Jump to content

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

-அனுதினன் சுதந்திரநாதன்   

இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள்  ஒழிந்திக்கின்றன.  

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இத்தகைய இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு 77.7 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர், கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில், கடன் நிலுவையின் அளவு மாறுபடக்கூடியதாக இருக்கும்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடு, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டைச் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 

எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கக் கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில் இதுவே முதன்மையானது. இலங்கையில் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவையைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை எந்தவித மேலதிக கட்டணமும் இல்லாமல் அல்லது, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மேலதிக கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சியையோ, குளிர்சாதனப்பெட்டியையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்த சேமிப்பையோ, மாதாந்த வருமானத்தின் ஒருபகுதியையோ முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். 

ஆனால், இந்தக் கடன் தவணை கொடுப்பனவு முறை மூலமாக, வேறெந்த மேலதிக கட்டணமுமில்லாமல் உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்தில் சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சாதாரணமாக, நாம் கடனட்டைகளைப் பயன்படுத்தி, ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை, கடனட்டையில் பயன்படுத்திய பணத்தை மீளச்செலுத்த தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  

எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு, மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதம்தோறும் தவணைத்திகதி பிந்தாமல் பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.  

பண முற்பணவசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசர தேவைகளுக்கு ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடன் எல்லையின் அளவின் 50% அவசரதேவைகளின் போது, பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சேவை வரி, வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்றபோதும், அவை கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது, அறவிடப்படும் வரி, வட்டிவீதங்களைப் பார்க்கிலும் சிறிது அதிகமாகும். 

எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன்சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைதிறனாக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் 

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்களும் புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமானது தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது. 

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். இதன்மூலமாக, குறித்த பொருளை குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் உங்கள் பணத்தைச் சேமிக்கக்கூடிய வசதிகள் உண்டு.  

இலவச பயணக் காப்புறுதிகள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்வது உட்பட, தற்பாதுகாப்புக்காகப் பயணக் காப்புறுதிகளை பெற்றுக்கொள்வதும்  அவசியமாகிறது. இதற்காகப் பயணமுகவர்களை அணுகும்போது, பெரும்தொகையை செலவீனமாகச் செலுத்த வேண்டி வரும். ஆனால், நீங்கள் கடனட்டை ஒன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில், உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம் உங்கள், இலவச பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்து கொள்ளுங்கள். தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக, இலவச வெளிநாட்டு காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை, குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிரவும், கடனட்டைகளின் மேலதிக பயன்பாடு காரணமாக, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபோது, அதை மற்றுமொரு கடனட்டைக்குத் தவணைக் கட்டண முறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது, நீங்கள் கடனட்டைக்கு செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க, மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும். 

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால் கடனட்டைகளைச் சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. எதுவுமே, ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால், நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   
 
http://www.tamilmirror.lk/வணிகம்/கடனட்டையில்-ஒழிந்திருக்கும்-நன்மைகள்/47-256651

Link to post
Share on other sites
 • Replies 57
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லாத்தையும் ஒரு வழியில் இலகுவாக்கி, மறுவழியில் இறுக்குவார்கள். இமெயில், வாய்ஸ் ஓவர் ஐபி, வீடியோ, இவை எதுவுமே என் தகப்பனார் காலத்தில் இல்லை. ஆனால் நானும் எனது தந்தையும் ஒரே வேலை பழுவையே சுமப்பதா

வீசா, மாஸ்டர்தான்.  எல்லா அரச, தனியார் வங்கிகளிலும் இருக்கிறது. ஆனால் இன்னும் கிரெடிட் ரேட்டிங் வெளிநாடுகள் போல் ஒழுங்கமைவாக இல்லை. ஆகவே குறித்த அளவு வருமானம் உள்ளவர்களைதான் நம்பி கொடுக்கிறார்கள்

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே க

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எந்த கடன் அட்டை அதிகம் புழக்கத்தில் உண்டு 
என்று யாராவது கூறுவீர்களா?

இலங்கை மத்திய வங்கி ஏதாவது சொந்த கடன் அட்டை அறிமுகம் செய்து இருக்கிறதா?
அல்லது விசா மாஸ்டர் கார்ட்  அமெரிக்கன் எஸ்பிரெஸ் போன்ற அமெரிக்க கடன் அட்டைகளின் 
பிரானித்துமாவாக இருக்கிறதா?

சீனாவின் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக இருக்கிறது 
இன்று அமெரிக்க பெடரேல் பாங்க் டிஜிட்டல் டாலரை அறிமுகம் செய்ய 
போவதாக அறிவித்து இருக்கிறது.
நாம் வெகு விரைவில் டிஜிட்டல் பணத்துக்கு மாற  போகிறோம்
இந்தியா சொந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கி தெற்காசியாவில் அறிமுகம் செய்தால் 
இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக இந்த தலைப்பில் பார்க்கிறேன்.

சொல்வது உண்மையில் சரியானது...

உறவினர், நண்பர்களிடம் பல்லு இளிப்பதிலும் பார்க்க, இந்த கடன் மட்டையிடம் பல்லு இளிக்கலாம்.

நள்ளிரவு 12 மணிக்கு, ஒரு ATM போய் கூட, பணத்துடன் வந்துவிடலாம். ஒரு நண்பனை, உறவினரை எழுப்பவா முடியும்?

சரியாக கையாளுபவர்களுக்கு....மிகச்சிறந்த நண்பன். 👊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

-அனுதினன் சுதந்திரநாதன்   

இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள்  ஒழிந்திக்கின்றன.  

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இத்தகைய இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு 77.7 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர், கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில், கடன் நிலுவையின் அளவு மாறுபடக்கூடியதாக இருக்கும்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடு, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டைச் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 

எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கக் கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில் இதுவே முதன்மையானது. இலங்கையில் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவையைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை எந்தவித மேலதிக கட்டணமும் இல்லாமல் அல்லது, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மேலதிக கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சியையோ, குளிர்சாதனப்பெட்டியையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்த சேமிப்பையோ, மாதாந்த வருமானத்தின் ஒருபகுதியையோ முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். 

ஆனால், இந்தக் கடன் தவணை கொடுப்பனவு முறை மூலமாக, வேறெந்த மேலதிக கட்டணமுமில்லாமல் உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்தில் சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சாதாரணமாக, நாம் கடனட்டைகளைப் பயன்படுத்தி, ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை, கடனட்டையில் பயன்படுத்திய பணத்தை மீளச்செலுத்த தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  

எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு, மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதம்தோறும் தவணைத்திகதி பிந்தாமல் பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.  

பண முற்பணவசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசர தேவைகளுக்கு ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடன் எல்லையின் அளவின் 50% அவசரதேவைகளின் போது, பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சேவை வரி, வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்றபோதும், அவை கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது, அறவிடப்படும் வரி, வட்டிவீதங்களைப் பார்க்கிலும் சிறிது அதிகமாகும். 

எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன்சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைதிறனாக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் 

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்களும் புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமானது தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது. 

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். இதன்மூலமாக, குறித்த பொருளை குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் உங்கள் பணத்தைச் சேமிக்கக்கூடிய வசதிகள் உண்டு.  

இலவச பயணக் காப்புறுதிகள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்வது உட்பட, தற்பாதுகாப்புக்காகப் பயணக் காப்புறுதிகளை பெற்றுக்கொள்வதும்  அவசியமாகிறது. இதற்காகப் பயணமுகவர்களை அணுகும்போது, பெரும்தொகையை செலவீனமாகச் செலுத்த வேண்டி வரும். ஆனால், நீங்கள் கடனட்டை ஒன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில், உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம் உங்கள், இலவச பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்து கொள்ளுங்கள். தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக, இலவச வெளிநாட்டு காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை, குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிரவும், கடனட்டைகளின் மேலதிக பயன்பாடு காரணமாக, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபோது, அதை மற்றுமொரு கடனட்டைக்குத் தவணைக் கட்டண முறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது, நீங்கள் கடனட்டைக்கு செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க, மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும். 

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால் கடனட்டைகளைச் சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. எதுவுமே, ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால், நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   
 
http://www.tamilmirror.lk/வணிகம்/கடனட்டையில்-ஒழிந்திருக்கும்-நன்மைகள்/47-256651

இதுவும் ஒரு வகை நுண் கடந்தான். 

கூடவே கிரெடிட் ஸ்கோர் என்பதன் மூலம் - கடனே இல்லாதவன்/வாங்காதவன் நம்பிக்கை வைக்க இலாயக்கு அற்றவன் என்ற கட்டமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

கிட்டதட்ட, புலி வாலை பிடித்த கதைதான். அதுவும் இலகுவாய் வரும் பணத்தை எடுத்து  வெத்து சீன் போடும் ஆக்கள் என்றால் - அதோ கதிதான். வாழ்கை முழுவதும் மினிமம் பேமண்டில் ஓடி விடும்.

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சாத்தான்களில் ஒன்றாக கடன்/கடன் அட்டையை ஆக்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் அதை வெட்டி ஆடுவதுதான் கேம். நாம் கடனை பாவிக்கிறோமா, கடன் நம்மை பாவிக்கிறதா என்பதுதான் கேம்.

ஒரு குறிப்பிட்ட அளவு வரை கிரெடிட் ஸ்கோரை ஏற்றி விட்டு, வீட்டு கடன் போன்ற பெரிய கடன்களையும் வாங்கி விட்டு, ஒண்டு அல்லது இரெண்டு நல்ல வட்டி வீதம் உள்ள அட்டைகளை மட்டும் வைத்து கொண்டு ஏனையவற்றை தலையை சுற்றி ஏறிந்தால் ஒரெளவுக்கு கேமை வெல்லலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இலங்கையில் எந்த கடன் அட்டை அதிகம் புழக்கத்தில் உண்டு 
என்று யாராவது கூறுவீர்களா?

இலங்கை மத்திய வங்கி ஏதாவது சொந்த கடன் அட்டை அறிமுகம் செய்து இருக்கிறதா?
அல்லது விசா மாஸ்டர் கார்ட்  அமெரிக்கன் எஸ்பிரெஸ் போன்ற அமெரிக்க கடன் அட்டைகளின் 
பிரானித்துமாவாக இருக்கிறதா?

சீனாவின் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக இருக்கிறது 
இன்று அமெரிக்க பெடரேல் பாங்க் டிஜிட்டல் டாலரை அறிமுகம் செய்ய 
போவதாக அறிவித்து இருக்கிறது.
நாம் வெகு விரைவில் டிஜிட்டல் பணத்துக்கு மாற  போகிறோம்
இந்தியா சொந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கி தெற்காசியாவில் அறிமுகம் செய்தால் 
இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.  

வீசா, மாஸ்டர்தான்.  எல்லா அரச, தனியார் வங்கிகளிலும் இருக்கிறது.

ஆனால் இன்னும் கிரெடிட் ரேட்டிங் வெளிநாடுகள் போல் ஒழுங்கமைவாக இல்லை. ஆகவே குறித்த அளவு வருமானம் உள்ளவர்களைதான் நம்பி கொடுக்கிறார்கள். 

டிஜிட்டல் கரன்சி இல்லாதபோதும், இங்கே யூகேயில் இப்போதே cashless economy பெரிய அளவில் உருவாகி விட்டது. 

தமிழர்கள்/தெற்காசியர்கள் மட்டையை ஆட்டையை போடுவதில் வல்லவர்கள் என்பதால் அவர்கள் கடையில் மட்டும்தான் காசை பாவிப்பேன்🤣

கொரொனா வைரஸ் வேறு காசில் அதிகம் வாழும் என்பதால் இது இன்னும் அதிகமாயுள்ளது.

நான் இந்த வருடம் தொடங்கியதில் இருந்து 5 தடவை அளவில்தான் காசை பயன்படுத்தி இருப்பேன், மிகுதி எல்லாமே cashless பரிவர்த்தனைகள்தான்.

யு எஸ் சில் எப்படி ?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நான் கடந்த சில வருடமாக கார் கழுவுவதுக்கு மட்டுமே காசு பாவிப்பது உண்டு 
மற்றும்படி என்னிடம் காசு இருப்பதே இல்லை 
ஒரு முறை இரவு கார் ஒட்டிக்கொண்டு  இருக்கும்போது 
பெட்ரோல் முடிந்துகொண்டு இருந்தது சென்று க்ரெடிகார்டை போட்ட போது 
கார் வேலை செய்யவில்லை அடுத்த பெட்ரோல் ஸ்டேஷனுக்கு எனது காரில் 
இருந்த பெட்ரோலின் அளவு காணாது இருந்தது .. வேறு தெரிவு இருக்கவில்லை 
ஆதலால் ஓட தொடங்கினேன் ... நல்ல வேளையாக பொய் சேர்ந்தேன்.
அன்று இரவு நினைத்தேன் அவசரத்துக்கு ஒரு $20 என்றாலும் வைத்திருக்க வேண்டும் என்று 
இன்றுவரை நாய் சாக்கு எடுத்த கதைதான் இன்னமும் எடுத்து வைக்கவில்லை .

இங்கு நிறைய கொன்ஸ்ரபிரசி கதைகள் உண்டு ஆதலால் 
பலருக்கு இன்னமும் பேங்க் அக்கவுண்டே இல்லை ... வீணாக காசு கொடுத்து 
தமது சம்பள செக்கை காசு ஆக்குபவர்கள் கூட உண்டு. வங்கி கணக்கு இருப்பின் 
அது இலவசம். பெருத்த பணக்கார்களே லூசு கதைகளை நம்பி காசுகளை 
எடுத்து வந்து வீட்டில் வைப்பதும் உண்டு. 

