Jump to content

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அதுக்கு லிமிட் உள்ளது என்று நினைக்கிறேன்.

முன்னர் £30. இப்போது, கொரோன காரணமாக £45.

ஹோட்டல் ரூமுக்கு கொடுக்க கூடுதலாக இருக்க வேண்டும்.

நாதமுனி, Apple Pay க்கு லிமிட் இல்லை. 2019  விடுமுறை முழுவதும் கூடுதலான பணக்கொடுப்பனவுகள் Apple Pay மூலம் தான் செய்தேன். தெருவோர சிறிய நடமாடும் ஜஸ்கிறீம்  கடையிலிருந்து Hotel payments, toll payments  அனைத்தும். 

Link to post
Share on other sites
 • Replies 57
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லாத்தையும் ஒரு வழியில் இலகுவாக்கி, மறுவழியில் இறுக்குவார்கள். இமெயில், வாய்ஸ் ஓவர் ஐபி, வீடியோ, இவை எதுவுமே என் தகப்பனார் காலத்தில் இல்லை. ஆனால் நானும் எனது தந்தையும் ஒரே வேலை பழுவையே சுமப்பதா

வீசா, மாஸ்டர்தான்.  எல்லா அரச, தனியார் வங்கிகளிலும் இருக்கிறது. ஆனால் இன்னும் கிரெடிட் ரேட்டிங் வெளிநாடுகள் போல் ஒழுங்கமைவாக இல்லை. ஆகவே குறித்த அளவு வருமானம் உள்ளவர்களைதான் நம்பி கொடுக்கிறார்கள்

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே க

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நாதமுனி, Apple Pay க்கு லிமிட் இல்லை. 2019  விடுமுறை முழுவதும் கூடுதலான பணக்கொடுப்பனவுகள் Apple Pay மூலம் தான் செய்தேன். தெருவோர சிறிய நடமாடும் ஜஸ்கிறீம்  கடையிலிருந்து Hotel payments, toll payments  அனைத்தும். 

இங்கே, போன் மூலமாக, டெபிட்காற் இல்லாமல் பணம் செலுத்தலாம் ஆகையால், அப்பிள்பே பெரும்பாலும் பாவிப்பதில்லை. அதன் லிமிட் தான் சொன்னேன்.

நீங்கள் சொன்ன பின்புதான் பார்த்தேன்.

Unlike contactless card payments that limit you to a £45 spend, there is no limit for Apple Pay. It means you can pay for your weekly shop, or fill your car up with fuel, all with your iPhone or Apple Watch.

நன்றி.

ஆனாலும் ஒரு விடயம். அந்த வகையில் பணத்தை பெறும் பே ரேமினல்ஸ், நாம் வாழும் நாடுகளுக்கு வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

இங்கே, போன் மூலமாக, டெபிட்காற் இல்லாமல் பணம் செலுத்தலாம் ஆகையால், அப்பிள்பே பெரும்பாலும் பாவிப்பதில்லை. அதன் லிமிட் தான் சொன்னேன்.

நீங்கள் சொன்ன பின்புதான் பார்த்தேன்.

Unlike contactless card payments that limit you to a £45 spend, there is no limit for Apple Pay. It means you can pay for your weekly shop, or fill your car up with fuel, all with your iPhone or Apple Watch.

நன்றி.

ஆனாலும் ஒரு விடயம். அந்த வகையில் பணத்தை பெறும் பே ரேமினல்ஸ், நாம் வாழும் நாடுகளுக்கு வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஐரோப்பாவில் பல நாடுகளில் Apple pay யில் மிக சுலபமாக பொருட்களை சேவைகளை வாங்க முடியும். எனது சொந்த அனுபவம். ஸ்கன்ரிநேவிய நாடுகளில் தெருவோர நடமாடும் பெட்டிக்கடைகளில் சிலவற்றில் கூட Apple Pay மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்கள். Cash ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆச்சரியமே.  கொப்பன்ஹேகன் தெருவோர கடையில் அப்பிள் ஜூஸ வாங்குவதற்கு cash ஏற்றுக்கொள்ளாததால்  Apple Pay மூலமே பணம் செலுத்தவேண்டியிருந்தது. பணக்கொடுப்பனவு மிகவும் சௌகரயமானது. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஸ்கன்ரிநேவிய நாடுகளில் தெருவோர நடமாடும் பெட்டிக்கடைகளில் சிலவற்றில் கூட Apple Pay மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்கள். Cash ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆச்சரியமே.

