Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 22:46, குமாரசாமி said:

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

On 18/10/2020 at 22:51, விசுகு said:

நிச்சயமாக. அது ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று இருக்கு. ஒரு நாள் உலகை ஆளும் அவர்களது கனவு வெகு தொலைவில் இல்லை.

இந்தக் காணொளியை... முழுமையாக பார்க்க நேரம் கிடைக்காவிட்டாலும்,
5´வது  நிமிடத்திலிருந்து, 7´வது  நிமிடம் வரை...  கேளுங்கள்.
கோசான்... 2´ம்  பக்கத்தில்  கூறிய கருத்தும், அதற்கு.. வலு சேர்க்கின்றது. 

############   ############  #############

உதவி:  என்னால்... முதலாம்  பக்கத்தில், மேற்கோள் காட்டிய கருத்துக்களுடன்,
இரண்டாம் பக்கத்தில் பதிந்தவரின் கருத்தையும்.... சேர்த்து,
மேற்கோள் காட்ட முடியாதுள்ளது. 
இரண்டு பக்க மேற்கோள்களையும்... ஒரே பதிவில் போட, வழிமுறைகள் உள்ளனவா?  

On 19/10/2020 at 21:59, goshan_che said:

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

Link to comment
Share on other sites

 • Replies 82
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

மனித சுதந்திரம் பேச்சுரிமை பற்றி விவாதிப்பவர்கள் பிரெஞ்சு நாட்டவரின் நிலையிலிருந்தும் சிந்திக்க வேண்டும். 200 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சுப் புரட்சி மூலம் அரசாட்சியை அழித்து மக்களாட்சியை உருவாக்கியவ

விசுகு

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது !  ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து..... பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச்

அக்னியஷ்த்ரா

கண்டபாட்டிற்க்கு உள்ள விடுவது ,பிறகு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது  அளவுக்கு அதிகமாக மனிதநேயம் இருந்தால் சிலவேளை இப்படியான சம்பவங்கள் ஐரோப்பியர்களின்  நெறிகட்டிப்போன மூளையை நீவி சரிசெய்யக்கூடு

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சாத்திரம் மாதிரித்தானே கிடக்கு சிறித்தம்பி? :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சாத்திரம் மாதிரித்தானே கிடக்கு சிறித்தம்பி? :cool:

குமாரசாமி அண்ணா...
வெள்ளைக்காரன்,  சொன்னால்....  அது, உண்மை என்றும்... ⁉️

எங்களது,  தமிழ் மூதாதையர்  சொன்னால்,
அது.. பொய்யும், பிரட்டும், சுத்து மாத்து என்றும்...சொல்ல 
எங்களது, தமிழ் ஆட்களே... "ரெடியாக"  இருக்கின்றார்கள்.  :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா...
வெள்ளைக்காரன்,  சொன்னால்....  அது, உண்மை என்றும்... ⁉️

எங்களது,  தமிழ் மூதாதையர்  சொன்னால்,
அது.. பொய்யும், பிரட்டும், சுத்து மாத்து என்றும்...சொல்ல 
எங்களது, தமிழ் ஆட்களே... "ரெடியாக"  இருக்கின்றார்கள்.  :)

வெள்ளைக்காரன் இத்தினை மணிக்கு இவ்வளவு நேரம் மழை பெய்யும்....இவ்வளவு  தண்ணி நிரம்பும் எண்டு அச்சொட்டாய் சொல்லுறானாம், அப்ப அவன் கெட்டிக்காரன் தானே 😛

எங்கடை ஆக்கள் சற்றலையிட் ஒண்டுமில்லாமலே காலநிலை கணிச்சது வேறை விசயம் கண்டியளோ....🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் சாத்திரம் சொன்னால் என்ன தமிழ் மூதாதையர் சாந்திரம் சொன்னால் என்ன பொய் தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைக்காரன் சாத்திரம் சொன்னால் என்ன தமிழ் மூதாதையர் சாந்திரம் சொன்னால் என்ன பொய் தான்.