அமெரிக்காவை ஒரு டெஸ்ட் லாப் போலவே பயன்படுத்தி வருகிறார்கள் 
முதலில் உலகில் அறிமுகம் செய்ய முன்னர் இங்கே பரிசோத்தித்து பலாபலனை 
அறிவதுக்கு. ஆகவே மக்களை மூடர்களாக வைத்த்திருக்க வேண்டிய ஒரு கட்டயாம் அரசுக்கு உண்டு 
ட்ரம்பின் அரசு கூட ஒரு பரிசோதனைதான் ...... இப்போ அவர்கள் எந்த எந்த ஏரியாவில் எவ்வளவு மூடர்கள்   
இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்து  அவர்களுக்கு ஏற்ற கதைகளை அவித்து கொட்டிக்கொண்டு 
இருப்பார்கள்.

இங்கு கடன் அட்டையால் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் வருமானம்  
ஆனால் எல்லாமே கொன்சுமருக்கு சாதகமாவே இருக்கிறது 
நான் $10-15 ஆயிரம் வரையில் கடன் அட்டையில் கடன் வைத்து இருக்கிறேன்  
15-24 மதம் வரை 0% இன்டெரெஸ்ட்டில் கடன் எடுக்கலாம் ஆதலால்தான் 
அதை வேறு வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொண்டு இருப்பேன் வட்டி இல்லாத கடன் 
அதை வேறு வழியில் முதலீடு செய்துவிடுவேன். இதில் ஒரு நஷ்ட்டம் எனது கிரெடிட் ஸ்கோர் 
குறைந்து இருக்கும் கூடிய கடன் இருப்பதால் .... வீடு வாங்குவது என்றால் ஒரு நாலு மாதம் முன்பு 
எல்லாவற்றையும் கட்டி விடுவேன் க்ரெடிட் ஸ்கோரை ஏற்றுவதுக்கு 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு 

உங்களுக்கு தேவையான நேரம் வங்கி கடன் தராது 
தேவை இல்லாத நேரத்திலதான் தருவார்கள் என்று 

அந்த தேவை இல்லாத நேரத்தை எமக்கு சாதகமாக 
நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

£20 எடுத்து வைத்தால் மட்டும் போதாது அதை செலவழிக்காமலும் இருக்க வேணும்.  இல்லையெண்டால் தேவை படும் போது இராது. 

நான் இதற்கு ஒரு ஐடியா வைத்துள்ளேன். பொங்கலுக்கு அம்மாவின் கையால் £20 வாங்கி பேர்சில் உள் அடுக்கில் வைத்து விடுவேன். அதை அடுத்த பொங்கலுக்கு இன்னொரு £20 வைக்கும் வரை எடுப்பதில்லை. அவசர தேவைக்கு எடுத்தால் ஒழிய. 

யுனிக்காலத்தில் பத்து பவுண்டுக்கு அடித்துவிட்டுதான் ஓடுவது, அதுவும் பழைய கார், fuel gauge ஒழுங்கா வேலை செய்யாது. இடையில் ரெண்டு மூன்று தரம் நடு வழியில் நிண்டதும் உண்டு🤣

பிகருகளை ஏற்றும் போது மட்டும் கைகாவலாக £20 வரை அடித்து வைத்துகொள்வதுண்டு. கெத்து முக்கியம் அல்லவா🤣

Link to post
Share on other sites

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.
 
சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!
 கிரெடிட் கார்டு எதற்கு?

கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.

தற்போது இருக்கும் சூழ்நிலையில்… எப்போது பணம் தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும் என்பதை யெல்லாம் யாராலும் கணிக்க முடியாமல்தான் இருக்கிறது. ஒரு கடைக்குச் செல்கிறோம். ஆஃபர் மூலம் விற்பனை நடக்கிறது. இன்றே கடைசி நாள்… கையில் பணமி ல்லை. அந்தச் சமயத்தில் கிரெடிட் கார்டு கை கொடுக்கும். நண்பர், உறவினர் திருமணம்; பிறந்தநாள் போன்ற விழாக்கள்; அவசரமாக ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும்; எதிர்பாராத ஆஸ் பத்திரி செலவுகள்… இதுபோன்ற சூழ்நிலைகளில் ‘யாமிருக்க பயமேன்’ என கிரெடிட் கார்டு கை கொடுக்கும்.

ஒருவேளை இந்தச் செலவுகளுக்கு எல்லாம்  பணம் கையில் இருந்தால்கூட, கிரெடிட் கார்டு மூலம் வாங் குவது… சில வகைகளில் நன்மை தருவதாகவே இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் நாம் வாங்கும் பொரு ட்களுக்கு 45 நாள் முதல் 50 நாள் வரைக்கும் எந்தவிதமான வட்டியும் செலுத்தத் தேவையில்லை. உதார ணத்துக்கு… ஒவ்வொரு மாதமும் 30-ம் தேதி ‘பில்லிங் தேதி’ என்றால், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு மே மாதம் 15 தேதி பணம் செலுத்தினால் போதுமானது. அதற்கான பணத்தை முன்கூட்டியே உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத் திருந்து, சரியான தேதியில் செலுத்திவிடலாம். இந்த இடைப்பட்ட நாளில் நமது வங்கிக் கணக்கில் இருந்த பணத்துக்கு வட்டி (ஆண்டுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை) கிடைக்கும்.

இது மட்டுமல்ல… நமது இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், வங்கிக் கடன்கள் உள்ளிட்டவற்றுடன் கிரெடிட் கார்டை இணை த்து விட்டால், எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நமது பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக் கும். சமயங்களில், கிரெடிட் கார்டுகளை பிரபலப்படுத்துவ தற்காக, கிரெடிட் கார்டு பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளில் குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை சம்பந் தப்பட்ட வங்கிகள் நமக்கே திருப்பிக் கொடுப்பார்கள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்கும்போது 100 ரூபாய்க்கு ஒரு பாயின்ட் (ஒரு பாயின்ட் = ஒரு ரூபாய்) என்று நமக்கு பாயின்ட்டுகளை வழங்குவார்கள். இது வங்கிகளுக் கிடையே மாறுபடும். இவற்றை மீண்டும் பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்கலாம். அனைத்துச் செலவுகளை யும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும்போது, ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பாயின்ட் கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். இது எல்லாமே… கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன் படுத்தும் வரைதான். சிறிது பிசகினாலும் புதைகுழியில் சிக்கியது போல ஆகி விடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

கிரெடிட் கார்டு எப்போது எமனாகும்..?

கிரெடிட் கார்டு வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம், வங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்து கிறோம்… இப்படியே போய்க்கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட தேதியைக் கடந்துவிட்டால், நம் தலை கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பிடியில். முதலில் வங்கியில் இருந்து போன் வரும். குறைந்தபட்ச தொகையைக் கட்டச் சொல்வார்கள். அதாவது, பில் தொகையில் 5 சதவிகித்தை கட்டச் சொல்வார்கள். ‘50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்த லாம்’ என்று வங்கி தரப்பில் சொல்வார்கள். நீங்களும் ‘இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500 கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?

மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும். மீண்டும், மீண்டும் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அது சிந்துபாத் கதைதான். கடன் எப்போது முடியும் என்று வங்கிக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. வட்டி மட்டுமல்லாமல்… லேட் பேமன்ட் அபராதமும் சேர்ந்து கொள்ளும்.

உங்கள் கார்டு லிமிட் 50,000 ரூபாய் என்றால், அதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று நினைக்கலாம். ஆனால், 50,000 ரூபாய்க்கு மேலேயும் செலவு செய்யலாம். இதற்கு ஒவர் லிமிட் சார்ஜ் என்று மாதத்துக்கு 3 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் எல்லாம், கிரெடிட் கார்டு லிமிட் அறியாமல் பயன்படுத்தும் செலவாளிகளுக்கு செய்யும் எச்சரிக்கையே. தேவையைக் கருதி திட்டமிட்டு கிரெடிட் கார்டு உபயோகிக்கும் புத்திசாலிகளுக்கு அல்ல.

நீங்கள் எப்படி?!

கிரெடிட் கார்டு  சில அறிவுறுத்தல்கள்!

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், நிதி ஆலோசகர் பத்மநாபன்.

 பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவிதமான வருடாந்திர கட்டணங்களும் செலுத் தத் தேவை இருக்காது. சில கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டி இருக் கும். இன்னும் சில கார்டுகளில் வருடாந்திர கட்டணம் இருக்காது, ஆனால், வருட த்துக்கு குறைந் தபட்சம் இவ்வளவு ரூபாய் கார்டு மூலம் வாங்கி இருக்க வேண்டும் என்ற விதி இருக்கும். ஒப்பீட்டளவில் வங்கி, நிறுவனங்களை ஆராய்ந்து, அதன்பின் அவர்களிடம் கார்டு பெறவும்.

 கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்த்துவிடுங்கள். கார்டு புரொடக்ஷன் கட்டணம் என்று கட்ட ணம் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. கார்டு வாங்கும்போது எவ்விதமான கட்டணங்களும் இல்லை என்று உறுதி செய்த பிறகே வாங்குங்கள்.

 எக்காரணம் கொண்டும் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். பணத்தை எடுத்த நாளில் இருந்து வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு 10,000 ரூபாய் எடுத்தால் 300 ரூபாய் மாதாந்திர வட்டியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

 செலவு செய்த தொகையை பணமாகச் செலுத்தினால்… ஒரு நாளைக்கு முன்பு செலுத்திவிடுங்கள், செக் என்றால் நான்கு வேலை நாட்களுக்கு முன்பு செலுத்திவிடுங்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலமாக டிரான் ஸ்ஃபர் செய்வதாக இருந்தால், 2 நாட்களுக்கு முன்பு செய்துவிடுங்கள். இல்லை யெனில், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

 சரியான தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தத் தவறினால், மாதந்தோறும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்துவதைவிட, வாங்கிய கடனை மாதாந்திர இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும். இதற்கு 18 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்.

 கார்டைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். இரண்டு முறை பில் செய்ய வாய்ப்பிருக்கிறது. கார்டை தேய்த்த பிறகு கொடுக்கப்படும் ஸ்லிப்பை கவனமாக செக் செய்து கையெழுத்துப் போடவும். 100 ரூபாய்க்கு 1,000 ரூபாய் என்று மாற்ற நிறைய நேரம் ஆகாது. முடிந்த வரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும். ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செய்தீர்கள், எங்கு செய்தீர்கள் என்ற எஸ்.எம்.எஸ். வரும். ஒரு வேளை வராவிட்டால்… கஸ்டமர் கேர் செக்ஷனுக்கு போன் செய்து விசாரியுங்கள். மொபைல் நம்பரை மாற்றினால், தவறாமல் நிறுவனத்துக்குத் தகவல் சொல்லுங்கள்.

https://www.vidhai2virutcham.com/2012/03/31/கிரெடிட்-கார்டு-நன்மையு/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் 2000 இல் இருந்து பல ஆண்டுகள் 0% balance transfer மூலமாக வட்டி கட்டாமலே கடன்களைக் கட்டிமுடித்தேன். பல கடனட்டைகள் மாறி மாறிப் பாவித்ததால் எங்கே போகின்றது, வருகின்றது என்பதைப் பார்க்கவே விலாவாரியான macros எல்லாம் spreadsheet இல் தயாரித்து   budget ஐ கவனித்துக்கொண்டேன்😎

இப்போது ஒன்றிரண்டு கடனட்டைக்கு மேல் பாவிப்பதில்லை. ஒன்று ஒன்லைன் ஷொப்பிங் & ஹொலிடே. மற்றது வாராந்த ஷொப்பிங். தமிழ்க் கடைகளில் காசுதான் பாவிக்கின்றது. இந்த தமிழ்க்கடைகளுக்குப் போகாவிட்டால் காசில்லாமல் வெறும் கட்டனட்டையுடனும், Apple Pay, PayPal உடனும் இருக்கலாம்😀

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.  வரவட்டையை சுத்தினார்கள் என்றால் போற எங்கள் பணம் வந்து சேர ஆறுமாதம் பிடிக்கும்! ஆனால் கடனட்டையை சுத்தினால் அது கம்பனிக்காசு. அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடலாம்☺️

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இணைத்ததினால் தான் தமிழ்மிரர் கட்டுரைகள் படிக்கிறேன்.இப்படி பல நல்ல கட்டுரைகள் அங்கே வருகின்றது என்பது தெரிகிறது.

13 hours ago, Nathamuni said:

உறவினர், நண்பர்களிடம் பல்லு இளிப்பதிலும் பார்க்க, இந்த கடன் மட்டையிடம் பல்லு இளிக்கலாம்.

கவுரவமாக இருக்க உதவுகிற கடன் அட்டையின் பெரிய உதவி அது.

1 hour ago, கிருபன் said:

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.

வரவட்டை என்றால் என்ன?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வரவட்டை என்றால் என்ன?

Debit card 

மேலே இணைத்த கட்டுரை மூலம்தான் அறிந்துகொண்டேன் 😀

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்மிரர் கட்டுரைகள் படிக்கிறேன்.

அனுதினன் சுதந்திரநாதனின் கட்டுரைகள் மிகவும் தரமானவை, பயனுள்ளவை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நானும் 2000 இல் இருந்து பல ஆண்டுகள் 0% balance transfer மூலமாக வட்டி கட்டாமலே கடன்களைக் கட்டிமுடித்தேன். பல கடனட்டைகள் மாறி மாறிப் பாவித்ததால் எங்கே போகின்றது, வருகின்றது என்பதைப் பார்க்கவே விலாவாரியான macros எல்லாம் spreadsheet இல் தயாரித்து   budget ஐ கவனித்துக்கொண்டேன்😎

இப்போது ஒன்றிரண்டு கடனட்டைக்கு மேல் பாவிப்பதில்லை. ஒன்று ஒன்லைன் ஷொப்பிங் & ஹொலிடே. மற்றது வாராந்த ஷொப்பிங். தமிழ்க் கடைகளில் காசுதான் பாவிக்கின்றது. இந்த தமிழ்க்கடைகளுக்குப் போகாவிட்டால் காசில்லாமல் வெறும் கட்டனட்டையுடனும், Apple Pay, PayPal உடனும் இருக்கலாம்😀

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.  வரவட்டையை சுத்தினார்கள் என்றால் போற எங்கள் பணம் வந்து சேர ஆறுமாதம் பிடிக்கும்! ஆனால் கடனட்டையை சுத்தினால் அது கம்பனிக்காசு. அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடலாம்☺️

நீங்கள் கிரிகெட்டுக்கே எக்செல் ஷீட் போடுகிற ஆளாச்சே🤣

ஆனால் உங்களை போல கட்டுப்பாடானவர்களுக்கு கடனட்டை வரப்பிர்சாதம்தான். தவிர நீங்கள் சொல்வது போல கடனட்டையில் அதிக நுகர்வோர் பாதுகாப்பும் உண்டு.

