Jump to content

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதில் தான் வேலை செய்கிறீர்களா?

கான்ஸ்டபிளாக சேர்ந்து கான்ஸ்டபிளாகவே ரிட்டையர் ஆவது எல்லாம் கரீயர் முன்னேற்றம் என்று சொல்லமுடியாதல்லவா! அதனால் மேச்சலுக்குப் போய்விட்டேன்🤓

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடனட்டை (credit  card), செலவட்டை (debit card) இவற்றில், நுகர்வோர்  பாதுகாப்பு என்பது அரசாங்கம் கொண்டுவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தங்கி இருக்கிறது.

இதில்    செலவட்டை (debit card)  எந்த வொரு நுகர்வோர் பாதுகாப்பு சட்டதின் வரையறைக்குள்  இல்லை, UK ஐ பொறுத்தவரை. அநேகமான மேலை நாடுகளிலும் அதுவே நிலைமையாக இருக்கும்.

அனால், கடனட்டை   (credit  card), UK இன்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆம் பிரிவால், சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு (120 pounds என்றே இறுதியாக கண்டதாக நினைவு) மேல் ஒரு செலவீடாக இருக்கும் போது. இதை  போலவே  அநேகமான மேலை நாடுகளில் நிலைமை. 

கடன் அட்டையில், 0% balance  transfer என்பது பொதுவாக நுகர்வுக்காக, ஆனால் சில கடன் அட்டைகள் 0% money transfer உம் இருக்கிறது. 

மேற்கு நாடுகளில் கடனட்டை ஒரு போதுமே கடனில் சிக்க வைப்பதற்கான ஓர் பொறிமுறையாக கருதப்பட முடியாது. 

ஏனெனில்,நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளரை நியாமான முறையில் நடத்துவது, மற்றும் எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் கடன் செலுத்த முடியாமல் போனாலும், கடன் அறவீட்டைம், வாடிக்கையாளரையும் நியாமான முறையில் அணுகுவது போன்ற நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்ட அடிப்படையில் இருப்பதனால். மற்றும், மீள் செலுத்தப்படாத நுகர்வு  கடனின் (அதாவது அறுதியற்ற கடன்)  காலாவதியாகும் (statue barred) வரையறுக்கப்பட்ட காலம் போன்றவை.   

ஆனாலும், இவை எல்லாமே சட்ட  அடிப்படையில் ஆக்கப்பட்டதற்கான காரணம், நுகவோரோ அல்லது வாடிக்கையாளர் பற்றிய  முதற்கரிசனை அல்ல.

இது கடன் (debt) என்பதை தொழிற்துறையாக (industry) அறிமுகப்படுதுவதற்காக.    

கணக்கிலியல் மற்றும் சட்ட அடிப்படையிலும், நுகர்வோருக்கு கடன் (unsecured lending), வங்கிகளுக்கு asset. நீங்கள் கையெழுத்து வைக்கும் பத்திரம் (அதாவது கடன் உடன்பாட்டு பத்திரம்) (contract), சட்ட அடிப்படையில் மற்றும் வரையறைக்குள் (அதாவது statue barring period) வங்கிகளுக்கு lending security ஆகும்.  

அதாவது நுகர்வு கடன்    சட்ட அடி ப்படையில்  மற்றும் கால வரையறைக்குள், recourse கடன் ஆகும். அதற்கு அப்பால், non-recourse கடன் ஆகும். இதனால், கடன் ஒரு போதுமே இல்லாமல் போகாது, records இல் இருந்து மட்டுமே அகற்றப்படும்.  

உண்மையில், ஒரு போதுமே கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள் கடன் பெறுபவரிடம் இருந்து securities ஐ வங்குவதே உண்மையாக நடப்பது.  முன்பே வங்கிகள், வீட்டுக் கடன் (mortgage) பற்றி எழுதும் போது சொல்லியவை எல்லாமே கடனட்டைக்கும் பொருத்தும். 

நான் இதை விளங்கப்படுத்வத்தை விட, கேளே உள்ள யூடுபே வீடியோ நன்றாக விளங்கப்படுத்துகிறது. 