நல்ல தொழில் நுட்பம் லாபநட்ட கணக்கு ஆப்பிள்ல்காரனுக்கும் சொல்லி அரசுக்கும் சொல்லி விடும் .

இங்கு நுகர்வோரையும் விற்பனையாளர் களிடமிருந்து  ஆப்பிள் இலகுவாக தகவல்கள் திரட்டிக்கொள்கிறது ஒரு நாள் இருபகுதியும் தங்கள் தனிப்பட்ட விடயங்கள் பரகசியமாவது விரும்பாமல் பழமைக்கு திரும்ப அங்கு மாபெரும் சரிவு காத்து இருக்கும் .

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் கிரீக் ல் சிஸ்ட்டம் கடையின் காசு போடும் மிசின் வாட் ஒபிஸ்க்காரனுக்கும் நேரடி லிங்க் இன்னிக்கு மூலைக்கடை சாயக்கடை எவ்வளவு வியபாரம் செய்தது என்று லைவ்வா பார்க்க கூடியது போல் செய்தார்கள் . ஒரு கட்டத்தில் மிசினுக்குள் வரும் பில் என்றால் இவ்வளவு கூட இல்லை நேரடி வியபாரம் என்றால் இவ்வளவு குறைவு என்று ஒட்டுமொத்தமாய் மாறியதும் கிறிஸ் வீழ்ச்சிக்கு காரணம் .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

இப்படித்தான் கிரீக் ல் சிஸ்ட்டம் கடையின் காசு போடும் மிசின் வாட் ஒபிஸ்க்காரனுக்கும் நேரடி லிங்க் இன்னிக்கு மூலைக்கடை சாயக்கடை எவ்வளவு வியபாரம் செய்தது என்று லைவ்வா பார்க்க கூடியது போல் செய்தார்கள் . ஒரு கட்டத்தில் மிசினுக்குள் வரும் பில் என்றால் இவ்வளவு கூட இல்லை நேரடி வியபாரம் என்றால் இவ்வளவு குறைவு என்று ஒட்டுமொத்தமாய் மாறியதும் கிறிஸ் வீழ்ச்சிக்கு காரணம் .

 

 

1 hour ago, பெருமாள் said:

நல்ல தொழில் நுட்பம் லாபநட்ட கணக்கு ஆப்பிள்ல்காரனுக்கும் சொல்லி அரசுக்கும் சொல்லி விடும் .

இங்கு நுகர்வோரையும் விற்பனையாளர் களிடமிருந்து  ஆப்பிள் இலகுவாக தகவல்கள் திரட்டிக்கொள்கிறது ஒரு நாள் இருபகுதியும் தங்கள் தனிப்பட்ட விடயங்கள் பரகசியமாவது விரும்பாமல் பழமைக்கு திரும்ப அங்கு மாபெரும் சரிவு காத்து இருக்கும் .

இது குறித்து நான் சில ஆண்டுகள் முன்னர் பதிவு போட்டிருந்தேன். கடைகளில், ரில் மெசினை, அரசாங்கத்திடம் இருந்தே பெற வேண்டும். அது, இணைய மூலமாக, அரச வரித்துறையுடன் தொடர்பில் இருக்கும்.

மாதமுடிவில் எவ்வளவு வரியோ, அதை வங்கியில் இருந்து நேரடியாக தூக்கும்.

இந்த முறை பல்கேரியாவில் முதலிலும், அதை தொடர்ந்து, கென்யா நாட்டிலும் வந்தது.

கிறீசில், வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், வரி விகிதம் ( 24% )ஏறியதே.

பிரிட்டனில் வந்துள்ளது. கள்ள மார்கட் இருப்பது பொருளாதாரக்கு நல்லது.