ஆனால் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு அது மிகபெரிய ஆப்பு.

எனக்கு சிலரை தெரியும். கடன் அட்டையில் 0% என்று போய் அதை மீளளிக்க தெரியாமல் அல்லது முடியாமல் பிறகு consolidation loan க்கு போய் அதை எடுத்து கடனட்டையை கட்டி விட்டு, அடுத்த மாதமே மீண்டும் கடனட்டையை லிமிட் வரை கொண்டு வந்து விடுபவகளை.

இப்படியானவர்களின் சம்பளம் அவர்களின் வங்கி கணக்குக்கு வந்து ஒரு ஹை, பை சொல்லி விட்டு அடுத்த நாளே ஏதோவொரு கார்ட் அல்லது லோன் கட்ட போய் விடும்.

கொஞ்ச காலம் இப்படி ஓட்டிவிட்டு பின் வேறு வழியில்லாமல் payday loan கம்பனிகளிடம் அல்லது தமிழ் கந்து வட்டி ஆட்களிடம் சரணடைந்து முடிவில் வங்குரோத்துத்தான்.

கடனட்டை

சிலருக்கு அழகான சட்டை

சிலருக்கு ரத்தம் உறுஞ்சும் அட்டை

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

வர்த்தகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு 

உங்களுக்கு தேவையான நேரம் வங்கி கடன் தராது 
தேவை இல்லாத நேரத்திலதான் தருவார்கள் என்று 

அந்த தேவை இல்லாத நேரத்தை எமக்கு சாதகமாக 
நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Bank will lend you umbrella when the sun shine and takes away when it rains!

வங்கியியலில் பிரிட்டன் தான் முன்னோடி. பாங்க் ஒவ் இங்கிலாந்து தான் உலகின் முதலாவது மத்திய வங்கி என்பர்.

பணம் தரும் இயந்திரம் முதல் எல்லாமே இங்கு தான் முதலில் வந்தது.

மட்டையே இல்லாமல், வெறும் கையுடன் போய் பணத்தை எடுக்க முடியும் என்றால் நம்புவீர்களா? இங்கே முடியும். கையில் உள்ள போனுடனான இந்த தொழில் நுட்பத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு வித்தே பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

எனது கடனட்டை ஒன்றின் கிரடிட் லிமிட் முப்பத்திரெண்டாயிரம் பவுண்ஸ்.

வடக்கு இங்கிலாந்தில் வீடு ஒன்றை வாங்க பயன்படுத்தியதில்... அவயளுக்கு சந்தோசம்.

நன்றாக பாவித்தால், ஜம்பதாயிரம் வரை லிமிட் கூடலாம்.

இலங்கையில் அண்மையில் கிரடிட் ரெபரண்ஸ் ஏஜன்சி ஆரம்பித்து உள்ளனர். அதனை பாவிக்காமல் கடனட்டை, கடன் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கட்டுப்படுத்தி உள்ளது.

நுண்கடன் என ஏழைகளுக்கு கொடுத்து, வன்முறை மூலம் பணத்தை பறிப்பது அதிகரித்ததால், மங்கள, நிதியமைச்சராக இருந்த போது இது ஆரம்பித்தது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் கிரிகெட்டுக்கே எக்செல் ஷீட் போடுகிற ஆளாச்சே🤣

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

நீங்கள் மலைப்பாம்பை, போட்டுத் தாக்குபவரா....சொல்லவே இல்லை! 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கட்டுப்பாடானவர்களுக்கு கடனட்டை வரப்பிர்சாதம்தான்

கட்டுப்பாடு இல்லாமல் இருந்ததால்தான் budget பார்க்கவேண்டிய நிலை வந்தது. 😊 ஆனால் இப்பவும் சூப் என்றால் M&S soup தான். Lidl, Aldi போன்ற இடங்களுக்குப் போவதில்லை என்று சொல்லி ஆஸ்த்திரிய/ஜேர்மன் நண்பர் கடுப்பேறியது மறக்கமுடியாது😃

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

Bank will lend you umbrella when the sun shine and takes away when it rains!

வங்கியியலில் பிரிட்டன் தான் முன்னோடி. பாங்க் ஒவ் இங்கிலாந்து தான் உலகின் முதலாவது மத்திய வங்கி என்பர்.

பணம் தரும் இயந்திரம் முதல் எல்லாமே இங்கு தான் முதலில் வந்தது.

மட்டையே இல்லாமல், வெறும் கையுடன் போய் பணத்தை எடுக்க முடியும் என்றால் நம்புவீர்களா? இங்கே முடியும். கையில் உள்ள போனுடனான இந்த தொழில் நுட்பத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு வித்தே பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

எனது கடனட்டை ஒன்றின் கிரடிட் லிமிட் முப்பத்திரெண்டாயிரம் பவுண்ஸ்.

வடக்கு இங்கிலாந்தில் வீடு ஒன்றை வாங்க பயன்படுத்தியதில்... அவயளுக்கு சந்தோசம்.

நன்றாக பாவித்தால், ஜம்பதாயிரம் வரை லிமிட் கூடலாம்.

இலங்கையில் அண்மையில் கிரடிட் ரெபரண்ஸ் ஏஜன்சி ஆரம்பித்து உள்ளனர். அதனை பாவிக்காமல் கடனட்டை, கடன் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கட்டுப்படுத்தி உள்ளது.

நுண்கடன் என ஏழைகளுக்கு கொடுத்து, வன்முறை மூலம் பணத்தை பறிப்பது அதிகரித்ததால், மங்கள, நிதியமைச்சராக இருந்த போது இது ஆரம்பித்தது.

