலாம் என்று திட்டமிட்டு நான் வேலை செய்யுமிடத்தில் இருந்து இரண்டு கிழமை வருடாந்த லீவை எடுத்திருந்தேன். அன்று செக்கல் பொழுதொன்றில் வந்த சோம்பலைப் போக்க கையில் இருந்த எக்ஸ்பிறாசோவை சிப்பியவாறே நைஜீரிய சிங்கம் ஹோல் சொயிங்கா ( Wole Soyinka ) எழுதிய எ ரோல் ஒப் ரூ ( A Tale of Two ) நாவலில் அமிழத் தொடங்கினேன். நாவல் முற்றுமுழுதாக என்னைத் தன்னுள் இழுத்து, அதில் நான் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த பொழுது வீட்டு மணி எனது நீச்சலை நிறுத்தியது. ‘ஆரடாப்பா இந்த நேரத்திலை’ என்று எரிச்சலுடன் புறுபுறுத்தவாறே ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியால் கண்ணைப் பொருத்திப் பார்த்தேன். அங்கே மம்முடு நின்றிருந்தான். நான் கதவைதிறந்தவாறே , “வணக்கம் மம்முடு. உள்ளே வா. உன்னைக் கன நாட்களாகக் காணவில்லை, திரும்பவும் மாலிக்கு போய் விட்டயோ என்று நினைத்தேன்.” “உனக்கு எப்பொழுதும் கேந்திக் கதைதான் அமிகோ. இன்று எங்களுக்கு ‘லைக்’ ( பக்ரீத்) பண்டிகை. கிடைக்கின்ற உணவை பகிர்ந்து சாப்பிடுவது எமது சமூக வழக்கம். அதுதான் உனக்கு கொஞ்ச ஆட்டுஇறைச்சிக் கறி கொண்டு வந்தேன்.” என்று ஒரு சிறிய பிளாஸ்ரிக் பெட்டியை நீட்டினான். நான் வாசித்துக் கொண்டிருந்த நாவலைப் பார்த்து விட்டு ஓ …….நீ சொயிங்கா எல்லாம் வாசிப்பியா ? என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டான். “உனக்கும் அவரைத் தெரியுமா ……?” “தெரியுமாவா …… அவர் எங்களின் வணக்கத்துக்குரியவர். ஆபிரிக்கர்களுக்கு இப்படியும் எழுத வரும் என்று உலகத்துக்கு இடிச்சு சொன்னவர். அவருடைய சீசன் ஒப் அனோமி (Season of Anomy) துப்பறியும் நாவல் வாசிச்சியா ? எனது சின்ன வயசில் படிச்சு கிறுங்கிப் போனேன். ” “நான் சொயிங்கோவின் தீவிர வாசகன் மம்முடு. அநேகமாக அவரின் எல்லா நாவல்களும் நாடகங்களும் வாசித்திருக்கின்றேன். எப்படி இவரால் இப்படியெல்லாம் எழுத முடிகின்றது என்று நான் வியந்ததுண்டு.” “நான் அடுத்த முறை வரும்பொழுது சொயிங்கோவின் தி இன்ரெர்பிறிற்ரர் (The Interpreters) அடுத்த பிரபலமான துப்பறியும் நாவலைக் கொண்டுவந்து தருகின்றேன், படித்துப்பார்.” என்று முகமெங்கும் பரவசநிலையில் சொன்னான் மம்முடு. எனக்கென்னவோ இருவரும் மிகமிக அருகாக நேரலையில் பயணிக்கின்றோமோ என்றுகூடத் தோன்றியது. “எல்லாம் சரி உனது ஆட்டிறைச்சிக் கறிக்கு மிக்க நன்றி மம்முடு. என்னிடம் உனக்கு எதுவும் தர இல்லையே. அத்துடன் இன்று நான் சமைக்கவும் வேறு இல்லை.” என்று குற்ற உணர்வுடன் நான் சொன்னேன். “அட இதென்ன பெரிய விடயம் உன்னிடம் அள்ள அள்ளக் குறையாத சுவையான தேநீர் இருக்கின்றதே……. போடு குடிப்போம் .” என்று உரிமையுடன் கேட்ட மம்முடு இன்னும் எனக்கு அனுக்கமானான். அவன் இங்கே வந்து குப்பை கொட்டும் கதையை அறியும் ஆவலுடன் , “நான் உன்னிடம் போனமுறை கேட்ட கேள்வி ஒன்று நினைப்பு இருக்கா மம்முடு… ?” “ஓ …………..  