இங்கே கிரெடிட் கார்ட் மூலமாக, அசையா சொத்தை  வாங்கியதாக ஓர் பதிவாளர் குறிப்பிட்டு உ ள்ளார். அதை, இங்கு உதாரணம்  மட்டும் ஆக எடுத்து, அது சட்ட அடிப்படையில் எத்தகைய நுகர்வாக கருதப்படும் என்பதை விளங்கி கொள்ளலாம்.    
 
1 hour ago, goshan_che said:

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை.

பல பிள்ளைகள் ஒரு வகை consumer culture இல் அள்ளுபட்டு போவபர்களாக, instant gratification தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  அந்த வயதுக்கு இது இயற்கைதான் (நாங்கள் வாங்காத நொகியா போனா🤣) என்றாலும் முறைசார் கல்வியில் பெற்றார் காட்டும் அதே அக்கறையை, நிதி முகாமைதுவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

ஆம், இதை அவரகள் ஓர் idea ஐ அண்ணளவாக புரிந்து கொள்ளும் வயதில் இருந்து ஆரம்பித்தேன். இப்போது அவர்களே  economics, banking, wealth generation போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகள், நெழிவு சுவுகளை ஆசானுக்கு வாதம் புரியும் அளவு வந்து விட்டார்கள், பாடசாலை இன்னும் முடிக்கவில்லை ஆயினும். ஆகவே படிப்படியாக சொல்லிக்கொடுத்தால், அநேகமாக எல்லா இளந்தலைமுறையும் இந்த அறிவை பெரும், வளர்க்கும்.

இதை இங்கே யாழ் இலும் பல தடவை சொல்லி இருந்ததேன். எவர் வாசித்தார்களோ தெரியவில்லை. 

உண்மையில், கடன், வீட்டுக் கடன் எல்லாமே தன்மையில் மோசடியானவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

கடனட்டை (credit  card), செலவட்டை (debit card) இவற்றில், நுகர்வோர்  பாதுகாப்பு என்பது அரசாங்கம் கொண்டுவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தங்கி இருக்கிறது.

இதில்    செலவட்டை (debit card)  எந்த வொரு நுகர்வோர் பாதுகாப்பு சட்டதின் வரையறைக்குள்  இல்லை, UK ஐ பொறுத்தவரை. அநேகமான மேலை நாடுகளிலும் அதுவே நிலைமையாக இருக்கும்.

அனால், கடனட்டை   (credit  card), UK இன்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆம் பிரிவால், சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு (120 pounds என்றே இறுதியாக கண்டதாக நினைவு) மேல் ஒரு செலவீடாக இருக்கும் போது. இதை  போலவே  அநேகமான மேலை நாடுகளில் நிலைமை. 

கடன் அட்டையில், 0% balance  transfer என்பது பொதுவாக நுகர்வுக்காக, ஆனால் சில கடன் அட்டைகள் 0% money transfer உம் இருக்கிறது. 

மேற்கு நாடுகளில் கடனட்டை ஒரு போதுமே கடனில் சிக்க வைப்பதற்கான ஓர் பொறிமுறையாக கருதப்பட முடியாது. 

ஏனெனில்,நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளரை நியாமான முறையில் நடத்துவது, மற்றும் எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் கடன் செலுத்த முடியாமல் போனாலும், கடன் அறவீட்டைம், வாடிக்கையாளரையும் நியாமான முறையில் அணுகுவது போன்ற நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்ட அடிப்படையில் இருப்பதனால். மற்றும், மீள் செலுத்தப்படாத நுகர்வு  கடனின் (அதாவது அறுதியற்ற கடன்)  காலாவதியாகும் (statue barred) வரையறுக்கப்பட்ட காலம் போன்றவை.   

ஆனாலும், இவை எல்லாமே சட்ட  அடிப்படையில் ஆக்கப்பட்டதற்கான காரணம், நுகவோரோ அல்லது வாடிக்கையாளர் பற்றிய  முதற்கரிசனை அல்ல.