ஆதாரம் இருக்கா சார் :cool:

Link to comment
Share on other sites

19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

1708 களில் வேலுநாய்ச்சியாரின் கணவர் முத்துவடுகானந்த பெரிய உதயதேவர் கோவிலில் வைத்து ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின், அவரின் உடலை அடங்கம் செய்து அதேஇடத்தில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்பேன் என சபதம் செய்துவிட்டு தனது பெணகுழந்தையோடு வெளியேறுகிறார். எட்டு வருடங்கள் மறைந்துவாழ்கிறார். ஆங்கிலேயரிடம் பிடிபடாமலிருக்க அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வாராம். இப்படியே ௐருமுறை மன்னர் கைதர் அலிடயிடம் உதவிகேட்டு வந்திருக்கிறார்.

இராணி ஒரு இராசராசேசுவரியின் பக்தை எனவறிந்து கொண்டு, இராணி அங்கிருக்கும் காலங்களில் வழிபடவென ௐரு அம்மன் கோவிலையே மன்னர் கட்டிக்கொடுதாராம். அத்தோடு ஐம்பொன்னாலான ௐரு அம்மன் சிலையோடு ௐரு திருவாசியையும் பரிசாகக் கொடுத்தாராம்.

இன்னமும் அந்தக்கோயில் அந்தகோயிலிருக்கிறது .ஐம்பொன்னாலா திருவாசி பாதுகாப்பிலிருக்கிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொஞ்சக்காலம் ஆட்சிசெய்த பின் மருது சகோதரர்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

மருது சகோதரர்களின் ஆட்சியில் பல  கோயிலகளைக் கட்டினார்கள்.

அத்தோடு தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டிக்கொடுத்தார்கள்.

அவற்றிற்கு பல மானியங்களையும் கொடுத்துதவினார்களாம்.

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.

உண்மைதான். ஏதும் மாறியிருக்கிதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது நபியின் கேலித் சித்திரத்தை வெளியிட்ட பிரான்ஸ் - கொதித்தெழுந்துள்ள முஸ்லிம் உலகு!

by Admin on October 24, 2020 in Common, World

முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக "ஷார்லி ஹெப்டோ" பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரத்தை நேற்றைக்கு முன் தினம் 22ம் திகதி பிரான்ஸ் அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் சீண்டிப்பார்த்துள்ளது.

இத்தகைய செயற்பாட்டை எந்தவொரு இஸ்லாமியராலும் துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பிரான்ஸின் இந்த இழி செயலை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டிப்பதுடன், இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நாமும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய கிழக்கு நாடுகள் முதல் உலகில் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் பிரான்ஸின் இச்செயல் பல்வேறு வடிவங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் சில அரபுலக நாடுகள் பிரான்ஸின் உற்பத்திகளை புறக்கணிப்பதினூடாகவும் தமது கடுமையான எதிர்ப்பினையும் பதிவு செய்துள்ளனர்.

இதன் பின்னணியாக

பிரான்ஸ் தலை நகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள " செயின்ட் ஹொனோரின்" எனும் இடத்தில் வைத்து புவியியல் மற்றும் வரலாற்றுப் பாட ஆசிரியரான சாமுவேல் பேட்டி என்பவர் கடந்த 17ம் திகதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அமையப் பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் "ஷார்லி எப்டோ" வெளியிட்ட நபி (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திர புகைப்படங்களை மாணவர்களிடம் காண்பித்தது வகுப்பொன்றை நடத்தியதாகவும், ஆசிரியரை கொலை செய்யதவர் ரஷ்யாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் "செசன்யா" பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்றும் பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் "சாமுவேல் பேட்டி" இந்த கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக பல இஸ்லாமிய பெற்றோர் சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் அதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் முறைப்பாட்டை முறையாக கையாண்டிருந்தால் கூட ஆசிரியர் கொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு தடுக்கப்பட்டிருக்கலாம்.

சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியரின் கொலைக்கு காரணமாக அமைந்த "ஷார்லி ஹெப்டோவின்" கேலிச்சித்திரங்களை பிரான்ஸ் அரச கட்டிடத்தில் மீண்டும் காட்சிப்படுத்துவது மென்மேலும் இன முறிவுக்கும், அசம்பாவிதங்களுக்கும் வித்திடுமே தவிர ஒரு போதும் இன ஒற்றுமைக்கான வடிகாலாக அமையாது என்பதை பிரான்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

எது எப்படியோ முஸ்லிம் மாணவர்களின் மனது புன்படும் வகையில் வகுப்பு நடத்திய ஆசிரியரின் செயல் கண்டனத்துக்குரியது என்பதுடன் அதற்காக அவரை கொலை செய்ததை அங்கீகரிக்க முடியாது. அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். பிரான்ஸிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களும் "அப்பாவி மக்களைக் கொல்வது, நாகரிகம் அல்ல; அது காட்டுமிராண்டித்தனம்" என்று குறித்த செயலை கண்டித்துள்ளனர்.

இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத ஒரு முஸ்லிமின் செயலை ஏனைய முஸ்லிம்கள் அங்கீகரிக்காமல் அதை கண்டித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் மனதையும் புன்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசு நடந்து கொண்டதை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத செயலாகும்.

குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான தண்டனையை வழங்கி நீதியை நிலை நாட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யாமல் "பிரான்ஸ் கார்ட்டூன்களை விட்டுவிடமாட்டார்கள்" என்ற அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனின் கருத்து வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன் மேற்குலகின் இஸ்லாம் விரோத செயற்பாட்டிற்கு பிரான்ஸ் துனை போவதாகவே அமைந்துள்ளது.

தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படும் "ஷார்லி ஹெப்டோ" குறித்து கண்டனம் பதிவு செய்யாமலும் அதை தடை செய்யாமலும் ஆசிரியரின் கொலைக்கு எதிராக வீதியில் இறங்கி கண்டனம் பதிவு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவேலின் செயல் வேடிக்கையாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்துள்ளது. 

மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொலை செய்வதும், மன விரக்தியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதும் தடைசெய்யப்பட வேண்டியதுடன், ஜனநாயகம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை கொச்சை படுத்தும் விதமாக செயல்படுவதும், கேலிச்சித்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு முஸ்லிம்களின் உள்ளத்தை புன்படுத்தி உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதும் இரண்டும் ஒரே கோணத்தில் பார்க்கப்பட்டு இரண்டும் தடைசெய்யப்பட்ட வேண்டும்.

எனவே முஸ்லிம்களின் மனதை புன்படுத்திய பிரான்ஸின் இஸ்லாம் விரோத செயலை இலங்கை முஸ்லிம்கள் சார்பாக வன்மையாக கண்டிப்பதுடன் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு 

எஸ்.கே ஷிஹான் முஹம்மத்

செயலாளர்,

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் தவ்ஹீத்

https://www.qatartamil.com/2020/10/blog-post_80.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளின் கடைகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு

பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் -

பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.

அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரான்சில் இஸ்லாமிய இறைத்தூதர் கேலிச்சித்திரம் தொடர்பான விடயம் தொடர்ந்து சூடுபிடித்த வண்ணமே உள்ளது.

அதிபர் Emmnuel Macron கேலிச் சித்திரங்களை வரைவதை நிறுத்த வேண்டியதில்லை என அறிவித்ததை அடுத்து இஸ்லாமிய நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டார் நாட்டில் நடைபெற இருந்த பிரெஞ்சுக்கலாச்சார விழா பின் போடப்பட்டுள்ளது.

கட்டாரில் அல்மீரா, சூக் அல் பலாடி ஆகிய பல்பொருள் அங்காடிகள் பிரெஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன.

குவைத் நாட்டின் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

குவைத்திலுள்ள 60 வர்த்தக நிலையங்களில் பிரெஞ்சுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலுள்ள 450 பிரயாண முகவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கான விமானப் பயண முன்பதிவுகளை நிறுத்தியுள்ளனர்.

ஜோர்டான் நாட்டின் எதிர்க்கட்சி, பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரான்சில் இருந்து அதிகமான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் வளைகுடா நாடுகள் தமது இறக்குமதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டால் பிரான்ஸ் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பொருளாதார நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_813.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

இன்னும் ஐந்து வருடம்களில்  உலக நாடுகளில் மின்சார  வாகனம்களே அனுமதிப்பார்கள்  காரணம் வேகமாக அசுத்தமடையும்  சுற்றுப்புற சூழல் இப்பவே ஒரு பரல் எண்ணெய்  பூமியின் மேல்மட்டத்துக்கு கொண்டுவரும் சிலவும் விற்பனையாகும் விலையும் நெருங்கி வருகிறது என்று ஒப்பாரி வைக்கினம் .இந்த கேட்டில் பிரான்ஸ் பொருள்களை அரபு உலகு விற்காமல் போவது அவர்களுக்குத்தான் இழப்பு .

