Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                     கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....!

 

                                 IPL 2020: 'Put some respect on the name' - Chris Gayle explains why he  pointed to 'The Boss' sign on his bat after scoring fifty - cricket -  Hindustan Times

 

உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் 

அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் 

கரிய நிறமும் பெரிய உருவமும் உனது 

பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....!

 

வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க 

மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க 

சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர 

சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....!

 

 இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

 

அங்கும் இங்கும் ஆலாய் பறந்து 

பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் 

பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் 

அத்தனை கமராவும் காட்டும் பவர்......!

 

உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை 

மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை 

வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு 

வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....!

 

பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை 

பஞ்சாப் பறக்க விட்டவனே 

சிங்குகளுக்கு நடுவில் நின்று 

சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....!

 

நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் 

நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு 

ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை 

ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....!

 

ஆக்கம் சுவி ......!   🙏

 

 

Edited by suvy
சிறு திருத்தம்....!
  • Like 7
  • Thanks 2
  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை 

வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு 

வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....!

 

வர்ணனைகள் அபாரம் சுவி ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 16:21, ஈழப்பிரியன் said:

சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

பாவி நேற்று ஒரு ஓவரில 23 / 24 ஓட்ட்ங்கள் எடுத்து அவுட்டாயிட்டான் ஆனால் அந்த ஒரு ஓவரும்  அபாரம் பிரியன்.....!  🏏  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 19:39, suvy said:

இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

 

 

On 19/10/2020 at 19:39, suvy said:

நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு 

ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை 

ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....!

tmp-29135.gif கவிதை மிக அருமை தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 18:48, கிருபன் said:

வர்ணனைகள் அபாரம் சுவி ஐயா!

அதெல்லாம் ஒரு பீலிங்கில் வருவது கிருபன்.....!

"அடித்து தெறிக்கும் பந்துகள் பறவைகளாய் பறக்க 

அங்கு வரும் விமானங்கள் அலறியடித்து அப்பால் செல்லும்"

இது மிஸ்ஸாயிட்டுது .....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கிரிக்கட் உலகின் அசுரன் கெய்ல்.......!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தில் ஓட்டையுள்ள குப்பை பொறுக்கிய இளைஞனா இவர்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேபிள்டென்னிசிலும் கலக்கும் கெய்ல்....பஞ்சாப் வீரர்களுடன் செம ஜாலி........!   🏓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் & பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியில் மகிழ்ச்சியான தருணங்கள்....!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அணி தண்ணீரில் வாலிபால்......!  🏀

23 hours ago, சுவைப்பிரியன் said:

கெயில் ஓய்வாம்.☹️

அலைகள் ஓய்வதில்லை சுவை......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூனிவேர்சல் பொஸ்சுடன் சிறிய பேட்டி ஒன்று......!   👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸீஸ் நெக்ராவின் பந்துகள் ஒவ்வொன்றும் எல்லையைத் தாண்டும் கோலம்......!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

47 பந்துகள் 100 ஓட்டங்கள் .....இங்கிலாந்தை புரட்டி எடுத்த அசுரன்.......!   🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய தூரத்துக்கு விளாசப்பட்ட ஆறுகள்.......கெய்ல் & கெவின் பீட்டார்சன்.....!  🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 பந்துகளில் 50 ஓட்டங்கள்.......!  🏏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெய்லுடன் ஒரு பொழுது......கார்னிவெல் கொண்டாட்டங்கள்.....சும்மா கிழி .....கிழி .....கிளி......!  👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 18:32, suvy said:

கெய்லுடன் ஒரு பொழுது......கார்னிவெல் கொண்டாட்டங்கள்.....சும்மா கிழி .....கிழி .....கிளி......!  👋

😂

அழகான கவிதை உங்கள் வர்ணனையில்👍, பாராட்டுக்கள். இவருக்கு சிறுவயதில் இதய கோளாறு இருந்ததா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

😂

அழகான கவிதை உங்கள் வர்ணனையில்👍, பாராட்டுக்கள். இவருக்கு சிறுவயதில் இதய கோளாறு இருந்ததா?

 

ஓம் உடையார், ஆடும்பொழுது மைதானத்தில் மயங்கியும் விழுந்திருக்கிறார்......!   😁

பாராட்டுக்கு நன்றி உடையார்....கவிதை எழுதலாம் என்று இருந்தால் ஒரு சொல்லும் வராது, இப்படி ஏதாவது நேரங்கெட்ட நேரத்தில் கொஞ்சம் வரும்.....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நேரங்கெட்ட நேரத்தில் கொஞ்சம் வரும்.....!  😂

அந்த நேரம் கெட்ட நேரமேது, நாங்களும் முயற்ச்சித்து பார்க்கலாம் அதுதான், எனக்கு சுட்டுப்போட்டாலும் வருகுதில்லை 😂

Link to comment
Share on other sites

On 20/10/2020 at 01:09, suvy said:

உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் 

அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் 

கரிய நிறமும் பெரிய உருவமும் உனது 

பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....!