இது கடன் (debt) என்பதை தொழிற்துறையாக (industry) அறிமுகப்படுதுவதற்காக.    

கணக்கிலியல் மற்றும் சட்ட அடிப்படையிலும், நுகர்வோருக்கு கடன் (unsecured lending), வங்கிகளுக்கு asset. நீங்கள் கையெழுத்து வைக்கும் பத்திரம் (அதாவது கடன் உடன்பாட்டு பத்திரம்) (contract), சட்ட அடிப்படையில் மற்றும் வரையறைக்குள் (அதாவது statue barring period) வங்கிகளுக்கு lending security ஆகும்.  

அதாவது நுகர்வு கடன்    சட்ட அடி ப்படையில்  மற்றும் கால வரையறைக்குள், recourse கடன் ஆகும். அதற்கு அப்பால், non-recourse கடன் ஆகும். இதனால், கடன் ஒரு போதுமே இல்லாமல் போகாது, records இல் இருந்து மட்டுமே அகற்றப்படும்.  

உண்மையில், ஒரு போதுமே கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள் கடன் பெறுபவரிடம் இருந்து securities ஐ வங்குவதே உண்மையாக நடப்பது.  முன்பே வங்கிகள், வீட்டுக் கடன் (mortgage) பற்றி எழுதும் போது சொல்லியவை எல்லாமே கடனட்டைக்கும் பொருத்தும். 

நான் இதை விளங்கப்படுத்வத்தை விட, கேளே உள்ள யூடுபே வீடியோ நன்றாக விளங்கப்படுத்துகிறது. 

இங்கே கிரெடிட் கார்ட் மூலமாக, அசையா சொத்தை  வாங்கியதாக ஓர் பதிவாளர் குறிப்பிட்டு உ ள்ளார். அதை, இங்கு உதாரணம்  மட்டும் ஆக எடுத்து, அது சட்ட அடிப்படையில் எத்தகைய நுகர்வாக கருதப்படும் என்பதை விளங்கி கொள்ளலாம்.    
 
ஆம், இதை அவரகள் ஓர் idea ஐ அண்ணளவாக புரிந்து கொள்ளும் வயதில் இருந்து ஆரம்பித்தேன். இப்போது அவர்களே  economics, banking, wealth generation போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகள், நெழிவு சுவுகளை ஆசானுக்கு வாதம் புரியும் அளவு வந்து விட்டார்கள், பாடசாலை இன்னும் முடிக்கவில்லை ஆயினும். ஆகவே படிப்படியாக சொல்லிக்கொடுத்தால், அநேகமாக எல்லா இளந்தலைமுறையும் இந்த அறிவை பெரும், வளர்க்கும்.

இதை இங்கே யாழ் இலும் பல தடவை சொல்லி இருந்ததேன். எவர் வாசித்தார்களோ தெரியவில்லை. 

உண்மையில், கடன், வீட்டுக் கடன் எல்லாமே தன்மையில் மோசடியானவை. 

உங்கள் பிள்ளைகளுக்கு இந்த அறிவை போதித்தமைக்கு வாழ்துக்கள். நானும் இதே வழியில் போகவே தலைப்படுகிறேன்.

மேற்கில் சட்ட பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு எல்லாம் இருப்பது சரிதான். வட்டி குட்டி போடும் கதைகள் இங்கே இல்லைத்தான். ஆனால் இங்கே கிரெடிட் ஸ்கோர் படுத்துவிடும் என்ற பயம் இருப்பதால் - பலர் கடனுக்கு வாழ்நாள் அடிமையாக இருக்கிறார்கள். என்னை பொறுத்த வரை இது ஒரு வேறு வகையான கடனில் சிக்க வைக்கும் பொறிமுறைதான்.

ஆனால் தெளிவான புரிதல், கட்டுப்பாடு இருந்தால் இந்த விளையாட்டை வெல்லலாம்.

அதீத சொத்து உள்ளவர்கள் மட்டுமே richest 5%) இந்த பொறிமுறையில் ஈடுபடாமல் இருக்கும் option உடையவர்கள்.