பிரிட்டனில் சொப்வேர் துறையினர், கன்ராக்டில் இருந்தால், கம்பனி, வேலைக்கு கொடுக்கும் பணத்தில், செலவு போக, வருட முடிவில் கணக்குப்பிள்ளை சொல்லும் வரியை கட்டுவர். இந்தவருசம் ஏப்பிரல் மாதத்தில் இருந்து, கம்பனி, வரியை கழித்து தான் கொடுக்க வேண்டும் என்று வரித்துறை சொல்லிவிட்டது.

நிரந்தர ஊழியர்கள் போல கழிப்பதானால், கொலிடே பே, சிக் பே, கம்பனி தரவேண்டும் என்று சொல்ல, அதெல்லாம் எமக்கு தெரியாது, அரசைக் கேள் எண்ட, பெரிய சண்டை.

கொரோணாவால், அரசு ஒரு வருசத்துக்கு தள்ளிப் போட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

தோழனா, வில்லனா... நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

தோழனா, வில்லனா... நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

Credit Card

Credit Card ( Photo by Ales Nesetril on Unsplash )

கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது.

`கிரெடிட் கார்டு வேணுமா சார்' என்று யார் போன் செய்தாலும், அலறி அடித்துக்கொண்டு அழைப்பை துண்டிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

காரணம் கந்துவட்டிக் காரர்களைவிடவும், அதிகமான வட்டியை கிரெடிட் கார்டுகள் நம்மிடமிருந்து பிடுங்குகின்றன. கண்ணுக்கு தெரிந்த வட்டி, தெரியாத மறைமுக வட்டி எனப் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.

`சரி, அப்படியானால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாதா?' என்று நீங்கள் கேட்கலாம். பயன்படுத்தவே கூடாது எனச் சொல்லவில்லை. சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது. நம் எதிர்காலக் கடன் தேவைகளுக்கு நம் இமேஜை உயர்த்திக் கொடுக்கும் வல்லமையும் அதற்குண்டு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதை எப்படி ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

Card
 
Card Pixabay

முதலில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, வாங்கியதுதான் வாங்கிவிட்டோம் கார்டை தேய்த்து ஏதாவது செலவுகளைச் செய்வோம் என்று நினைத்து, அதைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் லிமிட் என்ன என்று பாருங்கள். பொதுவாக, முதல் முறையில் ரூ.30,000 உங்கள் லிமிட்டாக இருக்கும்.

அத்தியாவசியமான, குறைந்த செலவுகளுக்கு மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துங்கள். கிரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்த வேண்டாம். 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்தினால், உங்களிடம் காசு கையிருப்பு இல்லாததால்தான், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும். அதிகபட்சம் 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது மிக நன்று. ஏனெனில், உங்களுடைய அதிகபட்ச பயன்பாடு சிபிலில் அப்டேட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

கடன் அட்டையில் பில்லிங் தேதி, உங்களுக்குப் பணம் செலுத்த வசதியான சூழலாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் கிரெடிட் கார்டு பில் கட்டுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. தயவுசெய்து உங்கள் வருமானத்தையும், மாத கமிட்மென்ட்டுகளையும், கிரெடிட் லிமிட்டையும் மனதில் வைத்து, கடன் அட்டையைப் பயன்படுத்தினால் நல்லது.

செலவழித்த தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திவிடுங்கள். உங்களால் இதை நினைவில் வைத்துக்கொண்டு செலுத்த இயலாது என்றால், வங்கியின் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஆட்டோ டெபிட் (Auto Debit) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும். வங்கியில் தேவையான அளவு பணம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Credit Card
 
Credit Card Pixabay

உங்கள் கிரெடிட் கார்டு பில்லில், கட்ட வேண்டிய குறைந்தபட்சத் தொகை மற்றும் முழுத் தொகை தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் முழுமையான பில்லைக் கட்டிவிடுங்கள். குறைந்தபட்ச பில் மட்டும் கட்டினால், மீதமுள்ள தொகைக்கு எக்ஸ்ட்ரா வட்டி கட்ட வேண்டியிருக்கும். அது மட்டுமன்றி, அடுத்த மாத பில்லுடன் கூடுதல் சுமையாக வந்து நிற்கும். தாமதமாக பில் கட்டினால், அதுவும் சிபிலில் பதிவு செய்யப்படும். பின்னர் நீங்கள் வேறு கடன் கேட்டால் எந்த நிறுவனமும் தராது.