 

வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க 

மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க 

சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர 

சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....!

ஒரு நேர்முகவர்ணனையைக் கூடக் கவிதை வடிவில் தர உங்களால் தான் முடியும் சுவி அண்ணா. 

கிறிஸ் கெய்லை அறியாதவர்களும் ரசிக்கும்படியான அழகுக் கவிதைக்கு நன்றி. வாழ்த்துக்கள் சுவி அண்ணா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துடன் ஆடிய போட்டியில் ஆகாயத்தை முத்தமிட்ட  39  அசத்தலான ஆறுகள் .....!   🏏

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிள்ளையான், கருணா ஏன் டக்கிளசும் தமது மாற்றுக்கருத்தாளர்களையும், அரசியல் எதிராளிகளையும் சிண்டுமுடிந்து தங்கள் காலத்தை ஓட்டுபவர்கள். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது இங்கு ஒரு சொல் தொக்கி நிற்பதாகவே எனக்குப் படுகிறது. அதாவது பிள்ளையான் சொல்வது "திட்டம் இல்லாமல்.....தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மற்றையவர்கள்போல் மேற்கொள்ளவில்லை" என்பதாகவும் இருக்கக்கூடும்.
    • இப்போ... நீங்கள், யார்... என்பது புரிந்து விட்டது. இமான்கள்  என்றால் யார்?  அவர்கள்,  எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்? அவர்களுக்கு... மட்டும், வித்தியாசமான.. கொம்பு முளைத்திருக்கிறதா? . . ரிஷாத் பதியுதீன் வீட்டில்,... சிறுமி  ஹிஷாலினியின் கொலையை பற்றி... யாழ். களத்தில்  ஐந்து தலைப்புகள் உள்ளது. அதில்... உங்கள் கருத்தை காணவில்லையே... ஏன்? நீங்கள்...  எந்த மதம் என்பதனை....  உங்கள், சுயரூபமே ... காட்டிக் கொடுத்து விட்டது.  அதனால்... தான், முஸ்லீம்களை, உலகமே வெறுக்கின்றது.
    • இந்தியாவில் மட்டுமா உங்களுக்கு அநியாயம் நடக்குதுனு புலம்புகிறீர்கள்? உலகில் ஏதாவது ஒரு நாட்டை  நல்லநாடு  நல்ல மக்கள் என்று முஸ்லீம்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அடைக்கலம் தந்த வாழும் நாடுகளுக்கு நன்றியுணர்வு, விசுவாசத்துடன் இருந்திருக்கிறார்களா? எப்போபார் இன்னும் பத்து வருசத்தில் அவர்கள் வாழும் நாடுகள் இஸ்லாம் நாடாக மாறும், யா அல்லாஹ்,ஜோ அல்லாஹ் என்று கலவரம் செய்தால் உங்கள்மீதான வெறுப்புணர்வு அந்தந்த நாடுகளில் அதிகரிப்பது தவிர்க்கவே முடியாத ஒன்று அதற்கான பொறுப்பை நீங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். உலகம் முழுவதும் எத்தனை இனங்கள் இருக்கிறது மதங்கள் இருக்கிறது, ஏன் முஸ்லீம்கள் மட்டும் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா சீனா இந்தியா இஸ்ரேல் உட்பட உலகின் அனைத்து நாடுகளும் எங்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று  புலம்புகிறார்கள்? எல்லோரும் உங்களுக்கு கெட்டவர்களாக தெரிந்தால் நீங்கள்தான் கெட்டவர் என்று அர்த்தம், என் மதம்தான் உயர்ந்த மதம், என் மதம்தான் உலகத்தை ஆளும், என் மதத்தை தவிர்ந்தவர்கள் காபிர்கள்,கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற வக்கிர சிந்தனைகளுடன் அலைந்தால் உங்களுக்கான பதிலடியும் மிக மூர்க்கமானதாகவே பிறநாடுகளால், இனங்களால் மேற்கொள்ளப்படும், தவறுகள் எங்கேயிருந்து ஆரம்பிக்கின்றன என்று தேட தொடங்குங்கள், அதுக்கும் இஞ்ச பாருங்கோ இதில இப்படி சொல்லியிருக்கு எண்டுகொண்டு குரானின் பிரிவுகளை தூக்கிகொண்டு வராதீர்கள்.    
    • ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர்  யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இப்புறாக்களுக்கான உரிமைப்பாடும், இப்புறாக்கள் தாமாகவே சென்றனவா அல்லது களவாடப்பட்டனவா என்கிற சர்ச்சையும் கிளம்பியதையடுத்து ஒரு வீட்டிலிருந்து 6 நபர்கள் மற்றைய வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 3 பேரைத் தாக்கிவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால், தாக்கப்பட்ட மூவரும் வடக்கில் இயங்கிவரும் அரச துணைராணுவக் குழுவான ஈ பி டி பி யின் உறுப்பினர்கள் என்பதும், அதிலொருவர் அத்துணை ராணுவக்குழுவின் இணைச் செயலாளர்களில் ஒருவரான "சொர்ணா அக்கா" என்று