முதலில் இந்த யாழ் முஸ்லீம் என்பவர்கள் மூளையை முலம்காலுக்குள் வைத்து  யோசிப்பதை நிறுத்தணும் 

****

Edited by நியானி
காணொளி நீக்கம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 20:31, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

இந்து சமயம் இந்த வெளிநாடுகளில் செருப்புகளில் சரஸ்வதி படம் வந்தது  போல் பலசம்பவங்கள் கணக்க  இதே கிறிஸ்தவம் இந்த நாடுகளில் என்ன பாடு படுகிறது இங்கு எல்லாசமயமும் கேலி செய்யப்படுகிறது உங்களுக்கு மாத்திரம் சொன்னவுடன் கத்தியை கழுத்தில் போட்டு அறுப்பீர்களாக்கும் அதை வேறு நியப்படுத்துவது மகாகேவலம் ஏனென்றால் உங்களை வந்த இடத்தில் அரவணைத்து இந்த குளிர்நாடுகளில் வீடும் உணவும் தந்தவர்களையே அல்லா குத்தி  கொலை செய்ய சொன்னாரா ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 10:29, Ellam Theringjavar said:

திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

1708 களில் வேலுநாய்ச்சியாரின் கணவர் முத்துவடுகானந்த பெரிய உதயதேவர் கோவிலில் வைத்து ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின், அவரின் உடலை அடங்கம் செய்து அதேஇடத்தில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்பேன் என சபதம் செய்துவிட்டு தனது பெணகுழந்தையோடு வெளியேறுகிறார். எட்டு வருடங்கள் மறைந்துவாழ்கிறார். ஆங்கிலேயரிடம் பிடிபடாமலிருக்க அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வாராம். இப்படியே ௐருமுறை மன்னர் கைதர் அலிடயிடம் உதவிகேட்டு வந்திருக்கிறார்.

இராணி ஒரு இராசராசேசுவரியின் பக்தை எனவறிந்து கொண்டு, இராணி அங்கிருக்கும் காலங்களில் வழிபடவென ௐரு அம்மன் கோவிலையே மன்னர் கட்டிக்கொடுதாராம். அத்தோடு ஐம்பொன்னாலான ௐரு அம்மன் சிலையோடு ௐரு திருவாசியையும் பரிசாகக் கொடுத்தாராம்.

இன்னமும் அந்தக்கோயில் அந்தகோயிலிருக்கிறது .ஐம்பொன்னாலா திருவாசி பாதுகாப்பிலிருக்கிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொஞ்சக்காலம் ஆட்சிசெய்த பின் மருது சகோதரர்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

மருது சகோதரர்களின் ஆட்சியில் பல  கோயிலகளைக் கட்டினார்கள்.

அத்தோடு தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டிக்கொடுத்தார்கள்.

அவற்றிற்கு பல மானியங்களையும் கொடுத்துதவினார்களாம்.

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.

உண்மைதான். ஏதும் மாறியிருக்கிதா?

சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே.

விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன?

மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா?

நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. 

தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா?

பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல் இவை சாத்தியம் இல்லையே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களும்  மனிதரை ஏமாற்றும் உடாலங்கடி வேலைகளே என்பதை இந்த கொரனா பெருந்தொற்று வந்த பின்னராவது புரிந்து கொள்ள முடியாவிட்டால் எப்போது புரிந்து கொள்வர்? 

நான் வாழும் மாநிலத்தில் மக்கள் ஆலயம் செல்லாததால் (ஆலயங்களைத் திறக்க அனுமதி அளித்தும்), வருமானம் படுத்து விட்டது! சில ஆலயங்கள் முற்றாக வங்குரோத்து அடித்து விட்டுப் பூட்டப் போகின்றனர். 

இதற்குள் எந்த மதத்தையும் முன்னிறுத்தி  கருத்துச் சுதந்திரத்தை மட்டுப் படுத்த அனுமதிக்கக் கூடாது! 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே.

விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன?

மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா?

நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. 

தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா?

பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல் இவை சாத்தியம் இல்லையே.