இருக்கே அமிகோ. அதுவும் ஒரு பெரிய கதைதான். அநேகமாக நீயும் அனுபவித்துத்தான் இருப்பாய் என்றுதான் எண்ணுகின்றேன். நான் தலை நகர் பமக்கோ ( Bamako) வில் இருந்து 1500 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கிடல் ( Kidal ) கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் நகராகத்தின் வாசம் இல்லை. அதுதான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அப்பா சுலைமான் ஒட்டகத்தரகர் என்றபடியால் கிராமத்தில் நல்ல செல்வாக்கும் பசைப்பிடிப்பும் உள்ள ஆள். அவர், நான்கு அம்மாக்கள் இருபது சகோதர சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய குடும்பமாக இராசா மாதிரி இருக்க முடிந்தது. எழுத வாசிக்கத் தெரியாத எங்களுக்குப் படிப்பும் நாகரிகமும் சொல்லித் தருகின்றோம் என்று சொல்லித்தான் இந்த பிறெஞ் ஒட்டகங்கள் எங்கள் கொட்டகைகளுக்கு உள்ளே நுழைந்து கொண்டன. பின்னர் எங்களிடம் இருந்த தங்க வயல்கள் மேல் இருந்த காதலைத் தங்கள் பெருவிருப்பாக காட்டிக் கொண்ட பொழுதுதான் நாங்கள் முழித்துக் கொண்டோம். அனால் அதற்குள் காலம் கடந்து போய் விட்டது. மாலியில் இருக்கின்ற கொஞ்ச சில்லறைகளுக்கு சில்லறைகளை அள்ளி  வீசித் தங்கள் காரியங்களை கச்சிதமாக செய்து கொண்டிருந்தன இந்தப் பிறெஞ் ஒட்டகங்கள். அப்பொழுதுதான் எங்கள் மண்ணையும் வளத்தையும் காக்க  ‘ட்யூரெக்’ அமைப்பு உருவாகியது. அதன் கவர்ச்சியில் நானும் எனது    பதின்முன்று வயதில் ட்யூரெக்-கில் சேர்ந்து கொண்டேன். ஆரம்பத்தில் ‘ட்யூரெக்’ அமைப்பு என்னை அரசியல் ரீதியாக வளர்த்து எடுத்துக் கொண்டது. பின்னர் இராணுவப்பயிற்சிக்காக யேமனுக்கு சென்றேன். அங்குதான் நான் அதிரடித்தாக்குதல்களின் முன்னணி நிபுணராக அவதாரம் எடுத்தேன். எனது பயிற்சிக்காலம் முடிய மீண்டும் மாலிக்குத்  திரும்பி வந்து பல தாக்குதல்கள் எனது தலைமையிலேயே நடந்தன. இளைஞர்கள் எல்லோருக்கும் நான் அதிரடிக் கதாநாயகன் ஆனேன். என்ன காரணமோ தெரியவில்லை அவர்கள் என்னை ‘தூக்குவதற்கு’ ஆயத்தங்கள் செய்தபொழுது, நான் இத்தாலியின் கடல் எல்லைக்குள் வந்து விட்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து இங்கே வந்து விட்டேன். இங்கு நான் அரசியல் தஞ்சம் கேட்ட பொழுது மறுபேச்சில்லாமல் இவர்கள் அங்கீகாரம் செய்து பின்னர் தங்கள் குடிமகனாகவும் கொண்டு வந்துவிட்டார்கள் என்றால் பாரேன்.” என்று தொடர்ந்த மம்முடு தான் உளவுப் பிரிவில் இருந்த கதையை நைச்சியமாக மறைத்து விட்டிருந்தான். அது அவனது பயிற்சி முறையாகத்தான் இருக்க வேண்டும். முன்பின் தெரியாத ஒருவரிடம் யாராவது உளவாளி என்று சொல்வார்களா என்ன ? பொண்ட் படம் பார்த்த மாதிரி வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான் , “எப்படி உன்னை இவ்வளவு விரைவில் குடிமகனாக்கினார்கள் ? நானே பத்து வருடத்துக்கு மேல் காத்திருந்தேன்.”? அவன் பதில் ஒன்றையும் தராது பெரும்சிரிப்பொன்றைத் தந்தான். மம்முடு என்ற சாகசக்காரன் இப்பொழுது என்னை முழுவதுமாக  நிறைத்து விட்டான். இப்படியானவர்களிடம் பழகுவதே எனக்குப் பெருமையாக வேறு இருந்தது. ‘செயின்ட் மலோவுக்குப் போய் விட்டு வந்து இவனிடம் இன்னும் கதைத்தால் ஒரு பெரிய நாவல் எழுதிப்போடலாம் போலை இருக்கே’ என்று என்மனம் என்னுள் உருப்போட்டது. செயின்ட் மலோவில் இவன் நினைப்பைத் துறந்து விட்டு அதன் அழகிலும் அமைதியிலும் என்னை தொலைந்து விட்டிருந்தேன். அதன் கடற்கரையிலும் துறைமுகத்திலும் கால்போன போக்கில் அலைந்து திரிந்து, வெள்ளை