மக்களால் அச்சப்பட்டு அழைக்கப்படும் லலிதா என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து, முதலாவது வீட்டில் வசித்துவந்த 20 வயது இளைஞரை, பிரச்சினையைச் சுமூகமாக பேசித் தீர்க்கலாம் வா என்று அழைத்த லலிதாவும் அவரது துணைராணுவக் குழுவின்  ஆதரவாளர்களும் நடந்த தவறுக்கு  மன்னிப்புக் கேட்டால் உன்னை விட்டுவிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதன்படி அவர்களுடன் பேசச் சென்ற 20 வயது சுகந்தன் எனும் இளைஞரை கடுமையாகத் தாக்கத் தொடங்கிய லலிதாவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே தாம் கரைத்துவைத்திருந்த மிளகாய்த்தூள் நீரை அவரின் கண்களில் ஊற்றிச் சித்திரவதை செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் சுகந்தன் தலை முடியையும் சவரம் செய்திருக்கிறார். தொடர்ந்தும் துணைராணுவக் குழு பெண்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை காப்பற்ற துணியாது பலரும் திகைத்துப்போய் நிற்க இத்தாக்குதல் தொடர்ந்திருக்கிறது. துணைராணுவக் குழுவினரின் அதிகாரமும், குற்றங்களில் இருந்து விலக்களிப்பும் தமக்கு பாதுகாப்புத் தரும் என்கிற ஆணவத்தில் இந்தப் பெண்கள் குழு மிகவும் வெளிப்படையாகவே இத்தாக்குதலினை நடத்தியிருப்பதுடன், தாம் தாக்குவதையும் பெருமையாக  ஒளிப்படமும் எடுத்திருக்கிறது. தமிழக சினிமாவான தூள் படத்தில் அரசியல் ரெளடியாக வந்து கொலைகளை நடத்தும் படிப்பறிவற்ற காட்டுமிராண்டிப் பெண் சொர்ணா அக்காவைப் போன்று ஈ பி டி பி துணைராணுவக்குழுவின் பெண்கள் பிரிவும் செயற்பட்டுவருவதனையடுத்து இவர்களை "சொர்ணா அக்காக்கள்" என்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அழைக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நீதித்துறையினதும், காவல்த்துறையினதும் ஆதரவினைப் பெற்றுக்கொண்டு அட்டூழியங்களில் ஈடுபட்டுவரும் இந்தத் துணைராணுவக் குழுவின் பெண்கள் பிரிவு தமது தாக்குதலை பெருமையுடன் சமூகவலைத் தளங்களிலும் பிரச்சாரப்படுத்தியிருக்கிறது.  தன்மீது நடத்தப்பட்ட அநாகரீகமான தாக்குதலினையடுத்து மனமுடைந்துபோன  சுகந்தன் எனும் அந்த இளைஞர் தனது பிறந்த தினமான ஆடி 27 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  ஆனால், அவர் கொரோணாவினால் உயிரிழந்தார் என்று வைத்திய அறிக்கையினைத் தயாரித்த துணைராணுவக் குழு, அவசர அவசரமாக அவரின் உடலினை தகனமும் செய்திருக்கிறது. சுகந்தனின் இறப்பினால் ஆத்திரமடைந்திருக்கும்  அவரது உறவினர்களும் நண்பர்களும், அவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென்றும், அவர்கள் வெளிப்படையாகவே தரவேற்றியிருக்கும் ஒளிப்படங்கள் சாட்சியமாக இருக்கும்பொழுதும், அவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.  பலர் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது பலராலும் பல கோணங்களில்பதிவுசெய்யப்பட்டபோதும், ஒருவர்கூட இந்த துணைராணுவக் குழு பெண்கள் பிரிவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முன்வரவில்லையென்றும், தற்போது சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுவந்த இந்த ஒளிப்படங்களை பொலீஸார்  அகற்றி, சாட்சிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சுகந்தனின் நண்பர்கள், உறவுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களையடுத்து வேறு வழியின்றி அந்த 6 சொர்ணா அக்காக்களையும் கைதுசெய்த பொலீஸார், டக்கிளஸின் தலையீட்டினையடுத்து உடனடியாகவே விடுதலைசெய்திருப்பதாகவும் தெரியவருகிறது.  https://www.colombotelegraph.com/index.php/the-epdps-sorna-accahs-precipitate-a-suicide/
    • இங்கேயும் அங்கேயுமாக வருகின்றது உண்மைதான். அன்றைய காலத்திலும் புலிகள் காலத்திலும் மத பிளவுகள் இருக்கவேயில்லை. எல்லாம் சரி சமமாகவே பார்க்கப்பட்டது. தெருவோர தெய்வ சிலைகள் உட்பட...... என்று புலியெதிர்ப்பு  எனும் போர்வையில் தமிழர்கள் தங்களுக்குள் பிரிந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதல் அவர்களுக்குள் மதம் என்பதையும் தம் பேசு பொருளாக்கி செல்வச்செழிப்போடு வாழ நினைக்கின்றார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.