Jump to content

தாய்மாரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய மனிதத்தன்மை இல்லாதவர் முரளி; தயவுசெய்து விலகிவிடுங்கள் விஜய் சேதுபதி: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமான வேண்டுகோள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், குறித்த திரைப்படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என அவரிடம் பகிரங்க வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் 8 மாவட்ட பிரதிநிதிகளும் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்தித்து மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளர்.

இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள 800 திரைப்படம் தொடர்பான விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து எமது உறவுகள் சார்பாக எமது அதிருப்தியை வெளியிடுகிறோம். அத்துடன் தென்னிந்திய திரைப்படத்துறையினருக்கும் குறிப்பாக விஜய்சேதுபதி அவர்களிடமும் ஊடகங்கள் வாயிலாக ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறோம்

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் குறித்த படத்தில் ஒப்பந்தமாகும் போது முரளிதரனை பற்றிய முழு தகவல்களும் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது தமிழ் மக்களிடம் இருந்தும் சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற விமர்சனங்களை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முரளிதரன் என்பவர் சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம். ஆனால் அவர் ஓட்டுமொத்த தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தியுள்ளார். அவர் ஒரு தமிழனாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள் தனக்கு மிகவும் சந்தோசமான நாளென பகிரங்கமாக கூறியவர். பெயரை மாத்திரம் தமிழில் வைத்துக்கொண்டு எம் உறவுகளை கொன்றொழித்தவர்களுக்கு விசுவாசத்தை காட்டுபவர் அவர்.

எமக்கு எதிரிகளாக இருப்பவர்கள் கூட அன்றைய நாள் இனிய நாள் என கூற மாட்டார்கள். சிங்கள மக்களே எமது கஸ்டங்களை கேட்டு கண்ணீர் வடித்துள்ளார்கள். ஆனால் தமிழனாக இருந்துகொண்டு, 2009 ஆம் ஆண்டு தனக்கு இனிமையான நாள் என கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார். மனிதத்தன்மை இல்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதனை விட எம் போராட்டத்தையும் எம்மீதும் பொய்யான விமர்சனம் ஒன்றையும் அவர் கடந்த காலத்தில் முன்வைத்துள்ளார். எனவே அவர் தொடர்பான படம் வரக்கூடாது என்பதில் உறுதியாக நாம் உள்ளோம்.

டேவிட் கமருன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த போது எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கூறுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் யாழில் திரண்டிருந்தார்கள். குறித்த விடயம் தொர்பாக சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் முரளிதரனிடம் கருத்துக் கேட்டதற்கு மனதில் சிறிதளவேனும் ஈவிரக்கம் இல்லாமல் மனித தன்மையை மறந்து 20, 30 அம்மாமார் வந்து போராடினால் அது உண்மை ஆகாது என இரக்கமே இல்லாமல் கூறியுள்ளார்.

உறவுகளின் பாசத்தையும் உணர்வுகளையும் பற்றி தெரியாத அரக்கர் குணம் படைத்தவர்கள் தான் இதை கூற முடியும். ஒரு விடயம் பற்றி தெரியாது விட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதை நாம் அன்றும் வன்மையாக கண்டித்தோம் இன்றும் கண்டிக்கிறோம்.

கிரிக்கெட் விளையாடில் 11 பேர் விளையாடுகிறர்கள். வென்றுவிட்டால் இலங்கை வென்றதாக கூறுவர்கள். அதற்காக இலங்கையில் உள்ள அனைவரையும் கூட்டிச்சென்று விளையாட முடியுமா, அதே போல் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க அதை தெரியப்படுத்த இலட்சக்கணக்கானவர்களின் சார்பாக பிரதிநிதிகளாக பல பெற்றோர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். அதை அவர் கொச்சைப்படுத்தினார். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த முரளிதரனுக்கு தகுதி இல்லை.