மனம் கொண்ட மாந்தர்களிடம் தகவல்களுக்காக மணித்துளிகளை செலவு செய்து மனதை நிரப்பி கொண்டு மீண்டும் செவ்ரன் வந்து இறங்கினேன். வந்தவுடன் முடிப்பதற்கு சில பக்கங்கள் விடப்பட்டிருந்த ‘எ ரோல் ஒப் ரூ ‘வை புரட்டிக் கொண்டிருந்தேன். நெடும் பயண அலுப்பில் செற்றியிலேயே படுத்து  நித்திரையாக்கிக் கொண்டிருந்த என்னை, என்றுமில்லாதவாறு வீட்டுக் கதவின் முன்னே நாய் ஒன்று உறுமும் சத்தம் எழுப்பியது. எதிரே கிடந்த மணிக்கூட்டு அதிகாலை இரண்டு மணி எனக்காட்டியது. எனது வீட்டு மாடியின் கீழ் பக்கமாக இருந்து நீல நிறத்தில் வெளிச்சங்கள் விட்டு விட்டு வர நான் பல்கணியைத் திறந்து பார்த்தபொழுது, கீழே நிலப்பரப்பில் போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவர்களுக்கு துணையாக குடியிருப்பு தொகுதியைச் சுற்றி ஹெலிஹொப்டர் ஒன்று பரா வெளிச்சத்தை அடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தது. என்றுமில்லாதவாறு எதற்காக எனது குடியிருப்பை போலீஸ் பெட்டியடிக்கிறது. இந்த இடம் பிரச்சனைகள் இல்லாத இடம் வேறு. அதுவும் எனது விட்டு கதவிற்கு முன்னால் போலீஸ் பிரசன்னமானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சத்தம்போடாது மெதுவாக வந்து எனது கண்களை ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியில் பொருத்தினேன். அங்கே ஐந்தாறு அன்ரி கிறிமினல் கொமாண்டோ படைகள் மம்முடுவின் வீட்டுக் கதவின் முன்னால் நிலையெடுத்து நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் உடலையொட்டிய கருப்பு சீருடைகளை அணிந்தும் தங்கள் முகத்தை முகமூடிகளால் மறைத்துக் கொண்டும் இருந்தார்கள். ஒருவன் மெதுவாக சைகை காட்ட ‘போலீஸ்’ என்றவாறே கதவை உடைத்துக்கொண்டு மம்முடுவின் வீட்டிற்குள் பாய்ந்தார்கள். கண்இமைக்கும் நேரத்தில் மம்முடுவை நெட்டித் தள்ளியவாறே கொமோண்டோக்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அதிர்ச்சியில் இருந்து விலகாத மம்முடு திமிறியவாறே அவர்களுடன் பெருங்குரலில் வாக்குவாதப்பட்டுகொண்டிருந்தான். அவனது நீண்ட நெடிய கைகள் காற்றில் அலைந்தன. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுப் பாடாக முடிந்தது. கொமோண்டோக்களை விட உயரமாக இருந்த அவன் நடுவில் நின்றவனை உணர்ச்சி மிகுதியால் தனது கையினால் நெஞ்சில் வைத்து தள்ளிவிட அவன் அலங்க மலங்க நிலத்தில் விழுந்தான். அந்த இடைவெளியில் மம்முடு திமிறிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி ஓட வெளிக்கிட்டபொழுது அவனின் பின்னால் நின்றிருந்த ஒரு கொமோண்டோ மின்னல்வேகத்தில் கால்தடம் போட்டு மம்முடுவை  விழுத்தி அவனின் கழுத்தின் மீது முழங்காலை வைத்து நெரித்தவாறே அவனின் பெரிய கைகளை பின்பக்கமாக மடக்கி விலங்கிட முயற்சி செய்து கொண்டிருந்தான். மம்முடுவின் கால்கள் வலியால் தரையை உதைந்தன. தனது நண்பனை நெஞ்சில் கைவைத்தது மம்முடு தள்ளியதை அந்தக் கொமோண்டாவினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அது தங்களது அதிகாரத்தின் மீது கை வைத்ததாகவே அவன் மொழிபெயர்த்துக்கொண்டான். ஒருகட்டத்தில்  மம்முடு மூச்செடுக்க கஸ்ரப்பட்டு பெருங்குரலில் அலறுவது தெரிந்தது. மம்முடுவை கைவிலங்கிட முயற்சி