 

ஸ்மார்ட்கேர் டிப்ஸ்!

* ஆன்லைன் பர்ச்சேஸ் என்றால் நம்பிக்கையான இணையதளங்களில் மட்டும் அட்டையைப் பயன்படுத்துங்கள். விலை குறைவு, நல்ல ஆஃபர் என ஆசைப்பட்டு, பரிச்சயமில்லாத இணைய தளங்களில் கார்டைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கார்டு விவரங்கள் களவாடப்பட்டு பெரும் துயரத்தில் தள்ளிவிட்டுவிடும்.

* கிடைக்கிறதே என்பதற்காகக் கணக்கில்லாமல் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். கையாள்வது கஷ்டம். நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், இருக்கும் கார்டிலேயே லிமிட் அதிகப்படுத்திக் கொடுப்பார்கள்.

சஞ்சய் காந்தி
 

* எக்கச்சக்க ரகங்களில் கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து வாங்குங்கள். ஷாப்பிங் செய்வர்களுக்கு, அதிகம் பயணம் செய்பவர்களுக்கு, எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. உங்களுக்கேற்ற கார்டை வாங்கினால், சலுகைகளின் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

* கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்கு வழங்கிய வங்கியின் இணைய தளத்துக்குச் சென்று, உங்கள் அட்டைக்கான சலுகைகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் முன்னிலையில் மட்டுமே அட்டையைப் பயன்படுத்துங்கள். ஹோட்டல், கடை பணியாளரிடம் கொடுத்து அனுப்பி பயன்படுத்த வேண்டாம். உங்கள் அட்டையைப் பிரதியெடுக்க வாய்ப்புள்ளது.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 16:08, Nathamuni said:

இது குறித்து நான் சில ஆண்டுகள் முன்னர் பதிவு போட்டிருந்தேன். கடைகளில், ரில் மெசினை, அரசாங்கத்திடம் இருந்தே பெற வேண்டும். அது, இணைய மூலமாக, அரச வரித்துறையுடன் தொடர்பில் இருக்கும்.

மாதமுடிவில் எவ்வளவு வரியோ, அதை வங்கியில் இருந்து நேரடியாக தூக்கும்.

இதை பற்றி அன்றே அழுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், விடுபட்டு விட்டது.

இது ஒரு போதுமே செய்யக்கூடாத விடயம்.

தனிப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட தகவல்களை, எந்தவொரு அரசாங்கத்திடமும், அப்படியான தாராளமயசதக் கொள்கைகைகள் உள்ள அரசிடமும், சட்டக் கட்டாயம் இன்றி வழங்குவது ஆபத்தானது.


தனிப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட வியாபாரம், மற்றும் வரி வசூலிப்பு, முற்றான உண்மை என்ற நிலைக்கும், ஏற்றுக்கொள்ள முடியாத வரி வரிவசூலிப்பு கொள்கைகள், ஒழுங்குமுறைகள் என்பவற்றுக்கு இடையில் இருக்கும் grey zone இல் செயற்படுத்தப்படுவது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/
  • இந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப்  பதில் கூற,  வேண்டிய  பொறுப்பு... முன்நாள்  எதிர்க்கட்சி  தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும்  சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள்  அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள்? லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல்,  உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்...  கிழட்டு  சம்பந்தன் ஊரில்.. இருந்து, "குறட்டை" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது.  நீங்கள்... இது, வரை... கிழிச்சது  போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு,  கேவலம் கெட்ட... பிச்சைக்  கார, எதிர்க் கட்சி  தலைவர்.... வேண்டவே... வேண்டாம்
  • தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்   நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ?” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/
  • கவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச...    இரத்தக் காட்டேரி என்பதை...   அழகாக... வரைந்து உள்ளமையை,  ரசித்தேன். 👍  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.