ஏனையோர் எல்லாரும் இந்த விளையாட்டை ஆடியே தீர வேண்டும்.

சிலர் வெல்வர். சிலர் தோற்பர்.

நாம் வென்றாலும், தோற்றாலும் வங்கிக்கு லாபம்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இங்கு வங்கிகளில் லீகல் ஹக்கேர்ஸ், நல்ல கொழுத்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.

படுபாவிகளுக்கு வேலையே.... மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

 🤗

படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும். 

இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, shanthy said:

நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁

சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு.

நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது.

உதாரணமாக யாராலுமே உடைக்க முடியாது என்று விளம்பரப்படுத்தப்பட்ட சந்தைக்கு போகவுள்ள, பூட்டினை, சந்தையில் ஒருவர் உடைத்தெறிந்து கரி பூச முன்னர், நிறுவனத்தின் இன்னும் ஒரு பகுதி.... உடைக்க முணைந்து.... முடியாது என்ற நிலையில் சந்தைக்கு அனுப்புதல் போன்றது.

உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

உண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா?

ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது.

deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது  ஓட்டைகள் என்று கருதப்படுவதும்    அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது.

ஓட்டைகள் என்று கருதப்படுவது  எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால்,  run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும்.  அனால்,pca  கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும்.   

இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software  determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது.

software  determinacy,  hardware determinacy இல் தங்கி இருக்கிறது

இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic  இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது.

ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

சிம்பிள் ஆன்சர்; முடிவிலி.

முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும்.

பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

வித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும்.

இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும்.
 
1 minute ago, Nathamuni said:

சிம்பிள் ஆன்சர்; முடிவிலி.

முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும்.

பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்   

Poacher makes the best gamekeeper 🤣. காலத்துக்கு ஏற்ப மாறுகிறது.

Link to comment
Share on other sites

6 hours ago, Nathamuni said:

நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁

சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு.

நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது..

உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.

உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். 

மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை போதியளவு படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே கடந்த 20 வருட வாழ்க்கை .

சந்தோசமாய் தான் வாழ்க்கை போகுது .

சேமிப்பு முக்கியம் இங்குள்ளவர்களால் 4ல் ஒன்றை இலகுவாக சேமிக்க முடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். 

மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி. 

எங்களுக்கு இப்பதான் தொடங்குது தலை சுத்த, நீங்கள் அனுபவித்துவிட்டீர்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் கடனட்டை பற்றி தெரிந்து கொன்டதை விட இன்னுமொரு மனதை பாதிக்கும் விடையத்தையும் அவதானித்தேன்.என்ன தான் அறிவாலும் வயதாலும் வளர்ந்தாலும் இன்னும்  கண்ணைக் கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் என்ட மாதிரி சின்னப்பிழைத்தனமான  விடையம் தான் அது.திருந்துவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கடனட்டையை பாவிப்பதில் ஆரம்பத்தில் தயக்கமும், பின்னர் சரியான திட்டமிடல் இல்லாதமையால் கடன் சுமையும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அனுபவங்கள் தந்த பாடங்களால் சரியான திட்டமிடல்களுடன் கடனட்டையை பாவிக்க தொடங்கி சில வருடங்களாக சரியான விதத்தில் பாவிக்கின்றேன். 

மருது மாதிரி நானும் மாதத்துக்கு 100 டொலர் வரைக்கும் தான் பணத்தாள்களை பயன்படுத்தி செலவு செய்வது. மிச்சமெல்லாம், கடனட்டையில் தான். அதே நேரத்தில் அப்படி வாங்குவனவற்றுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையையும் ஏற்படவிடுவதில்லை.கடனட்டையால் வரும் Rebate மற்றும் சேகரிக்கும் points களைக் கொண்டு புது வருட ஆரம்பத்தில் புதிய பொருட்களை வாங்குவதும் உண்டு.