செய்து கொண்டிருந்த அந்தக் கொமோண்டோ தான் கற்ற வித்தையெல்லாவற்றையும்  மம்முடுவில் காட்டிக்கொண்டிருந்தான். எனக்கென்னவோ ஸ்பெயின் மெட்ரிட் நகரில் நடக்கும் குழுவன் மாட்டை வெறியேற்றி மெதுமெதுவாக ஈட்டியால் குத்தி விளையாடும் விளையாட்டே (ட்ரிக்கோ டி முர்த்தே, Tercio de muerte, Third of death ) நினைவுக்கு வந்தது. பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டே சத்தப்படாது எனது கண்கள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தன. எண்ணி இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் சேவல் ஒன்று கேருவது போல் மூன்று முறை கேரி மம்முடுவின் தலை கீழே சாய்ந்தது. கோமகன் -பிரான்ஸ்             https://naduweb.com/?p=16160
  • எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே   (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்)   பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தேடுகின்ற சுவாரசியம் என்க. பிரியாவுக்கு இப்படி ஒரு வாசகர் அவரின் எழுத்துக்களில் இந்தளவுக்கு ஈர்ப்போடு இருந்தார் என்பதே தெரிந்திருக்காது. இதேயேன் இங்கே விரித்துச் சொல்கின்றேன் என்றால் பிரியாவின் எழுத்து அன்றைய காலத்தில்  என்னை அந்தளவு வியப்பிற்குள் ஆழ்த்தியது என்பதைச் சொல்வதற்காகும்.   இந்த நாவல் இதுவரை தமிழ்ச்சூழலில் பேசப்படாத சேய்ஷல்ஸைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. புதிய சூழல், புதிய கலாசாரம் என்ற திகைப்பை அதன் பதற்றங்கள் குறையாது பிரியா எழுதிச் சொல்கின்றார் என்றால் இன்னொருபக்கம் அங்கே ஆங்கிலேயர்களில் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள்(தமிழர்கள்) இன்னமும் சாதியிறுக்கத்தை விடாது வாழும் திகைப்பையும் சொல்கின்றார். தன்னை ஒரு தலித்தாக முன்வைக்கும் இந்த நாவலின் கதைசொல்லியான அஞ்சனா, தான் தமிழகத்தில் சந்தித்த சாதியக்கொடுமைகளையும் அசைபோடுகின்றார். இவ்வாறாக நாவல் அற்புதமாக பல்வேறுகிளைகளில் சடைத்துச் செழிக்கிறது.    தமிழில் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் ஒரேமாதிரியாகப்  பெருமளவு புனைவுகள் எழுதப்பட்டிருக்கும் நிலைமையில் பிரியாவின் இந்தப் புனைவு விதிவிலக்கானது.  இன்று பொருளாதார நிமித்தம் புலம்பெயர்ந்த பெருமளவான தமிழகத் தமிழர்கள் நாசூக்காக சாதி/பின்னபிற ஒடுக்குமுறைகளை மறைத்து அகமனத்தேடல்களை மட்டும் முன்வைத்து எழுதுகின்ற எழுத்துக்களை வாசித்துச் சலிக்கும் வேளையில் பிரியாவின் இந்த நாவல் கவனத்தில் கொள்ளவேண்டியது மட்டுமல்ல தமிழக புலம்பெயர்ந்ந்த தமிழர்க்கு முன்னோடியாக இருக்கவும் கூடியது. புலம்பெயர்ந்ததால் சந்திக்கும் புதிய கலாசாரம் பெரும் அதிர்வை மட்டுமின்றி அஞ்சனா என்ற கதைசொல்லிக்கு தன்னை இன்னும் ஆழமாக அறிய அவரின் அகமனதுப் பயணத்தையும்  புதிதாகத் தொடக்கிவைக்கின்றது. மேலும் பிரியா, அஞ்சனாவின் பாத்திரத்தினூடாக புதிய பண்பாட்டுச் சூழலை எவ்வித மேனிலையாக்கமோ கீழிறக்கமோ செய்யாது, அதையதை அதன் இயல்புகளோடு முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது.    பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளோடு' நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்த இன்னொரு நாவலாக ம.