இவ்வாறாக எமது உணர்வுகளை சாகடித்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை தமிழர்கள் விரும்பும் பிரபல்யமான ஒரு தமிழ் திரைப்பட நடிகர் நடிக்கக் கூடாது என்பது எமது வேண்டுகோள் அத்துடன் தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கங்கள், இயக்குநர் சங்கங்கள், திரைப்பட ஒப்பந்தகாரர்கள் அனைவரும் இணைந்து, இந்த படத்தை வேறு யாரும் தயாரிக்கவும் இடமளிக்க கூடாது என்பதுடன் அந்த முயற்சிகளுக்கு அழுத்தத்தையும் கொடுக்கவேண்டும்.

எமது உறவுகளை தேடி நாம் இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம் எமக்கு நீதிவேண்டி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் எங்களில் 77 பேரை இதுவரை இழந்தும் உள்ளோம். எம்மை உங்களது அன்னையர்கள் போல் நினைத்து எமது போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை நடிக்கும் முயற்சியை விஜய் சேதுபதி அவர்கள் கைவிடவேண்டும்.

எமது அவலக்குரலை கவனத்தில் எடுத்து எமது பிள்ளையாக உங்களிடம் உரிமையுடன் கேட்கிறோம். எதிரில் இருப்பது குழி எனத் தெரிந்தும் அதற்குள் கால் வைக்க முயற்சிக்க வேண்டாம். இந்தப் பட ஒப்பந்தத்தில் இருந்து உடனடியாக விலகி எமது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/151785/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில்தான் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது தான் யார் என்பதை முத்தையா முரளிதரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாமல் முத்தையா முரளிதரன் பற்றிய சினிமா எடுப்புகளும் உணர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.'முரளிதரனை மலையக மக்களின்; அடையாளமாகக் கட்டமைக்க முயல்வது..முரளிதரன் மலையகத்தின் அடிப்படைவசதிகளற்ற காம்பறாக்கள் எனப்படும் குச்சு விட்டில் வாழ்ந்து,உடுத்த நல்ல உடையும், வயிறாற உண்;ண நல்ல உணவும் இல்லாமல் தோட்டப்பாடசாலையில் படித்து முன்னேறி உயர்ந்த நிலைக்கு வந்தவர் என்ற ரீதியில் கதை சொல்வது..முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலையை யாழ் சைவ வெள்ளியாகிய மனநிலையுடன் முடிச்சுப் போடுவது..நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்த சிங்கள தேசிய வாதத்துக்குச் சிறீலங்கா தேசியம் என்ற போர்வையைப் போர்த்தி வெள்ளையடிக்க முயலும் முரளீதரனுடைய பிழைப்பு வாதத்தை நியாயப்படுத்துவது...'இப்படி இந்த பிரச்சனையின்பாற்பட்ட பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லலாம்.முதலில் முத்தையா முரளிதரன்; இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தோட்டத் தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவரல்ல.அவர் இலங்கையிலுள்ள குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல் செல்வாக்குள்ள ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.தோட்ட லயன்களும் தோட்டப்பாடசாலையும் அவருக்கு பரீட்சயமில்லாதவை. அவர் படித்ததெல்லாம் கண்டியிலுள்ள பிரபல பாடசாலையில்.இந்தப் பின்னணிதான் அவர் சிறீலங்கா துடுப்பாட்ட அணியில் இடம்பிடிப்பதற்கு உதவியாக இருந்தன.ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகவோ அல்லது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பைபைச் சேர்ந்த ஒரு சராசரித்தமிழ் குடும்பத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாக அவரால் அந்த இடத்திற்குச் சென்றிருக்க முடியாது.அதேபோல பௌத்த சிங்கள பேரினவாதம் கோலோச்சும் சிறீலங்கா விளையாட்டுத்துறையில் ஒரு தமிழன் என்ற வகையில் அவர் தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்கு தன்னுடைய அடையாளத்தை இழந்து ஒத்தோடி அரசியல் செய்தே ஆகவேண்டும். முரளிதரன் இதைத்தான் செய்தார்.