Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ்ப்பாணத்திற்குள்ளும் புகுந்தது: புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்தபெண் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சாரதி நடத்துநர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

அதில் கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் பேருந்தின் நடத்துனர் குறித்த பெண்ணிற்கு கொரோணா தொற்று உறுதியானவுடன் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோணா தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர்

குறித்த நபருக்கு ஏற்கனவே PCR பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது. எனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.

எனினும் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தும்பளை வீதி பருத்தித்துறையை சேர்ந்த 39வயதான சந்தியாபிள்ளை சுபாஸ்பரன் என்ற பஸ் நடத்துனருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் நாளை மாலை மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

https://www.pagetamil.com/151788/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡
  • 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன். சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்)  நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும். இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/92563
  • சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருடன் நாம் நடத்தி சந்திப்பு தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.    பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளை கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யாம்பத்தை கடந்த 14ஆம் திகதி காலை 10 மணியளவில் சந்தித்திருந்தோம். இந்தச் சந்திப்பு தொடர்பில் ஆளுனர் ஊடங்களுக்கு விடுத்து அறிவிப்பில், பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இனங்கள் அடிப்படையில் இங்குள்ள மேய்ச்சல் நிலங்களை பிரித்துக்கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் இனங்கள் அடிப்படையில் காணிகளை ஒதுக்கீடு செய்வது எமது பணியல்ல எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது சிறப்புரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வேண்டும். மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உரித்தான மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் மகாவலி பி பிரிவில் சில காணிகள் உள்ளன. இதில் 2 இலட்சம் பசு மாடுகள் மேய்க்கப்படுகின்றன. தினமும் 17ஆயிரம் லீட்டர் பால் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. கிராம சேவகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்தோம். இந்த பிரச்சினை தொடர்பில் பேசியதால் அரசாங்க அதிபரையும் மாற்றியுள்ளனர். மகாவலி திட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரையும் சந்திதோம். அமைச்சர் சமால் ராஜபக்ஷவிடமும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளோம். 20ஆயிரம் ஏக்கர் நிலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து ஐந்து ஐந்து ஏக்கர் மாடு மேய்ச்சலுக்காக பிரித்துக்கொடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் கூறியுள்ளார். ஐந்து ஏக்கர் என்ற அடிப்படையில் பிரித்துக்கொடுப்பதால் அவை மேயும் மாடுகளுக்குத் தெரியுமா?. எனது சிறப்புரிமை தொடர்பில் பொய்களை கூறுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் சிங்கள மொழியிலும் உரையாற்றி இனவாதி என்பதை உணர்த்தியுள்ளேன். சிங்கள மக்களுக்கு தவறான செய்திகள் செல்லக்கூடும். குறிப்பாக தமிழ் எம்.பிகள் இனங்கள் அடிப்படையில் காணிகளை பிரித்துக்கொடுக்குமாறு கூறுவதாக செய்திகள் செல்லக்கூடும் என்றார். https://www.virakesari.lk/article/92586
  • ரிஷாத்தை கைதுசெய்தமை மகிழ்ச்சி - ஞானசார (இராஜதுரை ஹஷான்) இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை  பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.  பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது. அரசியல்  காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட வித்த்தை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் நாட்டில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கி ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை போன்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். பயங்கரவாதி சாஹ்ரான் தொடர்பில் நல்லிணக்கத்தை விரும்பும் பாரம்பரிய முஸ்லிம்கள் ஞாயிறு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்கள். அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதகளினால் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் இப்பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் பொதுபல சேனா அமைப்புக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள். காத்தான்குடி பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்களே ஆரம்பத்தில் காணப்பட்டது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/92573
  • Poacher makes the best gamekeeper 🤣. காலத்துக்கு ஏற்ப மாறுகிறது.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.