கனடாவில் 1 விதத்தில் இருந்து 4 வீதம் Rebate கொடுக்கும் கடனட்டைகளையும் பெற முடியும்.இவற்றை சரியாக பயன்படுத்தினால் வருட இறுதியில் நல்ல தொகை வந்து சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 04:04, பெருமாள் said:

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே கடந்த 20 வருட வாழ்க்கை .

சந்தோசமாய் தான் வாழ்க்கை போகுது .

சேமிப்பு முக்கியம் இங்குள்ளவர்களால் 4ல் ஒன்றை இலகுவாக சேமிக்க முடியும் .

நானும் இந்த கடனட்டையால் சிக்கி தவித்தேன்.உருவ உருவ இன்பமாக இருக்கும். கடைசியில் இறுகும் போது அதன் அந்தரம் சொல்லி வேலையில்லை.
கடைசியில் எல்லா கடனட்டைகளையும் பாசல் பண்ணியே சொந்த இடத்துக்கு அனுப்பி விட்டேன்.
நீங்களும் உங்கடை கோதாரியும்....😁

Barclaycard Student - die Kreditkarte für Studenten!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

UK அரசும், ஏன் மற்ற எல்லா அரசுக்களும், cashless society என்பதை கொண்டுவர முனைகின்றன.

கண்காணிவும், கட்டுப்படுத்தவும் மிகவும் இலகு.

சமூகத்தை அரசு நினைக்கும் வழியில் mould பண்ணுவதற்கு மிகவும் இலகு.   

உங்கள் கடனட்டையில் சிப் பழுதினால் நீங்கள் கையகலாமல் போனதை சிறு அளவில் எடுத்து , அதை அரசு எவ்வாறு ஓர் சமூகத்தை கண்காணிவும், கட்டுப்படுத்தவும் பாவிக்கலாம் என்று சிந்தித்தால் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ராசவன்னியன் said:

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

பெரும்பாலான கடனட்டைகளுக்கு நீங்கள் புதிதான ஒரு நாட்டுக்கு பயணம் செய்யும் போது travel notice கொடுக்க வேண்டிய தேவை சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. இது உங்கள் கடனட்டையை யாரும் கள்ள கார்ட் காரர் துஷ்பிரயோகம் செய்யாமலிருக்க வழி செய்யும் ஏற்பாடு. இதனால் முன்னறிவிக்காமல் திடீரென்று வேறொரு நாட்டில் பாவித்தால் (அதுவும் கையொப்பம் இல்லாமல் மெசினில் பாவித்தால்) உங்கள் பாதுகாப்புக்காகவே அந்தப் பரிமாற்றத்தைத் தடுத்து விடுவர். 

தற்போது இருக்கும் சிப் முறையில் travel notice அவசியமில்லை எனக் கேள்விப் படுகிறேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

அதுக்கு தானே இப்போது Apple Pay or Samsung Pay இருக்கிறதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

வன்னியரே....

உங்கள் நண்பர் இருந்தபடியால் உதவி கிடைத்தது. யாருமே இல்லாவிடில்?

அடுத்த முறை இவ்வாறு நடந்தால், இரண்டாவதாக, யாழ் உறவுகளுக்கு சொல்லுங்கள். எப்படியும் உதவுவார்கள்.

அப்ப முதலாவது?

உங்கள் கடன் மட்டை (விசா, மாஸ்டர்) நிறுவனம் (உங்கள் உள்ளூர் வங்கி அல்ல) உலகளாவியது. உங்களுக்கு உதவ கடமைப் பட்டுள்ளது.

அவர்களுக்கு தொடர்பு கொண்டு உஙகள் நிலையினை சொல்லி இருந்தால், அவர்கள் உதவி செய்து இருப்பார்கள். அது அவர்களது சட்ட் ரீதியான கடமை.