இது தான் உண்மை.மாறாக அவர் தன்னுடைய அடையாளத்தை முன்னிறுத்தி மலையக மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், அவர்களின் அவல வாழ்வு பற்றி பொது வெளியில் பேசி இருந்தால் எப்போதே அவரை சிறீலங்கா துடுப்பாட்ட அணியிலிருந்து தூக்கி வெளியில் வீசியிருப்பார்கள்.இந்தவிடயத்தில் முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்.குட்டி முதலாளித்துவ அதிகார வர்க்கம் என்பது தன்னுடைய நலனிலேயே எப்போதும் குறியாக இருக்கும்.பொதுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் அதற்கு வேண்டப்படாத அல்லது தங்களது நலனுக்குத் தேவைப்படும் போது ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ளத் தக்க விடயங்களாகும். முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை ஒடுக்கப்படும் மக்களின் நண்பனாக இருப்பதை விட ஒடுக்குபவர்களின் நண்பனாக இருப்பதே அவரது இருப்புக்கும் பொருளாதார நலனுக்கும் உகந்தது என்ற வகையில் ராஜபக்ச குடும்பத்தை அவர் ஆதரிக்கிறார்.இந்த உண்மையை அவர் மூடி மறைப்பதுதான் பிரச்சனை.அவரை மலையக மக்களின் பிரதிநிதியாக துடுப்பாட்ட வரலாற்றில் தமிழன் என்ற இன அடையாளத்தை முன்னிறுத்தி சாதனை படைத்த ஒருவராக பார்ப்பது தவறு.மலையக மக்களின் உரிமைக்காக போராடி அதிகார வர்க்கத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான முல்லோயா கோவிந்தன் மற்றும் மலைய மக்களின் நல்வாழ்வுக்காகத் தனது தேட்டங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதும் உழைத்த நடேசையர் போன்றவர்களுடன் ஒப்பிடும் பொது முத்தையா முரளிதரன் செல்லாக்காசுக்கு ஒப்பானவர்.அடுத்து முத்தையா முரளிதரனுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு என்பது சிறீலங்கா அணிக்காக விளையாடியதற்காகவோ அல்லது அந்த அணியில் தனது இருப்பை தக்க வைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவோ ஏற்பட்ட ஒன்றாகக் கருத முடியாது.துடுப்பாட்டத்துக்கு அப்பால் தன்னுடைய இருப்பையும் பொருளாதார நலன்களையும் தக்க வைப்பதற்காகப் பௌத்த சிங்கள பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவர் பொது வெளியில் தெரிவித்த கருத்துக்களும், அவற்றை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகளுமே அவரது விளையாட்டு திறமையை ரசித்து வரவேற்ற தீவிரமான ரசிகர்களைக் கூட அவர்மீது கோபம் கொள்ள வைத்திருக்கிறது.இந்தக் கோபத்தை பொத்தாம் பொதுவாக யாழ்ப்பாண அதிகார வர்க்கம் எதிர் மலையக மக்கள் என்று அடையாளப்படுத்தும் வேலையைப் பௌத்த சிங்கள பேரினவாதிகள் தங்கள் ஒத்தோடிகளைக் கொண்டு கன கச்சிதமாகச் செய்துவருகின்றனர்.மலையக மக்கள் சக்தி என்பது ஒருங்கிணைந்த உழைக்கும் மக்கள் சக்தி என்பதும் இந்த சக்தி உரியமுறையில் வழிநடத்தப்பட்டால் தங்களது பேரினவாத அரசியலுக்கு ஆப்பு வைக்கும் என்பதும் சிங்கள தலைமைகளுக்குத் தெரியும். இதனாலேயே முன்னர் மலையக மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டது.இப்போது இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டே பௌத்த சிங்கள பேரினிவாத தலைமைகள் மலையகம் எதிர் யாழ் அதிகார வர்க்கம் என்ற முரண்பாட்டைக் கூர்மையடைய வைக்க முயல்கின்றன.முத்தையா முரளிதரன் என்ற குட்டி முதலாளித்துவ பிரமுகர் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கையை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக மடைமாற்றிவிட இந்த சக்திகள் முயல்கின்றன.யாழ்ப்பாண அதிகார வர்க்கம் மலையக மக்களுக்கு இழைத்த துரோகத்தையும் அவர்களை நடத்திய விதத்தையும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.