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

2 hours ago, பெருமாள் said:

இந்து சமயம் இந்த வெளிநாடுகளில் செருப்புகளில் சரஸ்வதி படம் வந்தது  போல் பலசம்பவங்கள் கணக்க  இதே கிறிஸ்தவம் இந்த நாடுகளில் என்ன பாடு படுகிறது இங்கு எல்லாசமயமும் கேலி செய்யப்படுகிறது உங்களுக்கு மாத்திரம் சொன்னவுடன் கத்தியை கழுத்தில் போட்டு அறுப்பீர்களாக்கும் அதை வேறு நியப்படுத்துவது மகாகேவலம் ஏனென்றால் உங்களை வந்த இடத்தில் அரவணைத்து இந்த குளிர்நாடுகளில் வீடும் உணவும் தந்தவர்களையே அல்லா குத்தி  கொலை செய்ய சொன்னாரா ?

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

Link to comment
Share on other sites

மனித சுதந்திரம் பேச்சுரிமை பற்றி விவாதிப்பவர்கள் பிரெஞ்சு நாட்டவரின் நிலையிலிருந்தும் சிந்திக்க வேண்டும். 200 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சுப் புரட்சி மூலம் அரசாட்சியை அழித்து மக்களாட்சியை உருவாக்கியவர்கள். கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றாகக் பிரான்ஸ் கருதப்பட்டது. வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதக் கொள்கைகள் பின்பற்றப்படுவதால் தமது மதத்தையே அரசியல், பாடசாலை, பொது வைபவங்கள் போன்ற அனைத்திலிருந்தும் தூக்கி எறிந்தவர்கள். இன்ற பல நாடுகளிலும் பிரான்சில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது. 1789 இல் இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்ட வரைபு காலப்போக்கில் சீரமைக்கப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது. 

போராடிப் பெற்ற இந்த உரிமை மறுக்கப்படும்போது பிரெஞ்சு மக்கள் மதவாதிகளை நோக்கிப் போராட முனைந்துள்ளனர். கறுப்பினத்தவர்களுக்காகவும் இனத்துவேசத்துக்கு எதிராகவும் போராடியகவும் எனது நண்பர்கள் கூட நேரடியாக இஸ்லாத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். இவர்களின் நெருங்கிய நண்பர்கள் பலர் முஸ்லிம்கள் ஆகும். இது இஸ்லாத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து மதவாதிகளுக்கும் எதிரான போராட்டம். எந்த ஒரு மதமும் மனித சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை. 

இந்த ஆசிரியரின் கொலை ஒரு தொடர்ச்சியானது. 2015 இல் சார்லி ஹெப்டோ பத்திரிகை பிரசுரித்த கேலிச் சித்திரத்துக்காக பத்திரிகை ஆசிரியர் உட்பட 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2020 இல் அதே படத்தை மீண்டும் பிரசுரித்தபோது மீண்டும் தாக்கப்பட்டனர். 
இந்த ஆசிரியர் கொல்லப்பட்டபோது பிரான்ஸ் ஜனாதிபதியின் உரையில் தாமது நாட்டில் இக் கேலிச் சித்திரத்தைப் பிரசுரிப்பதைக் கைவிடப் போவதில்லை என்றே குறிப்பிட்டிருந்தார். 

2015 இல் சார்லி ஹெப்டோ தாக்குதல் நடந்தபோது New York Times இவ்வாறு எழுதியிருந்தது :
" உலகின் மத வெறியர்கள் வெறுக்கிற அனைத்தையும் பிரான்ஸ் பிரதிபலிக்கிறது. அவர்கள் வித்தியாசமான வகையில் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். காலையில் குறோசானுடன் கோப்பி அருந்துவதிலிருந்து விரும்பிய ஆடை அணிந்து சிரிக்கும் பெண்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வைன், வாசனையான பாண், பூங்காக்களில் விளையாடும் சிறுவர்கள், வாசனைத் திரவியங்கள், கடவுளை நம்பாத உரிமை, கலோரிகள் பற்றிய கவலையில்லாத உணவுகள், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உடலுறவு, உல்லாசப் பயணங்கள், எதையும் வாசித்தல், சிரித்து மகிழல், அரசியல்வாதிகளைப் போலவே போதகர்களையும் விமர்சிக்கும் உரிமை, சாவுக்கு அப்பால் என்ன நடக்கும் என்ற கவலையின்மை…
 உலகில் எந்த நாட்டவரும் பிரெஞ்சுக்காரர்களைப் போன்று வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்கவில்லை.  "

 • Like 4
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதற்குள் எந்த மதத்தையும் முன்னிறுத்தி  கருத்துச் சுதந்திரத்தை மட்டுப் படுத்த அனுமதிக்கக் கூடாது! 

கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்தால் மதவியாபாரம் படுத்துவிடும் என்று மதவாதிள் பயப்படுகிறார்கள். அதனால் கழுத்துக்கு கத்தி வைப்பதை கூட ஒற்றுமையாக ஆதரிப்பதை அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

2 hours ago, Kapithan said:

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா?

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். மைதானங்களில் கூடுயோரை ஈய்வு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் அப்படியே இப்பவும் இலங்கையும் இந்தியாவும் தம்நாட்டுப் பிரைசைகளுக்கு செய்தகொண்டிருக்கிறார்கள்.

எங்கேயாவது ஒரு ஐரோப்பிய நாடு தன் நாட்டுப் பிரசைகை இப்படி தண்டிக்கிறார்களா?

மற்றய நாடுகளிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரி பின்னர் அந்தந்த நாட்டுப் பிரசைகளானவர்கைத் தவிர.

மதமும் விஞ்ஞானமும். போருக்கு ஆணையிடுவதற்கு முன் அரச தலைவர்கள் வேதப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு தேவாலயத்துக்குப் போய்வருகறார்களே. ஏன்?

நவீன ஆயுதங்களில் நம்பிக்கை இல்லாமலா?

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

அதுசரி இது பச்சையா? காஞ்சதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

உங்களை நீங்களே காட்டிக்கொடுப்பதற்கு நான் பொறுப்பல்ல. 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

1 hour ago, Ellam Theringjavar said:

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம்.

சார்! சிறிலங்காவில் கருத்து சுதந்திரம் இருக்கா சார்? :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

""இன்னமும்"" என்பதன் அர்த்தம் எல்லாம் அதிகமாகத் தெரிச்சவருக்குப் புரியுமோ என்னமோ 🤔🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சார்! சிறிலங்காவில் கருத்து சுதந்திரம் இருக்கா சார்? :cool:

ஏனண்ணை அங்கே வந்தால் கவனிக்கலாம் எண்டு கிடங்கு வெட்டி வைக்க போறீங்களா? 😹சிறிலங்காவில் நீங்கள் யார் என்பதை பொறுத்து கருத்துச்சுதந்திரம் வேறுபடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

இதை நீங்கள் சீரியசாகச் சொன்னீர்களோ தெரியாது. சீரியசானால், இதை நீங்கள் அரசியலமைப்பின் முதல் திருத்தத்தைக் கொண்ட அமெரிக்கப் பின்னணியில் பார்ப்பதால் இப்படி நினைக்கிறீர்கள் போல. 

இங்கே , 1st amendment இல் இருக்கும் பேச்சுரிமையை சில காரணங்களுக்காக கட்டுப் படுத்தலாம்  என உச்ச நீதிமன்றம் வழி விட்டிருக்கிறது. அதைப் பாவித்தே சில ஆண்டுகள் முன்பு குர் ஆனை ஒரு கிறிஸ்தவ போதகர் எரிக்க முனைந்த போது பொலிஸ் தலையிட்டுத் தடுத்தது!

மேலே இணையவன் விரிவாக எழுதியிருக்கும் பிரெஞ்சு வாழ்க்கை முறையில் வளர்ந்த ஒருவராகக் கற்பனை செய்து பாருங்கள்: எதையும் நக்கல் செய்வது அவர்களது பிறப்புரிமையாக இருக்கும் போது, அந்த வாழ்க்கை முறைக்குள் வாழ வந்த ஒரு மதமோ நம்பிக்கையோ அந்த சுதந்திரத்தை மாற்ற வேண்டுமென்று எதிர்பார்ப்பது  ஆபத்தான முன்னுதாரணம்!

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

உண்மை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை.

பாவப்பட்ட அரபு அப்பாவிச்சனங்கள்.....இன்னும் எத்தினை இடங்களிலை குண்டு குண்டாய் விழப்போகுதோ.....என்ரை ஈஸ்வரா..... :cool:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)