உங்கள் மட்டையில் பயன் படுத்தக்கூடிய வசதி இருந்து, நீங்கள் அதனை நம்பி வந்திருந்தால், அவர்கள் கட்டாயமாக உங்களுக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரிசெப்ஷன், அவர்களை தொடர்புகொள்ள உதவி இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியவில்லை. மேனேஜரிடம் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டில், இதனை சொல்லியே இருக்கிறார்கள். நீங்கள் எங்கவாது எமது கார்டுடன் பயணித்து, தமது கார்டினை எடுக்காத நிறுவனத்தில்,  பணம் செலுத்த முடியாமல் தவித்தால், உடனே எம்மை தொடர்பு கொள்ளுங்கள். நாம் உதவி செய்வோம் என்கிறார்கள்.

ஆகவே அடுத்த முறை உதவி கேளுங்கள்.   

1 hour ago, tulpen said:

அதுக்கு தானே இப்போது Apple Pay or Samsung Pay இருக்கிறதே. 

அதுக்கு லிமிட் உள்ளது என்று நினைக்கிறேன்.

முன்னர் £30. இப்போது, கொரோன காரணமாக £45.

ஹோட்டல் ரூமுக்கு கொடுக்க கூடுதலாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kadancha, Justin, tulpen, Nathamuni அனைவருக்கும் நன்றி.

எனது இங்கிலாந்து பயணத்தை கடன் அட்டை கொடுத்த வங்கியிடம் சொல்லி, அட்டையை அங்கு செலவழிக்க அங்கீரம் பெற்றே எடுத்து வந்தேன். லண்டனின் ஓட்டல் அலுவலர் சொன்னது "இந்த சிப், வங்கியிடம் பணத்திற்கு அங்கீகரிக்கும்(Authentication & Approval) தொழிற் நுட்பம் பழையதாக இருக்கலாம், எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

எந்த புதிய கருவிகளும், அதன் செயல்பாடுகளும்  முந்தைய தொழிற்நுட்பத்தை அனுசரிக்கும்விதமாகவே (Backward compatibility) சில குறிப்பிட்ட காலம் வரை இருக்க முடியும் என எண்ணுகிறேன். அதே கடன் அட்டையை இங்கே திரும்பிவந்து உபயோகப்படுத்தினேன், வேலை செய்தது. இப்பொழுது அந்த வங்கி புதிய கடன் அட்டையை வழங்கி புதுப்பித்துள்ளது.

கொசுறு தகவல்:

வரவேற்பறையில் இருந்தவர்கள் ஒரு இலங்கையரும், சில ஆங்கிலேயர்களும். என்னிடம் பேசியவர் அந்த இலங்கையர்..!

43 minutes ago, Nathamuni said:

வன்னியரே....

உங்கள் நண்பர் இருந்தபடியால் உதவி கிடைத்தது. யாருமே இல்லாவிடில்?

அடுத்த முறை இவ்வாறு நடந்தால், இரண்டாவதாக, யாழ் உறவுகளுக்கு சொல்லுங்கள். எப்படியும் உதவுவார்கள்...

நன்றி திரு. நாதமுனி..

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

திட்டப்பணிகளின் ஒப்பந்தம், இன்னொரு ஜெர்மன் நிறுவனத்திற்கு சென்றுவிட்டது. அவர்களின் பரிசோதனை இடம் சுட்கார்ட் அருகே 'நூரன்பர்க்'கில் இருக்கிறது.. ஆனால் ஜெர்மனிக்காரர்கள் "செம உசார் பக்கிரிகள்"..! 😀

"கொரானா பயணத்தடை இருப்பதால், எல்லாவற்றையும் உங்கள் துபாய் 'ஜெபல் அலி' தொழிற்பேட்டையில் வைத்து முடித்து தருகிறோம்.." என சொல்லிவிட்டார்கள்..!

காசும், நேரமும் மிச்சம் ஆகிறதில்லையா..? வலு திறமை..! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

கொரோனா குறைந்து மீண்டும் பயணிக்க முடிந்தால் சொல்லிவிட்டு வாருங்கள்.  மறக்காமல் இரண்டு கடனட்டைகள் கொண்டு வாருங்கள். ஒன்றுடன் வந்தாலும் காரியமில்லை!

