Jump to content

20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20th Amendment at a glance | Sri Lanka Brief

20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதிப் பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கடந்த 10 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 20 தொடர்பான விவாதத்திற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

குறித்த கோரிக்கைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து இரண்டு நாட்கள் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு தினங்களும் நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/20-குறித்த-உயர்-நீதிமன்றத்/

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

விவாதத்திற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

குறித்த கோரிக்கைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து இரண்டு நாட்கள் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

அட முட்டாள்களே! நான்கு நாட்கள் கேட்டிருந்தால் மூன்று நாட்கள் கிடைத்திருக்குமே...!!

Link to comment
Share on other sites

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்திற்கு

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்திற்கு

 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு கடந்த 10 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவை அனுமதி பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் இன்று (20) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அது தொடர்பான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன்.

சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்)  நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும்.

இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/92563

Link to comment
Share on other sites

இன்று பரபரப்பாக ஆரம்பமாகின்றது ’20’ மீதான விவாவதம்; திருத்தங்களுடன் நிறைவேற்ற அரசு திட்டம்

parliment.jpgஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவு மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. பிற்பகல் 7.30 மணிவரை விவாதம் தொடரும்.

நாளை 22 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச்சட்டவரைவு வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை ’20’ நிறைவேறுவதற்கு இரவு 10 மணிகூட தாண்டலாம்.

அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துகளை நீக்கிவிட்டு மூன்றிலிரண்டு பெரும் பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி , முஸ்லிம் தேசியக் கூட்டணி, மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ’20’ ஐ எதிர்ப்பதற்கு தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் எம்.பிக்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/81611

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.