கிரெடிட் ரெபிரென்ஸ் ஏஜெண்சிக்கு மருதங்கேணியில் இருக்கும் 
சுப்பண்ணையின் க்ரெடிட் விபரம் எப்படி தெரியும்?
மாத வருமானம் சம்பளம் ஏதாவது வங்கி ஒன்றுக்கு வந்தால் 
அதை அடிப்படையாக வைத்து கொடுக்கிறார்களா?
அல்லது வீடு காணி வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கும் 
மதிப்பு எதையாவது வைத்து கொடுக்கிறார்களா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் மலைப்பாம்பை, போட்டுத் தாக்குபவரா....சொல்லவே இல்லை! 🤔

அதெல்லாம் side dish தான். இப்பவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தது C ஒன்றுதான். 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அதெல்லாம் side dish தான். இப்பவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தது C ஒன்றுதான். 😁

அதில் தான் வேலை செய்கிறீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

https://www.mint.com/

https://get.quicken.com/money_management/?utm_medium=cpc&utm_source=google&utm_campaign=nb_usa_exact&gclid=CjwKCAjwlbr8BRA0EiwAnt4MTq2GcarSIJc33lA5NIw5kYxuItHDoCCXTuIN9njQ1vsWEwzzL1WD6hoCLNoQAvD_BwE

இங்கு இவ்வாறான ஒன்லைன் மேனேஜ் வசதிகள் உண்டு 
கடந்த 7-8 வருடமாக மின்ட் பாவித்து வருகிறேன் மிகவும் சுலபம் 
நாங்களே ஒரு பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கலாம் 
மாதம் 
பெட்ரோல் -$150 
கோப்பி -$100 
குரொசாரி -$400 
 என்று அது அண்ணளவாக லிமிட்டை எட்டும்போது அலெர்ட் பண்ணும் 
தவிர வார வாரம் சமரி செய்து வரவு செலவு கணக்கை அனுப்பும். 

இப்போ கடந்த இரு வருடமாக குய்க்கேன் பாவிக்கிறேன் 
அவர்கள் சாப்ட்வேர் பாவித்துதான்  வருடாந்த வரி செய்து வருவதால் 
அதில் பல நண்மைகள் உண்டு .... முழு செலவும் அதிலே பதிவாகி இருக்கும் 
வரிவிலக்கு உள்ள செலவுகளை ட்ராக் பண்ண மிக எளிதாக இருக்கிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கிரெடிட் ரெபிரென்ஸ் ஏஜெண்சிக்கு மருதங்கேணியில் இருக்கும் 
சுப்பண்ணையின் க்ரெடிட் விபரம் எப்படி தெரியும்?
மாத வருமானம் சம்பளம் ஏதாவது வங்கி ஒன்றுக்கு வந்தால் 
அதை அடிப்படையாக வைத்து கொடுக்கிறார்களா?
அல்லது வீடு காணி வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கும் 
மதிப்பு எதையாவது வைத்து கொடுக்கிறார்களா? 

இந்தியா எவ்வளவு தான் முன்னேறிலும் வங்கியியல் முன்னேறாது என இலண்டன் வங்கிகள் வட்டாரத்தில் கணித்துள்ளனர்.

இலங்கை இந்த வங்கி சேவையியில் திறம்பட செயல்பட முடியும் என கணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை பங்குச்சந்தையை, இலண்டன் பங்கு சந்தை வாங்கியுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ளவர்களை அடையாள அட்டை மூலம் கிரடிட் ரெபரன்ஸ் ஏஜன்சி கண்டு கொள்கிறது. ஆளடையாள திணைக்களம் நவீனமயமாகி உள்ளது.

மறுபுறம் இந்தியாவிலும் ஆதார் அட்டை வந்துள்ளது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கும் உங்களைப்போல ஐரி வேலை செய்யும் 
தமிழ் நண்பர்கள் அதெல்லாம் ஆபத்து ஹக்கேர்ஸ் ஒரு நாளைக்கு 
அதை க்ஹெக் செய்து எல்லா விபரமும் திருடிவிடுவார்கள் என்று 
பயம் ஓடிக்கொண்டு இருப்பார்கள் ...
நான் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் 
தலையிடி குறைவு தவிர எங்களை கட்டுப்பாடாக வைத்திருக்க 
மிகவும் உதவியாக இருக்கிறது 

3 minutes ago, Nathamuni said:

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அரசுக்கு தெரியாமலே 
மில்லியன் கணக்கில் மக்கள் வாழுகிறார்கள் 
எதை ஏன் இன்னும் திருத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

இங்கும் உங்களைப்போல ஐரி வேலை செய்யும் 
தமிழ் நண்பர்கள் அதெல்லாம் ஆபத்து ஹக்கேர்ஸ் ஒரு நாளைக்கு 
அதை க்ஹெக் செய்து எல்லா விபரமும் திருடிவிடுவார்கள் என்று 
பயம் ஓடிக்கொண்டு இருப்பார்கள் ...
நான் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் 
தலையிடி குறைவு தவிர எங்களை கட்டுப்பாடாக வைத்திருக்க 
மிகவும் உதவியாக இருக்கிறது 

இங்கு வங்கிகளில் லீகல் ஹக்கேர்ஸ், நல்ல கொழுத்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.

படுபாவிகளுக்கு வேலையே.... மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

 🤗

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

எல்லாத்தையும் ஒரு வழியில் இலகுவாக்கி, மறுவழியில் இறுக்குவார்கள்.

இமெயில், வாய்ஸ் ஓவர் ஐபி, வீடியோ, இவை எதுவுமே என் தகப்பனார் காலத்தில் இல்லை. ஆனால் நானும் எனது தந்தையும் ஒரே வேலை பழுவையே சுமப்பதாக தெரிகிறது.

இந்த debt based economy கூட இப்படி ஒரு மாயைதான். 

கண்ணை மூடும் போது எமக்கு மிஞ்ச போவது நாக்கில் இனிக்கும் M&S சூப்பின் சுவை மட்டுமே🤣.

ஆனால் எமது அடுத்த சந்ததிகள் கொடுத்து வைத்தவர்கள். நமது கட்டுபாடு, முதலீடு, கடின உழைப்பு எல்லாவற்றையும் அவர்களுக்கு ஒரு springboard ஆக விட்டு செல்கிறோம். 

ஆனாலும்,

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை போதியளவு படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை.

பல பிள்ளைகள் ஒரு வகை consumer culture இல் அள்ளுபட்டு போவபர்களாக, instant gratification தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  அந்த வயதுக்கு இது இயற்கைதான் (நாங்கள் வாங்காத நொகியா போனா🤣) என்றாலும் முறைசார் கல்வியில் பெற்றார் காட்டும் அதே அக்கறையை, நிதி முகாமைதுவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

பிகு: M&S Calamari Squid டிரை பண்ணி பாருங்கோ நல்லா இருக்கும். 