பணநோட்டுகள், நாணயங்கள் எல்லாம் பாவனை குறைந்துவிட்டது. நானும் ஒரு பவுண்ட் பொருளைக் கூட கடனட்டை பாவித்துத்தான் இப்போது வாங்குவது (தமிழரின் கடைகளைத் தவிர!)

சரியாக ஒரு வருடம் முன்னர் சுவிற்சலாந்தில் பணநோட்டு இல்லாமல் இக்கட்டில் மாட்டி அருந்தப்பில் மீண்டிருந்தேன்.😃

வார இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம் (ஞாயிறு பிற்பகலில்தான் வைத்தார்கள்) ஒன்றுக்கு போயிருந்தேன். சர்ப்ரைஸாக இருக்கவேண்டும் என்பதற்காக சனிக்கிழமை பாசல் நகரில் இறங்கி கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கி அடுத்தநாள் ஓல்ரன் நகரில் கொண்டாட்டம் முடித்து ஞாயிறு இரவே காரை பாசல் எயார்போட்டில் கொடுத்துவிட்டு லண்டன் வரும் திட்டம்.😎

சர்ப்ரைஸாகப் போனதால் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து திட்டமிட்ட நேரத்திற்கு விடைபெற்று வெளியேறமுடியவில்லை. பாசல் போகும்  autobhan இல் சூரிச்சைத் தாண்டியதும் வாகன நெரிசல்வேறு ஆமைவேகத்தில் நகரச் செய்தது😖. கூகிள் வழிகாட்டியைப் பாவித்து autobhan ஐ விட்டு வெளியே வந்து ஒன்றிரண்டு மலையால் ஏறி இறங்கி 7:30 மணியளவில் பாசல் எயார்போட்டுக்கு கிட்ட வந்துவிட்டேன்.

பெற்றோல் முழுவதுமாக நிரப்பவேண்டுமென்பதால் ஒரு காஸ் ஸ்ரேசனுக்குப் போய் ஃபுல் ராங்க் பெற்றோலை நிரப்பிவிட்டு பணம் செலுத்தப் போனால் அங்கு கார்ட் சிஸ்டம் சரியாக வேலைசெய்யவில்லை! என்னிடம் நோட்டுக்கள் எதுவும் இருக்கவில்லை😫. காஷியர் பெண் வேறு ஆங்கிலம் தெரியாது என்று ஏதோ டொச்சில் சொல்லிக்கொண்டிருந்தாள். 8:40க்கு பிளைற் வேறு. பணம்செலுத்த வேறு வழியில்லை என்று அவளுடன் சண்டைபோட்டுப் பின்னுக்கு வரிசையில் நின்றவர்களுக்கும் எரிச்சலைக்கொடுத்து அரைமணித்தியாலம் மினக்கெட்ட பின்னர்  சிஸ்டம் வேலை செய்தபோது கடனட்டை மூலம் பணத்தைச் செலுத்தி காரை ஸ்ரார்ட் பண்ணினேன்.

ஏற்கனவே பிந்திவிட்டதால் கூகிளில் கார் ட்ரொப் பண்ணும் இடத்தை தேடி வழிகாட்டியைப் பின்தொடர்ந்தேன். திடீரென்று போர்டரைக் கண்டபோதுதான் பிரெஞ்ச் பக்கம் போய்க்கொண்டிருக்கின்றேன் என்று உறைத்தது🤬. நிப்பாட்ட இடம்வேறு இல்லை. அப்படியே பிரெஞ்ச் பக்க எயார்போட்டுக்குப் போய் திருப்பவும் சுவிஸ்பக்கம் கார் ட்ரொப் பண்ணும் இடத்தை தேடி ஒருமாதிரி காரைக்கொடுத்து வேர்க்க விறுவிறுக்க எயார்போட்டுக்கு உள்ளே போனால் ஈசிஜெற் ஒன்றரை மணித்தியாலம் பிந்தித்தான் புறப்படும் என்றார்கள்! பிளேன் பிந்தியதற்காக சந்தோஷப்பட்டது அந்த ஒருதடவைதான்!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

தாய்லாந்தில், பெரியில் ( Ferry: இதுக்கு தமிழ் என்ன?) ஒரு தீவுக்கு போய் இறங்கியபோது இரவு 8 மணி.... கடற்கரையில் இருந்த பஸ் ஆட்களை ஏத்திக் கொண்டு கிளம்பி விட்டது. இடம் இல்லை... நாலு பேரும், நில்லுங்கள், இவர்களை இறக்கி விட்டு மீண்டும் வருவோம் என்றார்கள்.