ஆனால் அதேநேரம் மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறித்த பௌத்த சிங்கள பேரினவாதிகளுடன் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்தும் பிணைந்தும் அரசியல் செய்ததையும்; செய்து கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.இன்றைக்கு முத்தையா முரளிதரன்; தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு விதந்து போற்றும் மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வருவதற்கு ஏணியாகப் பயன்படுத்திய சிறீலங்கா சுதந்திரக்கட்சி 1970களில் மலையக மக்களை அவர்கள் வாழ்ந்த தேயிலைத் தோட்டங்களைவிட்டு விரட்டியத்த வரலாறும், அந்த மக்கள் வாழ வழியின்றி உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கில்  பட்டிணியால் மடிந்த வரலாறும்,எஞ்சியோர் புற்களை உண்டு உயிர் பிழைத்த வரலாறும் கறைபடிந்த அத்தியாயங்களாக உள்ளன.அன்றைய காலகட்டத்தில் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் என்பதும் வரலாறு.அடுத்து முத்தையா முரளிதரன்; இந்தப் பிரச்சனை தொடர்பாக அளித்த தன்நிலை விளக்கத்தில் தனது குடும்பம் ஜேவிபியால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.'இலங்கையை தன்னுடைய நவகாலனியாக வைத்திருக்க முயலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகப் போரிடுவது' என்பது ஜேவிபியின் இலக்குகளில் ஒன்று .ஜேவிபி தனது முதலாவது கிளர்ச்சியின் போது, மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் முகவர்களாகக் கணித்தது.1987௮9 ல் நடந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது இது மாற்றமடைந்தது.இலங்கை குடிமக்களாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும், இந்தியக் குடிமக்களாக இலங்கையில் வாழ்ந்து இந்திய நலனை முதன்மைப்படுத்தும் குட்டி முதலாளிகளுக்கும் வேறுபாடுள்ளது என்று அது ஒப்புக்கொண்டது.இந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது கணிசமான மலையக இளைஞர்கள் ஜேவிபியில் இணைந்திருந்தனர்.ஆனால் இந்த கருத்தியல் மாற்றத்தை ஜேவிபியில் ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்த்துவந்தனர். ஒட்டு மொத்த மலையக மக்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களாகவே அவர்கள் கருதினார்கள்.சோவன்ச அமரசிங்க இதில் முக்கியமானவர்.அவரின் வாரிசுகளில் ஒருவரான விமல்வீரவன்ச பௌத்த சிங்கள பேரினவாத காவலர் என்று சொல்லுமளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வந்தவர்.கடந்த தேர்தலில் முத்தையா முரளிதரன் அவருடன் கைகோர்த்துக்கொண்டு  கொழும்பிலும் மலையகத்திலும் மலையக மக்களின் வாக்குகளைப் பிளவு படுத்தி அவர்களது தனித்துவமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய முயன்றார்.இது அந்த மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்த செயலுக்கு எந்தவித்திலும் குறைவானதல்ல.பௌத்த சிங்கள பேரினவாதம் முத்தையா முரளீதரனின் பிரபலத்தை முதலீடாக வைத்து அரசியலில் துஸ்ரா பந்துவீச்சைச் செய்கிறது என்பதே உண்மையாகும்.முத்தையா முரளிதரன் தனது பிரபலத்தை முதலீடாக வைத்து மலையக மக்களின் அவலங்களை,அவர்களின் நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையை, வெளிப்படுத்துவதற்கு முயன்றிருந்தால் அவரை நாங்கள் ஆதரிக்கலாம்.Mஈஆ என்கிற மாதங்கி அருட்பிரகாசம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயத்தன்மையை உலகுக்கு எடுத்துச் சொன்ன மாதிரி, முத்தையா முரளிதரன்; மலைய மக்களின் அவலங்களை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும்.முத்தையா முரளிதரனை எதிர்ப்பதென்பது அவரது ஒத்தோடி அரசியலுக்கு எதிரானதேயன்றி அவர் மீதான பொறாமையின் பாற்பட்ட எதிர்ப்பல்ல.
 

https://www.facebook.com/siva.sinnapodi

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.