Edited by goshan_che
 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வயசு '40' தாண்டிடுச்சு... எப்போ தான் 'retire' ஆகப் போறீங்க??..." 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்'!! வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த 1999 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 41 வயதாகும் கிறிஸ் கெயில், மைதானத்தில் பறக்க விடும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இத்தனை வயதிலும் உலகளவில் நடக்கும் ஐபிஎல் உட்பட பல டி 20 தொடர்களில் சிக்ஸர் வாணவேடிக்கை நடத்தி வருகிறார். இவருக்கு 'யூனிவர்சல் பாஸ்' என்ற பட்டப்பெயரும் உள்ளது. வயது நாற்பதைத் தாண்டியும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில், தனது ஓய்வு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 'என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நான் 45 வயது வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பில்லை. அதே போல, இன்னும் இரண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய பின்னரே ஓய்வு குறித்து ஆலோசிப்பேன்' என கெயில் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை மற்றும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் கெயில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிகிறது. https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/sports/chris-gayle-opens-up-about-his-retirement-from-intl-cricket.html டிஸ்கி அவர் மட்டும் 45வயது வரை விளையாடி விட்டால்  அனைத்து போர்டு / வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் தோழர்..👍
  • வாலி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 
  • ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் -என்.கே. அஷோக்பரன் இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது.  சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊடாக, இனமுறுகலைத் தீர்த்துவிடும் அவாக்கொண்ட பலரதும் மகுடவாசகமாக, இலங்கையர்கள் பலரும் நேசிக்கும் ‘சங்கா’வின் இந்தக் கூற்று உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. நல்லதோர் உரையை, உணர்ச்சிபூர்வமாக முடித்துவைப்பதற்கு ஏற்ற நல்லெண்ணம் தாங்கிய பகட்டாரவாரம் என்றளவில் இது, மிகச்சிறந்ததாகவே கருதப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசவிளையும் பலரும், குறிப்பாகத் தம்மை நடுநிலைவாதிகளாக, நல்லிணக்கம், மீளிணக்கப்பாடு ஆகியவற்றின் மீட்பர்களாக முன்னிறுத்தும் பலரும், நாம் இனம், மதம், மொழி ஆகிய அடையாளங்களைக் கடந்து ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  ஆனால், உணர்ச்சிவசப்பட்ட பகட்டாரவாரம் என்பதைத்தாண்டி, இந்த நிலைப்பாடுகள் யதார்த்தத்தை உணராதவையாகவும் மீறியவையாகவும் அமைகின்றன என்பதுதான் கசப்பான, ஏற்றுக்கொள்ளக் கடினமான உண்மை.  யதார்த்தத்தில் ஒருநபர் சிங்களவராகவும் தமிழராகவும் முஸ்லிமாகவும், பறங்கியராகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை வெறும் ‘லேபிள்’கள் அல்ல! ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன.  அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை.  ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன.  ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது. அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த்தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல. இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.  ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது.  ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல.  ‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி.  இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’  தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும். மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா? அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது?   இது நல்லெண்ணப் பேச்சு. விளைவு பற்றியெல்லாம் ஆராய்வது அவசியமில்லை என்று ‘சிவில்’ தேசியத்தை, வெறும்  ‘நற்குண நவிற்சி விளம்பல்’ (virtue signalling) அரசியலாக மட்டுமே வரையறுப்பதானால், மேற்சொன்ன கேள்விகளும் இந்த ஆய்வுகளும் அவசியமில்லாதவை. ஆனால், ‘சிவில்’ தேசியம் என்பது உண்மையில், அடையப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மேற்சொன்ன கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு யதார்த்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதாக இருக்கும். இந்த இடத்தில், மாற்று உபாயங்கள் பற்றியும் சிந்திக்கலாம். இனம், மதம், மொழி ஆகியவை சார்ந்த தேசிய அடையாளங்கள், இந்தத் தீவின் மக்கள் கூட்டங்களிடையே ஆழவேர்விட்டுள்ளது. இவ்வாறு, இனம், இன-மதத் தேசங்களாக பிரிந்துள்ள மக்கள் கூட்டங்கள், இந்தத் தீவு யாருக்குரியது என்ற கேள்வியில் முரண்பட்டு நிற்கின்றன.  இனம், மதம் போன்ற அடையாளங்களை, அடையாளப் பிரக்ஞையைத் தகர்த்து, சிவில் தேசத்தைக் கட்டமைப்பது என்பது, யதார்த்தத்தில் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. ஆகவே, இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டிய ‘ஸ்ரீ லங்கன்’ என்கிற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘பன்மைத்தேச’ அரசாக (Plurinational state) இந்தத் தீவைக் கட்டியெழுப்புதல் ஒப்பீட்டளவில் சாத்தியமான ஒன்றாகவே தென்படுகிறது.  இந்த நிலையின் கீழ், ஒவ்வொருவரும் தான் விரும்பும் அடையாளத்தைச் சுவீகரித்துக்கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்குள் வாழும் ஒவ்வொரு தேசமும், தான் சுவீகரித்துள்ள அடையாளத்தையும் அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை, பன்மைத் தேச அரசுக் கட்டமைப்பின் கீழ் காணப்படும்.  இங்கு இனம், மதம் போன்ற தேசிய அடையாளங்கள் துறக்கப்பட வேண்டிய அவசியப்பாடு ஏற்படாது. பன்மைத் தேசிய அரசு, எல்லா அடையாளங்களையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதாக அமையும். இது போன்றதொரு நிலை, இலங்கைத் தீவுக்குப் பொருத்தமானதாக அமையும்.  ஆனால், மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்குரிய அரசியல் விருப்பமும் பலமும் இல்லாவிட்டால், அவை சாத்தியப்படாது. தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம்தான் இங்கு முதற்படி. என்ன வகையான தீர்வு என்ற தெரிவுப் பிரச்சினை, அடுத்த கட்டம்தான்.  ஆனால், இனவெறித் தீக்கு எண்ணையூற்றி அரசியல் செய்யும் இன-மைய அரசியல், அதிலிருந்து விலகி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் வரை, ‘ஸ்ரீ லங்கன்’ என்பது  ‘நற்குண நவிற்சி விளம்பல்’ அரசியலாகவோ, தாராளவாதிகளின் கைதட்டும் பாராட்டும் பெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஸ்ரீ-லங்கன்-எனும்-அடையாளம்/91-263890
  • இது பற்றி ஒரு டாக்குமெண்டரி முன்பு பார்த்தேன்  தேடி கிடைத்தால் இணைத்து விடுகிறேன் 