ஆளரவம் இல்லை. பக்கத்தில் ஒரு இராணுவ சென்ட்ரி. ஒருவர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை.

நேரம் ஒன்பது.... அவர்கள் நாலுபேருக்காக வர போவதில்லை. சிக்கி விட்டொமோ, இரவு இங்கே தானோ என்று கவலை....

ஒரு வான் ஒன்று வந்தது.... ராணுவ சென்றிக்கு இரவு சாப்பாடு, கொண்டு வந்திருக்க வேண்டும்.

அவரிடம் கேட்டொம்.... சிட்டி.... 100 பாட்... ஒன்.... 400 பாட் என்றார். பணம் இல்லை. கார்டு மட்டுமே....

ஒவொருவரிடமும் சேர்த்தால் ஒரு 30 பாட் மட்டுமே தேறும்.

அவரோ, பணத்தினை வை.... இல்லாவிடில் போகிறேன் என்கிறார். கேக்கும் பணமும் அதிகம். அட... வேறு எதாவது வரும்... ஆளை அனுப்பு என்கிறார் ஒரு நண்பன்.

இது... தெரியாத இடம்... கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பிடித்து... சிட்டிக்கு போகலாம்... இங்கே இருக்க முடியாது. மேலும் நடந்து போக, எமக்கு வழியே தெரியாது.

ஒரு ஐடியா வந்தது.... கையில் இருந்த மோதிரத்தினை கழட்டி, இதனை வைத்துக்கொள். சிட்டியில் காசு தந்தவுடன் தா என்றோம்.

சரி என்று, மோதிரத்தினை வாங்கி, டார்ச் விளக்கில் செக் பண்ணி ஏத்திக் கொண்டார். போகும் போது தான் தெரிந்தது... 15 மைல் பயணம்.... காலையில் தான் இனி பஸ் வரும்..

போய், ATM தேடிப்பிடித்து பணம் எடுத்துக் கொடுத்தோம்.

பாடம்... எந்த நாட்டுக்கு போனாலும், அந்த நாட்டு பணம் ஒரு 200, 300 எப்போதும் கையில் இருக்க வேண்டும். வரும் போது, விமான நிலையத்தில் செலவழிக்கலாம்.

அடுத்தது, அடித்துப் பிடித்துக் கொண்டு, வெளியே வந்து, வேறு போக்குவரத்து வசதிகள் இல்லை எனில்,  முதல் பஸ்சில், ரயில்ல இடம் பிடித்து விடவேண்டும்.... அடுத்த பஸ்சில் அடுத்தவர்கள், ஆறுதலாக வரட்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இந்த சிப், வங்கியிடம் பணத்திற்கு அங்கீகரிக்கும்(Authentication & Approval) தொழிற் நுட்பம் பழையதாக இருக்கலாம், எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

ஆம், இருக்கா கூடிய வாய்ப்பு இருக்கிறது.

EMV 3-d authentication உம் PCIDSS version 2 உம் வந்துள்ளது.

security இல் backward compatibility  என்பது இல்லை, கால நயப்பு (grace period) என்பதே உள்ளது.

ஆனாலும் எந்த வழியில், அதாவது, Hotel ஆ அல்லது  உங்களது card ஆ ஆகப் பிந்தியதை  கொண்டிருந்தது என்று யாருக்கு தெரியும்.

இன்னுமொன்று, EU பல regulation ஐ அவ்வப்போது வெளிவிடுவது. அந்த regulation இந்த நடைமுறை படுத்தல் கூட காரணமாக இருக்கலாம். 

10 minutes ago, Nathamuni said:

Ferry: இதுக்கு தமிழ் என்ன?

பாதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.