நவீனின் பேய்ச்சியையும் சேர்த்துக்கொள்வேன். அலுப்பே வராது மூன்று தலைமுறைக் கதைகளை நன்றாக  நவீன் இதில் எழுதிச் செல்கின்றார். இந்நாவலில் வலிந்து திணிக்கப்பட்டது போல என் வாசிப்பில் தோன்றும் பெரியாரிய/திராவிட எதிர்ப்பையும், மூன்றாம் தலைமுறையின் கதையையும்  சொல்லவேண்டுமென்ற எத்தனிப்பில் சேர்த்த இறுதிப்பகுதியையும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மூன்றாம் தலைமுறைக் கதையைச் சொல்லும்போது, அதற்கென ஒரு தனி மொழிநடையை நவீன் தேர்ந்தெடுக்கையில், அதுவரை வந்த ஒரு செழுமையான தெள்ளிய மொழிநடை சற்றுத் தடைப்பட்டிருக்கின்றது. அந்தக் கடைசிப்பகுதியைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட இந்நாவல் கவனத்திற்குரிய நாவலாகவே இருந்திருக்கும்   (2) பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் (அபுனைவு)   இதையும் தமிழில் வித்தியாசமான சூழலில் எழுதப்பட்டதற்காக முக்கியமெனக் கொள்வேன். இது பனைமரங்களைப் பல்வேறு பகுதிகளில் தேடி மும்பாயிலிருந்து கன்னியாகுமரி வரை ஃபாதர் காட்சன் சாமுவேல் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வதைப் பற்றிய அனுபவங்களின் தொகுப்பாகும். ஒருவகைய்ல் அவர் பனைமரங்களின் வரலாற்றை மட்டுமின்றி இன்று கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்ற பனையின் பயன்களை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய விரும்பவும் செய்கின்றார். முக்கியமாய் இந்த நூலை, பனைமரங்களால் நிரம்பியிருக்கும் இலங்கைச் சேர்ந்த நம்மைப்  போன்றவர்கள் வாசிக்கவேண்டும் எனப் பரிந்துரைப்பேன்.    (3) நீண்ட காத்திருப்பு - அஜித் போயகொட (ஆங்கிலத்தில் சுனிலா கலப்பதி, தமிழில் - தேவா)   இலங்கை கடற்படையைச் சேர்ந்த அஜித் போயகொட, அவரின் கப்பல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்படுகின்றபோது சிறைக்கைதியாகின்றார். புலிகளோடாடு இருந்த 9 வருட அனுபவங்களை எந்தக் காய்த்தல் உவத்தலுமின்றி இயன்றவரை உள்ளபடி போயகொட எழுதியிருக்கின்றார். இதனூடு அவர்  நாமறியாத புலிகளின் இன்னொருபக்கத்தைச் சொல்வதுடன், உள்ளே நடந்த பல சுவாரசியமான சம்பவங்களைச் சொல்கின்றார். கைதிகள் பரிமாற்றம் நிகழ்கின்றது என்பதை நாம் பத்திரிகைச் செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் அது எவ்வாறு நடக்கின்றது என்பதை சிறைக்கைதியாக இருந்த ஒருவர் அவரது நிலையில் நின்று சொல்வது வித்தியாசமானது புலிகள் - இலங்கை அரசு கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்ட பொயகோடவின் கதையை சுனிலா கலப்பதி கேட்டு ஆங்கிலத்தில் முதலில் எழுத, இதை பின்னர் தேவா அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார்.   (4) நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள்  - சி.மோகன் (கலை/ஓவியம்)   தமிழில் சிறந்த ஓவியர்கள் இருந்தாலும் ஓவியங்களைப் பற்றிய புரிந்துணர்வு குறைவு. இதனால் புதிதாய் ஓவியங்களை வரைய வருகின்றவர்களும் ஓவியம் என்பது வரைவது மட்டுமே என்ற புரிதலோடு இருக்கின்றார்கள். மேற்கத்தையத்தில் எப்படி ஓவியக்கலையிலிருந்து புதிய இஸங்கள் தோன்றியது என்பது ம