  • கல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_449a36fa71.jpg   கலாநிதி பரீனா ருஸைக் (சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்)   உயர்கல்வி நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானவை. இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவும், நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகவும் திகழ்கின்ற பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும்.  பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ், இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, 1921 ஆம் ஆண்டு இலங்கையில்  ‘பல்கலைக்கழகக் கல்லூரி’ எனும் பெயரில், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலை, 1870 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால், அவ்வாண்டே, ஸ்தாபக ஆண்டாகக் கருதுவது பொருத்தமானது. பட்டம் வழங்கும் நிகழ்வு 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பாடசாலை, தென்னாசியப் பிராந்தியத்தில் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசாலையாக விளங்கியது. 1880 களில் இம்மருத்துவப் பாடசாலை, மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1889 ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவச் சபையால், பிரித்தானியாவில் மருத்துவப் பயிற்சியைப் பெறுவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளைச் சட்ட இலக்கம் 20 இன் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞானப் பீடம் (1942,  சட்டப் பீடம் (1947, கல்விப் பீடம் (1949) கலைப் பீடம் (1963) ஆரம்பிக்கப்பட்டது.  அரசாணைக்கேற்ப, ‘கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம்’ எனும் பெயரில் 1967 ஒக்டோபரில் இருந்து தனித்து இயங்க ஆரம்பித்தது. 5,000 மாணவர்களையும் 300 ஆளணியினரையும் கொண்டு கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இது உருவெடுத்தது.  பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யோதயா இலங்கைப்  பல்கலைக்கழகம்,  வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் எனும் நான்கு வளாகங்கள் 1972 இல் காணப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் கட்டுபொத்த தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து செயற்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக ‘செனட் இல்லம்' எனும் பெயரில் இன்றைய ‘கல்லூரி இல்லம்' காணப்படுகின்றது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால் 1998 இல் இவை மீண்டும் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கின. கொழும்புப் பல்கலைக்கழகம் எனும் நாமத்தில் மருத்துவம், கலை, விஞ்ஞானம்,  சட்டம் ஆகிய பீடங்கள் 1980 இல் உருவாக்கப்பட்டன. அவற்றுடன், 1979இல் உருவாக்கப்பட்ட முகாமைத்துவ நிதிப் பீடமும் இணைந்து செயற்பட்டு வந்தது. 1978 இல் பல்கலைக்கழகச் சட்ட இலக்கம் 16 கீழ் இலங்கைப் பல்கலைக்கழகம், ஆறு தனிச் சுதந்திர பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தது.  கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1987 இல் பட்டதாரி கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டது. 1996 இல் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீபாளி வளாகம் உருவாக்கப்பட்டது. 1997 இல் மருத்துவ முதுமாணி கல்வியகமும் சுதேசிய மருத்துவ நிர்வாகமும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. 1987 இல் உருவாக்கப்பட்ட கணினித் தொழில்நுட்பக் கல்வியகம், 2002 ஆம் ஆண்டு கணினிப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டது.  கொழும்புப் பல்கலைக்கழகத்தில், 2017இல் தாதியர் சேவை பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகிய இரு புதிய பீடங்கள் உருவாக்கப்பட்டன.  இப்பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம், சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டதாகும். அது ‘அறிவு எங்கும் விளங்குக’ எனும் பொருளைக் கொண்ட, ‘புத்திஸர்வத பிரதே’ என்ற வாசகத்தை, குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது.  http://static2.tamilmirror.lk/assets/uploads/image_43f96ea96d.jpg 11 பீடங்களையும் 41 துறைகளையும், எட்டு வேறு நிறுவனங்களையும் கொண்டு இயங்குகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர், உபவேந்தர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். வேந்தர் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ளாவிடினும், பட்டமளிப்பின் போது, அவைக்குத்  தலைமைத் தாங்குகின்றார். உபவேந்தர், பல்கலைக்கழக முகாமையாளராக விளங்குகின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தரான ரொபர்ட் மார்ஸ் என்பவர், 1922 தொடக்கம் 1939 வரை பதவி வகித்தார்.  கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கான  பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்குகின்றது. இந்நூலகத்தின் இரு கிளைகள் விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய பீடங்களில் இயங்குகின்றன. மருத்துவ பீட நூலகம், 1870 இல் நிறுவப்பட்டது. நான்கு இலட்சத்துக்கு மேலான நூல்கள் இங்கு காணப்படுகின்றன. பல அரிய தொகுப்புகளும் ‘இலங்கை தொகுப்புகள்’ எனும் தலைப்பின் கீழ், ஓலைச்சுவடிகளும் பிரதான நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.  2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 11,604 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் 9,100 பேர் இளமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் 2,504 பேர் முதுமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். கல்விசார் ஊழியர்கள் 240 பேரும், கல்விசாரா ஊழியர்கள் 1,600 பேரும் பணிபுரிகின்றனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இன்றைய (2020) வேந்தராக டொக்டர் ஓஸ்வால்ட் கோமிஸ் திகழ்கின்றார். உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா என். விஜேரத்ன பதவி வகிக்கின்றார். ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதான பிரதிபலிப்பு நிறங்களாகும். இப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பீடங்களையும் உள்ளடக்கிய வகையில், 29 விளையாட்டு அணிகள் காணப்படுகின்றன. போட்டிகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் வெற்றியாளராகத் திகழ்கின்றது. 1980களில் இருந்து, 10 சாம்பியன் விளையாட்டுகளில் எட்டுப் போட்டிகளில்  சாதித்து வருகிறது. மாணவர்களால் 40 கழகங்கள், சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பீடங்கள் ரீதியான மாணவர் ஒன்றியங்கள், மதம், கலாசாரம், கருத்தியல், பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒருங்கமைப்புகள், பொதுநல நோக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. கொழும்புப் பல்கலைக்கழகம், கல்விசார் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், University of Colombo Review, The Ceylon Journal of Medical Science, Sri Lanka Journal of International Law, International Journal on Advances  in ICT for Emerging Regions, Sri Lanka Journal of Bio-Medical information and Sri Lanka Journal of Critical care ஆகிய வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.  நூற்றாண்டுகளாகக்  கல்வி எனும் மகத்துவம்மிக்க சொத்தை வழங்கிவரும்  கலை, விஞ்ஞானம் ஆகிய பீடங்கள், உட்கட்டமைப்பும் மனிதவள விருத்தி ஆகியவற்றில், நேர்கணிய வளர்ச்சியைக் காட்டி வருகின்றன.  மானிடவியல், சமூக விஞ்ஞானம் ஆகிய கற்கைகளின் கீழ் கல்வி, ஆய்வுகளை கலைப்பீடம் மேற்கொண்டு வருகின்றது. கலை ஒரு பாட அலகாக இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1921 முதல் கற்பிக்கப்பட்டு வந்தது. இது 1942 இல் கலைப் பீடமாக மாற்றப்பட்டது. புதிய கலை பீடமாக 1963 இல் பரிணமித்தது. கலை பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஹேம் ரே விளங்கினார்.  கலைப் பீடத்தில், ஏனைய பிரிவுகளுக்கு அப்பால், ஊடகவியல், இஸ்லாமியக் கற்கை போன்ற கற்கைப் பிரிவுகளும் மொழித்திறன் விருத்தி, சர்வதேசத் தொடர்புகள் காரணமாக சீன மொழியைக் கற்பிக்கும் கொன்பியூசியஸ் பிரிவும் இயங்கி வருகின்றன. மேலும், கலைப் பீடத்தில் இயங்கிவரும் துறைகள் மூலம், பெறுமதிமிக்க சான்றிதழ் பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்ற மாணவர்களுக்கான) இளங்கலை மையமும் உள்ளது. மாணவர்களின் இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பீடாதிபதி விருதுகள் (Dean Awards) நிகழ்ச்சித் திட்டங்களும் கலைப் பீடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கலை, கலாசார திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் கலைப்பீடம் மென்மேலும் விருத்திபெற்ற வண்ணமே, செயற்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-எனும்-மகத்துவம்-மிக்க-சொத்தின்-காவலர்/91-263891
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.