Jump to content

கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்

 

Black-Sea-Tiger-Captain-Kannalan.jpg

கடமை…

2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.

அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போhக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று…

ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்… ஓர் அளவுகோலில் ‘’பாசம்’’இ ‘‘கடமை’’ என்றை இரண்டையும் நிறுவை செய்தான். அவனது மனச்சாட்சி முன் ‘‘கடமை’’ என்ற பக்கம் தாண்டு கொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.

‘‘ நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்… இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்… என்னால இந்த நடவடிக்கையில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது…

ஆனா… என்ற குடும்பத்த நீங்கள் பார்க்க வேண்டும்…

குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறுயாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்…

‘‘ஈன்ற பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.

நினைவுப்பகிர்வு: பிரமிளா.
நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04.09.2008).

 

https://thesakkatru.com/black-sea-tiger-captain-kannalan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.